Thursday, January 23, 2014

மாடி தோட்டம் – DO IT YOURSELF KIT மற்றும் பயிற்சி வகுப்பு



சென்னை மற்றும் கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். போன பதிவில் மாடி தோட்டம் பற்றி பார்த்தோம். ஒரு சிறிய மாடி தோட்டம் அமைக்க (இருபது Grow Bags வைத்து) தேவையான எல்லா பொருட்களையும் அரசு ‘நீங்களே செய்து பாருங்கள் – ‘ என்ற பெயரில் தோட்டக்கலை துறை மூலமாக கொடுக்க ஒரு திட்டம் அறிவித்து இருக்கிறார்கள். விவரங்கள் கீழே.

இதில் இருபது பாலிதீன் Grow Bags, ஒவ்வொன்றின் உள்ளேயே அதற்கு தேவையான Coir Pith Block.ஒரு பெரிய பாலிதீன் தரை விரிப்பு ஓன்று. விதைகள், தெளிப்பான் என்று ஒரு பெரிய பட்டியல் கொடுத்திருக்கிறார்கள். இதன் விலை Rs.3300 என்றும், இதை 50% மானியத்தில் Rs.1650 ல் கொடுப்பதாக கூறுகிறார்கள். Coir Pith Block, Grow Bags, Nursery Tray என்று தனி தனியாய் தேடி அலையாமல் ஒரு முதல் முயற்சியாய் செய்து பார்க்க நினைப்பவர்களுக்கு பயன் படலாம்.   
       
இணையத்தில் உள்ள பதிவு செய்யும் முறையில் Bank details எல்லாம் கேட்டிருந்தார்கள். நான் இங்கே கோவில்பாளையம் யூனியன் ஆபீசை தொடர்பு கொண்டு நேரில் போய் பேசினேன். நான் ஒரு Kit க்கு பதிவு செய்தேன் (ஒருவர் ஐந்து வரை வாங்கலாம். அதாவது மொத்தம் நூறு Grow Bags) . இப்போதைக்கு பேரையும், முகவரியையும் கேட்டு பதிவு செய்து கொண்டார்கள். முன் பணம் ஏதும் செலுத்த தேவை இல்லை. எப்போது கொடுப்பார்கள், எப்படி கொடுப்பார்கள் என்று கேட்டதற்கு, இதை Contract எடுத்திருக்கும் நிறுவனம் பெப்ருவரி, மார்ச் மாதத்திற்குள் கொடுக்க கெடு இருப்பதாக கூறினார். வீட்டிலேயே கொடுத்தாலும் கொடுக்கலாம் என்றார். ஆனால் தெளிவாக விவரம் இல்லை. 

பொருள் வரும் வரை பணம் கொடுக்க தேவை இல்லை. அதனால் தைரியமாய் பதிவு செய்து விட்டேன். இது Rs.3300 க்கு மதிப்பு உடையதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் கொடுத்திருக்கும் சைஸ் Grow Bags ஓன்று Rs.30 தான் பெறும. இப்படி கணக்கு போட்டாலும், Rs.1650 க்கு நஷ்டமில்லை. அது, அந்த நிறுவனம் கொடுக்கும் தரத்திலும் இருக்கிறது. எப்படி இருந்தாலும், முதல் முயற்சியை செய்ய நினைப்பவர்களுக்கு பயன்படும். 

மேலும்  விவரங்களுக்கு,

http://tnhorticulture.tn.gov.in/do-it-yourself-kit
 











கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம் என்ற பெயரில் விகடன் நிறுவனம் இங்கே கோவையில் (2-Feb , ஞாயிறு) ஒரு அரை நாள் பயிற்சி கருத்தரங்கு நடத்துகிறார்கள். அனுமதி இலவசம் தான். நான் போகிறேன். இந்த மாதிரி பயிற்சிகளுக்கு போகும் போது கோவையில் உள்ள நிறுவனங்கள் பற்றி தெரியவரும், சில நேரம் அங்கே இருக்கும் Stalls மூலம் சில பொருட்கள், விவரங்கள் கிடைக்கும். அதனால் நான் போகிறேன். விருப்பம் இருக்கும் நண்பர்கள் (ஞாயிற்று கிழமை தான்) கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுங்கள்.   
     
இந்த இரண்டு தகவல்களையும் நமது ப்ளாக் நண்பர் தங்கவேல் maravalam ப்ளாக்-ல இருந்து என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவருக்கு நன்றி. Maravalam ப்ளாக் வின்சென்ட் அவர்களுக்கும் நன்றி.



13 comments:

  1. வணக்கம்
    சிறப்பான செயல்... ஒவ்வொருவருக்கும் ஊக்கத்தை கொடுக்கும் செயல்.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. Siva Sir,

    //கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ என்ற பெயரில் விகடன் நிறுவனம் இங்கே கோவையில் (2-Feb , ஞாயிறு) ஒரு அரை நாள் பயிற்சி கருத்தரங்கு நடத்துகிறார்கள். அனுமதி இலவசம் தான். நான் போகிறேன். இந்த மாதிரி பயிற்சிகளுக்கு போகும் போது கோவையில் உள்ள நிறுவனங்கள் பற்றி தெரியவரும், சில நேரம் அங்கே இருக்கும் Stalls மூலம் சில பொருட்கள், விவரங்கள் கிடைக்கும். அதனால் நான் போகிறேன். விருப்பம் இருக்கும் நண்பர்கள் (ஞாயிற்று கிழமை தான்) கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுங்கள்//

    PHONE NUMBER ILLA SIR,
    PLEASE DISPLAY THE PHONE NUMBER.

    ReplyDelete
    Replies
    1. Hi, Number is there in the poster down below the "Anumathi Ilavasam" . Please check..

      Delete
  3. உங்களின் சேவை மென்மேலும் தொடரட்டும்... சிறக்கட்டும்... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள பதிவு சிவா.தோட்டக்கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பயன்படும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ப்ரியா அவர்களே. என் நண்பர்கள் சிலரும் இதற்கு ஆர்டர் செய்துள்ளார்கள். நானும் போன் செய்து பார்க்க வேண்டும்.

      Delete
  5. அருமையான தகவல் மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி எழில் அவர்களே

      Delete
  6. trichyl eppothu varum

    ReplyDelete
    Replies
    1. இது தற்போது சென்னை மற்றும் கோவையில் மட்டும் தான் அறிமுகப் படுத்தி இருக்கிறார்கள். திருச்சியில் அறிமுகப் படுத்தினால் கூறுகிறேன். அங்கு இருக்கும் தோட்டக் கலை துறையை தொடர்பு கொண்டும் விசாரித்து பாருங்கள்.

      Delete
  7. நான் விருதுநகர் .எனக்கும் இது வேண்டும் எப்படி பெறுவது

    ReplyDelete
    Replies
    1. இது தற்போது சென்னை மற்றும் கோவையில் மட்டும் தான் அறிமுகப் படுத்தி இருக்கிறார்கள். ஆர்வம் இருந்தால் நாம் வெளியே தனி தனியாக வாங்கியும் தோட்டம் ஆரம்பிக்கலாம்.

      Delete