Thursday, May 3, 2012

GO GREEN – வீட்டைச் சுற்றி


தோட்டம் பற்றி எழுதுவதற்கு முன் ஒரு சிறிய முன்னோட்டம். 

கோவையில் வீடு வாங்க தேடியபோது என்னுடைய ஒரே நிபந்தனை, வீட்டை சுற்றி நிறைய காலி இடம் இருக்க வேண்டும் என்பது தான். ‘அருமையான வீடு சார். யோசிக்காதீங்க சார். விட்டா கெடைக்காது என்று கிட்டத்தட்ட 10 வீடுகளை காட்டி வெறுத்து போன புரோக்கர் கூட்டம் ‘இவன நம்பி பிரயோஜனம் இல்ல என்று கலைய ஆரம்பித்தது.

கடைசியாக ஒரு நிலத்தை பார்க்கப் போய், ‘எதிரில் இருக்கும் வீடும் விலைக்கு இருக்கிறது. கட்டி மூன்று வருடம் தான் ஆகிறது. பார்க்கலாமா என்று பார்த்தது தான் இப்போது என் வீடு. வீட்டை சுற்றி நிறைய காலி இடம். உடனே பிடித்து விட்டது. அடுத்த நாளே பேசி ஒரே வாரத்தில் ஒப்பந்தமும் போட்டு முடித்து விட்டேன்.

வீட்டை சுற்றி பார்த்த போது மருந்துக்குக் கூட ஒரு புல்லை காணோம். ஒரே வறட்சி. இரண்டு தென்னை, ஒரு வேப்ப மரம், இப்பவோ அப்பவோ என்று காய்ந்து போய் ஒரு வாழை, மாதுளை மரம். இவ்வளவே. ஒரு வகையில் இதுவும் வசதியாக தான் இருந்தது. மாற்ற எந்த வேலையும் இல்லை. தோட்டத்தை நான் நினைத்த மாதிரி அமைக்க ஏதுவாக இருந்தது.

முதலில் உயிரே இல்லாத தோற்றத்தில் தரை. அப்புறம் எங்கே இருந்து புல் முளைக்க. சுற்றி இரண்டு அடி ஆழத்திற்கு இருந்த மண்ணை எடுத்து விட்டு, கிட்டத்தட்ட 5 லாரி லோடு செம்மண் (தோட்ட மண்) நிரப்பி, நானே ஒரு Layout தயார் செய்து செங்கல் வைத்து தேவைக்கேற்ப தோட்டம் தயார் செய்தேன். காய்ந்து போன நிலத்தை பசுமையாக ஆக்க கிட்டத்தட்ட 6 மாதம் பிடித்தது.  
 
‘அன்றும் இன்றும், ஒரு சின்ன ஒப்பீடு கீழே. வரும் பதிவுகளில் விளக்கமாக தோட்டம் பற்றி ஒவ்வொன்றாக எழுதுகிறேன்.


வீட்டிற்கு வெளியே ஒருபுறம் செம்பருத்தியும் ஒருபுறம் தங்க அரளியும் சிவப்பும் மஞ்சளுமாய் அழகாக.கேட்டில் இருந்து அதே அகலத்திற்க்கு ஒரு நடைபாதை அமைத்து விட்டு இடது பக்கம் தோட்டமாக மாற்றியது,

   
மேலிருந்து பார்க்கும் போது தோட்டத்தின் தோற்றம்,

 
நன்றாக வளர்ந்து காய்க்க தொடங்கி இருக்கும் தென்னை. வேம்புக்கு அருகில் தானாகவே வளர்ந்த கொய்யா மரமாக,


 வீட்டின் பின்புறம், துவை கல்லை இடம் மாற்றி விட்டு வைத்த எலுமிச்சை, பப்பாளி மற்றும் மாதுளை மரம். அருகில் கட்டிய வண்ண மீன் தொட்டியும்.
  இடைஞ்சல் இல்லாமல் இடம் மாற்றி வைத்த துவை கல். அருகில் உருவாக்கிய கறிவேப்பிலை மரம்    


 
வீட்டின் வலப்புறம் இருந்த வாழை, மாதுளையை அகற்றி விட்டு வைத்த பப்பாளி மற்றும் சப்போட்டா கன்றுகள்.
 

வீட்டின் பின்புறம். வாழை. இடப்புறம் சீத்தா பழ மரமும், வலப்புறம் கறிவேப்பிலை மரமும்,  


16 comments:

 1. Replies
  1. நன்றி ராமச்சந்திரன்.

   Delete
 2. அருமை!!!!!!

  நியூஸியின் தோட்ட நகரத்தில் இருந்து,

  துளசி

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசி மேடம். தோட்ட நகரமா. அப்போ நிறைய தோட்டம் சுற்றி இருக்கும்னு சொல்லுங்க.

   Delete
 3. நியூஸியின் கார்டன் சிட்டி நாங்க வசிக்கும் ஊர் கிறைஸ்ட்சர்ச். இங்கே வீடு கட்டணுமுன்னா நிலத்தில் 40 % வீடும் 60% தோட்டமும் கட்டாயம் இருக்கணும். இல்லேன்னா வீடு கட்ட பர்மிட் கிடைக்காது. தோட்டம் போடலைன்னாலும் சும்மா புல்லாவது போட்டு வைக்கணும்.

  நம்ம தெருவைப்பற்றி எழுதுனது இங்கே. நேரம் இருந்தால் பாருங்க.

  http://thulasidhalam.blogspot.com/2008/11/blog-post_16.html

  ReplyDelete
 4. அருமை..வாழ்த்துகள் உங்கள் முயற்சிக்கும் வலைச்சர அறிமுகத்திற்கும்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கிரேஸ். தொடர்ந்து வசித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

   Delete
 5. வலைச்சர அறிமுகம் பார்க்க
  http://blogintamil.blogspot.in/2014/07/blog-post_31.html?showComment=1406791286922#c8916501798108463299

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மேடம். அன்றே பார்த்து விட்டேன். பதில் அளிக்க தாமதம் ஆகிவிட்டது. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. இதன் மூலம் இரண்டு பேருக்கு எனது தோட்டம் பதிவுகள் பயன்பட்டால் சந்தோசமே.

   Delete
 6. சூப்பர் நண்பரே

  மிகவும் அருமை உள்ளது உங்கள் தோட்டம் ( blog கும்).

  ReplyDelete