Wednesday, February 12, 2014

தோட்டம் – தகவல்-1 (Coir Pith, Seedling Tray மற்றும் Grow Bags)போன பதிவில் கோவையில் வீட்டுத் தோட்டம் பயிற்சி வகுப்புகளின் ஆக்கம் பற்றி எழுதி இருந்தேன். நான் இணையத்திலும், சில Exhibition stalls மூலமாகவும், நேரிலும் தோட்டத்திற்க்கு தேவையான பொருட்கள் இங்கே கோவையில் கிடைக்கும் விவரங்களை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். நண்பர்கள் மற்ற நகரங்களில் உள்ள நிறுவனங்கள்/விவரங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டால் மற்றவர்களுக்கு உதவியாய் இருக்கும்.

COIR PITH

Coir Pith (தேங்காய் நார் தூள்) பற்றி விவரமாக என்னுடைய மாடித் தோட்டம் முதல் பதிவில் கூறி உள்ளேன். மாடித் தோட்டம் என்று போகும் போது Coir Pith மிக முக்கிய பொருளாக இருக்கிறது. Coir Pith வைத்து மீடியா தயாரிக்கும் போது தொட்டிகளின் எடை ரொம்பவே குறைவு. எனது அனுபவத்தில் தரையில் சுமாராக வரும் செடிகள், கீரைகள் கூட இந்த Coir Pith மீடியாவில் அருமையாக வருகிறது.

இது ஒரு கிலோ, ஐந்து கிலோ என compress செய்து கேக் வடிவில் கிடைக்கிறது. இங்கே கோவையில் சித்ரா கிருஷ்ணசாமி அவர்கள் Coir Pith-ஐ மாடி தோட்டத்தை ஊக்குவிக்கும் ஒரு சேவையாக அவர்கள் வீட்டிலேயே ஒரு அலுவலகத்தில் வைத்து ஐந்து கிலோ கேக் COIR PITH Rs.30 க்கு கொடுக்கிறார்கள். மாடி தோட்டத்தை ஊக்குவிக்க இதை ஒரு சேவையாகவே அவர்கள் இங்கே கோவையில் செய்து வருகிறார்கள். கூடவே Swastika என்று நிறுவனமாய்,  Dailydump.org நிறுவனத்தோடு இணைந்து காய்கறி கழிவுகளை மக்கவைத்து உரமாக மாற்றும் Compost Kamba-க்களையும் ஒரு சேவையாக பெங்களூரில் இருந்து வரவழைத்து அதே விலைக்கு இங்கே கோவையில் தருகிறார்கள். நான் ஒரு நாள் டெமோ பார்க்க சென்றிருந்தேன். Compost Kamba ஓன்று வீட்டில் நிறுவ ஐடியா இருக்கிறது. செய்தபிறகு விவரமாய் எழுதுகிறேன்.   
ARJUN GROW Bags என்ற நிறுவனம் சில Fair போன போது அறிமுகம் ஆனது. அவர்களிடம் தான் நான் முதன் முதலில் Coir Pith வாங்கி முயற்சித்தேன். Rs.45 என்ற விலையில் கொடுத்தார்கள்.

இதை தவிர இதே ஐந்து கிலோ Coir Pith கேக்கை 100-க்கும்  120-க்கும் விற்கும் நிறுவனங்கள் கூட நிறைய இருக்கின்றன. கேட்டால் EC கம்மி செய்திருக்கிறோம். Sterilize செய்திருக்கிறோம் என்று கூறி குழப்பி விடுகிறார்கள். விவரம் இல்லாத மக்கள் அதையும் வாங்கி போகிறார்கள், அது ஏதோ கிடைக்காத பொருள் என்று. இங்கே பொள்ளாச்சி அருகில் எக்கச்சக்க Coir Industries எக்கச்சக்கமாய் இருக்கிறது. அங்கே போனால் இன்னும் விலை குறைவாகவே வாங்கி வரலாம்.

EC-ஐ குறைக்க நன்றாக அதை நீரில் அலசி போட்டால் போதும். நான் முதன் முதலில் Coir Pith வாங்கிய போது, விவரம் தெரியாமல் உதிர்த்து அப்படியே பயன்படுத்து விட்டேன். மறுமுறை ஒரு Fair, போனபோதுகண்டிப்பா கழுவி தான் பயன்படுத்தணும். இல்லன்னா செடி முளைக்காது என்றார்கள். ஆனால் நான் முதலில் நிரப்பிய தொட்டியில் அருமையாக Dahliaபூ செடியும், தக்காளியும் வளர்ந்திருக்கின்றன. எனவே EC பற்றி ரொம்ப குழப்பி கொள்ள தேவை இல்லை.

COIR PITH in KOVAI
1.       பெயர்/நிறுவனம் - Chitra Krishnaswamy / Swastika  
இணைய முகவரி - http://www.dailydump.org/cities/coimbatore  
தொடர்பு எண்  – முருகன் என்பவரை 9842215935 எண்ணில் தொடர்பு கொண்டு பேசி பாருங்கள்.
இடம் - Chandragandhi Nagar, near PSG Hospital.
வழி : சித்ரா/கொடிசியாவில் இருந்து அவினாசி ரோட்டில் வரும் போது (Towards GandhiPuram),  Fun Republic Mall ஒட்டிய Signal தாண்டியதும், அடுத்த சிக்னல் PSG. அதை ஒட்டி இடது பக்கம் திரும்பவும் (ஒரு பழமுதிர்சோலை சிக்னல் அருகில் இருக்கும். அதை ஒட்டி இடது பக்கம்)       
  
NURSERY/SEEDLING TRAY

Nursery Tray பற்றி இந்த பதிவில் விவரமாய் எழுதி உள்ளேன். நாம் தோட்டத்தில் எல்லா விதமான காய்கறி, பூக்கள் என்று முயற்சி செய்ய Nursery Tray உதவியாய் இருக்கும். விதைகளின் முளைப்பு திறன் அதிகரிக்கும். நமக்கும் வாங்கிய விதைகளின் Germination Rate-ஐ எளிதாக கண்டுபிடிக்கலாம். நாற்று எடுத்து பாத்திகளில்/தொட்டிகளில் எடுத்து நடுவது எளிது. 
Nursery Tray இங்கே லோக்கல் நர்சரிகளில் கிடைப்பது இல்லை. போன முறை Agri Index 2013-ல் ஒரு ஸ்டாலில் Standard Tray – 98 holes (7 by 14) இருபது ரூபாய்க்கு கிடைத்தது. ஒரு ஐந்து வாங்கி வந்தேன். அதன் பிறகு பார்த்த எல்லா கண்காட்சிகளிலும் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் Standard Tray விற்கிறார்கள். அநியாய விலை (ஐம்பது ரூபாய்). போன வாரம் இங்கே புதிய தலைமுறை-யின் விவசாய கண்காட்சியிலும் அதே நிறுவனம், அதே விலை தான். Coir Pith- Rs.120 என்றார்கள். மக்களும் ஒரு சின்ன Grow Bag-ல் ஒரு தக்காளி செடியில் ரெண்டு தக்காளியை பார்த்ததும், என்ன விலை என்று கூட தெரியாமல் வாங்கி தான் போகிறார்கள்.  
  
Standard Tray –ஐ பயன்படுத்தும் போது குழிகள் சின்னதாய் இருப்பதால் சீக்கிரமே எடுத்து நட வேண்டிய வரும். அதனால் 50 holes ( 5 by 10) Tray தேடி பார்த்த போது எங்கும் கிடைக்கவில்லை. இணையத்தில் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு Justdial எல்லாம் தேடி, கடைசியாய் இங்கே Satish Agro –கை  கண்டுபிடித்தேன். எல்லா விதமான Nursery Tray-யும் வைத்திருக்கிறார்கள். Standard Tray – 98 holesRs.20க்கும் , 50 Holes Tray- Rs.25க்கும் கொடுத்தார்கள். ஒருவழியாய் Nursery Tray தேடல் முடிந்தது.

1.         பெயர்/நிறுவனம் – SATISH AGRO TECH
                      இணைய முகவரி - http://www.sathishagrotech.com/services5.html
                  தொடர்பு எண் -  http://www.sathishagrotech.com/contact.html
          இடம் -   18/1, Shanmuga Nagar, Sungam ByPass Road
                      வழி – உக்கடம் டவுன் பஸ் ஸ்டாண்டில் இருந்து சுங்கம் பை-பாஸ் சாலையில் வரும் போது ரெயில்வே லைன் மேம்பாலம் தாண்டியவுடன் இடது பக்கம் திரும்பினால் திருச்சி ரோடு, KG Cinemas எல்லாம் வரும். அதில் திரும்பாமல், ஒரு ஐம்பது அடி நேரே போனால் வலது பக்கம் இருக்கும் (கொஞ்சம் ரோட்டில் இருந்து கீழே இருக்கும்)             

GROW BAGS

மாடித் தோட்டம் எனும் போது எடை அதிகமான சிமெண்ட் தொட்டிகளை தவிர்பதர்க்காகவும், கையாள எளிதாக இருக்கும் என்பதற்காகவும் நாம் இந்த GROW BAGS பயன்படுத்துகிறோம். GROW BAGS-ல் இரண்டு வரை இருக்கிறது. ஓன்று பாலிதீன் வகை (கீழே இருப்பதில் வெள்ளை நிறம்), மற்றொன்று பிளாஸ்டிக் தார்ப்பாய் போன்ற ஒரு Material-ல் வருவது (கீழே இருப்பதில் பச்சை நிறம்). பாலிதீன் வகை கொஞ்சம் விலை குறைவாக இருக்கும். பிளாஸ்டிக் தார்ப்பாய் போன்ற Material-ல் வரும் பைகளை நமக்கு தேவையான அளவு thickness வைத்து வாங்கி கொள்ளலாம். அவைகள் 80 GSM thickness முதல் 200 GSM thickness வரை  (Paper thickness மாதிரி) நாம் கேட்ட Material-ல் செய்து கொடுக்கிறார்கள். கீரை வளர்க்க வட்டமாய் வாங்கும் பைகளை நாம் குறைந்த GSM-ல் வாங்கி கொள்ளலாம். அதிக GSM போகும் போது விலை அதிகமாக இருக்கும். ஆனால் நீண்ட காலம் உழைக்கும். எல்லோருமே இந்த GROW BAGSகள் இரண்டில் இருந்து நான்கு ஆண்டுகள் வரை உழைக்கும் என்கிறார்கள்.


பொதுவாய் Standard Size Bag (பச்சை/ஆரஞ்சு நிற பை) Rs.50 க்கு கொடுக்கிறார்கள். சில நிறுவனங்கள் அதையே Rs.60 க்கும், Rs.70 க்கும் கூட விற்பதை பார்த்திருக்கிறேன். ஐம்பது ரூபாய்க்கு குறைவாக நான் பார்த்ததில்லை.   

நான் இதுவரை பார்த்ததில் ARJUN GROW BAGS நிறுவனம் கொஞ்சம் உருப்படியாய் தெரிந்தது. நான் அவர்களிடம் 3 feet by 1 feet rectangular bags மூன்று ஆர்டர் செய்து Rs.90 க்கு வாங்கி இருந்தேன். GROW BAGSநன்றாக இருந்தது. 

  
1.         பெயர்/நிறுவனம் - ARJUN GROW BAGS
                      இணைய முகவரி - http://arjuncontainergardening.com/products.html
                    தொடர்பு எண் - http://arjuncontainergardening.com/contact_us.html


   Update as of Oct 2015
இப்போது Arjun Grow Bag நிறுவனம் இடம் மாறி விட்டார்கள். "Subhiksha Organics" என்று புதிய பெயரில் திருச்சி ரோடு இராமநாதபுரம் மாறி விட்டார்கள். நாம் காந்திபுரத்தில் இருந்து சுங்கம் ரவுண்டானா தாண்டி செல்லும் போது Alvenea School (இடது பக்கம்) தாண்டி ஒரு கி.மீ போனதும் இடது பக்கம் Naturals Spa மற்றும் வையகம் ஆர்கானிக் ஷாப் வரும். அதை ஒட்டி இடது பக்கம் ஒரு தார் ரோடு போகும். அதில் இரண்டாவது Right (You will see a small arch made with railway track rod with name 'கிருஷ்ணா காலனி') பிறகு அந்த தெரு முடிவில் left. அதில் இருந்து ஐந்தாவது கட்டிடம். கீழே உள்ள தொடர்பு என்னை அழைத்துக் கொள்ளுங்கள். 

SUBHIKSHA ORGANICS
Ph:  9443777778 / 9443034667 / 0422 - 23 11 577 / 0422 - 23 22 577
Mail : subhikshaorganics@gmail.com
        


இந்த விவரங்கள் எல்லாம் என்னுடைய தேடலில் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே கொடுக்கிறேன். இதை விட வேறு நிறுவனங்கள் விவரம் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள். கோவை நண்பர்கள் தோட்டம் சம்பந்தமாக, தோட்டம் பொருட்கள் சம்பந்தமாக என்ன உதவி, விவரம் தேவை பட்டாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். முடிந்த அளவுக்கு உதவி செய்கிறேன். gsivaraja@gmail.com க்கு ஒரு மெயிலை தட்டி விடுங்கள்.  
 

Thursday, February 6, 2014

வீட்டுத் தோட்டம் பயிற்சி வகுப்புகள் – ஒரு பார்வைஇப்போது ‘வீட்டுத் தோட்டம்மாடித் தோட்டம் பற்றி பயிற்சி வகுப்புகளை நிறைய  பார்க்க முடிகிறது. அதை பற்றி ஒரு சின்ன கண்ணோட்டம். நான் இது வரை கலந்து கொண்ட இரண்டு பயிற்சி வகுப்புகளையும் வைத்து பார்த்தால் ஓன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. அங்கே வருபவர்களுக்கு எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். Coir Pith-ஐ காட்டுகிறார்கள. ஆனால் அது எங்கு கிடைக்கும், விலை எவ்வளவு, எப்படி பயன்படுத்த வேண்டும், என்ன என்ன கலந்து பயன் படுத்த வேண்டும் என்பது ஏதோ சம்பந்தமே இல்லாத விஷயம் மாதிரி விட்டு விடுகிறார்கள். ஆனால் Humic Acid, VAM என்று ஏதேதோ பற்றி மூச்சு முட்ட அரைமணி நேரம் பாடம் எடுக்கிறார்கள். முதல் முறை தோட்டம் போட ஏதும் விவரம் கிடைக்குமா என்று வரும் மக்கள் கூட்டத்திற்கு Humic Acid, Hydroponics பற்றி சொல்லி என்ன ஆக போகிறது? 

விதை பற்றி, நாற்று தயாரிப்பது பற்றி, மண் கலவை பற்றி என்று எதுவுமே சொல்வது இல்லை. ஒரு குறிபிட்ட நகரத்தில் நடக்கும் போது, அங்கே இருக்கும் தோட்டம் சம்பந்தமான நிறுவனங்களை பற்றி சில விவரங்கள் கொடுக்கலாம் (Coir Pith, Nursery Tray எங்கே கிடைக்கும் என்பது பற்றி). அதையும் செய்வது இல்லை. ஆனால் WWW.WWW.WW போனீங்கன்னா நம்ம நண்பர் ஒருவர் வித்துகிட்டு இருக்கார் என்று சொல்ல தெரிகிறது. ஒரு Virtual World-Create செய்வதிலும் தெளிவு.     கடைசியில் மக்கள் போனதுக்கு அங்கே இருக்கும் ஸ்டால்களில் கிடைக்கும் பொருட்களை வாங்கி கொண்டு வருகிறோம். அவ்ளோ தான் ஒவ்வொரு பயிற்சி வகுப்பும்.   

நான் போன முறை சென்ற போது Coir Pith பற்றி கேட்டதற்கு எனக்கு கிடைத்த பதில் ‘இங்கே அவ்ளோ நல்லது கிடைப்பதில்லை. EC value எல்லாம் ரொம்ப அதிகமா இருக்கும். வேணும்னா சொல்லுங்க. நாங்க வரவழைச்சு தர்றோம் என்பது தான். ஆனால் EC என்றால் என்ன என்றோ, அதை எப்படி குறைக்கலாம் என்றோ மூச்சு கூட விடுவதில்லை. தகவல் பரிமாற்றம் என்பதை செய்து விடக்கூடாது என்பதிலும் தெளிவாய் இருக்கிறார்கள். அதன் பிறகு தேடி பார்த்ததில், Coir pith-க்கு நான் கிட்டதட்ட மூன்று இடங்களை இங்கே கண்டு பிடித்திருக்கிறேன்.   

ஒரு தோட்ட பயிற்சி என்றால், அதற்கு தேவையானது என்ன, எங்கே கிடைக்கும், அதை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை சொல்லி கொடுக்க வேண்டாமா? அதை விட்டுவிட்டு நான்கு அடியிலும் தோட்டம் போடலாம், எட்டு அடியிலும் தோட்டம் போடலாம் என்று தேவை இல்லாத டெமோ வேறு. இதை பொதுமக்களிடம் போய் வீட்டு தோட்டம் பற்றி ஒரு விழிப்புணர்வு கொண்டு வர செய்ய வேண்டும். ‘வீட்டுத் தோட்டம் பயிற்சி கருத்தரங்கு என்று வைத்து விட்டு செய்யக் கூடாது. அங்கே வருபவன் அத்தனை பெறும் ஏற்கனவே தோட்டம் போட நினைத்து விவரங்கள் கிடைக்குமா என்று தான் வருவான். அவனிடம் போய் விழிப்புணர்வு பிரச்சாரம் மாதிரி தொடக்கம் முதல் இறுதி வரை சொல்லிக்கொண்டே  இருக்கிறார்கள். 
  
தோட்டம் என்பது ரொம்பவே எளிதானது. நல்ல மண், நல்ல விதை, நல்ல வெயில் படும் இடம் இருந்தால் எந்த செடியும் எளிதாய் வரும். ஆனால் ஒவ்வொரு பயிற்சியியும் ஒரு சில பொருட்களுக்கான விளம்பர கூட்டம் மாதிரி தான் போகிறது.  தோட்டம் எளிதாய் எப்படி அமைக்கலாம், அதை பற்றி எந்த அடிப்படை புரிதலையும் சொல்லிக் கொடுக்க கூடாது என்று உறுதியாய் இருக்கிறார்கள். வெளியே ஒரு ஸ்டாலில் ரொம்ப சிறிய Polythene Grow Bag-ல் ஏதோ ஆர்கனிக் உரம் நிரப்பி, கீரை வளர்க்கலாம் இந்த பையில், விலை வெறும் 180  தான் என்கிறார்கள். விலையை பார்த்தால் தலை சுற்றியது. இதையே நாம்  தயார் செய்ய வெறும் நாற்பது ரூபாய் தான் ஆகும். அந்த விவரங்கள் மக்களுக்கு தெரிய கூடாது என்பதிலும் தெளிவு. எதை எடுத்தாலும் ஆர்கானிக் என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். Humic Acid போட்டால் தான் செடி நன்றாக வளரும் என்கிறார்கள். மக்களை அப்படி யோசிக்க வைப்பதும் இந்த பயிற்சி வகுப்புகளின் நோக்கமாய் இருக்கிறது.

மக்கள் கூட்டமும் அங்கே விதை கடைகளில் போய் ‘இது ஆர்கானிக் விதை தானே என்று கேட்டு வாங்குகிறது. எனக்கு தெரிந்து Open Pollinated மற்றும் ஹைப்ரிட் விதைகள் தான் கேள்விப்பட்டிருக்கிறேன். Organic, Inorganic எல்லாம் விதையில் எங்கே இருந்து வந்தது என்று தெரியவில்லை.   

மண்புழு உரம் வீட்டிலேயே தயாரிக்கலாம் என்கிறார்கள் (நாம் எத்தனை பேர் பண்புழுவை வாங்கி போட்டு செய்ய தயாராய் இருப்போம் என்று தெரியவில்லை). ஆனால் அதை விட எளிதான முறைகள் இருக்கிறது. அதை சொல்லுவதில்லை.

தமிழக அரசு வழங்க இருக்கும் மாடி தோட்டம் Kit பற்றி லேசாய் போகிற போக்கில் ஒரு Slide. அதை பற்றி ஒரு விவரம் கூட வாயை திறந்து சொல்ல வில்லை. கூட்டத்தில் எல்லோருமே எந்த எண்ணுக்கு போன் செய்ய வேண்டும், அந்த website என்று கேட்டார்கள். அதை அரைகுறையாக சொல்லி போனார்கள். தண்டத்திர்க்கு தேவை இல்லாத நோட்டீஸ் எல்லாம் அடித்து வர்றவன் கையில் எல்லாம் திணித்தவர்கள், அந்த Kit பற்றி ஒரு சின்ன நோட்டீஸ் அடித்து கொடுத்த்திருக்கலாம். இல்லை, ஒரு பத்து நிமிடம் அதை பற்றி விவரம் கூறி இருக்கலாம். பணம் முதலில் நாம் கட்டவேண்டியதில்லை, Register செய்தால் போதும் என்று சொல்லி இருக்கலாம்.  அதெல்லாம் சொன்னால் ஒரு 10%  மக்களாவது அதற்கு பதிவு செய்து இருப்பார்கள். ஆனால் அது தான் நோக்கம் இல்லையே.  
   
இன்னொரு முக்கியமான பகுதி, இயற்கை முறையில் தோட்டத்தில் பூச்சிகளை கட்டுபடுத்துவது. இது ரொம்ப சிக்கலான ஒரு பகுதி. இதை பற்றி எதுவுமே பேசுவதில்லை. சும்மா மஞ்சளை கரைத்து தெளிதாலோ, இஞ்ஜி,பூண்டு கரைத்து தெளிதாலோ ஒன்றும் பெரிதாய் பலன் கிடைப்பதில்லை. இதை பற்றி கொஞ்சம் விவரங்கள் இருந்தால் கூறலாம். அதெல்லாம் ஏதோ சம்பந்தம் இல்லாத விஷயம் மாதிரி தான் ஒவ்வொரு பயிற்சி வகுப்புகளும் தயார் செய்யப்படுகிறது. 

மொத்தத்தில், நான் பார்த்தவரை, ஒவ்வொரு பயிற்சி வகுப்புகளும் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு குறிபிட்ட வியாபார வட்டத்தை உருவாக்கவே பயன்படுத்த படுகிறது. அந்த கூட்டம் ஒரே ஒரு கீரை வளர்க்கும் Kit-ன்  விலை Rs.200 என்றாலும் ஒன்றும் புரியாமல் வாங்க வேண்டும். அந்த கூட்டத்திற்கு ‘உரம் கிலோ ஐம்பது ரூபாய் தான், இதில் நிறைய ஆர்கானிக் சத்துக்கள், Microbes எல்லாம் கலந்திருக்கிறோம். செடி நல்லா வரும் என்று சொன்னால் ஒன்றும் யோசிக்காமல் வாங்க வேண்டும். இதை சரியாகவே செய்கிறது ஒவ்வொரு பயிற்சி வகுப்புகளும்.