Friday, November 15, 2013

கோவையில் – வீட்டுத் தோட்டம் & மாடித் தோட்டம் – ஒரு நாள் பயிற்சி

கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். ஹோட்டல் ஸ்ரீராம்-ல், இந்த ஞாயிறு (17.11.2013) வீட்டுத் தோட்டம் மற்றும் மாடி தோட்டம் பற்றி ஒரு பயிற்சி கருத்தரங்கு ஓன்று நடைபெறுகிறது. நமது ப்ளாக் நண்பர் தங்கவேல்  மூலமாக இந்த தகவல் கிடைத்தது. இந்த பயிற்சி பற்றி எனக்கு எந்த விவரமும் இல்லை. கிடைத்த தகவலை உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன். அவ்வளவே.

கட்டணம் (Rs.750). கோவையில் என்பதால் இங்கே வீட்டு தோட்டத்தில் ஆர்வம் உள்ள மக்கள் வட்டம் பற்றி தகவல் கிடைக்கலாம். கோவையில் தோட்டத்திற்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் இடங்கள் பற்றி தகவல் கிடைக்கலாம். அதனால் நான் இந்த பயிற்சிக்கு போகிறேன். போன் செய்து ரெஜிஸ்டர் செய்து கொண்டால், ஞாயிறு நேரில் போய் பணம் செலுத்தி கலந்து கொள்ளலாம்.

விருப்பம் இருந்தால், கொடுக்கபட்ட எண்னை தொடர்பு கொண்டு பேசி பாருங்கள்.

தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்கள்:
94420 19007
75985 16303
98940 66303    P.வின்சென்ட்

4 comments:

  1. Replies
    1. It is worth attending it. Will write more later.

      Delete
  2. புது தகவல்களுக்காக காத்திருக்கிறேன். முக்கியமாய் இந்த மாவு பூச்சியை அழிக்கும் முறையை கேட்டு வாங்களேன். செம்பருத்தி, நந்தியாவெட்டை, ஏன் கீரைகளில் கூட
    இவை தென்படுகின்றன.
    அப்படியே இன்னும் ஒரு கேள்வி சென்னை வெய்யிலுக்கு செடிகளின் மீது பச்சை நெட் போட வேண்டுமா? என்னுடைய மாடி தோட்டம் இப்பொழுது ஓரளவு அழகாய்
    வந்துள்ளது. அவைகளைப் பற்றி எழுத ஆரம்பித்துள்ளேன் பார்த்தீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஹாய் உஷா. பயிற்சி வகுப்பு நன்றாக இருந்தது. விவரமாய் எழுதுகிறேன்.

      Delete