Saturday, February 27, 2016

விதை சேகரிப்பு (கத்தரிக்காய்) - வீடியோ பதிவு



இந்த வாரம் செம கடுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. கூகிள் எனது thoddamsiva அக்கவுண்டை சஸ்பெண்ட் செய்து விட்டது. இப்போது அதில் நான் வைத்திருந்த எனது தோட்டம் வீடியோ சேனல் எல்லாம் காலி. ஏற்கனவே அப்லோட் செய்த வீடியோ லிங்க் இப்படி வருகிறது.  



நான் இந்த அக்கவுண்டை வீடியோ பதிவுக்காக மட்டுமே ரெடி செய்திருந்தேன். அது தவிர சில நண்பர்கள் தோட்டம் சம்பந்தமாக ஏதும் மடல் அனுப்பிக் கேட்டால் பதில் அனுப்புவது உண்டு (எனது ப்ளாக் அக்கவுண்ட் மெயில் வேறு.. அது thooddamsiva.. two ‘oo’s.. ). அதை தவிர நான் இந்த மெயில் ஐடி-யை பயன்படுத்தியது கூட இல்லை. திடிரென்று நீங்கள் terms & conditions-ஐ மீறி விட்டீர்கள் என்று ஒரு மெசேஜ் வருகிறது. முதல் முதலாய் இப்படி கூட நமது மெயில் அக்கவுண்ட்டை கூகிள் காலி செய்யும் என்று பார்க்கிறேன். இதை நான் கேள்விப் பட்டது கூட இல்லை.

பதிவுக்கு வரலாம். விதை சேகரிப்பு பற்றிய ஒரு சின்ன வீடியோ தொகுப்பு. பொதுவாய் வெண்டை, அவரை மற்றும் எல்லா கொடி வகைகளை காய்களை நன்றாக முற்ற விட்டு நாம் விதை எடுத்துக் கொள்ளலாம். மிளகாய்க்கு வற்றலாக விட்டு விதை எடுத்துக் கொள்ளலாம். தக்காளிக்கு கூற வேண்டியதில்லை. நல்ல கனிந்த பழத்தை எடுத்தாலே போதும். கத்தரி மட்டும் கொஞ்சம் tricky . அதுபற்றிய ஒரு வீடியோ.

நாட்டு காய்களில் இருந்து மட்டும் இப்படி நாம் அடுத்த சீசனுக்கு விதை எடுப்பது நல்லது. விதைகளை ஒரு வருடம் வரை மட்டும் வைத்து பயன்படுத்தலாம். காலாவதி ஆகிய விதைகள் நிறைய பிரச்சனை கொடுக்கக் கூடும் (நோய் தாக்குதல் அதிகமாக இருக்கலாம், விளைச்சல் சரியாக இருக்காது).

ஹைப்ரிட் செடிகளில் இருந்து விதை எடுத்தால் செடி முளைக்குமா என்றால், முளைக்கும். ஆனால் சரியான விளைச்சல் கிடைக்காது. செடியும் நன்றாக வராது. ஒரு வேலை அடுத்த சீசன் மட்டும் ஓரளவு விளைச்சல் கொடுத்தாலும் மீண்டும் அதில் இருந்து விதை எடுக்க அதன் விளைச்சல் குறைந்து கொண்டே போகும். முடிந்த அளவுக்கு ஹைப்ரிட் செடிகளில் இருந்து விதை எடுப்பதை தவிர்க்கலாம்.

கத்தரியில் விதை சேகரிப்பு பற்றிய வீடியோ இதோ,


32 comments:

  1. சூப்பர் சிவா....பார்க்க எளிமையாகத்தான் இருக்கிறது...ஆனால் நாமே செய்யும்போது சரியோ,தவறோ என்ற குழப்பம் நம்மை தின்றுவிடும் ....

    தெரிந்தவர்களுக்கு இது சாதாரணமாக தெரியும்...ஆனால் என் போன்ற புதியவர்களுக்கு, உங்கள் வழிகாட்டுதல் வரப்பிரசாதம் ....

    (செடிகளோடு பந்தபாசம் முன்பே இருந்தது...சொந்த வீடும் தோட்டமும் முக்கியமாக நிறைய நேரமும் இருந்தபோது....
    நாட்டமெல்லாம் பூச்செடிகளும்,அலங்கார செடிகளிலும்தான்.மேலும் நம்மை போன்ற நடுத்தர வயதுக்காரர்களின் இளமை காலத்தில் காய்கறிகள் இந்தளவுக்கு தம் கற்பை இழக்கவில்லை),

    பரமேஸிடமிருந்து விதைகள் வந்துவிட்டது....சோதனை முயற்சியாக தக்காளி, மிளகாய்,கத்தரி நாற்று விட்டிருக்கிறேன் ....

    எல்லாம் தெரியும்...இருந்தாலும்..... நேற்று விதையை போட்டுவிட்டு இன்று காலை சென்று முளையை தேடுகிற இந்த மனதை என்ன செய்ய.....

    கடைசியில் நானும் உங்கள் ஜோதியில் கலந்துவிட்டேன்.....

    இனி உங்களை அடிக்கடி தொல்லை செய்வேன்....ஹா...ஹா...ஹா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்.

      நிஜமான ஆர்வத்தோடு தோட்டம் ஆரம்பிக்கும் இன்னொரு நண்பரும் எனக்கு கிடைத்து விட்டார் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி. வாழ்த்துகள். என்ன சந்தேகங்கள் இருந்தாலும் மடல் ஒன்றை தட்டி விடுங்கள். எனக்கு தெரிந்ததை நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்.

      Delete
  2. வணக்கம்
    பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. Again one more very useful video, thank u. I removed all caterpillars from plant, thanks for your suggestion

    ReplyDelete
  4. அருமையான பயனுள்ள வீடியோ சிவா. இங்குள்ள கத்தரியில் நிறைய விதை இருக்கும். இனி எடுக்கும் வீடியோவை ஏதேனும் வேறு வகையில் சேமித்துவையுங்க.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ப்ரியா.

      எல்லா வீடியோவிற்கும் என்னிடம் Back-up இருக்கிறது. ஆனால் அநியாயத்துக்கு இப்படி ஒன்றுமே இல்லாமல் கூகிள் ப்ளாக் செய்யும் என்று எதிர்பார்க்க வில்லை :( ..

      Delete
  5. அருமை. பயனுள்ள படத்தொகுப்பு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா. உங்கள் தோட்டம் எப்படி போகிறது?

      Delete
  6. ஹலோ நண்பரே ,

    உங்க விடியோ பார்த்தேன் நல்ல இருந்தது புரியும் படி (கத்திரி பற்றி ) ஒரு சந்தேகம் நண்பர் ப்ரமேச்வ்ரிடம் இருந்து நமக்கு வேண்டிய விதையை மட்டும் பெற்று கொள்ளமுடியுமா ?அல்லது முழுவதும் தான் வாங்க வேண்டுமா ? நான் தோட்டம் வைத்து பார்த்து இருகிறேன் வெண்டை கத்திரி மிளகாய் என்று ஆனால் இபொழுது உங்கள் பிளாகையும் விடியோவையும் படித்து பார்த்தவுடன்ஒரு தெளிவுடன் மிக தீவிரமாக இதில் இறங்கி இருகிறேன் மாடி தோட்டம் தான் ஆனால் விதை போட்டால் காத்திருக்க மிக பொறுமை வேண்டும் தான் உங்கள் வீடியோ பதிவை பத்திர படுத்தி வையுங்கள் எங்களை போன்றோருக்கு பசுமை நோக்கி ஓர் ஆர்வம் இது எளிது முயச்சிக்கலாம் என்று ஒரு தூண்டுகோல்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.

      நமக்கு தேவையான விதைகளை மட்டும் நண்பர் பரமேசிடம்
      இருந்து வாங்கி கொள்ளலாம்.

      Delete
  7. எங்க வீட்டிலும் கத்தரி தோட்டம் வைப்போம், ஆனால் விதை பிடித்ததெல்லாம் இல்லை. இதற்கென்றே அருகில் சில ஊர்கள் இருக்கும். அங்கு போய் கத்தரி, தக்காளி இவற்றின் நாற்றுக்கட்டுகளை வாங்கி வந்து நட்டதைத்தான் பார்த்திருக்கிறேன். காலைப் பனி ஈரத்துடன் இருக்கும் அந்த நாற்றுகளைப் பார்க்கும்போதே அவ்வளவு அழகா இருக்கும் !

    தோட்டம் வைக்கும்போது நானும் கத்தரியில் இருந்து விதை எடுத்துப் பார்க்க மீண்டும் இந்தப் பகுதிக்கு வருவேன் :)

    நன்றி சிவா !

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம்.

      பெரிய அளவில் பயிரிடும் போது நாற்றாக வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். சீக்கிரம் உங்கள் தோட்டத்தை ஆரம்பிங்க :)

      Delete
  8. ஜிமெயில் ஐடியையும் முடக்குவார்களா? ஐயோடா? என்னைப்போல் பிசினஸ் தொடர்புகள் கொள்பவர்கள் நிலை என்னாகும்?

    உங்களைக்குறித்த மீண்டும் ஒரு அறிமுகம் என் வலைப்பூவில்...http://alpsnisha.blogspot.ch/2016/03/blog-post_2.html

    ReplyDelete
    Replies
    1. எனது ப்ளாக் அறிமுகத்திருக்கு மிக்க நன்றி.

      நானே எதிர்பார்க்கவில்லை. இனி பேசாமல் yahoo-விற்கு போய் விடலாம் என்று இருக்கிறேன். கூகிள் அடுத்தவன் டேட்டா-வை படிப்பது, அவன் என்ன பண்றான் என்பதை வைத்து காசு பார்ப்பது. இதை தான் பொழப்பா வச்சிருக்கு. ஆனால் சரியாக பயன்பாட்டில் இல்லாத எனது அக்கவுண்டை காலி செய்ததில் என்ன நியாயம் இருக்கிறதென்று தெரியவில்லை. ம்ம்ம்ம்.

      Delete
  9. அருமையான பயனுள்ள வீடியோ பதிவு அண்ணா....

    போன சீசனில் விதை ஏதும் எடுக்க வில்லை.. அதுதான் நிறைய இருக்கிறதே என்று விட்டுவிட்டேன்.. இந்த முறை கண்டிப்பாக எடுத்து சேமிக்க வேண்டும்.. சரியான நேரத்தில் சரியான பதிவு..
    சென்ற ஜூலை சீசனில் செடிகள் எல்லாம் அருமையாக வந்தன.. இந்த முறை ஆரம்பத்திலேயே தட்டுத்தடுமாறி பல பிரச்சனைகளுடன் தான் வந்து கொண்டிருக்கிறது.. பிப்ரவரி தொடக்கத்திலேயே வெயில் கொளுத்துகிறது.. மாடியில் கால் வைக்கவே முடியவில்லை.. அதனால் இந்த முறை குறைவான அளவில் தான் செடிகள் வைத்துள்ளேன்.. இதிலிருந்து விதைகள் எடுத்து அடுத்த பருவத்திற்கு வைக்க வேண்டும்.

    நன்றி சிவா அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. என்ன தம்பி.. ஆளையே காணோம்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். ஒரு நாள் உங்க தோட்டத்தை பார்க்க வரணும்.

      இந்த முறை எனக்கு நல்லா வருதே. மாடியில் காற்று வேறு இந்த கோடையில் அதிகமாகுமே.. பார்த்துக் கொள்ளுங்கள்.

      Delete
  10. வணக்கம் நண்பரே, காணொளி தொகுப்பு எளிமையாக உள்ளது. தங்கள் யூடியூப் தொகுப்பு அழிந்தது, மிகவும் வருத்தமானது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. தற்போது அனைத்து வீடியோக்களையும் இன்னொரு ஐ.டி-யில் போட்டிருக்கிறேன்.

      Delete
  11. Very good presentation.. Can i get few seeds of white nattu kathari

    ReplyDelete
    Replies
    1. Thanks friend. Please send a mail to me (thooddamsiva@gmail.com) with your details.

      Delete
  12. யூடியூப் பிளாக் செய்ததைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏன்தான் இப்படிச் செய்கிறார்களோ.

    ReplyDelete
    Replies
    1. தெரியவில்லை. இப்போது புதிய ஒரு சேனலுக்கு மாற்றி எல்லா வீடியோக்களையும் கொடுத்திருக்கிறேன்.

      Delete
  13. Hi Siva,

    It's useful Video. Super!!

    Thanks with Regards,
    Vallamuthu M.

    ReplyDelete
  14. பதிய youtube channel பெயர் என்ன சகோதரரே?

    ReplyDelete
    Replies
    1. Thoddamsiva1 என்று இருக்கும். இந்த லிங்க் பாருங்கள்.

      https://www.youtube.com/watch?v=tXkd3aAcRHQ

      Delete
  15. மிகவும் அருமை

    ReplyDelete
  16. Useful information. Thank you sir

    ReplyDelete