நண்பர்கள் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த 2015 நம் எல்லோருக்கும் இனிதாய் அமையட்டும். இந்த 2015-ல் தோட்டத்தில் நிறைய முயற்சிக்க நினைத்திருக்கிறேன். தோட்டம் பற்றி
நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் (முக்கியமாக பூச்சி கட்டுப்படுத்துதல்), அப்புறம்
எனது கனவு மாடித் தோட்டம் அமைப்பது இப்படி நிறைய.
இந்த வருடத்தின் முதல் பதிவாய், சின்னதாய் ஒரு அறிவிப்பு. அதற்கு
முன், பொதுவாய் இணையத்தில் ஒருவர் அறிமுகம் ஆகும் போது எப்படி அழைப்பது என்று ஒரு
தயக்கம் இருக்கும். என்னை சிலர் ‘சார்’ என்கிறார்கள், சிலர் ‘ஐயா’ என்று கூறி கலங்க வைக்கிறார்கள் J. சரி, என்னை பற்றி சின்னதாய் ஒரு அறிமுகம் செய்து கொண்டால் நன்றாக
இருக்கும் என்று நினைத்தேன். நண்பர்களும் ‘நண்பரே’ ‘அண்ணா’ ‘தம்பி சிவா’ என்று அழைக்க வசதியா இருக்கும் என்று நினைக்கிறேன் J
என்னை பற்றி சொல்லவேண்டும் என்றால், சொந்த ஊர் திருநேல்வேலி அருகில்
திசையன்விளை. வளர்ந்தது, பள்ளி படிப்பு எல்லாம் திருச்செந்தூர் அருகில் நாசரேத்தில். பொறியியல்
படிப்பு சென்னையில் (MIT,
Chrompet). பிறந்த வருடம் 1976 (வயது 38). வேலை, இங்கே கோவையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில். கடந்த பதினான்கு வருடமாக சாப்ட்வேர் துறையில் தான். முதலில்
சென்னையில் வேலை, பிறகு ஒரு ஐந்து வருடம் அமெரிக்காவில் (Minneapolis, 2001 – 2005) , பிறகு சென்னை. தற்போது கோவையில் செட்டில்.
நிறைய நண்பர்கள் மெயில் மூலமாக தொடர்பு கொண்டு தோட்டம் பற்றி விவரம்
கேட்கிறார்கள், சந்தேகங்கள் கேட்கிறார்கள். என்னால் முடிந்த, தெரிந்த தகவல்கள்
பகிர்ந்து கொள்கிறேன். ரொம்ப முக்கியமாக நண்பர்களிடம் இருந்து நிறைய தகவல்களும்,
உதவிகளும் எனக்கும் கிடைக்கிறது. இந்த பகிர்தல் எனது தோட்ட ஆர்வத்தை அடுத்த
கட்டத்திற்கு எடுத்து சென்றிருக்கிறது.
எல்லோருமே வீட்டு தோட்டத்தை ஒரு பொழுது போக்காக தான் செய்கிறோம். நமது
வழக்கமான அலுவலக வேலைகள், குடும்ப நேரங்கள் போக கிடைக்கும் நேரத்தில்
தோட்டத்திற்கு நேரம் செலவிடுகிறோம். அப்படி நேரம் ஒதுக்க ஒரு சில பேரால் மட்டுமே
இப்போது முடிகிறது. அப்படி ஆர்வம் உள்ள நண்பர்கள் வட்டம் இந்த ப்ளாக் மூலம்
கிடைத்திருப்பது ரொம்பவே சந்தோசமான விஷயம்.
நான் இணையத்தில் செலவழிக்கும் நேரம் ரொம்பவே குறைவு. அவ்வளவாய் நேரம்
கிடைப்பதில்லை. நிறைய நண்பர்கள் மடலில் சில விவரங்கள் கேட்கிறார்கள். சிலர்
கமென்ட் போடும் போதே தங்களது மொபைல் நம்பர் கொடுத்து விடுகிறார்கள். நான் பொதுவாய்
அந்த கமென்டுகளை Publish செய்வதில்லை (அவர்களது Privacy கருதி).
தனியாக ஒரு மடல் அனுப்பி கொள்வேன். நிறைய நேரங்களில் அப்படி நம்பர் கொடுக்கும்
நண்பர்களை உடனே அழைத்தும் பேச முடிவதில்லை.
இந்த வருடத்தில் இருந்து நம்முடைய தோட்டம் பற்றிய பகிர்தலை கொஞ்சம் streamline பண்ணலாம் என்று தனியாக ஒரு மொபைல் நம்பரும் (809 823 2857), மெயில் ஐடி
(thooddamsiva@gmail.com) ஒன்றும்
கொடுத்திருக்கிறேன். நண்பர்களிடம் பேச இது உதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த எண்ணில் ஞாயிறு மட்டும் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை இருப்பேன் (கொஞ்சம்
Time Management. அவ்வளவே). தோட்டம் பற்றி பேசவேண்டும் என்றால் அழையுங்கள். நிறைய பேசலாம்.
அன்புடன்,
சிவா
சுருக்கமான அறிமுகம் எனினும்
ReplyDeleteமிகச் சரியாக உங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது
உங்கள் தொடர்பு நிச்சயம் அனைவருக்கும்
நல்ல பயன் தரும்
வாழ்த்துக்களுடன் ,......
மிக்க நன்றி ரமணி சார்
Deleteசிவா இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், மனதார பாராட்டுகிறேன் உங்களின் புதிய முயற்சிக்கு. எனக்கும் மாடி தோட்டத்தின் மீது மிகுந்த ஆர்வம், தயவு செய்து இந்த புத்தாண்டில் வெற்றிகரமாக தொடங்குங்கள் எங்களின் அனைவரின் வாழ்த்தும் உங்களக்கு உண்டு. வீடு தோட்டம் என்பது வெறும் மணமகிழ்ச்சி மட்டும் இல்லாமல் , நம் குடும்பத்தின் அனைவரின் ஆரோக்கியமும் தான்.
ReplyDeleteவீட்டு தோட்டத்தின் மூலம் நல்ல சத்தான இயற்கை உரத்தின் மூலம், நல்ல முறையில் காய்கறி கிடைக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் முற்றிலும் தேவையானது.
சிவா உங்கள் தோட்டத்தை,முடிந்தால் வீடியோ பதிவிடுங்கள்.
வாழ்த்துக்கள்.
ராஜேஷ்
நன்றி ராஜேஷ். நீங்கள் தோட்டம் பற்றி சொல்லி இருப்பது உண்மை தான். அதை முழுமையாக செய்ய முடியுமா என்பதும் எனது நோக்கங்களில் ஓன்று.
Deleteவீடியோ பதிவு பற்றி கூறி இருப்பது நல்ல யோசனை. பார்க்கிறேன்.
Happy new year sir, All the best for your initiatives, noted the number and email ID, Thank u , happy gardening
ReplyDeleteThanks Madam. All support from friends like you are encouraging me to do more. The native seed you shared with me, the tomato started flowering, the brinjal (green) also coming good. Will mail the photos.
Deleteநல்லதொரு பயனுள்ள செயல். வாழ்த்துக்கள் சிவா.
ReplyDeleteநன்றி ப்ரியா.
Deletesuper idea anna ....all the best...learnt a lot from you..happy new year anna...
ReplyDeleteThanks da thambi. Hope your flower garden has come good. Send me the updates.
Deleteவாழ்த்துக்கள் ..அருமையான தகவல்கள் பகிர்கிறீர்கள் .நிறைய கற்றுக்கொண்டேன் உங்க பதிவுகள் மூலம்
ReplyDeleteநன்றி மேடம்.
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி
Deleteஉங்களுடைய பதிவுகளால் தான் நானும் என் தோழியும் மாடித்தோட்டத்தில் ஆர்வம் கொண்டோம். மிக்க நன்றி சிவா.
ReplyDeleteநன்றி மேடம். இதை அறிந்ததில் ரொம்ப சந்தோசம். தொடர்ந்து எனது பதிவுகளை வாசித்து கருத்துக்களை பகிர்வதற்கு நன்றி.
Deleteநண்பரே சிவா,
ReplyDeleteஉங்கள் பதிவுகள் மிக அருமை & உபயோகமானவை . சில நேரங்களில் பூச்சிகளின் தொல்லைகள் கலங்கடிகின்றன.
எனது பெயர் மாதவன் & பிறந்த வருடம் 1976 (வயது 38) . அதனால் உங்களை சிவா என்றழைத்தால் தவறில்லை என்று நினைக்கிறேன். தமிழில் டைப் செய்ய ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. அதனால் முடித்துக் கொள்கிறேன்.
நன்றி மாதவன். நானும் 1976 தான் :-)
Delete//சில நேரங்களில் பூச்சிகளின் தொல்லைகள் கலங்கடிகின்றன.// நாம் ஆர்கானிக் வழியில் கட்டுபடுத்த சில நேரம் கடினமாக தான் இருக்கிறது. அதற்காக எதாவது ரசாயன பூச்சிக் கொல்லியை தெளித்து விடவேண்டாம். மெதுவா நாமும் இதை கற்று கொண்டு சரி பண்ணிடலாம்.