Friday, January 9, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் - குடை மிளகாய்

தோட்டத்தில் இருந்து 2015-ன் முதல் காய்கறி வெளியே வருகிறது.  

போன சீசனில் சரியாக வராத செடிகள் சிலவற்றை இந்த சீசனில் சில மாற்றங்கள் செய்து வெற்றிகரமாக கொண்டு வர முடிந்தது. அதில் குடை மிளகாயும் ஓன்று. போன சீசனில் முதன் முதலாய் முயற்சித்த குடை மிளகாய் (பச்சை நிறம்) செம சொதப்பல். தரையில் வைத்த செடி ஏதோ சத்து குறைவாலோ, நோய் தாக்குதலாலோ சரியாக வளரவே இல்லை. செடி சின்னதாக இருக்கும் போதே சரியான வளர்ச்சி இல்லாமல் நரங்கி போய் விட்டது. அதே பாத்தியில் வைத்த கத்தரி, மிளகாய் நன்றாக வந்தது. கடைசியில் ஒரே ஒரு குடை மிளகாய் தான் கிடைத்தது. அதை படம் வேறு எடுத்து கொண்டேன். நமது தோட்டத்தின் முதல் குடை மிளகாவாயிச்சே J. ஆனால் அதை வைத்து ‘என் வீட்டு தோட்டத்தில் எல்லாம் எழுத முடியாது என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்.

Yield from Last season

Yield from Last season

இந்த முறை சிறு மாற்றம் செய்யலாம் என்று அப்படியே மாடி தோட்டத்திற்கு மாற்றினேன். வழக்கமான Coir Pith மீடியா தான்.

விதைகள் அதே BioCarve விதைகள். இந்த முறை பச்சை நிறம் கூட சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கூடுதலாக. சிவப்பு, மஞ்சள் நிற விதைகள் இங்கே கோவையில் ஒரு கண்காட்சியில் வாங்கி இருந்தேன் (போன July 2014 Agri Intex-ல்). பச்சை நிறம் போன முறை சொதப்பிய அதே விதைகள் தான். பொதுவாய் BioCarve விதைகளின் முளைப்பு திறன் ரொம்பவே குறைவாகவே இருக்கிறது. பத்து விதைகள் போட்டால் மூன்று - நான்கு தான் முளைக்கிறது. ஆனால் வரும் செடிகள் நன்றாக விளைச்சல் கொடுக்கிறது.

மூன்று பாக்கெட்டுகளில் இருந்து மொத்தமாய் முப்பது விதைகள் போட்டதில் ஒரு பத்து செடிகள் தான் வந்தது. ஒவ்வொன்றையும் தனி தனி Grow Bag-ல் மாற்றி விட்டேன். இந்த முறை இந்த செடிகளுக்கு தனி கவனம் எடுத்து ( சரியான இடைவெளிகளில் மண்புழு உரம் வைப்பது, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பஞ்சகாவ்யா தெளிப்பது என்று) பார்த்து கொண்டேன். இன்னும் கூடுதலாக நான் கிச்சன் கழிவில் இருந்து தயாரித்த உரம் (போன ‘Make your own Compost’ பதிவில் காட்டி இருந்த உரம்) நிறைய இந்த செடிகளுக்கு தான் போனது.

செடிகள் ரொம்பவே செழிப்பாக வளர்ந்தது. பொதுவாய் குடை மிளகாய் செடி ஓன்று ஐந்தில் இருந்து பத்து மிளகாய் வரை கொடுக்குமாம். எல்லா செடியிலும் ஐந்து காய்கள் வந்தது. காய் ஒவ்வொன்றும் நல்ல திரட்சியாக இருந்தது. முதல் அறுவடையில் மொத்தம் நான்கு மிளகாய் (பச்சை) பறித்ததில் மொத்தம் 600 கிராம் இருந்தது (ஒவ்வொன்றும் 150 கிராம்). 

















பச்சை நிறம் தவிர சிவப்பு, மஞ்சள் நிறம் வந்தால் நன்றாக இருக்குமே என்று இருந்தது. நான் இரண்டு செடிகள் ஒட்டி வைத்த பையில் மஞ்சள் நிறம் (ஆரஞ்சு கலந்த மஞ்சள்) வந்தது. பச்சை நிற மிளகாய்க்கும் மஞ்சள் நிற மிளகாய்க்கும் வடிவத்தில் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. மஞ்சள் நிறம் கொஞ்சம் தட்டையாக இருந்தது. குடை மிளகாய் எல்லாமே பெரிதாகும் வரை பச்சை நிறத்தில் தான் இருக்கிறது. காய் திரட்சியான பிறகு தான் நிறம் மாற தொடங்குகிறது. முழுவதும் நிறம் மாறிய பிறகு அந்த மஞ்சள்-ஆரஞ்சு குடை மிளகாய் அழகோ அழகு. வளைத்து வளைத்து போட்டோ எடுத்தாச்சு.







காய்கறிகளில் குடைமிளகாய் நிறைய வண்ணங்களில் வருகிறது. பச்சை, சிவப்பு, மஞ்சள் தவிர, ஊதா மற்றும் வெள்ளை நிறம் கூட இருக்கிறது. எல்லாம் போட்டு விட்டால் தோட்டம் பூவே இல்லாமல் கலர்புல்லா ஆகி விடும். போன Horti Intex-ல் எல்லா கலரும் கலந்த Omaxe விதை பாக்கெட் ஓன்று இன்னும் திறக்காமல் வைத்திருக்கிறேன். அடுத்த சீசனில் போடலாம் என்று வைத்திருக்கிறேன். 
  
மொத்தத்தில் வருட தொடக்கத்தில் சொதப்பிதை வருட இறுதியில் வெற்றிகரமாய் கொண்டு வந்தாச்சு. செடி எளிதாகவே வருகிறது. பெரிதாய் ஏதும் நோய் தாக்குதல் இல்லை. ஒரு சில செடிகளில் குருத்து மற்றும் இலைகளில் சின்ன சின்னதாய் Mealy bug மாதிரி பூச்சிகள் வந்தன (Below Photo). லேசாய் நீர் விடும் போது கைகளால் அகற்றி, நீரில் வேப்பெண்ணை கலந்து அடித்து விட்டேன். சரி ஆகி விட்டது. 


இந்த செடிகளுக்கு கொஞ்சம் சத்து நிறைய தேவை படும். போதிய இடைவெளிகளை உரம் இட வேண்டும். விதைத்து மூன்று மாதத்தில் அறுவடை செய்யலாம். இன்னும் நான்கு செடிகளில் காய் நிறம் கொடுக்கவில்லை. சிவப்பு மிளகாய் ஏதும் வருகிறதா என்று பார்க்கலாம்.



21 comments:

  1. படங்கள் பார்த்தாலே மனதிற்கு அவ்வளவு சந்தோசம்...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வண்ண வண்ண குடை மிளகாய் ...அழகு

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மேடம். இன்னும் கூட புதிய வண்ணங்கள் சேர்க்கலாம் :-)

      Delete
  3. எங்கள் கைகளாலேயே செடிகளை வைத்து பூ ,காய்,கனி என்று வருவதை
    பார்க்கும் சந்தோசமே தனிதான் ,என்ன செய்வது இங்கு முன்று மாதங்கள்
    தான் வெளியில் தோட்டம் வைக்கமுடியும் .எனது மனைவி சில செடிகள் ம்,மரங்களை வீட்டிற்குள் வைத்திருக்கிறார்.அதை பார்த்து ஆறுதல் பட வேண்டியதுதான் .
    உங்கள் பதிவுகளை அடிக்கடி நான் பார்ப்பேன் .படங்களை பார்க்கப்பார்க்க ஆசையாய் இருக்கிறது .தொடர்ந்து பதிவிடுங்கள்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கரிகாலன்.

      உண்மை தான், சின்னதாய் ஒரு கீரை என்றாலும், நம் வீட்டில், ரசாயனம் இல்லாமல் வளர்த்து சாப்பிடுவது என்றால் ஒரு தனி சந்தோசம் தான்.
      இந்தியாவுக்கு வெளியே நிலைமை இது தான். நானும் பார்த்திருக்கிறேன். நமக்கு இங்கே வருடம் முழுவதும் செடிகள் வளர்ப்பதும், விவசாயம் பார்க்க முடியும் என்பதும் கொடுத்து வைத்த விஷயம் தான்.

      Delete
  4. பொருமை கொண்டால் வெற்றிதான்...

    அழகிய முயற்சி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. வாவ் !அருமையான விளைச்சல் ..நானும் 2013தரையில் போட்ட எதுவும் சோளம் தவிர விளைச்சல் தரல்ல ஆணா 2014 சம்மரில் உருளை காரட் பட்டாணி தக்காளி எல்லாம் பழய லஷ்மி பிராண்ட் அறி கோணி /கண்டேய்ன்ர்னு போட்டதில் நல்ல அறுவடை ....உங்க தோட்ட பதிவகள் பார்க்க அவ்ளோ சந்தோஷம்

    ReplyDelete
    Replies
    1. உருளை எல்லாம் விளைச்சல் எடுத்தீங்களா.. சூப்பர். படம் ஏதும் போட்டிருந்தால் லிங்க் கொடுங்க பார்கிறேன். கோணி பை எல்லாம் வைத்து செலவு குறைவாகவே செய்வது நல்ல ஐடியா.

      Delete
  6. வாவ் சூப்பர் சிவா.பார்க்கவே அழகா இருக்கு.இங்கு குடமிளகாய் ஈசின்னு சொல்வாங்க பார்ப்போம். அழகாக வேறு படம் எடுத்து போட்டிருக்கிறீங்க. best wishes. thanks.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ப்ரியா

      ஆமாம். எளிது தான். உங்களுக்கு க்ளைமேட் ஒத்து வந்தால் முயற்சி செய்து பாருங்கள். :-)

      Delete
  7. Siva superb, very nice and colourful. I want to see your garden. I hope you enjoyed with ur bellpepper.

    I will send some videos link to your mail, Kerala people are doing very excellent terrace gardening. They grown orange tree,Lemon,Banana unbelievable.

    We also enjoyed.

    ReplyDelete
    Replies
    1. Thank you Rajesh.

      Yes. We made lot of recipes from capsicum. Lot more to come as I still have few more plants to give the yield :-)

      Please share the link. Will be helpful for me. I saw one video (Kerala) and got surprise how they changed the terrace. I too wanted to create similar one here at my home :-)

      Delete
  8. சிவா, இந்தச் சுட்டியில் பாருங்க. கேரளாவில் ஒரு மாடிவீட்டில்....

    http://youtu.be/FWrz8udqgq8

    அப்புறம் சமீபத்தில் வந்த மலையாளப்படம்

    How old are you?

    இதில் மாடித் தோட்டம் வச்சு கல்யாண விருந்துக்கே காய்கறி சப்ளை செய்வாங்க கதாநாயகி:-)

    ReplyDelete
    Replies
    1. நன்றி டீச்சர். பார்த்துட்டு சொல்றேன்.

      //இதில் மாடித் தோட்டம் வச்சு கல்யாண விருந்துக்கே காய்கறி சப்ளை செய்வாங்க கதாநாயகி// நல்லா இருக்கே. அவங்க மாடியிலேயே மா, பலா எல்லாம் வளர்க்கறாங்க..செய்தாலும் செய்வாங்க.. :-)

      Delete
  9. நன்றி நண்பரே. வந்து கூறியதற்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  10. பீன்ஸ் வகை கறி பீன்ஸ் என்பார்கள். வெஜ்.பிரியாணி செய்யும் போது இதை போட்டால் சூப்பராக இருக்கும்

    ReplyDelete