Tuesday, January 21, 2014

மாடித் தோட்டம் – முதல் முயற்சி

2014-ல் சில புதிய முயற்சிகளை திட்டமிட்டிருக்கிறேன். அதில் முதலாவதாக, மாடி தோட்டம். போன வருடம் மாடியில் கொடி வகைகள் வளர்ப்பதர்க்கு ஒரு பந்தல் அமைத்து செய்த முயற்சி தோல்வியில் முடிந்து விட்டது. தொட்டியில் நடும் போது பாகல், புடலை எல்லாம் முளைத்து நன்றாக தான் வந்தது. ஆனால் கொஞ்சம் வளர்ந்ததும் செடி சோர்வாக, வளர்ச்சி குன்றி, ஒரு கட்டத்தில் காய்ப்பதற்கு முன்னமே முற்றிய செடி போல் ஆகி காய்ந்து விட்டது. அதே நேரத்தில் கீழே வெறும் தரையில் வைத்த செடி எந்த கவனிப்பும் இல்லாமல் செழிப்பாக வந்தது. 

மாடி தோட்டத்தில் முக்கிய பிரச்சினை, மண் இறுகி போவது. நாம் என்ன தான் மணலையும், செம்மண்ணையும் கலந்து, தேவையான அளவு உரம், இலை மக்கு எல்லாம் போட்டு கலந்து எடுத்தாலும், நீர் ஊற்ற ஊற்ற மெதுவாக மண் இறுகி போகிறது. ரோஸ் மாதிரி செடிகள் தாக்கு பிடித்து விடுகின்றன. ஆனால் கீரை, காய்கறி செடிகள் திணற ஆரம்பிக்கிறது. மேலும், காற்றின் வேகமும் மேலே அதிகமாக இருப்பதால் இலைகள் வேகமாய் வறட்சி ஆகி வளர்ச்சி சரியாய் இருப்பதில்லை. 

முன்பு கலந்து கொண்ட ‘மாடி தோட்டம் ஒரு நாள் பயிற்சியில் இருந்து சில விவரங்களை சேகரித்து சின்னதாய் ஒரு மாடி தோட்டம் அமைக்க ஆரம்பித்திருக்கிறேன். 

மாடி தோட்டத்தில் மிக முக்கியமாய் மணலை விட்டுவிட்டு தேங்காய் நார் தூள் பயன்படுத்த வேண்டும்( Coir Pith / Coco Peat). தேங்காய் நாரில் இருந்து கயிறு திரிக்கும் தொழில்சாலைகளில், தேங்காய் நாரில் இருந்து பவுடர் போல உதிர்ந்து விழும் Saw Dust போன்ற பொருள் தான் இந்த Coir Pith. நாம் ஒரு தேங்காய் மட்டையை எடுத்து லேசாய் உதிர்த்து பார்த்தாலே தூசி போல கொட்டும். இந்த பவுடர் இப்போது நிறைய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. அங்கே இதை மண்ணிற்கு பதிலாக பயிர் வளர்க்க பயன்படுத்துகிறார்கள். இங்கே பொள்ளாச்சி பக்கத்தில் நிறைய தொழில்சாலைகள் இருக்கின்றன. இந்த பவுடரை Compress செய்து ஒரு கிலோ, ஐந்து கிலோ கேக் வடிவில் கிடைக்கிறது. 

Coir Pith block ஐ உடைத்து நீரில் ஒரு இரண்டு நிமிடம் ஊற வைத்தால் உதிர்ந்து விடுகிறது. தேங்காய் நார் தயாரிக்க பொதுவாய் Saline Water ல் ஊற வைக்க படுகிறது. இதனால் இந்த பவுடரில் கொஞ்சம் உப்பு தன்மையும், அதிகமாக Electrical Conductivity யும் இருக்கும். அப்படி இருந்தால் அது செடி வளர ஆகாது. இதை EC Value கொண்டு ‘Low EC block’ ‘High EC block’ என்று குறிப்பிடுகிறார்கள்.  மேலும் இந்த பவுடரை Compress செய்யவும் கொஞ்சம் bonding material பயன்படுவார்கள். இதை எல்லாம் நீக்க நாம் நீரில் ஊறவைத்து கொஞ்சம் கழுவி/அலசி எடுத்து கொள்வது நல்லது. அப்போது தான் செடி நன்றாக வரும். 
         
இந்த பவுடர் வெறும் ஊடகம் அவ்வளவு தான். அதில் செடிக்கு தேவையான எந்த கனிமங்களோ, சத்துகளோ கிடையாது. நீரை பிடித்து கொள்ளவும், செடியின் வேர் எளிதாய் போகவும் ஒரு நல்ல மீடியா. அவ்வளவு தான். அதனால் இந்த பவுடருடன், எதாவது Organic Compost மற்றும் கொஞ்சம் செம்மண் கலந்து நாம் தயார் செய்ய வேண்டும். எந்த விகிதத்தில் என்பது ஒவ்வொருவரும் வேறு வேறு விகிதம் சொல்கிறார்கள். நான் இரண்டு விதமான கலவைகள் எடுத்து முயற்சிக்கிறேன். ஓன்று, Coir Pith : Red Sand  : Vermi Compost 2:2:1 விகிதத்தில், இன்னொறு கலவை  Coir Pith : Red Sand: Vermi Compost : 2:1;2  விகிதத்தில். இரண்டிலும் வரும் செடியில் ஏதும் வித்தியாசம் வந்தால் பார்க்கலாம்.  தோட்டத்தில் இங்கே எதுவுமே இப்படி தான் என்று கிடையாது. எல்லாம் நம் முயற்சி தான். செடி ஒழுங்காய் வந்தால் அது வெற்றி தான்.  

இப்போது கலவை தயார். அடுத்தது செடி வைக்கும் தொட்டி.. மாடி தோட்டத்திற்கு என்று நிறைய வகைகளில் Grow Bags கிடைக்கிறது. நம்மிடம் இருக்கும் பழைய பிளாஸ்டிக் பக்கெட், பெயின்ட் டப்பா இருந்தாலும் பயன்படுத்தலாம். Grow Bags பயன்படுத்தும் போது முதலில் சில தேங்காய் மட்டைகளை ஒரு அடுக்கில் போட்டுவிட்டு பிறகு coir pith கலவையை கொட்டவும். இது நல்ல ஒரு அஸ்திவாரமாய் இருக்கும். கலவையை மேலே வரை கொட்டி விட்டு விதை போட வேண்டியது தான். கீரை விதை என்றால் மேல் அடுக்கில் லேசாய் தூவி, அதன் மேல் இன்னும் ஒரு அடுக்கு கலவையை தூவி விட்டால் போதும். 

முதல் கட்டமாய் கீரை வகைகள் சிலவும் (பாலக்கீரை, பருப்பு கீரை, புளிச்ச கீரை, சிறு கீரை, கொத்தமல்லி), முள்ளங்கி, கேரட் என்று சில கிழங்கு வகையும் போட்டிருக்கிறேன். கீரை வழக்கமாய் தரையில் வருவதை விட செழிப்பாக வளர்ந்திருக்கிறது. 
       
மாடி தோட்டம் பொதுவாய் Shade Net வைத்து ஒரு பசுமை குடில் போல (Green House) அமைத்து உருவாக்குகிறார்கள். முதல் மாடியில் தோட்டம் அமைக்க இது போன்ற அமைப்பு தேவை இல்லை என்று சொல்கிறார்கள். ரொம்ப உயரம் (இரண்டாவது மாடியும் அதற்கு மேலும்) போகும் போது வெயிலின் தாக்கமும், காற்றின் வேகமும் அதிகமாய் இருக்கும் போது கட்டாயம் இந்த பசுமை குடில் அமைப்பது தேவை. இங்கே சுற்றி வெறும் காலி இடம் என்பதால் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்த முதல் மாடியிலேயே எனக்கு இந்த அமைப்பு தேவை படும். இப்போது இந்த தோட்டம் மாடிக்கும் கொஞ்சம் கீழே உள்ள இடத்தில் அமைத்திருக்கிறேன். சின்னதாய் ஒரு பசுமை குடில் அமைத்து சில முயற்சிகளை அடுத்து துவங்க வேண்டும். 

எல்லோருக்கும் வரும் இன்னொரு சந்தேகம், மாடி தோட்டம் என்றால் தண்ணீர் நம் வீட்டின் கான்ரீட் கூரையில் இறங்கி சேதம் ஆகிவிடுமோ என்று. நீர் தேங்கி இல்லாத வரை எந்த பிரச்னையும் இல்லை என்று தான் சொல்கிறார்கள். நான் பார்த்த சில பெரிய மாடி தோட்டங்களில் இதற்கான எந்த அமைப்பும் செய்யவில்லை. லேசாய் தண்ணீர் தெரிப்பதால் ஒன்றும் பாதகமில்லை. வேண்டும் என்றால் Plastic Paint மாதிரியோ, இல்லை என்றால் பெரிய பாலிதீன் விரிப்பு ஒன்றோ அமைத்துக் கொள்ளலாம். 
  
இந்த மாடி தோட்டத்திற்கு தேவையான Coir Pith Block, Grow Bag, Nursery Tray பற்றி கோவையை சுற்றி சில நிறுவனங்கள் பற்றி தகவல் சேகரித்து வைத்திருக்கிறேன். சீக்கிரம் அதை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

பருப்பு கீரை

பாலக்கீரை

கொத்தமல்லி

முள்ளங்கி
204 comments:

 1. வணக்கம்

  தங்களின் முயற்சி பாரட்ட ப்பட வேண்டியது... பசுமைப்புரட்சி பிறக்கட்டும்... நாட்டில் ஆரோக்கியமான மனித வளம் உருவாகட்டும் மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரூபன்

   Delete
  2. இந்த கிட் கோவை தடாகம் ரோட்டில் தோட்டக்கலை துறையில் மானிய விலையில் கிடைக்கும் . விதை உட்பட

   Delete
  3. இப்போது கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை. கடந்த ஒரு வருடமாக எங்கு கேட்டாலும் ஸ்டாக் இல்லை என்ற பதிலே வருகிறது.

   Delete
  4. Sir, your effort is the most appreciable. Can u pls tell me where the kits available at Chennai.

   Delete
 2. வணக்கம்
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. பார்க்கவே ஆசையா இருக்கு. முயற்சி செய்து பார்க்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. எளிது தான். கண்டிப்பாக முயற்சித்து பாருங்க.

   Delete
 4. படங்கள் பார்க்கவே மனதில் அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது... விளக்கங்களுக்கு மிக்க நன்றி... தொடர்கிறேன்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் :-)

   Delete
 5. மின் நூல் பற்றிய தகவல் - உங்களுக்கு உதவலாம் :- http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி தனபாலன்.

   Delete
  2. Siva,

   Can i Get the DYI kit now. Where can i get them & how?
   Please help

   Delete
  3. Where are you from? Check in Govt. Horticulture departments if you are in Chennai or Coimbatore.

   Delete
 6. Siva Sir, romba azhaga explain panni irukeenga...photos pathala namalum oru garden podanum pola irukku.

  very useful info sir.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் சிவா. மிக அழகாக விரிவாக எழுதுயிருக்கிறீங்க.முதல் முயற்சியே நன்றாக, பார்க்கவும் அழகாக இருக்கு.வாழ்த்துக்கள்-நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி பிரியா அவர்களே

   Delete
 8. அனுபவப் பதிவு அருமை .மாடித்தோட்டம் போட எனக்கும் ஆசைதான் ...மொட்டை மாடியாச்சேன்னு யோசிக்கிறேன் !

  ReplyDelete
 9. sir,
  thottakalai guide pdf formatlil ennidam ullathu athai eppadi ungaludan paginthu kollvathu endru theriyavilllai .

  ReplyDelete
  Replies
  1. Hi, That will be great. Thanks for checking. you can mail it to me to gsivaraja@gmail.com

   Delete
  2. Nallathu nanba..enakkum athai mail pannungal nanba..

   anandhthamizh@gmail.com

   Delete
  3. ஹாய், I will check and send those details. Thanks

   Delete
  4. hi i am also interested, but i need a same help, so please send the thottakalai format for me also, my mail id - ilayasrf@gmail.com

   Delete
  5. Dear Mr. Siva,
   Your efforts are really appreciated. Great keep it going.
   Am also having a plan of setting up a Madi Thottam. Please guide to start-up with. As well kindly share the thottakalai guide in pdf to svijaikrishnan@gmail.com.

   Dear Gowthandru,
   Thanks for volunteering in sharing the pdf.

   -VJ

   Delete
  6. hi i am also interested, but i need a same help, so please send the thottakalai format for me also, my mail id thiruvasagam84@gmail.com

   Delete
 10. மிகவும் பயனுள்ள பதிவு. னக்கும் வீட்டு தோட்டம் போடுவதில் மிகவும் விருப்பம்.

  http://mahibritto.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. நன்றி உஷா அவர்களே

   Delete
 11. மிகவும் பயனுள்ள பதிவு. தொட்டி (அல்லது பை) யில் தண்ணீர் வெளியேறும் ஓட்டையின் அளவு குறித்தும், தண்ணீரை சிக்கனமாக உபயோகப்படுத்துவது பற்றியும் கொஞ்சம் கூறுங்களேன்.. பயனுள்ளதாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. பையில் ஓட்டை அளவு ஒன்றும் பெரிதாய் தேவை இல்லை. அதிக அளவு நீர் இருந்தால் வெளியேற சின்னதாய் இரண்டு இருந்தால் போதும். நாம் நீர் ஊற்றும் போது அளவாய் தான் ஊற்ற போகிறோம்.இரண்டு நாளைக்கு ஒரு Mug அளவு என் தோட்டத்தில் உள்ள பைகளுக்கு போதுமானதாக இருக்கிறது. வெயில் அதிகம் இருந்தால் தினமும் ஊற்றலாம்.

   தண்ணீர் சிக்கனம் என்றால் drip-system போடலாம். நான் இன்னும் அதை பற்றி அவ்வளவாய் விவரம் சேகரிக்க வில்லை.

   Delete
 12. செம. Professional ஆக செய்து இருக்கீங்க. பார்க்கவே அசத்தலாக இருக்கிறது.

  BTW உங்க கேமராவும் அருமை. படங்கள் தெளிவாக இருக்கிறது.

  ReplyDelete
 13. I am in trichy, where can I get this coirpith in trichy? Can you help me?

  ReplyDelete
 14. Hello Siva sir, unga maadi thottam superaga irukku. Yenakkum maadiyil thottam poduvathil viruppam ullathu yours informations will be more useful to me.But I am in trichy where can I get this coir pith? Can you help me to get it?

  ReplyDelete
  Replies
  1. Hi, I am really sorry for the very late reply. Please send a mail to me (gsivaraja@gmail.com) in detail if you are interested in getting coir pith. I will help you.

   Delete
  2. Hi siva congrats for making green world... Iam hari from tuticorin.. Could u tell me that where I can get hdpe bags nearby my area and here more hot season I need green net cloth also.. Pl send reply to shari3500@gmail.com.

   Delete
 15. hai sir, i have gone through ur information it is very useful but i dont know where to get the necessary items. pls give me the details.

  ReplyDelete
  Replies
  1. Hi, Thanks for your feedback

   Where are you located? Depend on that, I will check and let you know. You can send a mail to me to gsivaraja@gmail.com

   Delete
 16. Good work Siva !! Keep going... This is quite inspiring all the people.!!!! Best wishes Siva !!

  --Thiru

  ReplyDelete
 17. hai 1st time I am watching this side. But, Iam so happy to see and Iam really intrested to do this garden. If I need any help I will contact to you

  ReplyDelete
 18. good work siva..hope facebook will reach everybody soon and can share ideas easily and can be benefited by lots of people..plz share ur ideas at https://www.facebook.com/maadi.thottam

  anand

  ReplyDelete
  Replies
  1. Thanks Anand. Thanks for the facebook link. Will check the facebook page. Please share your ideas/suggestion also for our thooddam blog.

   Delete
 19. sir, thottakalai pathi yethachum book eruntha solunga helpfulla erukkum

  ReplyDelete
  Replies
  1. Hi Ravi, sorry for the late reply. எனக்கு பெரிதாய் ஏதும் புத்தகங்கள் பற்றி தெரியவில்லை. என்னிடம் புத்தகம் ஏதும் இல்லை. புத்தக அறிவை விட நாமே செய்து, கற்று கொள்வது தான் தோட்டத்தில் வேலைக்கு ஆகும். இறங்கி செய்து பாருங்கள். நிறைய கற்றுக் கொள்வீர்கள்

   Delete
 20. Please send the chennai address where to get that coir pith

  ReplyDelete
 21. Hi Congrats Siva i am also don the same in my maadi thottam and lot of greens and vegetable i taken and fresh also.

  ReplyDelete
  Replies
  1. Good Ramesh. Please share any photo of your garden, if you have taken.

   Delete
  2. Sir nan Bangalore la iruken yenaku idhu pola thotta amaika aasai engu thevaiyana porutkal kidaikum endru therindhal koorungal...enudaiya native madurai... Maduraiyil engu vangalam...ethanai naatkal kalithu man matra vendu reuse patri solungal..

   Delete
  3. நீங்கள் பெங்களூர் என்றால் எங்கே நிறைய கடைகள் இருக்கும். விசாரித்து பாருங்கள் (லால் பாக் ஏரியா என்று நினைக்கிறேன்). மதுரையில் சில இடங்கள் பற்றிய தகவல்களை சில பதிவுகளில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள். பார்த்து சொல்கிறேன். இல்லாவிட்டால் நீங்கள் கோவையில் இருந்து கூட வரவழைத்துக் கொள்ளலாம்.

   Delete
 22. super sir..im in madurai..dont knoe where i get these things..can u help me.. wr i get the necessary items.my mail id is sathya_2187@yahoo.com

  ReplyDelete
  Replies
  1. மதுரையில் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை நண்பரே.

   மற்ற நண்பர்கள் விவரம் தெரிந்தால் கூறுங்கள்.

   Delete
  2. https://plus.google.com/103420288919716402146/about?gl=in&hl=en

   17-A East Veli Street Nelpettai Madurai, Tamil Nadu 625001‎
   098431 87357
   Agricultural Seed Store, Agricultural Service
   9:00 am – 10:00 pm
   Looking for Quality Seeds in Madurai? Agricultural Store is leading seeds business store in Madurai, provides vegetable seeds, home gardening, flower seeds and all agricultural helps etc...

   Delete
 23. I have given some contact detail in this post. Please check.I don't have any details about vendor in Madurai.

  http://thooddam.blogspot.in/2014/02/1-coir-pith-seedling-tray-grow-bags.html

  ReplyDelete
 24. Hi Siva,
  Its very nice to see your madi thooddam. same way i also done in my flat. But other flats members dont under stand about this.
  எல்லோருக்கும் சந்தேகம், மாடி தோட்டம் என்றால் தண்ணீர் நம் வீட்டின் கான்ரீட் கூரையில் இறங்கி சேதம் ஆகிவிடுமோ என்று.

  and they fight with me, finally i removed my wonder full maddi thooddam. :-( :-(

  ReplyDelete
  Replies
  1. இது வழக்கமாய் அபார்ட்மென்ட்-ல் வரும் பிரச்னை தான். மாடி தோட்டம் என்று இல்லை. நீங்கள் உங்களுக்கு என்று எதாவது செய்தால் மற்றவர்களுக்கு பொறுக்காது. அவ்ளோ பொது நலமும், சகிப்பு தன்மையும் இருக்கிறது இப்போது இருக்கும் மக்களிடம். தோட்டம் என்றால் இன்னும் கொஞ்சம் அதிக அக்கறை எடுத்து கத்துவார்கள்.

   முடிந்தால் ஏதும் பாலிதீன் விரிப்பு விரித்து, பைகளில் வளர்க்க முடியுமா என்று பாருங்கள். அந்த அறிவாளிகளிடம் கொஞ்சம் விளக்கி பாருங்கள். :(

   Delete
  2. Keep the bricks down and above that keep kadappa slab then place the grow bags. Then the water drains very fast

   Delete
 25. Nanum maadi thottam poda pokiren.

  ReplyDelete
  Replies
  1. நல்லது நண்பரே. ஏதும் விவரம் தேவை பட்டால் கூறுங்கள்.

   Delete
  2. Hi siva, this is a useful for a future. Because nowadays there is a no place to put garden this is good idea for everyone and your explanation is also good I'm going to try this in my house. Can tell me how to get the raw materials for this maadi thottam in coimbatore vendors details please tell me mail id is:arjun.ganesh07@gmail.com

   Delete
  3. Please check

   http://thooddam.blogspot.in/2014/02/1-coir-pith-seedling-tray-grow-bags.html

   Delete
 26. dear sir,,,
  ur article is very nice.... what is the meaning for Vermi Compost ???

  ReplyDelete
 27. Thanks.

  It is Manpuzhu Uram only. Vermi compost is the the compost prepared from cow dung and the composting is done using worms (Man Puzhu).

  ReplyDelete
 28. very nice to see ur garden.it makes mind very happy n relaxed. can u pls tell me where i chennai to buy these green color bags to grow the plants. thank you

  ReplyDelete
  Replies
  1. Thanks Madam. Please check my latest blog on chennai details

   Delete
 29. Thank you so much. Got the info from your blog. Good job.

  ReplyDelete
 30. Very nice.. i need some details about roof garden. can u give details.

  ReplyDelete
  Replies
  1. Thanks.

   Please let me know your queries. Please check my other article also in my blog.

   Delete
 31. Hi Shiva, we would like to plant vegetables in our terrace can you give us more information on how to plant simple vegetables.also would like to know where we can get the bags and other materials in bangalore or Coimbatore.

  ReplyDelete
  Replies
  1. Hi,

   Check

   http://thooddam.blogspot.in/2014/02/1-coir-pith-seedling-tray-grow-bags.html

   Delete
 32. kalakaringa sir...na kovai than. unga article pathutu tha inga visit paninen. inum konjam guide panunga cbe la enga materials kedaikum nu... ramkumar.

  ReplyDelete
  Replies
  1. Hi,

   Please check these posts to get the details

   http://thooddam.blogspot.in/2014/02/1-coir-pith-seedling-tray-grow-bags.html
   http://thooddam.blogspot.in/2014/04/2.html

   http://thooddam.blogspot.in/2015/06/blog-post.html

   Thanks,
   Siva

   Delete
 33. Government Maadi thottam scheme: http://www.dinamalar.com/news_detail.asp?id=1300621

  Do you know where should I contact and get details for that in Coimbatore?

  ReplyDelete
  Replies
  1. Please check this for more details.

   http://tnhorticulture.tn.gov.in/horti/do-it-yourself-kit

   Delete
  2. dear mr siva

   good work.

   best wishes for a good harvest this year.

   pk rangarajan villivakkam 9840038940

   Delete
 34. sir vanakkam, ungaludaiya vazhikaatuthalukku nantri. naan puthusa thottam pottiruken. naane amirtha karaisal,panjakavyam ready paniten sir.ungaludaiya articles paduchu niraiya payanulla visayangalai therunjukitten.mudinthall thottam amaippathu patri book veliyidungal. thanks.nursery tray engu kidaikkum pls

  ReplyDelete
  Replies
  1. Ungal peyar matrum Oor ennaventru koorungal Nanbare. Book veliyidum alavukku innum katrukolla vendiya visayangal niraya irukkirathu. Varungalathil mudinthaal kandippai seiyalaam.

   Ungal oor ethu entru therinthaal nursery tray kidaikkuma entru solla mudiyum.

   Delete
  2. Thank you for the tips. Nice garden. I too have a big garden but not useful as yours. I am planning to put one small kitchen garden after going thru your article in one of the tamil magazine.

   Delete
 35. Thank You..Siva
  I have learned a lot from your terrace garden blog, Me and my wife have started going to terrace garden shop , if any doubt arise while this garden project i will contact you.Thank you and very useful blog. - Velayutham

  ReplyDelete
  Replies
  1. Thanks Velayutham. Good to hear about your new terrace garden shop. All the best.

   Delete
 36. I want to start in my terrace. Guide me where can I get materials like bags, pith etc in coimbatore

  ReplyDelete
  Replies
  1. Hi,
   Please check this post.

   http://thooddam.blogspot.in/2014/02/1-coir-pith-seedling-tray-grow-bags.html

   Delete
 37. Hi sir , gud work keep going ,regards srimathi kalyan

  ReplyDelete
 38. Hello sir, I'm sudha from madurai.I came to abt ur thottam from aval vikadan. I'm already growing abt 20 plants in my home. I need ur guidance where to get vegetable seeds,coir pith d keerai naathu at madurai. Pls send any pdf regarding maadi thottam if u have. My id vijaysudhamca@gmail.com.... keep rocking sir......

  ReplyDelete
  Replies
  1. Sister, U can get seeds and grow bags in Madurai from a Store which is backside of Nelpettai busstop. I think shop Name is Vivasaya Ulagam

   Delete
 39. Hi, Thanks for your comment. You can get seeds online. I have given those details in few articles posted earlier (Titled 'Thagaval' & Naddu vithaigal). Please check those.

  I don't have any pdf with me on terrace gardening.It should be available in net. Just google and check for any pdf.

  I don't have details on availability of Grow bags and coir pith in Madurai. You can call the Coimbatore supplier (I gave the detail in my few posts) and check if they can send it to Madurai. Please send a mail to me for any further queries.

  ReplyDelete
 40. Hi brother , thanks for the information ,keep rocking. Do u have any idea where can I get coir pith blocks and grow bags in karur if so kindly share me the details plz. I'm the beginner for this maadi thotam .keep on postings about maadi thotam .

  Mikka nanri sagodhara.

  ReplyDelete
  Replies
  1. Hi,

   Thanks for your mail. Karur is near to Selam only. Right. Please call Subhiksha Organics (9442212345) and check with them. They have a base in Salem.

   Delete
 41. Thanks brother

  ReplyDelete
 42. Replies
  1. நன்றி நண்பரே. எனது எண் ப்ளாக் மேலே கொடுத்திருக்கிறேன். பாருங்கள் .

   Delete
 43. Hello sir, I'm Arul joe from Hosur.I came to about your thottam from aval vikadan. I'm interesting to keep some plants in my home. I need ur guidance where to get vegetable seeds,keerai at hosur. Pls send any pdf regarding maadi thottam if u have. My id joe120491@gmail.com

  ReplyDelete
  Replies
  1. Hi Arul,

   You can get seeds online. Check my below posts for more detail

   http://thooddam.blogspot.in/2015/06/blog-post.html
   http://thooddam.blogspot.com/2014/04/2.html

   I don't have any pdf on gardening with me.Check if you can fine from google.

   Delete
 44. maadi thottam eppadi poduvathu endru confusion- la irunthen. eppa eppadinu therunjukiten "nandri". manpuzhu uram enga kedaikkum. naan tirupur.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தினேஷ்.

   மண்புழு உரத்திற்கு லோக்கல் நர்சரிகளில் விசாரித்து பாருங்கள். திருப்பூர் பற்றி விவரம் தற்போது என்னிடம் இல்லை

   Delete
 45. Hi Siva, please let me know where to collect all the materials near by rajapalayam, srivillitputtur. I am very much interested on this. Appreciate if you can give me your contact number.
  Thanks,
  Sanjeev

  ReplyDelete
  Replies
  1. Hi,

   I have given my mail id and contact details at the top in the blog. Please send a mail. Will share the details I have

   Delete
  2. nanum intha mathiri valakanum nu trai panraen
   sir

   Delete
  3. நல்லது. ஏதும் விவரம், உதவி தேவைப்பட்டால் கூறுங்கள் நண்பரே.

   Delete
 46. Hello Sir, Good Blog. I came to know about ur blog through Aval Vikatan. Just started now to implement garden at my home. I have these ideas long time back but started implementing after reading ur article. I have a small doubt. I can't get pot for all plants, shall I use some plastic covers as pot? Kindly reply.

  Thanks,
  Leelavathy Sekhar

  ReplyDelete
  Replies
  1. Thanks for your comment madam.

   You mean to use the polythene covers? If they are thick enough, you can give a try. But it will get degrade if we keep continuously in sunlight after some time and will start breaking into pieces. For one yield you can manage with thick polythene bags. Why don't you get the actual grow bags? Where are you from so that we can check for available grow bags in your area.

   Delete
  2. I am in Chennai staying near Porur. Shall I permanently grow plants in those grow bags or is it only for temporary before moving it to pot?

   Delete
  3. These are all permanent only, means the plant will be kept till the yield gets complete. After that you can start new plant in the same bag after adding few compost in the top layer. The lift of these bags said to be form 3 - 5 years.

   Delete
 47. Thank u siva sir ennakum ethu ponru thottam poda vendum kits enga kidaikum by prabha namakkal

  ReplyDelete
  Replies
  1. Hi,

   please send a mail (give in my blog banner). I will share the details.

   Delete
 48. Hai Mr.Siva Sir,
  Hats off to you.
  I am G.K. ( GopalaKrishnan) from Tirupur.
  I just know you thro Aval Vikadan article.
  I am also trying terrace gardning from last year. So many confusions and not able to get proper solutions. After seen your blog, some lights blinking with me.Very usefull messages and i am following your instructions.now some what ok. I am getting happy if you joint me with your blog friendship. My mobile no.9842214879.
  i will post my garden photos soon.
  Thanks.

  ReplyDelete
  Replies
  1. Hi, Thanks you for your comment. Good to hear your interest towards gardening and about new starting. Share the photos once the garden is ready in some level. Feel free to send any queries regarding gardening. I will be happy to share any information i have.

   Keep in touch. Share all your experience which will help other friends also here.

   Delete
 49. Sembaruthi chedi vangi vandhu balconyil 3 natkal vaithan.3 naatkal kazhithu madiyil vaithu thaneer ootri varugirane.Oru chedi satru vaattamaga irukkiradhu.Adhil 2 /3 ilaigal manjalaga kanappadugiradhu.Idharkku enna karanam and enna theervu.Therindhal sollungal.

  Nandri.

  ReplyDelete
  Replies
  1. ungaludaiya growning media (enna enna mix) ennaventru solla mudiyumaa?

   Delete
 50. Sadharanamaga kai kari chediyo ,pazha chediya,poo chediyo alladhu crotons aaga irundhalum thanni ethanai naalaikku oru dhadavai ootra vendum?

  ReplyDelete
  Replies
  1. maadi thoddam entral sedi sinnathaaga irukkum pothu irandu naalaikku orumuraiyum, nantraaka valarntha sedikku thinamum neer paikka vendum. tharaiyil entral moontru nalaikku orumurai paiththaal pothum.

   Delete
 51. ungalidam sila thagavalgal peravendum ungaludaya contact number kidaikuma?

  ReplyDelete
  Replies
  1. Hi, mail id-, phone number-ம் மேலே blog banner (top header)-ல் கொடுத்துள்ளேன். உங்கள் கேள்விகளை ஈ-மெயிலில் அனுப்புங்கள். ஞாயிறுகளில் என்னை அழைத்தால் விவரமாக பேசலாம்.

   Delete
 52. Unga pathivu migavum uthavikaramaga ullathu Madurai enga coir bag kittaikkum???

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே, உங்களுக்கு பை வேண்டுமா, தேங்காய் நார் பவுடர் வேண்டுமா? எனக்கு ஒரு மடல் அனுப்புங்கள். (மேலே மெயில் ஐடி கொடுத்திருக்கிறேன்)

   Delete
  2. Dear Mr.Siva,
   you can place your contact here too so as to contact you.
   I am planning to do in Chennai, can you send me? if yes, cost please.
   my contact <thulasingam.j@gmail.com, 7845528129

   Delete
  3. Hi, I have given a contact number also at the top. I will be available in that Number on Sunday morning all weeks. For materials in Chennai,, please check this post

   http://thooddam.blogspot.in/2015/06/blog-post_27.html

   Delete
 53. வணக்கம் நண்பரே
  உங்கள் முயற்சிக்கும் அதை அணைவருக்கும் பகிர்ந்தவிதமும் மிகவும் அருமை.
  மாடியில் தண்ணீரால் தளம் வீணாகாமல் இருக்க drain cell பயன்படுத்தலாம்,

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே. drain cell போன்ற Technology எல்லாம் வீட்டுத் தோட்டத்திற்கு அவசியமா என்று தெரியவில்லை. நீங்கள் வீட்டில் drain cell அமைத்திருந்தால் கூறுங்கள். படம் இருந்தால் அனுப்பி வையுங்கள். ஒரு ஐடியா கிடைக்கும்.

   Delete
 54. Sir I need the kit
  Wre I wanna to proceed

  ReplyDelete
  Replies
  1. Hi, Are you asking about the Do it Yourself Kit from Govt? It is available in Horticulture Dept in Chennai and Kovai (but for the past one year all you hear is 'It is not available in stock'). If you decided to start, no need to wait for the kit. get the materials separately and start

   Delete
 55. hi bro...
  i need information abt good soil mix ratio -of coco peat and vermicompost....
  in 1:1 is okay, bt vermicompost cost is too high...

  ReplyDelete
  Replies
  1. This is good ratio. I mix red sand also as given in the post as Coir Pith : Red Sand: Vermi Compost : 2:1;2 ratio. This mix I keep for the upper half of the bag. For lower half, I just keep coco peat alone

   Delete
  2. thank u bro.... :)
   i got two type of cocopeat low ec and high ec...
   wat it means...
   how can i reduce ec and other salts...
   can i use high ec coco peat for gardening....

   Delete
  3. Don't get confused with EC terms.. I never checked this and I always give a wash (just break into pieces and put in a bucket of water and which will make it into power. Then squeeze the water and we are done.

   Delete
 56. Your efforts are really appreciated. Great keep it going.
  Am also having a plan of setting up a Madi Thottam. Please guide to start-up with. As well kindly share the thottakalai guide in pdf to saga.gsm@gmail.com

  ReplyDelete
  Replies
  1. Hi, Are you from Coimbatore? Based on your location, you can check for the materials (Grow Bags, Coir Pith) and start the garden.

   Delete
 57. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதை படித்தபின் நானும் மாடி தோட்டம் அமைக்க ஆரம்பித்துள்ளேன். முதற்படியாக 5 HDPE பையில் தக்காளி,கத்திரி, வெண்டைவிதை மற்றும் பொன்னாங்கண்ணி கீரை போட்டுள்ளேன். ஒரு வார காலமாகியும் கத்திரியும், வெண்டையும் மட்டும் முளைக்கவில்லை. என்ன காரணமாக இருக்கலாம்? உதவுங்கள்

  ReplyDelete
  Replies
  1. கத்தரி முளைக்க சில நேரம் பத்து நாட்கள் கூட ஆகலாம். வெண்டை ஐந்து நாட்களில் முளைக்க வேண்டும். அதன் பிறகும் முளைக்க வில்லை என்றால் விதை சரியில்லை இல்லாவிட்டால் ரொம்ப ஆழமாக ஊன்றி இருப்பீர்கள். கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

   Delete
 58. அன்பு அண்ணா.
  கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ப்ளாக்-ஐ விருப்பபட்டு படித்து கொண்டிருக்கிறேன். எனது சிறு வயதில் எங்கள் வாடகை வீட்டின் பக்கத்தில் எனது அப்பா அமைத்த தோட்டத்தில் காய்கறி பறித்த நாட்கள் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. அது தான் எனக்கும் உந்து சக்தி இன்றளவும். காலேஜ், bachelor லைப், என்று காலம் போனதே தெரியவில்லை. இப்போது இதோ, எனது 4 வயது செல்ல மகளுடன், மாடியில் மீண்டும் ஒரு தோட்டம் தொடங்க உங்கள் ப்ளாக் மட்டுமே காரணம். முதலாக மிளகாய் விதைகளை, ஒரு பிளாஸ்டிக் tray - இல் coco peat - compost கலவையில் போட்டு 4 நாட்கள் ஆயிற்று. முளைப்பிற்காக ஆவலோடு காத்திருக்கிறேன். I'll update more on the coming days.

  Thanks,
  RameshBabu M

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வார்த்தைகளிலேயே சந்தோசம் தெரிகிறது. செடிகள் வளர்ந்த பின் படங்களுடன் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

   உங்கள் ஊர் என்னவென்று சொல்ல முடியுமா? உங்களுக்கு என்ன உதவி, விவரம் தேவைப்படாலும் கூறுங்கள். முடிந்த அளவுக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

   அன்புடன்,
   சிவா

   Delete
  2. பள்ளிப்பருவம் - தர்மபுரி; கல்லூரி - திருச்சி; வேலை - சென்னை; பூர்வீகம் - நாகர்கோயில்; அப்பா ஓய்வுபெற்ற அரசு அதிகாரி; அப்பாவின் பணி ஓய்வின் பிறகு நாகர்கோயில் - க்கு குடிபெர்யர்ந்த பின்னர் தான் உணர்ந்தேன் - எத்தனை பசுமையான இடத்தை இத்தனை காலம் இழந்திருக்கிறேன் என்று. IT - இல் வேலை என்றாலும் அதை கர்வத்துடன் சொல்லும் ஆளில்லை நான். இந்த concrete Jungle - இல் (சென்னை) தினசரி வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பது நமக்கு தானே புரியும். யோசித்து பார்க்கையில், நான் எங்கிருந்தபோதும் இன்று வரை ஏதாவது சின்ன பூசெடிகளையாவது என்னுடனே வளர்த்து வந்திருக்கிறேன். இந்த காய்கறி தோட்டம் என்பது, எனது நெடுங்கால பழக்கத்தின் தொடர்ச்சியாகவே பார்கிறேன். இந்த முறை, கைகளில் கொஞ்சம் நேரமும் ஆர்வமும் கூடவே இருக்கிறது, கூடுதலாக உங்களின் அறிவுப்பெட்டகம், எனக்கு அருகிலேயே உள்ளது. நிச்சயம் எனது அவசியங்களையும், கேள்விகளையும், எனக்கு தேவையான உதவிகளையும் - உங்களிடம் கேட்பேன்; முடிந்தவரை முயற்சியுங்கள். உங்களிடம் என் கருத்துகளை பகிர்வதில் உண்மையிலேயே மகிழ்ச்சி. நன்றி அண்ணா.

   Delete
  3. உங்கள் விரிவான அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே. நானும் கூட நாகர்கோவில் பக்கம் தான் ( திசையன்விளை). நானும் கூட IT தான் :)

   உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள். தொடக்கத்திலேயே அனைத்தும் எளிதாக வந்து விடாது (just a word of caution) உங்களை போல நிஜமான ஆர்வமுள்ள நண்பர்களை பார்க்க மிக்க சந்தோசம். உங்களுக்கு என்ன விவரம், உதவி வேண்டுமென்றாலும் கொள்ளுங்கள். என்னால் முடிந்ததை பகிர்ந்து கொள்கிறேன். வேண்டும் போது தனி மடல் ஓன்று அனுப்புங்கள்.

   Delete
 59. U r doing great thing to the society..keep doing..my best wishes

  ReplyDelete
  Replies
  1. Thanks friend. It is nothing like service. It is just a hobby and sharing with friends is part of it :))

   Delete
 60. sir, send me thotakalai pdf file sir, my e-mail i.d sivakprt@gmail.com
  kindly send your other ideas also. thanking you sir

  ReplyDelete
  Replies
  1. Hi, I don't have any pdf/manual for terrace gardening.

   Delete
 61. Iam residing in Chennai.Can u pls assist me the place where I can get this kit in Chennai

  ReplyDelete
  Replies
  1. Please check http://thooddam.blogspot.in/2015/06/blog-post_27.html

   Delete
 62. hello sir i m in covai.ungaloda phone number r adress send me pls sir

  ReplyDelete
  Replies
  1. Hi, I have given my number at the top (in blog banner). You can call me on Sunday morning. Please send mail to thooddamsiva@gmail.com for any queries

   Delete
 63. Siva sir ennidam 4000 Sq ft mottai Madi empty a irukku enakku konjam help Pannunga sir

  ReplyDelete
  Replies
  1. ஹாய், உங்களுக்கு என்ன விவரம் வேண்டும் என்று கூறினால் நன்றாய் இருக்கும். எனது மாடித்தோட்டம் தொடர்பான பதிவுகளை பாருங்கள். மேலும் ஏதும் விவரம் தேவைப்பட்டால் கூறுங்கள்.

   Delete
 64. Hello Shiva sir
  mottai maadi thottam amaipatharkaga oru naalu anju mathama thottakalai thurayai sarnthu yen time waste pannitten kadaisiyil covai agro agencies patthi net la thediya pothuthaan unnga site parthen romba useful sir thank you so much
  yaaro yeppadiyo poona yenakku yenna-nu irukkara ulagathula neenga share senja messages yennaku periya sevaiya theriyuthu thanks once again

  ReplyDelete
  Replies
  1. Thanks Madam for all your words :). As long as it helps few beginners to start gardening, I am good :)

   Delete
 65. ennakum ithu pola maadi thottam podanum, approximate i have 200 to 300 sq ft, space available, how much money need.
  do u have any idea tell me

  ReplyDelete
  Replies
  1. Hi, Please check my below video. I have a slide added with a cost. Please check

   https://www.youtube.com/watch?v=iAOnw1oooEE

   Delete
 66. Hi sir am from ramanathapuram I had lot of interest in it..can you please tell where I can buy these kit in ramanathapuram

  ReplyDelete
 67. If you are asking about the DO IT YOURSELF kit that Govt supplies, it was made available in Chennai and Kovai only. You can by the required materials separately. Check my posts below,

  http://thooddam.blogspot.in/2014/02/1-coir-pith-seedling-tray-grow-bags.html

  http://thooddam.blogspot.in/2014/04/2.html

  http://thooddam.blogspot.in/2015/06/blog-post_27.html

  http://thooddam.blogspot.in/2015/06/blog-post.html

  ReplyDelete
 68. I am at karur.can u pl inform place where I get Madi thottam accessories at reasonable cost?

  ReplyDelete
  Replies
  1. Check this post

   http://thooddam.blogspot.in/2014/02/1-coir-pith-seedling-tray-grow-bags.html

   Delete
 69. I am in tirupur .can u pl inform place where I get Madi thottam accessories at reasonable cost?

  Reply

  ReplyDelete
  Replies
  1. Please check the below post. You can check in Subhiksha Organics, Coimbatore

   http://thooddam.blogspot.in/2014/02/1-coir-pith-seedling-tray-grow-bags.html

   Delete
 70. I am pondy. Do u know where madi thottam training is GIVEN at pondy?

  ReplyDelete
 71. Hi sir Wonderful job Great !! I need a clarification simple ah indoor la vendayam poturukom water bottle la, it is growing !!.

  Like this indoor ah vera ena ena plants vaika mudium. seeds podurathu, kannu vaikurathu oru kutti list kudugalen sir. Thank u.

  ReplyDelete
  Replies
  1. Hi Madam, I never tried any indoor plants and won't be able to suggest any plant without trying it. வெந்தயம் மாதிரி சில கீரைகளை முயற்சிக்கலாம்.

   Delete
 72. சிவா சார் வணக்கம். உங்களின் அனுபவ பகிர்வு அருமை, photography superb, நண்பர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுகும் பதில் அளித்த விதம் என் மனதை கவர்ந்தது... உங்கள் சேவை தோட்டம் அமைப்பதில் ஆர்வம் உடைய என்போன்றவர்களுக்கு என்றும் தேவை... உங்களின் இந்த பகிர்வை பார்க்கும் அனைவருக்கும் தோட்டம் அமைத்தே ஆக வேண்டும் என்கின்ற எண்ணம், ஆசை அனைவரின் ஆழ்மனதில் ஊற்றெடுக்கும் என்றால் அது மிகையல்ல... சேவை சிறக்க வாழ்த்துகள்... நானும் வீட்டுத்தோட்டம் அமைக்கும் முயற்சியில் அடிக்கல் நாட்டுயுள்ளேன், தற்பொழுது kitchen waste களை ஒரு பெரிய மண்பாண்டத்தில் சேகரித்து இயற்கை உரம் தயாரித்து வருகிறேன், இதில் மண்புழுக்களையும் விடலாம் என திட்டமிட்டுள்ளேன் and also plan to buy grow bag and do it your self kit from horticulture dept trichy this week. எனது முயற்சி வெற்றி பெற உங்களின் ஆசீர்வாதமும் வழிகாட்டலும் அவசியம். நன்றி கலந்த வணக்கத்துடன் என்றும் உங்கள் ரவிகுமார்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் நீண்ட மடலுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே.
   உங்கள் புதிய மாடி தோட்டத்திற்கு வாழ்த்துகள். உங்களுக்கு தோன்றுவதை முயற்சியுங்கள். வெற்றி நிச்சயம். இங்கே ஒருவர் கூட திருச்சி கண்காட்சி பற்றி கூறிக் கொண்டிருந்தார். தேவையானவற்றை வாங்கி சீக்கிரம் ஆரம்பியுங்கள்.

   Delete
 73. Hi siva sir.,

  i am very interested to start this process. bit there is an no guide to me. mailid: gowthamchotu93@gmail.com
  mobile: 8056606341
  please help me
  iam live in cuddalore near by thiruvanthipuram.
  i need basic kits. help me..!

  ReplyDelete
  Replies
  1. Hi,

   I would recommend to get things separately and start the garden. You can get materials from Shubiksha Organics from Coimbatore. Call them and talk to them. Check this post

   http://thooddam.blogspot.in/2014/02/1-coir-pith-seedling-tray-grow-bags.html

   Regarding guide, I don't have any book or pdf with me to share. Just try each plant with your own idea with some basics gathered from blogs/websites. That should be sufficient.

   Delete
 74. Sir I'm habeeb from keelakarai ( ramanathapuram district ) I saw a few weeks ago about the MADI THOTTAM kit in the horiculture department but they told me there is no specification in your area.....so please help me how to make madi thottam in my own terrace. ....can I buy this madi thottam kit in online??....Please reply to me I'm waiting for you

  ReplyDelete
  Replies
  1. They supplied the kit only in Chennai and Coimbatore. You cannot get them online. I would recommend to get things separately and start the garden. Check my reply to previous comment.

   Delete
 75. சிவா சார் தரமான காய்கறி விதைகள் எங்கு வாங்குகிறீர்கள் ?

  ReplyDelete
  Replies
  1. நான் நாட்டு விதைகளை சுபிக்க்ஷா ஆர்கானிக், நண்பர் பரமேசிடம் வாங்குகிறேன். ஹைப்ரிட் விதைகள் இணையத்தில் கிடைக்கும். இந்த பதிவுகளை பாருங்கள்

   http://thooddam.blogspot.in/2014/04/2.html
   http://thooddam.blogspot.in/2015/06/blog-post.html

   Delete
 76. hello sir
  can you help me to purchase coir pith in economical price

  ReplyDelete
  Replies
  1. Hi,

   The coir pith cost around Rs.100/block (5 kg) everywhere. You can call Subhiksha organics in Kovai and check with them. Please check this post

   http://thooddam.blogspot.in/2014/02/1-coir-pith-seedling-tray-grow-bags.html

   Delete
 77. Hi Siva, So nice to see your garden and I appreciate your patience in replying to all the questions :), I also started OTG(Organic terrace garden) in my terrace, getting brinjals now, but my only concern is about seepage in the rooftop..right now lifted the bags with bricks, so that water can get dried easily. Please share your experience on this!!! Thanks,Mekala

  ReplyDelete
  Replies
  1. Water seepage is not a major issue as long as we water the plant carefully. As you said, keeping the bag over brick will make the water get dried easily. I don't think we need any water proofing as long as we water it with little care. I also do the same and recommended keeping over brick in few posts.

   Delete
 78. siva sir, vanakkam intha seesanuku enna chedikal valarkalam? konjam tips pl...

  ReplyDelete
  Replies
  1. நான் பொதுவாக எல்லா விதைகளையும் விதைப்பதுண்டு. கோஸ், காலி ஃப்ளவர், காரட் போன்றவைகளை தவிர்க்கலாம் (கோடை வெயிலுக்கு சரி வராது). தர்பூசணி, வெள்ளரி போன்ற கோடை பழங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

   Delete
 79. Enter your comment...thank u Siva sir

  ReplyDelete
 80. Siva sir can i get few Naattu white brinjal seeds from you.if so how?

  ReplyDelete
  Replies
  1. Please send a mail to me (thooddamsiva@gmail.com)

   Delete
 81. Hi Siva sir, my father is starting his first terrace garden. He saw ur blog and very much interested in the work u have done. As we are starting newly, we need guidance like what plants can be seeded in this month and coming months and we resident in Chennai. We are waiting for your reply sir. Thank u

  ReplyDelete
  Replies
  1. Hi, All the best for your new terrace garden. There are few charts available over internet as sowing chart. I haven't tried anything. Being the first garden, you can start with some basic vegetables like tomato, brinjal, chilli, avarai (Sedi), Vendai and spinach. Then you can expand with other plants

   Delete
 82. Hello sir..I'm Mahima from Salem.I came across numerous blog posts and articles regarding terrace gardening but none compares to the clarity that I got after reading your post! Thank you very much!

  ReplyDelete
  Replies
  1. Thanks for your nice comment. Hope you have started your garden with the information you have collected. Please mail me if you need any further details

   Delete
  2. Started today sir! I have been going through a lot of websites and articles and they get me really confused. Started with only coriander today. Thanks for your kind words! Hoping to learn a lot more.

   Delete
 83. hello siva...I am Anita from namakkal, working as associate professor biotech dept. I am also growing plants through terrace gardening. As you said .. after long trial its coming out gud. experience make things perfect.. Congrats for your effort in promoting organic cultivation..

  ReplyDelete
  Replies
  1. Thanks for the nice words madam. Good to hear about your gardening. You can share any good practice or suggestions also based on your experience.

   Delete
 84. Hi sir vanakam.unagaloda blog padichituthan naan thottam podave aarambichen.ippa thakkali keerai katthrikai mullangi ellam potiruken.chedinga nallave varuthu.aana pachai milakai mattum poo vaikupothu ilai ellam surundu poovellam kottiduthu.nalla gavanichapathan pulu irukarthu theriya vanthuchu.marunthu thelichathuku appuram paravailla.aana chedi rombavu vaadiduchu.panjakavya thelicha athu sari aaidumnu potirukaanga.atha pathi unga advice enna sir.

  ReplyDelete
  Replies
  1. Panjakavya-va pesticide maathiri ellam use panna mudiyathunnu nenaikkiren.. Neenga poochi marunthu entru solli irukkireerkal.. Athu enna entru solla mudiyumaa?

   Delete