Saturday, November 28, 2015

மாடித் தோட்டம் – Part-4 நாற்று எடுத்தல் (Video – Nursery Tray)



எனது இரண்டாவது வீடியோ பதிவு. வளர்ப்பு ஊடகம் தயார் செய்து பைகள் எல்லாம் ரெடியானதும் அடுத்தது விதைப்பது தான். அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நர்சரி ட்ரே பற்றி ஏற்கனவே இந்த பதிவுவில் எழுதி இருந்தேன். மேலும் சில தகவல்கள் சேர்த்து, செய்முறை விளக்கத்தோடு இந்த வீடியோ பதிவை கொடுக்கிறேன்.   

Youtube URL : https://youtu.be/vWB5v8U9qPQ




Saturday, November 14, 2015

மாடித் தோட்டம் – Part-3 (Video – வளர்ப்பு ஊடகம்)



போன பதிவின் ஒரு வீடியோ தொகுப்பாய் இந்த பதிவை கொடுக்கிறேன். சும்மா ஒரு வீடியோவை எடுத்து போடலாம் என்று ஆரம்பித்து, வெறுமனே வளர்ப்பு ஊடகம் மட்டும் இல்லாமல் மாடித்தோட்டம் பற்றி விளக்கம் கொடுக்க சில விவரம் சேர்த்து எடிட்டிங், டப்பிங் என்று வேலை பெரிதாகி போனதால் இந்த பதிவு தாமதமாகி போனது. முதன் முதலாய் மாடித் தோட்டம் ஆரம்பிக்க தேவையான தகவல்களை முடிந்த அளவுக்கு இந்த வீடியோ தொகுப்பில் கொடுத்திருக்கிறேன்.

தவிர தீபாவளிக்கு சென்னை (மடிப்பாக்கம்) வேறு போய் இருந்தேன். வேலை நிறைய இருந்ததால் முன்னமே கூற முடியவில்லை. சென்னை மழை, புயலில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிறது. அதிலும் மடிப்பாக்கம் ராம் நகர் ஏரியாவில் (ஏரியில்) இப்போது படகு போக்குவரத்து ஆரம்பித்து இருப்பார்கள். 2006 – 2007 ல் நீச்சல் அடித்து ஆபிஸ் போன அனுபவம் எனக்கும் உண்டு.  அதிர்ஷ்டவசமாக தண்டவாளம் எல்லாம் தண்ணீரில் மூழ்கும் முன் கோவை வந்து விட்டேன்.

இங்கேயும் ஒரே மழை தான். இரண்டு வாரமாக தோட்டத்திற்கு தண்ணீரே விட அவசியம் வர வில்லை.   

எனது முதல் வீடியோ முயற்சி. நிறைகள், குறைகளை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். வரும் வீடியோ பதிவுகளை மேன்படுத்த உதவும். 

YouTube URL - https://youtu.be/iAOnw1oooEE