Saturday, November 28, 2015

மாடித் தோட்டம் – Part-4 நாற்று எடுத்தல் (Video – Nursery Tray)எனது இரண்டாவது வீடியோ பதிவு. வளர்ப்பு ஊடகம் தயார் செய்து பைகள் எல்லாம் ரெடியானதும் அடுத்தது விதைப்பது தான். அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நர்சரி ட்ரே பற்றி ஏற்கனவே இந்த பதிவுவில் எழுதி இருந்தேன். மேலும் சில தகவல்கள் சேர்த்து, செய்முறை விளக்கத்தோடு இந்த வீடியோ பதிவை கொடுக்கிறேன்.   

Youtube URL : https://youtu.be/vWB5v8U9qPQ
38 comments:

 1. Excellent video anna, thanks for your guide.

  ReplyDelete
 2. ரொம்ப அருமை அண்ணா....

  ReplyDelete
 3. excellent nga. will follow your guidance.

  ReplyDelete
 4. அருமையான பதிவு.தொடரட்டும் தங்களின் சேவை.

  ReplyDelete
 5. அண்ணா,

  விதை முளைத்த பின்பு வெயிலில் வைக்க வேண்டுமா?

  அல்லது விதைத்த உடனேயே குழித்தட்டை வெயிலில் வைக்கலாமா?

  ReplyDelete
  Replies
  1. விதைத்தவுடனேயே வெயிலில் வைக்கலாம். நான் அப்படி தான் செய்கிறேன். ஆனால் தினமும் நீர் ஊற்ற வேண்டும். அது மிக அவசியம்.

   Delete
 6. சிவா அண்ணா வணக்கம்
  நல்ல வீடியோ பதிவு, உபயோகமான தகவல்கள்......

  உங்க பதிவுகளில் இருந்து தோட்டம் சம்பந்தப்பட்ட நல்ல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் உங்க எழுத்தை படிப்பதே தனி சுவாரசியமான விசயம்.... பூச்சிக்கொல்லி ஒரு பார்வை, தோட்டத்து விருந்தாளிகள் இது போன்ற பல பதிவுகள் அதற்கு உதாரணம் .... இந்த முறை நீங்கள் நேரடியாக வீடியோ பதிவாக கொடுத்துவிட்டதால் படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது... இருந்தாலும் ஏற்கனவே நீங்கள் இந்த தகவல்களை பதிவிட்டு விட்டதால் அதன் தொடர்ச்சியாக இந்த வீடியோ பதிவை ஏற்றுக்கொள்ளலாம்...

  புதிதாக வேறு ஏதேனும் தகவல்களை தரும்போதோ , உங்கள் தோட்ட விளைச்சலை பற்றியோ நீங்கள் எழுத்து வடிவில் தந்து அவ்வப்போது இதுபோன்ற வீடியோ பதிவுகளை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது எனது விருப்பம்....

  நன்றி அண்ணா.....

  ReplyDelete
  Replies
  1. நல்லது தம்பி. தோட்டம் பற்றி எழுதுவதில் எனது எழுத்து பிடித்திருக்கிறது என்று கேட்பது ரொம்ப சந்தோசமா இருக்கு இசக்கி.

   என்னடா.. இவன் இனி வெறும் கேமராவ தூக்கிட்டு தோட்டத்த ரவுண்டு வந்து வெறும் வீடியோ பதிவா போட்டு முடிச்சிருவான் போலன்னு நேனைச்சிட்டீன்களா :) . நமது வழக்கமான பதிவுகள் தொடரும். சில செய்முறை வீடியோக்கள் புதியவர்களுக்கு பயன்படும் என்று தான் இந்த பதிவுகள்.

   Delete
 7. சிவா அருமை, தெளிவான விளக்கத்துடன் கூடிய வீடியோ. அடுத்த வீடியோ பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 8. ஆர்வம் மட்டுமே மனதில் இருக்க,வாடகை வீட்டுவாசியான எனக்கு அதை செயல்படுத்த முடியாமல் தள்ளி போட ஆயிரம் காரணங்கள்.....

  காய்கறி எனும்போது கடைசியில் காசு கணக்கு பார்த்து,இதற்கு கடையிலேயே வாங்கிக்கொள்ளலாமே என்ற எண்ணம் வந்துவிடும்.....

  வீட்டுத்தோட்டத்தின் அறுவடை ஒரு உபரி பலன்...... அவ்வளவுதான் ....

  உண்மையான பலன் விதைத்ததிலிருந்து அது வளர்ந்து செடியாகி பூத்துக் குலுங்குவதை பார்க்கும்போது நம் மனம் அடையும் மகிழ்ச்சியும்,புத்துணர்ச்சியுமே....

  என்னைப்பொறுத்தவரை அது அழகான பெங்களூர் ரோஜாவோ ...
  சாதாரண அருகம்புல்லோ...

  இரண்டுமே பிறந்து நம் கையில் தவழும் பச்சிளம் பிள்ளைக்கு சமம்....

  வீட்டுத் தோட்டத்தின் நிஜ பயன் கடைசியில் கிடைக்கும் அருவடையல்ல....

  இடையில் கிடைக்கும் மன குதூகலமும்,புத்துணர்ச்சியும்.....

  மிக எதேச்சையாக கண்ணில்பட்ட உங்கள் வலைப்பூ ...,என் மன ஏக்கத்தை தூண்டி விட்டது....

  வழக்கம்போல வழிமுறையை மட்டும் சொல்லாது....

  அதை அனுபவிக்கும் பார்வையையும் ஏற்படுத்தும் உங்கள் முயற்சிக்கு என் வணக்கங்கள்....

  உங்கள் வலைப்பூவை தொடரும் வண்டிகளில் ஒன்றாக நானும் இருப்பேன் வாழ்த்துக்கள்....

  மகா.சுரேஷ்.மிட்டூர்

  ReplyDelete
  Replies
  1. கவிதை மாதிரி அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள் நண்பரே. உங்கள் எழுத்துகள் படிக்க சந்தோசமாக இருந்தது. உங்கள் எழுத்திலேயே இயற்கை மீதி உங்கள் ஆர்வம் தெரிகிறது. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

   வாடகை வீடு என்று கூறி இருக்கிறீர்கள். முடிந்தால் தோட்டம் ஓன்று ஆரம்பிக்க பாருங்கள். உங்களுக்கு விவரம் ஏதும் தேவைப்பட்டால் எனக்கு ஒரு மடலை தட்டி விடுங்கள். எனக்கு தெரிந்த விவரங்களை கொடுக்கிறேன்.

   Delete
  2. மிகவும் நன்றி சிவா....

   பெயரை சொல்லி அழைப்பதை தவறாக நினைக்க வேண்டாம்...நானும் உங்கள் வயதுகாரன் தான்....(1976),மேலும் பெயரை சொல்லி அழைக்கும்போது ஒரு நெருக்கமும் உரிமையும் வரும் என்பது என் எண்ணம்.....

   என் எழுத்துக்கள் நிஜமான என் அனுபவம்....

   பொருளாதார ரீதியாக மிகப் பெரிய இன்னல்களை சந்தித்த எனக்கு மன அமைதியை தந்தது......
   நான் எந்த ஊருக்கு குடிபோனாலும்
   (நான் பிறந்த ஊரிலிருந்து இப்போது வசிக்கும் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மிட்டூர் என்ற சிற்றூர் மூன்றாவது வசிப்பிடம்) இரண்டு பூதொட்டியில் இருக்கும் சோற்று கற்றாழையும்,ஒரு பூ செடியும்தான்.....

   உங்கள் பதிவு, நிச்சயம் எனக்கான உந்து சக்தி ....கூடிய விரைவில் என் மாடி தோட்டம் விரிவாகும்.....

   உங்கள் உதவியும் தேவைப்படும்....

   பெற்ற பிள்ளையே வேலை நேரத்தில் பேசினால்,இடைஞ்சல் என திட்டுவோம்....ஆனால் எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் யாராயிருந்தாலும் கேளுங்கள் என செயல்படும் உங்கள் பணி (சேவை) சிறக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்......

   Delete
  3. சந்தோசம் சுரேஷ். நீங்கள் சொன்னது போல நிறைய நேரங்களில் வயது தெரியாமல் மிக மேலோட்டமாக அழைப்பதை விட, வயது தெரிந்து பெயர் சொல்லி அழைப்பது நெருக்கமான ஓர் உணர்வை கொடுக்கும். :)

   கண்டிப்பாக ஒரு சிறிய அளவில் சீக்கிரம் ஒரு தோட்டம் அமையுங்கள். எனது உதவிகள், விவரங்கள் முடிந்த அளவுக்கு கொடுக்கிறேன்.

   நான் இங்கு செலவழிக்கும் நேரங்களுக்கு பலன் உங்களை போன்ற நிஜமான ஆர்வமுள்ள நண்பர்கள் வட்டம் கிடைப்பது தான். அது போதுமே :)

   Delete
 9. sHi Siva sir,
  I am always a silent listener of your blog. Really very good explanation on growing mediaand nusery trays.
  I always used to fail in growing coriander, and green leafy veggies.
  I will try this growing media this time and send you the updates.

  Thanks for the video.

  ReplyDelete
  Replies
  1. Thanks Madam.

   Growing coriander and leafy veggies should be a easy one. Check the media mix and give a try again. Happy gardening

   Delete
 10. very nice video sir .this month after rain iam starting terrace gardening where i can get
  hdpe bags and vermicompost and cocopeta .where i can get good quality seeds.

  moreover please put a video for green leafy like siru kerai and corriander.

  please it will help me.

  ReplyDelete
  Replies
  1. Hi,

   Please check these posts

   http://thooddam.blogspot.in/2014/02/1-coir-pith-seedling-tray-grow-bags.html
   http://thooddam.blogspot.in/2014/04/2.html
   http://thooddam.blogspot.in/2015/06/blog-post_27.html
   http://thooddam.blogspot.in/2015/06/blog-post.html

   Will work on the video you asked (Keerai) :)

   Delete
 11. Super Siva anna

  ReplyDelete
 12. siva sir,

  konjam thamadhamaga ungal video parkka mudhindhathu, kasu vangubavargal kooda ivvalvu thelivaga villakathudan solli kodupathillai. salikamal padhil solkirergal. Thank you, Thiru.parameshwaran avarglidam seeds order koduthullen, contact no. thantharku nandri.

  ReplyDelete
  Replies
  1. Thanks Madam :). Happy to hear that you were able to get the seeds from Paramez. Happy gardening

   Delete
 13. sir i would like to start my maddi thotam in my own house in ambattur. in which month i can start vegetables like brinjal,ladies finger,tomatto and pumpkin and fruits like papaya and custard apple.

  guide me sir

  ReplyDelete
  Replies
  1. You can start the vegetable in June-July (or) Jan month. This will fall in Aadi or Thai paddam. You can also start in any month and no harms. You may get little less yield for non season. But no need to wait for June or Jan months

   Delete
 14. Thank You sir for your wonderful video.There is no speaker in my system even then i caught all your tips because of your video.In my mom house we pruned a brinjal plant after one season but that plants not come in its original size leaves are so little not like a brinjal leave also.in sponge guard(peerkankai) the plant growing so good but no flowers and fruit. how can we rectify sir

  ReplyDelete
 15. Thanks Madam.

  I am not sure whether we can prune all brinjal plant and get the yield continuously. Why don't we start a new plant in that place?

  Are you not getting any flower.. Or we get flower, but no fruit?.

  ReplyDelete
 16. excellent post.enna solrathunu theyriyala. ungal pathivai facebook-la share paniten.

  ReplyDelete
 17. காயிகறிச் செடிகளைச்சுற்றி வெங்காயம் நடலாமா ?

  அத்துடன் நாட்டு ரோஸ் அதிகம் பூக்க என்ன செய்யலாம் ?

  ReplyDelete
  Replies
  1. இடம் இருந்தால் நடலாம்.

   நான் நிறைய பூக்க என்று தனியாக ஏதும் முயற்சிக்க வில்லை. வழக்கம் போல கொஞ்சம் மண்புழு உரம் போடுவதோடு சரி.

   Delete
 18. Arumaiyana nursery tray vilakam sir.Thank you. one request .How to make a grow back with cooco peed. I REQUEST U TO UPLOAD LIKE THIS NURSERY TRAY VIDEO. THANK U SIR.

  ReplyDelete
  Replies
  1. Thanks Kamesh. Please check this video

   https://www.youtube.com/watch?v=W_e2KJJEQng

   Delete
 19. Namaskaram Anna

  I have read all the contents in your blog. Actually I am planning for roof garden. You blog is my current encyclopedia, really thanks a lot. I might end with the failure when compared my plan with your experience. I will use your experience now. As you insist I have prepared the medium, this week end I have planned to by vermicompost. Rs.8 per KG, if we buy in 50kgs. Words of Suresh Mahalingam anna is really nice. Anna btw, video in this page is not available in youtube, please let me know where can I refer the same.

  ReplyDelete
  Replies
  1. Thanks for your nice words :). Keep trying all possible things in the garden. Spend more time. You will get success.

   Regarding video, now changed to a new channel and should work now. You can check directly here also

   https://www.youtube.com/watch?v=-a6WnTntZ4g

   Delete