Thursday, May 3, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – உருளைக்கிழங்கு (Potato)


ஒருநாள் கிச்சனில் இருந்த முளைத்த உருளைக்கிழக்கை எடுத்து என் பொண்ணு நம்ம தோட்டத்தில் வச்சி பார்கலாமாப்பா என்று கேட்டாள். உருளைக்கிழங்கு எல்லாம் இந்த இடத்தில் முளைக்குமா என்றே தெரியவில்லை. இருந்தாலும் உருளைக்கிழங்கு செடி எப்படி தான் இருக்கிறது என்று பார்த்து விடலாம் என்று ஒரு ½ inch ஆழத்தில் பதித்து வைத்தேன். ஒரு வாரத்தில் செடி வந்து விட்டது.


 
ரொம்ப செழிப்பாகவே வளர்ந்தது. எப்போ கிழங்கு வைக்கும், எப்போ எடுக்கலாம் என்று Google போய் தேடி பார்த்ததில், பூத்து, செடி ஓய்ந்து போகும் போது  பிடுங்கினால் சரியாக இருக்கும் என்று இருந்தது. செடியும் பூத்தது. 


 
ஓய்ந்து காய தொடங்கிய செடி,


 நிலத்திற்கு கீழே என்ன நடக்கிறது? கிழங்கு இருக்குமா இல்லை வெறும் செடிக்கு தான் இத்தனை மாதம் தண்ணீர் ஊற்றினோமா? எந்த ஐடியாவும் இல்லாமல், ஒரு ஆர்வத்தோடு ஒரு நாள் தோண்ட ஆரம்பித்தேன். கிழங்கு தெரியவும் எல்லோருக்கும் ஒரே சந்தோசம். முதலில் வைத்த கிழங்கு (seed), அழுகாமல் அப்படியே இருந்தது ஆச்சரியம். புதிதாக ஒரு பெரிய கிழங்கும், ரொம்ப சின்னதாக மூன்றும் இருந்தது. இன்னும் கொஞ்சம் raised bed அமைத்து நிறைய Mulch கலந்த மண்ணில் பயிரிட்டால் கிழங்கு இன்னும் நன்றாக வரும் என்று நினைக்கிறேன்



7 comments:

  1. சூப்பர் சார். நீங்கள் முளைவிட்ட உருளைக்கிழங்கினை அப்படியே விதைத்தீர்களா அல்லது துண்டுகளாக வெட்டி விதைத்தீர்களா. அருமையாக வளர்ந்திருக்கிறது வாழ்த்துக்கள்

    நாகு
    www.tngovernmentjobs.in

    ReplyDelete
  2. ஹாய் நாகு. உருளைக்கிழங்கை அப்படியே முழுதாக வைத்து விட்டேன். வெட்டியும் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.தங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வெட்டி வச்சீங்கன்னா நல்லா வரும். ஒரு கிழங்கை ரெண்டு மூணு துண்டு போடலாம். ஒரு துண்டில் ரெண்டு கண்ணாவது வர்ற மாதிரி பார்த்துக்குங்க•. ஒரு நாள் சும்மா காத்துல காயவிட்டு சின்ன‍ லேயர் வந்த பிறகு நட்டீங்கன்னா இன்னும் நல்லா வருது..

      Delete
  3. உருளை கிழங்குச் செடி இப்பொழுது தான் பார்க்கிறேன், அறியத் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  4. நம்ம தோட்டத்தில் வீசி எறிந்த பழைய உருளைக்கிழங்குகள் கூட அருமையாக முளைச்சுருது.

    அப்பப்ப சொந்த அறுவடைதான்:-)))))

    ReplyDelete
    Replies
    1. துளசி மேடம். அப்படியா. சொந்த அறுவடை என்றால் சூப்பர் தான். படங்கள் இருந்தால் பதிவிடலாமே..

      Delete