Showing posts with label Gardening training. Show all posts
Showing posts with label Gardening training. Show all posts

Thursday, February 6, 2014

வீட்டுத் தோட்டம் பயிற்சி வகுப்புகள் – ஒரு பார்வை



இப்போது ‘வீட்டுத் தோட்டம்’ ‘மாடித் தோட்டம்’ பற்றி பயிற்சி வகுப்புகளை நிறைய  பார்க்க முடிகிறது. அதை பற்றி ஒரு சின்ன கண்ணோட்டம். நான் இது வரை கலந்து கொண்ட இரண்டு பயிற்சி வகுப்புகளையும் வைத்து பார்த்தால் ஓன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. அங்கே வருபவர்களுக்கு எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். Coir Pith-ஐ காட்டுகிறார்கள. ஆனால் அது எங்கு கிடைக்கும், விலை எவ்வளவு, எப்படி பயன்படுத்த வேண்டும், என்ன என்ன கலந்து பயன் படுத்த வேண்டும் என்பது ஏதோ சம்பந்தமே இல்லாத விஷயம் மாதிரி விட்டு விடுகிறார்கள். ஆனால் Humic Acid, VAM என்று ஏதேதோ பற்றி மூச்சு முட்ட அரைமணி நேரம் பாடம் எடுக்கிறார்கள். முதல் முறை தோட்டம் போட ஏதும் விவரம் கிடைக்குமா என்று வரும் மக்கள் கூட்டத்திற்கு Humic Acid, Hydroponics பற்றி சொல்லி என்ன ஆக போகிறது? 

விதை பற்றி, நாற்று தயாரிப்பது பற்றி, மண் கலவை பற்றி என்று எதுவுமே சொல்வது இல்லை. ஒரு குறிபிட்ட நகரத்தில் நடக்கும் போது, அங்கே இருக்கும் தோட்டம் சம்பந்தமான நிறுவனங்களை பற்றி சில விவரங்கள் கொடுக்கலாம் (Coir Pith, Nursery Tray எங்கே கிடைக்கும் என்பது பற்றி). அதையும் செய்வது இல்லை. ஆனால் WWW.WWW.WW போனீங்கன்னா நம்ம நண்பர் ஒருவர் வித்துகிட்டு இருக்கார் என்று சொல்ல தெரிகிறது. ஒரு Virtual World-ஐ Create செய்வதிலும் தெளிவு.     கடைசியில் மக்கள் போனதுக்கு அங்கே இருக்கும் ஸ்டால்களில் கிடைக்கும் பொருட்களை வாங்கி கொண்டு வருகிறோம். அவ்ளோ தான் ஒவ்வொரு பயிற்சி வகுப்பும்.   

நான் போன முறை சென்ற போது Coir Pith பற்றி கேட்டதற்கு எனக்கு கிடைத்த பதில் ‘இங்கே அவ்ளோ நல்லது கிடைப்பதில்லை. EC value எல்லாம் ரொம்ப அதிகமா இருக்கும். வேணும்னா சொல்லுங்க. நாங்க வரவழைச்சு தர்றோம்’ என்பது தான். ஆனால் EC என்றால் என்ன என்றோ, அதை எப்படி குறைக்கலாம் என்றோ மூச்சு கூட விடுவதில்லை. தகவல் பரிமாற்றம் என்பதை செய்து விடக்கூடாது என்பதிலும் தெளிவாய் இருக்கிறார்கள். அதன் பிறகு தேடி பார்த்ததில், Coir pith-க்கு நான் கிட்டதட்ட மூன்று இடங்களை இங்கே கண்டு பிடித்திருக்கிறேன்.   

ஒரு தோட்ட பயிற்சி என்றால், அதற்கு தேவையானது என்ன, எங்கே கிடைக்கும், அதை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை சொல்லி கொடுக்க வேண்டாமா? அதை விட்டுவிட்டு நான்கு அடியிலும் தோட்டம் போடலாம், எட்டு அடியிலும் தோட்டம் போடலாம் என்று தேவை இல்லாத டெமோ வேறு. இதை பொதுமக்களிடம் போய் வீட்டு தோட்டம் பற்றி ஒரு விழிப்புணர்வு கொண்டு வர செய்ய வேண்டும். ‘வீட்டுத் தோட்டம் பயிற்சி கருத்தரங்கு’ என்று வைத்து விட்டு செய்யக் கூடாது. அங்கே வருபவன் அத்தனை பெறும் ஏற்கனவே தோட்டம் போட நினைத்து விவரங்கள் கிடைக்குமா என்று தான் வருவான். அவனிடம் போய் விழிப்புணர்வு பிரச்சாரம் மாதிரி தொடக்கம் முதல் இறுதி வரை சொல்லிக்கொண்டே  இருக்கிறார்கள். 
  
தோட்டம் என்பது ரொம்பவே எளிதானது. நல்ல மண், நல்ல விதை, நல்ல வெயில் படும் இடம் இருந்தால் எந்த செடியும் எளிதாய் வரும். ஆனால் ஒவ்வொரு பயிற்சியியும் ஒரு சில பொருட்களுக்கான விளம்பர கூட்டம் மாதிரி தான் போகிறது.  தோட்டம் எளிதாய் எப்படி அமைக்கலாம், அதை பற்றி எந்த அடிப்படை புரிதலையும் சொல்லிக் கொடுக்க கூடாது என்று உறுதியாய் இருக்கிறார்கள். வெளியே ஒரு ஸ்டாலில் ரொம்ப சிறிய Polythene Grow Bag-ல் ஏதோ ஆர்கனிக் உரம் நிரப்பி, கீரை வளர்க்கலாம் இந்த பையில், விலை வெறும் 180  தான் என்கிறார்கள். விலையை பார்த்தால் தலை சுற்றியது. இதையே நாம்  தயார் செய்ய வெறும் நாற்பது ரூபாய் தான் ஆகும். அந்த விவரங்கள் மக்களுக்கு தெரிய கூடாது என்பதிலும் தெளிவு. எதை எடுத்தாலும் ஆர்கானிக் என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். Humic Acid போட்டால் தான் செடி நன்றாக வளரும் என்கிறார்கள். மக்களை அப்படி யோசிக்க வைப்பதும் இந்த பயிற்சி வகுப்புகளின் நோக்கமாய் இருக்கிறது.

மக்கள் கூட்டமும் அங்கே விதை கடைகளில் போய் ‘இது ஆர்கானிக் விதை தானே’ என்று கேட்டு வாங்குகிறது. எனக்கு தெரிந்து Open Pollinated மற்றும் ஹைப்ரிட் விதைகள் தான் கேள்விப்பட்டிருக்கிறேன். Organic, Inorganic எல்லாம் விதையில் எங்கே இருந்து வந்தது என்று தெரியவில்லை.   

மண்புழு உரம் வீட்டிலேயே தயாரிக்கலாம் என்கிறார்கள் (நாம் எத்தனை பேர் பண்புழுவை வாங்கி போட்டு செய்ய தயாராய் இருப்போம் என்று தெரியவில்லை). ஆனால் அதை விட எளிதான முறைகள் இருக்கிறது. அதை சொல்லுவதில்லை.

தமிழக அரசு வழங்க இருக்கும் மாடி தோட்டம் Kit பற்றி லேசாய் போகிற போக்கில் ஒரு Slide. அதை பற்றி ஒரு விவரம் கூட வாயை திறந்து சொல்ல வில்லை. கூட்டத்தில் எல்லோருமே எந்த எண்ணுக்கு போன் செய்ய வேண்டும், அந்த website என்று கேட்டார்கள். அதை அரைகுறையாக சொல்லி போனார்கள். தண்டத்திர்க்கு தேவை இல்லாத நோட்டீஸ் எல்லாம் அடித்து வர்றவன் கையில் எல்லாம் திணித்தவர்கள், அந்த Kit பற்றி ஒரு சின்ன நோட்டீஸ் அடித்து கொடுத்த்திருக்கலாம். இல்லை, ஒரு பத்து நிமிடம் அதை பற்றி விவரம் கூறி இருக்கலாம். பணம் முதலில் நாம் கட்டவேண்டியதில்லை, Register செய்தால் போதும் என்று சொல்லி இருக்கலாம்.  அதெல்லாம் சொன்னால் ஒரு 10%  மக்களாவது அதற்கு பதிவு செய்து இருப்பார்கள். ஆனால் அது தான் நோக்கம் இல்லையே.  
   
இன்னொரு முக்கியமான பகுதி, இயற்கை முறையில் தோட்டத்தில் பூச்சிகளை கட்டுபடுத்துவது. இது ரொம்ப சிக்கலான ஒரு பகுதி. இதை பற்றி எதுவுமே பேசுவதில்லை. சும்மா மஞ்சளை கரைத்து தெளிதாலோ, இஞ்ஜி,பூண்டு கரைத்து தெளிதாலோ ஒன்றும் பெரிதாய் பலன் கிடைப்பதில்லை. இதை பற்றி கொஞ்சம் விவரங்கள் இருந்தால் கூறலாம். அதெல்லாம் ஏதோ சம்பந்தம் இல்லாத விஷயம் மாதிரி தான் ஒவ்வொரு பயிற்சி வகுப்புகளும் தயார் செய்யப்படுகிறது. 

மொத்தத்தில், நான் பார்த்தவரை, ஒவ்வொரு பயிற்சி வகுப்புகளும் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு குறிபிட்ட வியாபார வட்டத்தை உருவாக்கவே பயன்படுத்த படுகிறது. அந்த கூட்டம் ஒரே ஒரு கீரை வளர்க்கும் Kit-ன்  விலை Rs.200 என்றாலும் ஒன்றும் புரியாமல் வாங்க வேண்டும். அந்த கூட்டத்திற்கு ‘உரம் கிலோ ஐம்பது ரூபாய் தான், இதில் நிறைய ஆர்கானிக் சத்துக்கள், Microbes எல்லாம் கலந்திருக்கிறோம். செடி நல்லா வரும்’ என்று சொன்னால் ஒன்றும் யோசிக்காமல் வாங்க வேண்டும். இதை சரியாகவே செய்கிறது ஒவ்வொரு பயிற்சி வகுப்புகளும்.

Thursday, January 23, 2014

மாடி தோட்டம் – DO IT YOURSELF KIT மற்றும் பயிற்சி வகுப்பு



சென்னை மற்றும் கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். போன பதிவில் மாடி தோட்டம் பற்றி பார்த்தோம். ஒரு சிறிய மாடி தோட்டம் அமைக்க (இருபது Grow Bags வைத்து) தேவையான எல்லா பொருட்களையும் அரசு ‘நீங்களே செய்து பாருங்கள் – ‘ என்ற பெயரில் தோட்டக்கலை துறை மூலமாக கொடுக்க ஒரு திட்டம் அறிவித்து இருக்கிறார்கள். விவரங்கள் கீழே.

இதில் இருபது பாலிதீன் Grow Bags, ஒவ்வொன்றின் உள்ளேயே அதற்கு தேவையான Coir Pith Block.ஒரு பெரிய பாலிதீன் தரை விரிப்பு ஓன்று. விதைகள், தெளிப்பான் என்று ஒரு பெரிய பட்டியல் கொடுத்திருக்கிறார்கள். இதன் விலை Rs.3300 என்றும், இதை 50% மானியத்தில் Rs.1650 ல் கொடுப்பதாக கூறுகிறார்கள். Coir Pith Block, Grow Bags, Nursery Tray என்று தனி தனியாய் தேடி அலையாமல் ஒரு முதல் முயற்சியாய் செய்து பார்க்க நினைப்பவர்களுக்கு பயன் படலாம்.   
       
இணையத்தில் உள்ள பதிவு செய்யும் முறையில் Bank details எல்லாம் கேட்டிருந்தார்கள். நான் இங்கே கோவில்பாளையம் யூனியன் ஆபீசை தொடர்பு கொண்டு நேரில் போய் பேசினேன். நான் ஒரு Kit க்கு பதிவு செய்தேன் (ஒருவர் ஐந்து வரை வாங்கலாம். அதாவது மொத்தம் நூறு Grow Bags) . இப்போதைக்கு பேரையும், முகவரியையும் கேட்டு பதிவு செய்து கொண்டார்கள். முன் பணம் ஏதும் செலுத்த தேவை இல்லை. எப்போது கொடுப்பார்கள், எப்படி கொடுப்பார்கள் என்று கேட்டதற்கு, இதை Contract எடுத்திருக்கும் நிறுவனம் பெப்ருவரி, மார்ச் மாதத்திற்குள் கொடுக்க கெடு இருப்பதாக கூறினார். வீட்டிலேயே கொடுத்தாலும் கொடுக்கலாம் என்றார். ஆனால் தெளிவாக விவரம் இல்லை. 

பொருள் வரும் வரை பணம் கொடுக்க தேவை இல்லை. அதனால் தைரியமாய் பதிவு செய்து விட்டேன். இது Rs.3300 க்கு மதிப்பு உடையதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் கொடுத்திருக்கும் சைஸ் Grow Bags ஓன்று Rs.30 தான் பெறும. இப்படி கணக்கு போட்டாலும், Rs.1650 க்கு நஷ்டமில்லை. அது, அந்த நிறுவனம் கொடுக்கும் தரத்திலும் இருக்கிறது. எப்படி இருந்தாலும், முதல் முயற்சியை செய்ய நினைப்பவர்களுக்கு பயன்படும். 

மேலும்  விவரங்களுக்கு,

http://tnhorticulture.tn.gov.in/do-it-yourself-kit
 











கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ என்ற பெயரில் விகடன் நிறுவனம் இங்கே கோவையில் (2-Feb , ஞாயிறு) ஒரு அரை நாள் பயிற்சி கருத்தரங்கு நடத்துகிறார்கள். அனுமதி இலவசம் தான். நான் போகிறேன். இந்த மாதிரி பயிற்சிகளுக்கு போகும் போது கோவையில் உள்ள நிறுவனங்கள் பற்றி தெரியவரும், சில நேரம் அங்கே இருக்கும் Stalls மூலம் சில பொருட்கள், விவரங்கள் கிடைக்கும். அதனால் நான் போகிறேன். விருப்பம் இருக்கும் நண்பர்கள் (ஞாயிற்று கிழமை தான்) கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுங்கள்.   
     
இந்த இரண்டு தகவல்களையும் நமது ப்ளாக் நண்பர் தங்கவேல் maravalam ப்ளாக்-ல இருந்து என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவருக்கு நன்றி. Maravalam ப்ளாக் வின்சென்ட் அவர்களுக்கும் நன்றி.



Friday, November 15, 2013

கோவையில் – வீட்டுத் தோட்டம் & மாடித் தோட்டம் – ஒரு நாள் பயிற்சி

கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். ஹோட்டல் ஸ்ரீராம்-ல், இந்த ஞாயிறு (17.11.2013) வீட்டுத் தோட்டம் மற்றும் மாடி தோட்டம் பற்றி ஒரு பயிற்சி கருத்தரங்கு ஓன்று நடைபெறுகிறது. நமது ப்ளாக் நண்பர் தங்கவேல்  மூலமாக இந்த தகவல் கிடைத்தது. இந்த பயிற்சி பற்றி எனக்கு எந்த விவரமும் இல்லை. கிடைத்த தகவலை உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன். அவ்வளவே.

கட்டணம் (Rs.750). கோவையில் என்பதால் இங்கே வீட்டு தோட்டத்தில் ஆர்வம் உள்ள மக்கள் வட்டம் பற்றி தகவல் கிடைக்கலாம். கோவையில் தோட்டத்திற்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் இடங்கள் பற்றி தகவல் கிடைக்கலாம். அதனால் நான் இந்த பயிற்சிக்கு போகிறேன். போன் செய்து ரெஜிஸ்டர் செய்து கொண்டால், ஞாயிறு நேரில் போய் பணம் செலுத்தி கலந்து கொள்ளலாம்.

விருப்பம் இருந்தால், கொடுக்கபட்ட எண்னை தொடர்பு கொண்டு பேசி பாருங்கள்.

தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்கள்:
94420 19007
75985 16303
98940 66303    P.வின்சென்ட்