Saturday, February 7, 2015

மாடித் தோட்டம் – அடிப்படை காய்கறிகள்



இதுவரை மாடியில் கீரை, முள்ளங்கி போன்ற எளிதான காய்கறிகள் தான் வைத்திருக்கிறேன். முக்கிய காய்கறிகளான தக்காளி, கத்தரி, மிளகாய் எல்லாம் மாடியில் முயற்சித்ததில்லை. கீழே தரையில் தான் வளர்த்திருக்கிறேன்.  

இந்த முறை முதன் முறையாக எல்லாவற்றையும் மாடி தோட்டத்திற்கு மாற்றினேன். இதில் முக்கியமாக நான் கவனிக்க நினைத்த விஷயம், நம் வழக்கமான Coir Pith Media எப்படி இந்த செடிகளுக்கு ஊட்டச்சத்து தேவைகளை கொடுக்கிறது என்பது தான். கண்டிப்பாய் சில சவால்கள் வரும் என்று எதிர்பார்த்தேன். ஏனென்றால், கீரைகளை பொறுத்த வரை கொஞ்சம் சத்து இருந்தாலும் வரும். ஆனால் தக்காளி, கத்தரி எல்லாம் பெரிய செடி, நிறைய காய் பிடிக்கும் என்பதால் நிறைய சத்து தேவை படும்.

முன்பு ஒரு முறை தக்காளி ஓன்று தானாய் முளைத்து மாடியில் Grow Bag-ல் வளர்ந்த போது சரியாய் வரவில்லை. இலைகள் ரொம்ப வறட்சியாய், நிறைய பூத்தாலும் காய்கள் எல்லாம் ரொம்ப சிறிதாக, நீர் சத்தே இல்லாமல் வந்தது. தேவையான ஊட்டச்சத்து ஏதோ சுத்தமாக கிடைக்கவில்லை என்று தெளிவாக தெரிந்தது

இந்த முறை, நாற்று எடுத்து நட்ட பிறகு செடிகள் எல்லாம் ரொம்பவே செழிப்பாக வந்தது. பிஞ்சி பிடித்த பருவத்தில் இருந்து தக்காளியும், கத்தரியும் கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பித்தது. மிளகாய் எந்த பிரச்னையும் இல்லமால் ரொம்ப செழிப்பாக வந்து கொண்டிருந்தது. நாம் வெறும் மண்புழு உரம் மட்டும் வைத்து மீடியா தயாரிக்கும் போது தக்காளி காய்க்கும் பருவத்தில் கொஞ்சம் திணறுகிறது. சில சத்துக்கள் அதற்கு கிடைப்பதில்லை.

ஒரு சோதனை முயற்சியாக காய்கறி கழிவுகளில் இருந்து தயாரித்த உரத்தை ஒரே ஒரு தக்காளி செடிக்கு மட்டும் போட்டு காய்ப்பதில் ஏதும் வித்தியாசம் வருகிறதா என்று பார்த்தேன். ரொம்பவே ஒரு மாற்றம் தெரிந்தது. மற்ற செடிகளில் காய்கள் சிறுத்து போன போது, இந்த ஒரு செடி மட்டும் நல்ல தரமான அளவில் காய்த்தது. அதே உரத்தை எல்லா கத்தரி செடிக்கும் போட்டு விட்டிருந்தேன். அவைகளும் நன்றாக காய்த்திருந்தது.  கூடுதலாக இரண்டு வாரத்திருக்கு ஒரு முறை பஞ்சகாவ்யாவும் தெளித்து வந்தேன்.

மொத்த விளைச்சல் என்று பார்த்தால், மிளகாய் தரையில் காய்ப்பதை விட மாடியில் காய்த்து கொட்டி விட்டது என்றே சொல்லலாம். ஒரு அறுவடையில் ஒரு செடியில் இருந்து மட்டும் அரை கிலோ மிளகாய் பறித்தோம். இன்னும் காய்த்துக் கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு முறையும் எப்படியும் கிலோ கணக்கில் பறிக்கும் படி ஆகி விட்டது (கொஞ்சம் செடி எண்ணிக்கை அதிகமாகி விட்டது).

கத்தரி, நல்ல விளைச்சல். கத்தரி தரையில் வைக்கும் போது நீண்ட காலம் காய்த்துக் கொண்டிருக்கும். ஆனால் மாடியில் நீண்ட காலம் அதே அளவு செழிப்பாக நிற்குமா என்பது சந்தேகமே. Growing Media-வில் இன்னும் கொஞ்சம் சத்து இருக்கும் படி பார்த்துக் கொண்டால் தாக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

தக்காளி, கொஞ்சம் திணற தான் செய்கிறது. இன்னும் நிறைய சத்து தேவை படுகிறது. பூத்து, பிஞ்சி பிடிப்பதில் எல்லாம் பிரச்னை வருவதில்லை. காயின் திரட்சி தான் குறைவாக போய் விடுகிறது. ஆர்கானிக் முறையில் போகும் போது, உர மேலாண்மையில் இன்னும் நிறைய கவனம் தேவை படுகிறது.

இந்த செடிகள் காய்த்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த தக்காளி தோட்டத்தை மாடியில் ஆரம்பித்து விட்டேன். Baby Corn வைத்த அதே செமெண்ட் தொட்டியில். இந்த முறை காய்கறி கழிவில் தயாரித்த உரம் நிறைய சேர்த்திருக்கிறேன். நன்றாகவே வந்து கொண்டிருக்கிறது.
















காய்கறி கழிவு உரம் போட்டும் போடாமலும் வந்த காய்களின் வித்தியாசங்கள்,

With Compost Added

Without Compost
மாடியில் வைத்த பிறகு மிஞ்சிய சில தக்காளி நாற்றுகளை கீழே தரையில் வைத்து விட்டிருந்தேன். தரையில் வைக்கும் போது நமக்கு எந்த கவலையும் இல்லை. அதுபாட்டுக்கு காய்த்து கொட்டும். படத்தை பார்த்தால் தெரியும்,





இப்போது மாடியில் வைத்திருக்கும் தக்காளி,



  









27 comments:

  1. பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. செய்து பார்க்கத்தூண்டி விட்டிர்கள் நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி. நீங்களும் முயற்சித்து பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

      Delete
  2. அருமை. என்னுடைய மாடி தோட்டத்திலும் தக்காளி காய் பிடித்தாலும் சுணங்கித்தான் போகிறது.காய்கறி கழிவுகள் எல்லா செடிக்கும் போடுவதால் அதனால் எவ்வளவு பயன் என்பதை அளவிட முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. காய்கறி கழிவுகளை அப்படியே போட்டால் ஏதும் பலன் கிடைக்குமா என்று தெரியவில்லை. நான் குறிப்பிட்டிருப்பது அதை மக்க வைத்து உரமாக்கி பின் செடிகளுக்கு போடுவது.

      Delete
  3. அருமை ! இங்கே குளிர் இன்னும் மார்ச் வரை இருக்கும் .ஏப்ரலில் களத்தில் இறங்குவேன் .
    நானும் grow bag இல்தான் போன வருடம் தக்காளி நட்டேன் ..நிறைய காய்த்து வந்தது

    ReplyDelete
    Replies
    1. இந்த ஏப்ரலில் என்ன என்ன பயிரிட திட்டம். பட்டியல் இருந்தால் சொல்லுங்கள். நானும் எதாவது அதில் இருந்து முயற்சிக்கிறேன். நானும் மே மாதத்தில் அடுத்த பருவம் ஆரம்பிபேன் என்று நினைக்கிறேன்.

      Delete
  4. வா..வ் சூப்பர் சிவா. தக்காளி,மிளகாய் கத்தரி ரெம்ப நல்லா வந்திருக்கு. கொஞ்சம் அனுப்பிவைங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ப்ரியா. அனுப்பி வச்சிடலாம் ப்ரியா. 'சிவா கார்டன் எக்ஸ்போர்ட்' என்று ஆரம்பிச்சிடலாம் :-)

      Delete
  5. சிவா பார்க்கவே என்ன ஒரு பசுமையான காய்கறி, உங்க தோட்டத்தை ரொம்ப மிஸ் பண்றேன். தக்காளி,கத்திரிக்காய் , பச்ச மிளகாய் அனைத்தும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜேஷ். ஒரு நாள் கண்டிப்பா தோட்டம் பக்கம் வாங்க :-)

      Delete
  6. அருமையான‌ படங்களுடன் அருமையான‌ விளக்கம்! வாழ்த்துக்கள்!
    நீங்கள் சொல்லியிருப்பது போல‌ மிளகாய் நன்றாக‌ காய்த்துக் கொட்டியிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம்.
      மிளகாய் இன்னும் காய்த்துக் கொண்டிருக்கிறது. அடுத்த முறை கொஞ்சம் குறைவான செடிகள் தான் போட வேண்டும் :-)

      Delete
  7. அனைத்து செடிகளும் அருமை அண்ணா , எந்ததெந்த மாதத்தில் எந்த செடி நடவு செய்ய வேண்டும் என்று சிறு குறிப்பு தாருங்கள் அண்ணா உதவியாய் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஷர்மிளா.

      இன்னும் பருவம் பார்த்து என்ன என்ன காய்கறிகள் பயிரிடலாம் என்று ஆரம்பிக்க வில்லை. பொதுவாய் ஆங்கில காய்கறிகள் மட்டும் ஜூன்-ஜூலை மாதத்தில் போடுவதுண்டு (குளிர் காலத்தில் சரியாக விளைச்சல் வரும்படி இருக்கும்). அதை கோடையில் பயிரிட முடியாது. மற்ற படி, மற்ற காய்கறிகளை நான் பெரிதாய் திட்டமிட்டு பயிரிடுவதில்லை. ஜூலையில் ஒரு பருவமும், ஜனவரி-யில் ஒரு பருவமும் ஆரம்பிக்கலாம் (ஆடி, தை பட்டம்) . எந்ததெந்த மாதத்தில் எந்த செடி நடவு செய்ய வேண்டும் என்று விவரம் கொண்ட ஒரு பட்டியல் இருக்கிறது. ஆனால் அதன் படி முயற்சிக்க வில்லை. முடிந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

      Delete
  8. அழகிய மாடித்தோட்டம்.

    ReplyDelete
  9. உங்களைப்பார்த்து எனக்கும் ஆசை தொற்றிக்கொண்டது. நானும் கத்தரி மிளகாய் சாக்கில் பயிர் வைக்கத்தொடங்கியுள்ளேன், நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சந்தோசம். நல்ல விளைச்சல் எடுக்க வாழ்த்துகள். செடிகள் எப்படி வருகின்றன என்பதை கூறுங்கள். நன்றி.

      Delete
  10. வாவ் சூப்பர்

    ReplyDelete
  11. காய்கறி கழிவு உரம் என்பதும் கடைகளில் கிடைக்குதா? இல்லை வீட்டில் செய்தீர்களா?

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் செய்வது தான். இந்த பதிவை பாருங்கள்.

      http://thooddam.blogspot.in/2014/11/blog-post.html

      Delete
  12. Hi Siva,
    Please tell us How to Prepare the Manure with Vegetable waste.

    Thanks,
    Veeramani M.

    ReplyDelete
  13. Hi Veeramani,

    Please check the below post

    http://thooddam.blogspot.in/2014/11/blog-post.html

    Thanks,
    Siva

    ReplyDelete
  14. Hi,

    Your blog is very useful and helpful for all garden lovers.


    Thank you,
    Sudha

    ReplyDelete