Saturday, May 26, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – புடலை


படரும் செடி (கொடி) ஒன்றை பார்க்கலாம். தோட்டம் அமைக்கும் போது கிச்சன் கழிவு நீர் போக அமைத்த choke pit மீது செடி ஏதும் வைக்க முடியாது. கீழே வெறும் பாறை தான் இருக்கும். அந்த இடத்தை படரும் செடிகள் (புடலை, அவரை, பாவற்காய்) வளர்ப்பதற்கு எதுவாக பந்தல் அமைத்து விட்டேன்
 .
இரண்டு சிமெண்ட் தூண்கள், சுவற்று பக்கத்தில் கான்க்ரீட் போட்டு இரண்டு அலுமினியம் கம்பி தூண்கள், சில மூங்கில் கம்புகள், பந்தல் ரெடி.

இது குட்டையான புடலை ஜாதி. விதை இங்கே கோவை விவசாய பண்ணையில் வாங்கியது. ஒரு காய் 300 முதல் 500 கிராம் வரை  இருக்கிறது. பொதுவாக ஒரு செடி என்று விடாமல், மூன்று நான்கு செடிகள் விட்டால் நிறைய காய்கள் கிடைக்கும். போன குளிர் காலத்தில் சுத்தமாக தாக்குப்பிடிக்க முடியாமல், நான்கு காய்கள் காய்த்து விட்டு கருகி விட்டது. ஆனால் இப்போது சம்மரில் கலக்கலாக காய்த்துக் கொண்டிருக்கிறது. வாரத்திற்கு இரண்டு காய்கள் தாராளமாக பறிக்க முடிகிறது.
    
எடுத்த சில படங்கள் கீழே,












17 comments:

  1. சகோ சிவா...

    உங்களது ப்ளாக்கிற்கு இது எனது முதல் விஜயம்...அருமை..அருமை....
    எனது கனவு..வீட்டுத்தோட்டம்...இன்னும் கனவாகவே இருக்கிறது...

    உங்களது முயற்சியும்,அதன் பலனையும் பார்க்க பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது....

    தொடர்ந்து எழுதுங்கள்..ஆலோசனைகளும் கொடுங்கள்...

    எதிர்காலத்தில் எங்களைப்போன்றோர்க்கு உதவியாக இருக்கும்....

    வாழ்த்துக்கள்...

    எனது ப்ளாக் ரோலில் உங்களது ப்ளாக்கை இணைத்துவிட்டேன்...இனி அடிக்கடி வருவேன்...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரஜின். உங்கள் கனவு தோட்டம் சீக்கிரத்தில் நினைவாகட்டும். எனக்கும் தோட்டம் ரொம்ப நாள் கனவாகவே இருந்து வந்தது. இங்கு கோவை வந்து தான் முடிந்தது.

      வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி ரஜின்

      Delete
  2. Enakkum en veetu thottathil ippadi chedi valarka aasaithan aana vidhiya parunga veedu katti adhil naan vaazha mudiyadha nilai naano iruppadhu velinaattil malarum boomi kerala kissan krishi deepam thottakalai nigazhchigala paarthu eangubavargalil naanum oruvan oru naal varum en thaai naatukku thirumba kaathirukkiren kaalam badhil sollattum azhagana pugai padangal paaraattukkal. (vimal from france )

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சீக்கிரம் தாய் நாடு திரும்பி உங்கள் தோட்டம் வைக்கும் ஆசை நினைவாகட்டும். கிட்டத் தட்ட எல்லோருக்கும் இந்த ஆசை இருக்கிறது. இடம் இல்லாதது தான் பிரச்சனை.

      உங்கள் பாராட்டுக்கு நன்றி விமல்.

      Delete
  3. வாழ்த்துக்கள். முயற்சியும் படங்களும் அருமை

    ReplyDelete
  4. படங்களும் பதிவும் அழகு சிறந்த யோசனை ஆரோக்கிய வாழ்விற்கு அச்சாரம் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி சசிகலா அவர்களே. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

      Delete
  5. புது வீட்டிற்கு வந்து 4 மாதங்கள் ஆகிறது. வைத்த செடிகளில் பாதி இங்கு அடித்த வெயிலில் வாடி விட்டது. மண் செம்மண் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வெயில் அதிகம் என்றால் தினமும் நீர் ஊற்றுங்கள். செம்மண் கிடைத்தால் வாங்கி மணலோடு கலந்து தொட்டிகளில் வையுங்கள்.

      Delete
  6. சிவா நான் இருப்பது கனடாவில். கீரை விதை போட்டேன்..ஆனால் ஒன்னும் வளரவே இல்லையே. என்ன காரணமாக இருக்கும்? விதை போன வருடம் வாங்கியது.

    ReplyDelete
    Replies
    1. சீதோஷ்ண நிலையும் ஒரு காரணமாய் இருக்கலாம். மேலும் விதைகளை ரொம்ப நாள்/மாதம் கழித்தும் பயன்படுத்தினால் பிரச்னை வரும்.

      Delete
  7. hello siva anna ungaludaya veetu thottam super ... naanum veetu thottam poda asai pls enaku konjam tips kodunga

    ReplyDelete
    Replies
    1. Thanks Karthik. உங்கள் கேள்விகளை gsivaraja@gmail.com -க்கு ஒரு மெயில் தட்டி விடுங்கள். எனக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

      Delete
  8. Hello
    i am nisha from tuty
    ungal blog visit seithen. migavum arumai. thottam poduvathu enpbathu enakkum neenda naal kanavu. ungal blog visit seithapin kanavu nanavagum endru thondrugirathu. thoothukudiyil thottam poduvatharkana thagavalgal engu peravendum.

    ReplyDelete
  9. நன்றி நிஷா. தூத்துக்குடியில் பொருட்கள் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. நீங்கள் ஆரம்பிக்க முடிவு செய்து விட்டால் கோவையில் இருந்தே வரவைத்துக் கொள்ளலாம். எனக்கு ஒரு மடல் அனுப்புங்கள். இங்கே இருக்கும் கம்பெனி விவரங்கள் அனுப்புகிறேன்.

    ReplyDelete