Saturday, March 19, 2016

தோட்டம்.com




www.thoddam.com

புதிய ஒரு தளத்தில் எனது தோட்டத்தை தொடங்க இருக்கிறேன் . ப்ளாக் உலகில் இருந்து தனி ஒரு இணைய தளமாக எனது தோட்டம் இப்போது thoddam.wordpress.com (தோட்டம். Com). தோட்டம் ப்ளாக் தொடங்கும் போது பெரிதாய் திட்டமோ, தோட்டம் பற்றி நாமும் ஏதாவது எழுத முடியும் என்ற நம்பிக்கையோ கிடையாது. இன்றைக்கு நண்பர்கள் உங்களது மேலான ஆதரவில் 400+ நண்பர்கள் எனது தோட்டம் ப்ளாக்-ஐ தொடர்கிறார்கள். ரொம்ப சந்தோசமாய் இருக்கிறது. என் முயற்சிகள் ஒரு சில பேருக்கு பயன்படுவது குறித்து இரட்டிப்பு மகிழ்ச்சி. 


தனி ஒரு வெப்-சைட் தொடங்க மனதில் ஒரு திட்டம் இருந்தாலும் எட்டு மாதத்திற்கு முன்பு தான் அதற்கு ஒரு முழுமையான வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். எனது கல்லூரி நண்பன் ஒருவர் சென்னையில் சின்னதாய் Web design கம்பெனி ஓன்று நடத்தி வந்தான். அவனுடன் பேசிய போது, சின்னதாய் ஒரு பட்ஜெட்டில் ஆரம்பிக்கலாம் என்று என்ன மாதிரி வெப்-சைட் வேண்டும் என்று நானே ஒரு டிசைன் போட்டு கொடுத்து ஓரளவுக்கு ஆரம்பித்தோம். இரண்டு மாதம் ஓடிப் போனது. சில வேலை காரணங்களால் நண்பன் பெங்களுருக்கு இடம் மாற்றிய போது வெப்-சைட் வேலையை தொடர முடியாமல் போனது. மொத்தம் இருபது சதவீதம் தான் செய்திருப்போம். அதை தொடர முடியாமல் அப்படியே விட்டு விட்டோம்.

நான் மென்பொருள் துறையில் இருந்தாலும், டெக்னிகலா எனது ஏரியா Mainframe என்று சொல்லப்படுகிற 1960s டெக்னாலஜி தான். வெப் டிசைன் பற்றி சுத்தமாய் தெரியாது. அதுவும் மேனேஜர் ஆன பிறகு மேய்த்தல், காத்தல், அழித்தல் போன்ற வேலைகள் மட்டுமே செய்வதால் டெக்னாலஜி கொஞ்சம் தூரமாய் போய்விட்டது. வெளிய கொடுத்து செய்யும் அளவுக்கு பட்ஜெட் திட்டமிடவில்லை. வேறு வழி இல்லாமல் நானே எடுத்து செய்து பார்க்கலாம் என்று ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு மாதத்திருக்கு பிறகு இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறேன். சில கட்டத்தில் என்பது சதவீதம் முடித்து சில பிரச்சனைகளை சரி செய்ய முடியாமல் மறுபடி முதலில் இருந்து செய்யும் படி ஆனது. நிறைய கற்றுக் கொண்டேன். வெப்சைட் எனக்கு திருப்தியாகவே வந்திருக்கிறது. இந்த வெப்சைட்-ல் உள்ள ஒவ்வொரு விசயமும் நானே உருவாக்கியது என்பதில் சந்தோசமே. முடிந்த அளவுக்கு எந்த பெரிய பிரச்சனையும் தெரியவில்லை. நண்பர்கள் நீங்களும் பார்த்து, உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

‘தோட்டம்’ என்னும் அடைமொழி தானாகவே என்னுடன் ஒட்டிக்கொண்டு ‘தோட்டம்’ சிவா ஆகிப் போனேன் (மொட்ட சிவா, கெட்ட சிவா மாதிரி இந்த ‘தோட்டம்’ சிவாவும் ஒரு ஓரமாய் இருந்து விட்டுப் போகிறான்.. சரி தானே J ). வெப்-சைட்-க்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து kovai-garden, kovai-thoddam, siva-thoddam என்றெல்லாம் யோசித்து கடைசியில் நம்ம trade-mark தோட்டத்தையே வைத்து விட்டேன்.  

ப்ளாக்-ஐ விட தனி வெப்-சைட் என்று போகும் போது நிறைய விசயங்களை செய்ய முடியும் என்று நினைக்கிறேன் (என்ன.. கொஞ்சம் செலவு தான் ஆகிறது :) ). சில புதிய பகுதிகளை (Showcase your Garden, Join with Thoddam) அறிமுகப்படுத்தி இருக்கிறேன். வீடியோ மற்றும் படங்களுக்கு என்று தனியாக ஒரு பகுதி கொடுத்திருக்கிறேன். இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஒரு மன்றம் (Discussion Forum) ஒன்றை அறிமுகப் படுத்த திட்டம் இருக்கிறது.

பழைய பதிவுகளில் சில formatting (spacing between Paragraphs) பிரச்சனைகள் இருக்கும். Blogger-ல் இருந்து அப்படியே இங்கே எடுத்துப் போட்டால் சில formatting பிரச்சனைகள் வருகிறது. அதை இப்போதைக்கு அப்படியே விட்டுவிட்டேன். Subscribe செய்ய நீங்கள் மெயில் ஐ.டி கொடுத்து submit செய்ததும் அந்த பாக்ஸ் கொஞ்சம் கீழே வருகிறது. இதனால் பெரிதாய் ஒன்றும் பிரச்னை இல்லை. இது தவிர வேறு ஏதும் பிரச்சனைகளை பார்க்கவில்லை.

எல்லா பகுதிகளையும் பாருங்கள். ஏதும் பிரச்னை தெரிந்தால் கூறுங்கள். அதை சரி செய்த எனக்கு உதவியாக இருக்கும். முக்கியமாக mail subscription பகுதியில் ஏதும் பிரச்சனை வந்தால் உடனே கூறுங்கள். இதை ரெடி செய்ய தான் நான் ரொம்ப திணறி போனேன். நண்பர்கள் எல்லோரும் எனது ப்ளாக்கில் கொடுத்த உங்களது வழக்கமான மெயில் ஐடி-யை மறுபடி ஒருமுறை இந்த வலைத்தளத்திலும் கொடுத்து subscribe செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் subscribe செய்தவுடன் உங்கள் மெயில் ஐடி-க்கு subscription-activate செய்ய ஒரு லிங்க் வரும். அதை க்ளிக் செய்தால், புதிய பதிவுகள் பற்றிய notification வர ஆரம்பிக்கும். இதில் ஏதும் பிரச்சனை என்றால் உடனே கூறுங்கள்.

 இந்த வெப்-சைட் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். எனக்கு உதவியாக இருக்கும். எல்லாம் நல்லபடியாக போனால் அடுத்த பதிவில் இருந்து புதிய தோட்டத்திலேயே (தோட்டம்.wordpress.com) தொடரலாம் என்று இருக்கிறேன்.

36 comments:

  1. பயணம் புதிய பரிமாணத்துடன் தொடர வாழ்த்துக்கள்.வணக்கம்.

    ReplyDelete
  2. புதிய தளம் நன்றாக உள்ளது... வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. Anna Super.. wishing you all the very success..!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேந்திரன் :)

      Delete
  4. வாழ்த்துக்கள் அண்ணா.. வெப்சைட் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  5. Wow!super anna. Unga muyarchiku ennoda valthukal anna.

    ReplyDelete
  6. உங்களுடைய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Your new site is amazing ... congarts siva for all your efforts for letting people like me to get knowledge...Where ever i am seeing about terrace garden , it is mostly targeted to make money from people... But you are really doing great job selflessly ..

    ReplyDelete
    Replies
    1. Thanks Kannan. Happy to hear your words. Let's learn together and share with others :).

      Delete
  8. website super sir, ungal pani thodara vallthugal nalla muyarchi payanadaivor pala

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் தோட்டம் சிவா அண்ணா,
    புதிய பரிமாணத்தில் நிச்சயமாக இன்னும் சிறப்பாக, மேலும் அதிகப்படியான பேர் பயன்படும்படி செயல்படுவீர்கள் என நம்புகிறேன்.
    வாழ்த்துக்கள் சிவா அண்ணா

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி. உன்னை போன்ற ஆர்வமுள்ள நண்பர்களின் ஆதரவில் நாம் இன்னும் நன்றாக செய்யலாம். தொடருவோம். :)

      Delete
  10. சூப்பர் சிவா. புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள்.!!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. Hi Siva,

    Super decision for creating the new website. I am back to normal life :). (Again) every Monday morning, I am reading your blog after that I'll check my company mails.

    Thanks with Regards,
    Vallamuthu M.

    ReplyDelete
    Replies
    1. Thanks Vallamuthu. Good to hear the updates from your end. Happy gardening.

      Delete


  13. உங்கள் thoddam.com website சூப்பர். இது வரை ஒரு 30 பேரிடமாவது உங்கள் பழைய ப்ளாக் link கொடுத்திருப்பேன். என் தோட்டத்தை பார்த்து 6 பேர் தோட்டம் ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் thaan inspiration என்று சொல்லி உங்கள் site address-ய் கொடுத்துள்ளேன். CONGRATS.

    ReplyDelete
    Replies
    1. Thanks Vallamuthu. Here onwards, you can give the new website name :)

      Delete
  14. வாழ்த்துக்கள் சிவா...பயணம் இனிதே தொடங்கட்டும்

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்..புதிய தளம் அருமை ..

    ReplyDelete
  16. புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள்.!!

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் அண்ணா..

    ReplyDelete
  18. மதன் (தி. நகர்)March 22, 2016 at 2:41 AM

    சிவா நண்பருக்கு வணக்கம்!

    தங்களின் புது வலைதளத்தை பார்த்தேன். உங்களுடைய புது முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்! நீங்கள் தோட்டத்தில் மட்டும் திறமைசாலி இல்லை. அழகாக வார்த்தைகளை பதிவு செய்வதிலும் வல்லவர்.

    "மேய்த்தல், காத்தல், அழித்தல்" என்று தாங்கள் "Project Manager" ku நீங்கள் கொடுத்த அர்த்தம் என்னை வியக்க வைத்தது. நானும் ஒரு IT துறையில் PM ஆக இருப்பதால் என்னவோ அதை மிகவும் ரசித்து படிக்க அமைந்தது என்று கூறலாம்.

    என்னை போன்று புதிதாய் தோட்டம் தொடங்குபவர்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி! உங்கள் தோட்டம் பற்றிய "information sharing" பனி தொடர வாழ்த்துக்கள்!

    எனக்கு நேரம் கிடைக்கும் தங்களின் website ஐ testing செய்து என் observation ஐ தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்!

    அன்புடன்,
    மதன் (தி. நகர்)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே :). நீங்களும் PM-ஆ.. அப்போ உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும் :)

      /எனக்கு நேரம் கிடைக்கும் தங்களின் website ஐ testing செய்து என் observation ஐ தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்!// கண்டிப்பாக test செய்து பாருங்கள். நிறைய defect போட்டுறாதீங்க.. எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம் :)

      உங்கள் பரிந்துரைகளையும் கூறுங்கள். செய்ய முடிந்தால் செய்யலாம்.

      Delete
  19. Arumai sir, Ungaludaiya thootam valara yenadhu vaalthukkal

    ReplyDelete