தேவையான காய்கறிகள் விளைவிப்பது தவிர்த்து வீட்டுத் தோட்டத்தின்
இன்னொரு முக்கிய பங்கு குழந்தைகளுக்கு இயற்கை மீது ஈடுபாடு கொண்டு வருவது. அதற்காக குட்டீஸ்களுக்கு தோட்டத்தில் வைத்து பாடம் எல்லாம் எடுத்தால்
ஓடி விடுவார்கள். அவர்களை செடிகள் மீதான ஈடுபாட்டை அவர்களுக்கு பிடித்த விசயங்களை
தோட்டத்தில் கொண்டு வருவதன் மூலம் உருவாக்கலாம். எங்க வீட்டுக்கு வரும் குட்டீஸ்
முதலில் கொய்யா மரத்தை பார்ப்பார்கள். பிறகு மணத்தக்காளி பழுத்து கிடந்தால் அதை
பறிப்பார்கள். அடுத்தது சொடக்கு தக்காளி செடியை உலுப்பி பழம் தேடுவார்கள். இப்படி தோட்டத்தில் குழந்தைகளுக்கு பிடித்த செடிகள் வைப்பது இன்னும் தோட்டத்தை அழகாக்கும்.
சொடக்கு தக்காளி. இது நிறைய பேருக்கு ஒரு புது பெயராக இருக்கும். கீழே
பார்க்கும் பழத்தை உங்க ஊரில் என்னவென்று சொல்வீர்கள் என்று தெரியவில்லை.
எங்க ஊரில் சொடக்கு தக்காளி. இதன் காய் ஒரு பலூன் போல இருக்கும்.
உள்ளே பழம் பொதிந்து இருக்கும். நாங்கள் இதை வாயில் வைத்து ஊதி அதை அடுத்தவன்
மண்டையில் ஓங்கி அடிப்போம். சொடக்கு விடுவது போல சத்தத்தோடு வெடிக்கும். அதனால்
இதற்கு சொடக்கு தக்காளி என்று பெயர். எங்கள் விளையாட்டுகளுள் இதுவும் ஓன்று. தவிர
நாங்கள் வீட்டில் இருந்ததை விட தேரிக்காட்டுக்குள் சுற்றியதும், ஊரை சுற்றி
கருவேலங்காட்டுக்குள் காட்டுப்பயல்களாக சுற்றியதும் தான் அதிகம். அது ஒரு தொலைந்து
போன சொர்க்கம். சொடக்கு தக்காளி, புட்டு முருங்கை என்று காட்டில் பழுத்து
கிடக்கும் அத்தனை பழங்களையும் இஷ்டத்துக்கு பறித்து சாப்பிட்டுக் கொண்டு சுற்றிக்
கொண்டிருப்போம். இதை பற்றி எழுத ஆரம்பித்தால் போய்க் கொண்டே இருக்கும், So.. Back to gardening..
சொடக்கு தக்காளியில் இரண்டு வகை உண்டு. ஓன்று சாதாரணமாக பச்சை
நிறத்தில் இருக்கும். இது பொதுவாக ஊரில் எல்லா இடத்திலும் முளைத்து கிடக்கும். நிறமும் ருசியும் கொஞ்சம் குறைவு.
இன்னொன்று ‘நெய்’ தக்காளி என்போம். அதன் பழம் கொஞ்சம் வரி
எல்லாம் போட்டு இருக்கும். பழமும் கூடுதல் ருசியோடு இருக்கும். (அதனால் நாங்கள்
‘நெய்’ தக்காளி என்போம்). இதில் நெய் தக்காளி இங்கே கோவையில் தோட்டத்தில் நிறைய
தானாக வளரும். நானும் ஒரு சில பைகளில் விட்டு வைத்து நிறைய பழம் பறிப்போம்.
இதில்
மூன்றாவது வகை தான் இந்த பதிவில் கொடுத்திருப்பது. இதன் இலை கொஞ்சம் பவுடர்
பூசியது போல மென்மையாக இருக்கும். பழமும் கொஞ்சம் மஞ்சள்-ஆரஞ்சு கலரில் இருக்கும்.
நான் பொதுவாய் ebay இணையதளத்தில் விதைகள்
வாங்க பரிந்துரைப்பதில்லை. பத்து ரூபாய்க்கு கிடைக்கும் விதைகள் ebay-ல் ஐம்பது ரூபாய் இருக்கும். தனி நபர் வர்த்தகம் என்பதால் கூரியர்
செலவு,பேக்கிங் செலவு என்று பார்த்தால் அவர்கள் பத்து ரூபாய்க்கு விற்க முடியாது
தான். ஆனால் நிறைய ஏமாற்று வேலை தான் நடக்கும். ‘வாங்கின விதை ஒரு
மாசமாச்சு...முளைக்கவே இல்லை’ என்று நூறு ரூபாய் கொடுத்து விதை வாங்கினவன் ஒரு Negative Feedback கொடுத்து சாணி அடிச்சா, அங்கே இருந்து விற்றவன் ‘Germination depend on so many factors
and weather condition. எதுவா இருந்தாலும்
பேசி தீர்த்து இருக்கலாமே. மூஞ்சில குத்தறதுக்கு முன்னாடி (negative comment) சொல்லிட்டு குத்தவும்’ என்று இவனும் இங்கே இருந்து சாணி அடிப்பான். நிறைய
ebay பரிமாற்றங்கள் இப்படி தான் இருக்கும்.
நான் பொழுது போகவில்லை என்றால் ebay-ல் தோட்டம்
சம்பந்தமான பொருட்கள், விதைகள் பட்டியலை பார்த்துக் கொண்டிருப்பேன். Rainbow ரோஸ், 12 கலரில் ரோஸ் (அதுவும் விதையாகவே கிடைக்கும்) என்று பார்த்தாலே கலர்புல்லா
இருக்கும். அப்படி பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்த சொடக்கு தக்காளி விதையும்
கண்ணில் பட்டது. அமெரிக்காவில் இருக்கும் போது அங்கே உழவர் சந்தையில் இதை ஒரு
பண்டமாக விற்பதை பார்த்திருக்கிறேன். சாதாரண சொடக்கு தக்காளியை விட பெரிதாக, நல்ல
நிறமாக இருக்கும். விலையை கேட்டால் 5 டாலர் என்பார்கள்.
போன வேகத்தில் திரும்பி வந்து விடுவோம். அமெரிக்கா போய் சேர்ந்தவுடன் நம்ம மண்டைல
ஒரு டாலர்-to-ரூபாய் கால்குலேசன் ஓன்று ஒட்டிக் கொள்ளும். எதை பார்த்தாலும் அது நாற்பதால
பெருக்கி பார்த்து கொள்ளும் நமது புத்தி. சொடக்கு தக்காளிக்கு இருநூறு ரூபாயா
என்று எட்டிப்பாராமல் வந்து விடுவேன் (அப்போது டாலர் விலை Rs.38 – Rs.40 தான் இருந்தது). இருந்தாலும் நாம் சாதரணமாய் பறித்து சாப்பிட்டு
சுற்றிக் கொண்டிருந்த ஓன்று அமெரிக்காவில் ஒரு பண்டமாய் பார்த்ததில் சந்தோசம்.
![]() |
Farmers Marker - Minneapolis (USA) |
![]() |
Farmers Marker - Minneapolis (USA) |
அதையே இங்கே ebay-ல் பார்த்த போது வாங்கி முயற்சித்து தான் பார்க்கலாமே என்று இருந்தது.
Ground Cherry அல்லது Gooseberry
என்கிறார்கள். வெறும் பத்து
விதைக்கே விலை Rs.120 என்று இருந்தது. விதை இங்கே கொடைக்கானலில் இருந்து விற்கிறார்கள்
என்று தெரிந்ததும் ஓரளவுக்கு நம்பிக்கை வந்து ஆர்டர் செய்து விட்டேன். (இதன் விதை
இப்போது Omaxe தளத்தில் கூட கிடைக்கிறது). ஒரு வாரத்திலேயே விதை வந்துவிட்டது. பத்து
விதை என்று சொன்னாலும் இருபது விதை வரை பாக்கெட்டில் இருந்தது. கூடவே இலவசமாய் ஒரு
காரட் விதை பாக்கெட்டும்.
அதிக விலை கொடுத்து வாங்கியதால் கொஞ்சம் அதிக அக்கறையோடு ஒரு நர்சரி
ட்ரேயில் போட்டு நீர் ஊற்றி வந்தேன். விதை முளைக்குமா, இல்லை நாமும் ஒரு கூடை சாணி
அடிக்க வேண்டுமா என்று ஒரு சின்ன கவலை. முதலில் நினைத்தது மாதிரி நிறைய விதைகள்
முளைத்தது. இருபதில் பதினைந்து போல முளைத்தது. அவற்றை ஓன்று விடாமல் காப்பாற்றி
தனி தனி பையில் வைத்து விட்டேன் (ஒரு அடி அகல HDPE Grow Bags).
முதலில் நன்றாக வந்து கொண்டிருந்த செடிகள், ஒரு அளவுக்கு மேல் இலை
சுருட்டு நோய் தாக்கியது போல ஆனது. சரி, இது கொடைக்கானல் மாதிரி மலைபிரதேசத்திற்கு
தான் லாயக்கு போல என்று நினைத்த வேளையில் தொடர் மழை வந்து காப்பாற்றியது. ஒன்றுமே
செய்யவில்லை, இரண்டு நாள் மழைக்கே இலை சுருட்டல் எல்லாம் போய் செடிகள் எல்லாம்
செழிப்பாகி விட்டது. இப்படி நிறைய சூழ்நிலைகளில் மழை வந்து காப்பாற்றுவது உண்டு.
இலை சுருட்டல் நோய் |
மழைக்கு முன் |
மழைக்கு பின் - செழிப்பாய் செடிகள் |
பழத்தின் ருசி என்று பார்த்தால் ரொம்ப விசேசமாய் ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். என் தோட்டத்தில் சாதாரணமாய் வளர்ந்து காய்க்கும் ‘நெய்’ தக்காளியே இதைவிட இனிப்பாக இருக்கும். இருந்தாலும் ஆசையாய் வாங்கி வளர்த்து வெற்றிகரமாய் பழம் பறித்து சாப்பிட்டதில் சந்தோசமே.
அருமை நன்பரே ! சிறிய வயதில் சாப்பிட்ட நியாபகம்.
ReplyDeleteநன்றி நண்பரே.
Deleteஇந்தக் காயின் பெயர் தெரியல. ஆனால் நாங்களும் ஊதி நெற்றியில் வைத்து வெடிப்போம் :)))) உரிச்சு பார்த்திருக்கோம், ஆனால் சாப்பிட்டதெல்லாம் இல்லை. இப்போதான் தெரியுது இதையும் சாப்பிடலாமென. சும்மா தோட்டம் முழுவதும் காடுபோல் மண்டிக்கிடக்கும். 'தேரிக்காடு' மட்டும் என்னன்னு புரியல.
ReplyDeleteஓ மினியாபோலீஸ் வாசமா ! நாங்களும் பெருக்கி பெருக்கி ஒரு கட்டத்துல டயர்டாகி விட்டாச்சு :)))))
பிள்ளைகளைத் தோட்டத்திற்குள் இழுக்க நீங்கள் மேற்கொண்ட முயற்சி சூப்பர் !
நன்றி மேடம்.
Deleteநன்றாக பழுத்து, மேல் கூடு காய்ந்து கீழே விழுந்து கிடக்கும். கொஞ்சம் பழுத்தது லேசாய் உலுப்பினால் விழும். தாராளமாக சாப்பிடலாம்.
தேரிக்காடு என்றால் நெல்லை தாண்டி இருக்கும் சில செம்மண் பூமி. வெறும் பனைமரம் மட்டுமே இருக்கும்.
//நாங்களும் பெருக்கி பெருக்கி ஒரு கட்டத்துல டயர்டாகி விட்டாச்சு// :))..
Sir, enga thotathila thanagave mulaithathu endha chedi, i have been weeding out this earlier, only yday when i saw a small fruit, i realised by mistake. i too had a similar experience with ebay sellers. thanks for posting it
ReplyDeleteநன்றி மேடம். இனி கொஞ்சம் செடிகளை அப்படியே விட்டு பழுக்க விட்டு பாருங்கள். நான் சொன்ன மாதிரி இரண்டாவதாக கூறிய 'நெய்' தக்காளி வகை தான் நல்ல ருசி இருக்கும். நன்றாக பழுக்க வேண்டும்.
Deleteஅருமை.நானும் சிறிய வயதில் நெற்றியில் அடித்து விளையாடிய ஞாபகம் உள்ளது. ஆனால் அதை சுவைத்த ஞாபகம் இல்லை.அதன் சுவையை தெரிந்து கொள்ள இப்போது ஆவலாக உள்ளது.
ReplyDeleteநல்லது அண்ணா. இங்கே Omaxe தளத்திலேயே விதை கிடைக்கிறது. முடிந்தால் முயற்சித்து பாருங்கள். :)
Deleteஒரு அடி விட்டம, ஒரு அடி உயரம் உள்ள ஒரு குரோபேக்கில்( புடல், பீர்க்கு, சுரை, பாகல் )எத்தனை செடி வைக்கலாம்.அதேபோல் தக்காளி கத்தரி வெண்டை மிளகாய் போன்ற செடிகள் எத்தனை வைக்கலாம்.
ReplyDeleteகொடி என்றால் இரண்டு வைக்கலாம். செடி என்றால் ஒன்று தான் சரியாக வரும். இரண்டு வைத்தால் நெருக்கிக் கொண்டு சரியாக வளராது. 1 1/4 அடி என்றால் இரண்டு செடி வைக்கலாம்.
Deleteஇந்த பழம் சின்ன வயதில் சாப்பிட்டுருக்கிறேன்.இதெல்லாம் வீட்டில் வளர்க்கலாம் என்பது நீங்கள் சொல்லவும் தான் தெரிகிறது அண்ணா.. ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றி அபி. எது எல்லாம் கிடைப்பதில்லையோ அதை வீட்டுத் தோட்டத்தில் வளர்த்துக் கொள்ள வேண்டியது தான். :)
Deleteஅருமை நண்பர் சிவா அவர்களே!
ReplyDeleteஎங்கள் ஊரில் இதை வெடிதக்காளி என்போம் பழமும் சுவையாக இருக்கும்...
நன்றி
வை.ஸ்ரீதர் வைத்தியநாதன்
நன்றி நண்பரே.
Deleteவெடித்தக்காளி பெயரும் சரியாகவே வருகிறது. :))
physalis என்று சொல்வாங்க சிவா. இங்கு வந்து சாப்பிட்டிருக்கேன்.ஊரில் பார்த்த ஞாபகம் இல்லை. பிள்ளைகளுக்கும் தோட்டத்தில் ஈடுபாடு வர சின்ன சின்ன வேலைகளா கொடுத்து ஊக்கிவிக்கலாம். பூச்செடிகளை வளர்க்கச்சொல்லலாம். ஆர்வம் ஏற்படும்.இங்கு அப்படி பாடசாலையிலேயே சொல்லிக்கொடுக்கிறார்கள்.
ReplyDeleteசொடக்குதக்காளி பெயர் நல்லாயிருக்கு. புதிய முயற்சி வீண்போகவில்லை.
பூச்செடிகள் நல்ல யோசனை. பெண் குழந்தைகளுக்கு எதில் ஆசை வருகிறதோ இல்லையோ பூ என்றால் உடனே பிடித்து விடுகிறது. பள்ளிகளில் இயற்கை/தோட்டம் சம்பந்தமான பாடங்களுக்கு இங்கே அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. அப்பார்ட்மென்ட் வாழ்க்கை ஆகிவிட்ட நகரத்தில் பள்ளிகளிலாவது தோட்டம் பற்றி கொஞ்சம் குழந்தைகளை நேரம் செலவிட வைக்கலாம்..
Deleteஇன்னிக்குதான் விதை வாங்கிட்டு வந்தேன் :)
ReplyDeleteஇனிய ஆச்சரியம் உங்கள் பதிவில் ..நானும் அறுவடைக்குப்பின் படம் போடறேன் :)
இந்த சொடக்கு தக்காளி எங்க சென்னை வீட்ல சும்மாவே வளரும் .
இங்கும் சில இடங்களில் பார்த்திருக்கேன்
சூப்பர். எங்கே விதை வாங்கினீர்கள்? செடி எப்படி வருகிறது என்று படம் போடுங்கள் :)
Deleteஇங்கேuk வில் பிப்ரவரியில் எல்லா கார்டின் சென்டர்லயும் விக்க ஆரம்பிப்பாங்க .cape gooseberry /physalis peruviana ,then
Deleteவாக்ஸ் french பீன்ஸ் விதை கூட வாங்கி வச்சாச்சி .இது வரை உருளை காரட் தக்காளி கீரை வகைகள் மட்டுமே இந்த வெதருக்கு தாக்குபிடிச்சு வளர்ந்தது .இந்த முறை கொஞ்சம் சீக்கிரமா ஆரம்பிக்கறேன் குளிர்தான் இன்னும் குறையல்லை இன்னிக்கும் -3 பகல் நேரம் ..
என்னோடது அதிகம் regrow /மீள் சுழற்சி தோட்டம் தான் :) இப்போ ஸ்பினாச் நட்டிருக்கேன்
Hi Siva,
ReplyDeletesuper. puthusu puthusa try panringa. In amex site, I am not able to find seed. En maadi thotathil thanaga valarthathu but visa(poison) chediya irkumnu athai pundgi potutem.
Thanks vallamuthu :).
DeleteCheck this. It is listed under exotic seeds in omaxe
http://omaxehybridseeds.com/features-prodect.php?id=669
Intha chedi ippothuthan parkiren, kuzhanthaikalai mannil villayavittal thottathirku vanthu viduvargal, yenga pasanga schoolil students ku school crt ill idam kodothullargal avargale veg valarthu vilaivathai yethu chellalam, every wednsday gardening class irruku. Unga terrace plants arrangements mudincha photos podunga sir.
ReplyDeleteSuper madam. Good to hear that they are doing something related to gardening in school itself. Which school in which area?
Deletesure. will let you know once my garden is ready for a visit :)
Tvs school,hosur
Deletesir i have been started my home garden simply with 2 roses, chrysanthimum, curry leave, okra and greens. thank you sir for your posts. recaps my school memories..........
ReplyDeleteThanks madam
Deleteஅருமையான பணி....வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி
Deleteஅற்புதம் சிவா....
ReplyDeleteசொடக்கு தக்காளி....இதை நானும் சிறுவயதில் விளையாடியிருக்கிறேன்....
இன்றைய தலைமுறைக்கு தெரிந்த பழங்கள் ஆப்பிள்,ஆரஞ்சு,திராட்சை, வாழைப்பழம் .....
இவை அனைத்தும் கடையில் கிடைப்பவை....
விலைக்கு வாங்காமல் நாம் விளையாடு இடத்தில் கிடைக்கும் பழங்கள் சில இருக்கிறது....மனதக்காளி,சொடக்கு தக்காளி,இலந்தை.....இவை விளையும்
இடத்தில் நம் பிள்ளைகள் விளையாடுவதுமில்லை....
வெளியில் சென்று விளையாட முன்போன்ற இடங்களுமில்லை.....
சுயத்தை இழந்து கொண்டிருக்கும்,ஒரு பலவீனமான தலைமுறை நம்முடையது.....
தோட்டமென்றால் இது இதுதான் என்றில்லாமல் எல்லாவற்றையும் முயன்று பார்க்கும் உங்கள் ஆர்வம் அற்புதம்....
வாழ்க வளமுடன்....
நன்றி சுரேஷ். சிலவற்றை நாம் 'காப்பாற்றுகிறோம்' என்று சொல்லும் நிலைமைக்கு வந்ததே துரதிஷ்டம் தான்.
Delete//சுயத்தை இழந்து கொண்டிருக்கும்,ஒரு பலவீனமான தலைமுறை நம்முடையது// உண்மை தான். விவரமாய் தனிமடலில் பேசலாம்.
அன்புடன்,சிவா
Hi, I tried planting rose and samanthi plant. but growth is not there much. what should I do?
ReplyDeleteHi, can you share some more details. Are you growing in container or on ground? What is the fertilizer you are using? If in container, what is the growing media used?
DeleteHi, thanks for your time. I grow in container. and by now both my purple and white samandhi has gone. I was watering them regularly. I was very much disappointed. I have few more questions:-
Delete1. What is the best manure / fertilizer / type of sand we need to use to grow samandhi / rose flowers?
2. How to grow - like from seeds / saplings / stems - Nandhiyavattai and Pavalamalli. can I grow in containers, as I don't have option to grow in ground. I live in flat.
3. what type of flower plants I can keep so that I fresh flowers for my daily pooja ?
Thanks.
Viji
Hello Madam,
DeleteI am not good in recommending much regarding flowers :) . If you see my blog, my area is vegetable only. But I generally go with the same method for few flowers I have (Roses, Jaathi Malli etc). Based on that below are my comments,
1. I use only Vermin compost. No specific manure even for roses.
2. No idea. I am not the right person :)
3. It is as per your need. You can keep semparuthi, Thanga Arali etc. Again, I am not an expect in this area :)
Hi Siva, Your reply shows your humblesness. I am interested in gardening, but the space is the problem. Thanks,
DeleteViji
Thanks Madam. Check if you can do something on the terrace, if possible :)
DeleteHi sir ur blog was really inspiring so I decided to do some gardening at my home...can you please let me know about the places which give the kit in chennai.Thank you in advance.
ReplyDeleteHi Madam. Thanks for your comments.
DeleteRegarding kit, if you are asking about the DIY kit provided by Govt, you need to check with their Horticulture Dept only (in Anna Nagar, Tiruvanmiyur etc). Check TamilNadu Horticulture Dept or DIY Gardening Kit in google to get more details.
சிவா, இங்கு ப்ளாக் இல் போட்டிருக்கும் அத்தனை தகவல்களையும் (தொடக்கம் முதல் 2016 மார்ச் வரையுள்ள) தயவுசெய்து உங்கள் வெப்சைட் இல் இடம்பெற வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். அவை பொக்கிஷங்கள் என்றால் மிகையாகாது.
ReplyDeleteThanks,
Rameshbabu M
மிக்க நன்றி நண்பரே. நான் எல்லா பதிவுகளையும் புதிய வெப்சைட்-லும் சேர்த்திருக்கிறேன். அதை தனி தனி பிரிவுகளாக மெனுவில் சேர்த்திருக்கிறேன். பார்த்து உங்கள் கருத்துகளை கூறுங்கள். நன்றி
DeleteSiva, tell us 1 more thing. Apart from your website, you'll still update this blog, time and again, right? (we hope you would!) Bcoz, we are used to the flow in this blog, and we also understand that it'll be really tough and difficult to transfer all these contents to the site.
ReplyDeleteThanks,
Rameshbabu M
Hi,
DeleteI will stop adding any new post in this blog. All future post will be in the thoddam site only. It will be double work for me to post in two places. THe new website already has all the old posts added in it. So any new comer also can use thoddam site directly.
You can simply subscribe to the new site by giving your mail id.