Wednesday, December 24, 2014

தோட்டத்து விருந்தாளிகள்

தோட்டத்தில் விதை போடுகிறோம், செடி வளர்க்கிறோம். அறுவடை செய்கிறோம். அதை சமைத்து சாப்பிடும் போது ஒரு பெரிய சந்தோசம். அதிகமாய் வரும் போது அதை சொந்த பந்தங்களுக்கு கொடுக்கிறோம். அதிலும் ஒரு சந்தோசம். அதையும் தாண்டி இவ்வளவு பசுமையாய் செடியும் மரங்களுமாய் உருவாக்கிய இடத்தில் சில பறவைகளுக்கும், அணில்களுக்கும் கொஞ்சம் இடமும் உணவும் கொடுத்தால் இன்னும் சந்தோசம் தானே.

விவசாயம் என்பதே பிற உயிர்களுக்கும் உணவளிப்பதாக இருக்க வேண்டும் என்று மறைந்த நம்மாழ்வார் ஐயா கூறுவார். இயற்கையின் அமைப்பு அப்படித்  தான் இருந்தது. நாம் ரசாயன உரங்களை அள்ளிப் போட்டு நிலத்தில் இருக்கும் நுண்ணுயிர்கள், மண்புழு என்று அத்தனை உயிர்களையும் அழித்தோம். பிறகு பூச்சிக் கொல்லி என்ற பெயரில் அத்தனை விஷத்தையும் தெளித்து அதை கொஞ்சம் சாப்பிட்டு கொண்டு அலைந்த பறவைகளையும் அழித்து, நாமும் அழிந்து கொண்டிருக்கிறோம். இப்படி தான் நமது விவசாயம் போய் கொண்டிருக்கிறது.

தோட்டம் ஆரம்பிக்கும் போதே சின்னதாய் அணில்களுக்கு ஒரு தட்டு செய்து அதில் கொஞ்சம் சூரியகாந்தி விதைகள் போட்டு வைத்த போது நிறைய அணில்கள் வந்து போவதை தொடக்கத்தில் இங்கே எழுதி இருந்தேன்.




பிறகு நிறைய பறவைகளும் வருவதை பார்த்து அவைகளுக்கு என்று நிரந்தரமாய் ஒரு வீடு ஒன்றை கட்டினேன். வீட்டை சுற்றி வளர்ந்த புல்லை வெட்டி கூரை எல்லாம் வேய்ந்து ஒரு வீடு. அதில் அவைகள் குடிக்கவும், நீந்தி விளையாடவும் சில தண்ணீர் தொட்டிகள் (Plastic Trays). அணிகளுக்கு சூரியகாந்தி விதை கிண்ணம், பறவைகளுக்கு பழங்கள் வைக்க தட்டு என்று அமைத்தேன். நிறைய அணில்களும், பறவைகளும் வர ரெகுலராக ஆரம்பித்தது. அவைகள் நான் வைத்திருக்கும் தண்ணீரில் குளித்து கும்மாளம் போடும் அழகே தனி. இதை எல்லாம் ஒரு ஓரமாய் அமர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கலாம். மனதுக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கும்.















எங்க வீட்டை சுற்றி எப்பவுமே அராஜகம் செய்துகொண்டு சுற்றும் ஒரு பறவை கூட்டம் பூணில் (இந்த பறவையை நீங்கள் எப்படி கூறுவீர்கள் என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் Jungle babblers என்கிறார்கள்). அவைகளின் கூடு ஓன்று எப்பவுமே எங்க வீட்டு ஜாதி மல்லி கொடியில் இருக்கும். அவை முட்டையிட்டு குஞ்சு பொறித்து பறக்கும் வரை ஒரு தொடர் புகைப்படம் கூட எடுத்திருக்கிறேன். முட்டையில் இருந்து வெளியே வந்து வெறும் பத்தே நாளில் பறந்து விடுகிற அளவுக்கு வேகமாய் வளர்வது ஆச்சரியம். 











கீழே உள்ள படங்கள் தோட்டத்தில் மா மரத்தில் தையல் பறவை (Tailor Bird) ஓன்று கூடு கட்டியபோது எடுத்தேன்.








வீடு என்று இருந்தால் சிட்டுக்குருவி இல்லாமலா?. சில பறவைகள் மனிதனை நம்பி வாழ்பவைகளாகவே அமைந்தவை. அதில் சிட்டுக்குருவியும் ஓன்று. முன்பெல்லாம் வீட்டில் சமையல் பாத்திரம் எல்லாம் கழுவ வெளியே எடுத்து போட்டிருப்பார்கள். அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் சோற்றை சிட்டுக் குருவிகள் சாப்பிட்டுக் கொள்ளும். கோழிகளுக்கு தூவும் அரிசி, கம்பு போன்றவற்றை நிறைய குருவிகளும் கோழிகளோடு சேர்ந்து சாப்பிட்டுக் கொள்ளும். நெல் அவித்து காய போட்டிருப்பார்கள், தானியங்கள் காய வைத்திருப்பார்கள் அவைகள் மூலம் நிறைய பறவைகள் பசியாற்றிக் கொள்ளும்.

ஊரில் அம்மா வீட்டில் இப்போதும் ஒரு பெரிய சிட்டுக் குருவி கூட்டமே சுற்றிக் கொண்டிருக்கும். அவை பாட்டுக்க வீட்டிற்குள்ளேயே வந்து அம்மா போட்டு வைத்திருக்கும் அரிசியை சாப்பிடும். நாம் வாசலிலேயே அமர்ந்திருந்தாலும் மதிக்கவே செய்யாது. தைரியமாய் உள்ளே வந்து போகும்.




இப்போது யாரும் சமையல் பாத்திரம் கழுவ வெளியே போடுவதில்லை. அப்படியே போட்டாலும், நாம் பயன்படுத்தும் dish washer liquid எல்லாம் கலந்த சோற்றை சாப்பிட்டால் இருக்கிற கொஞ்சம் குருவிகளும் காலி ஆகிவிடும். மருந்துக்கு கூட வீட்டுக்கு வெளியே உணவு பொருட்கள் கொட்டாத  அளவுக்கு வாழ்க்கை முறை மாறிவிட்டது   (ஆனால் மூட்டை மூட்டையாய் பாலிதீன் கவரில் குப்பையை கொட்டுவோம்..அது வேற). இதனாலயே சிட்டுக்குருவிகள் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து விட்டது.

தொடக்கத்தில் இங்கே தோட்டத்தில் நிறைய பறவைகள் வந்தாலும் சிட்டுக்குருவிகள் வந்ததில்லை. பக்கத்துக்கு தெருவில் நிறைய பார்த்திருக்கிறேன். ஒரு நாள் ஒரே ஒரு குருவி எதேச்சையாய் வீட்டின் அருகில் மரத்தில் அமர்ந்திருந்தது. நான் ஓடி போய் கொஞ்சம் அரிசி கொண்டு வந்து அதன் பார்வையில் படும் படி வைத்தேன். அடுத்த நிமிடமே வந்து சாப்பிட்டு போனது. அடுத்த நாளே நமது உணவு கூடத்தின் புதிய கிளை ஒன்றை வீட்டின் முன்னால் திறந்து கொஞ்சம் அரிசியும், தண்ணீரும் வைக்க கொஞ்சம் கொஞ்சமாய் குருவி கூட்டம் வர ஆரம்பித்தது. இப்போது பத்து குருவிகள் வரை கூட்டமாய் வருகிறது.




பொதுவாய் சிட்டுக்குருவிகள் வீட்டில் எங்கேயாவது இருக்கும் இடைவெளிகளில் கூடுகட்டி வாழும். காங்க்ரீட் வீடுகள் வந்த பிறகு அதற்க்கும் இடம் இல்லாமல் ஆக்கி விட்டோம். மொபைல் டவர் கதிர்வீச்சால் அவைகள் குறைந்து விட்டதாக கூறுவதெல்லாம் சரி இல்லை என்றே கூறுகிறார்கள். அவைகள் குறைந்து போனதற்கு முக்கிய காரணம் உணவு கிடைக்காமல் போனதும் (வயலில் கிடைக்கும் நெல்லிலும், கம்பிலும் எவ்வளவு பூச்சி மருந்து இருக்கும் என்று சொல்ல தேவை இல்லை), வசிக்க இடம் இல்லாமல் போனதும் முக்கிய காரணம் (அதற்கு காரணம் நாம் தான்). இங்கே Nest Box சில வைத்து விடலாம் என்று இருக்கிறேன். விசாரித்து பார்த்ததில் கோவையில் எங்கும் கிடைக்கவில்லை. நானே செய்து வைத்து பார்க்கலாம் என்று இருக்கிறேன்.   

ஒரு முறை இங்கே மைனா கூட்டம் ஓன்று இடம் இல்லாமல் மூடிக்கிடக்கும் கடை ஒன்றின் ஷட்டர் இடைவெளியில் கூடுகட்டி வைத்திருந்தது. அந்த ஷட்டரை திறந்தால் அவ்ளோ தான். அவைகளுக்கு சுத்தமாய் இடமே இல்லாமல் போனது நன்றாகவே தெரிந்தது. இதை பார்த்த பிறகு வீட்டில் நான் சில ஓடுகளை வாங்கி சில அமைப்புகளை உருவாக்கி வைத்தேன். இன்னும் ஏதும் கூடு கட்டவில்லை. எதாவது கூடு காட்டுகிறதா என்று பார்க்கலாம்.





   இப்போது எங்க வீட்டில் சரியாய் காலை 7 மணிக்கு பார்த்தால் ஒரு ஜோடி Bulbul பறவை வந்து பழம் வைக்க வில்லை என்றால் வீட்டை சுற்றிக் கொண்டே இருக்கும். அணில் கூட்டம் எல்லாம் அவ்வளவாய் மாதுளை பழங்களை சேதம் பண்ணுவதில்லை. வந்து கொஞ்சம் சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டுவிட்டு போய்விடும். மைனா கூட்டமும், பூணில் கூட்டமும் குளித்து கும்மாளம் இட்டுக்கொண்டிருக்கும். சிலநேரம் மரங்கொத்தி, செம்பருந்து என்று பெரிய சில பறவைகளும் வந்து நீரருந்தி செல்கிறது.




நண்பர்கள் முடிந்தால் வீட்டில் சின்னதாய் இரண்டு Tray வாங்கி ஒன்றில் தண்ணீரும், ஒன்றில் அரிசி, தானியம் எதாவது போட்டு வையுங்கள். முக்கியமாய் கோடை காலங்களில் அவை தண்ணீருக்கு ரொம்பவே கஷ்டப்படும். தண்ணீராவது ஒரு நிழலில் வைத்து பாருங்கள். கண்டிப்பாய் நமது தோட்டம் இன்னும் அழகாய் மாறும்.




35 comments:

  1. வணக்கம்
    அருமையான கருத்தை சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அறுவடையைவிட இது ஆனந்தமாய் உள்ளதே!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். அறுவடையை விட ஆனந்தம் தான் ;-) . அறுவடையோடு கூட இவைகளும் இன்னும் ஆனந்தம்

      Delete
  3. மனதிற்கு இதமான பதிவு! வீட்டிற்கு வரும் பறவைகள், அணில்களை ரசிப்பதே ஒரு சுகம்! அவற்றுக்கு மெனக்கெட்டு இவ்வளவு வசதிகள் செய்து தந்திருக்கீங்க..ரொம்ப ரொம்ப நல்ல மனசுங்க உங்களுக்கு! என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகி. அவைகளும் நம்மை நம்பி சுற்றி வருவதே சந்தோசம் தானே :-)

      Delete
  4. அந்த முட்டை டு பறவை போட்டோக்கள் அருமை! :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மகி. அது படம் எடுக்கும் உயரத்தில் வசதியாக இருந்தது. அதனால் தினமும் ஒரு படம் எடுத்து முட்டை டூ பறவை அழகாய் வந்தது

      Delete
  5. romba nanraaga irukkirathu.

    ReplyDelete
  6. சிவா, அருமையான பதிவு படிக்கும்போதே அப்படி ஒரு சந்தோஷம். உங்கள் தோட்டமும்,உங்கள் மனித நேயமும் அழகு, சொல்ல வார்த்தை வரவில்லை வாழ்த்ததான் தோன்றுகிறது, மனமார்ந்த வாழ்த்துக்கள். கடவுள் படைப்பில் ஒவ்வொன்றும் எத்தனை அழகு,நீங்கள் சொன்னதுபோல், இதை அனுபவிக்கும்போதுதான் அந்த ஆனந்தம் புரியும்.

    நாம் னமக்காகவே மட்டும் வாழாமல், மற்ற உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி வாழவேண்டும். நம்மால் முடிந்த சிறிய சிறிய உதவிகள் மூலம் ஜீவராசிகளுக்கு எத்தனை நன்மைகள்.

    உங்கள் தொண்டு தொடரட்டும்.

    நன்றி
    ராஜேஷ்.



    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜேஷ். மனித நேயம் என்பது ரொம்ப பெரிய வார்த்தை. நாமும் இயற்கையின் ஒரு அங்கம் தானே. அதில் இன்னும் அவைகளை நெருக்கத்தில் வைத்து பார்ப்பதில் சின்னதாய் ஒரு சந்தோசம். அவ்வளவே :-)

      Delete
  7. உங்கள் பதிவுகளை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன்.
    நல்ல பதிவுகள். தொடருங்கள்.

    சிட்டுக்குருவிகளுக்கான Nest Box செய்வது மிகவும் இலகு.
    வெறும் காகித அட்டைப் பெட்டிகளுக்குள் கொஞ்சம் வைக்கோல்/தென்னை நார்/ தும்பு இட்டு முழுவதுமாக மூடியடைத்து பின்னர் வட்ட வடிவ சிறிய துளை இரண்டு அல்லது மூன்று இடுங்கள். குருவி போய் வரக் கூடிய அளவிலான துளையென்றால் சரி. பின்னர் உயரமான ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். குருவிகள் பார்த்திருக்க பல்கிப் பெருகும்.

    - எம்.ரிஷான் ஷெரீப்

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஐடியா ரிஷான். ஒரு இடம் பார்த்து அமைத்து பார்கிறேன். கொஞ்சம் Ply Wood வாங்கியும் ஒரு பாக்ஸ் மாதிரி செய்யலாம் என்று இருக்கிறேன்.

      Delete
  8. நல்ல விசயம் சிவா.. பூணில் என்பது கொங்கு பகுதில் வேலி குருவி அல்லது புழுதி குருவி. ஆங்கிலத்தில் indian babblers இதை seven sisters என்றும் சொல்வார்கள் . நாம் வீட்டில் சாப்பிட்ட தட்டை ,பாத்திரத்தை கழுவி ஊற்றினால் அதில் உள்ள சாப்பாடு , தக்காளி , மிளகாய் ஆகியவற்றை சாப்பிட ஒரு பறவை கூட்டமே இருக்கும். ஆனால் இப்போது பாத்திரம் கழுவினால் அது sink இல் போய் அப்படியே சாக்கடைக்கு போய் விடுகிறது. பறவைகளுக்கு nest box செய்தால் extra 2 செய்யவும் நான் செலவை தந்து வாங்கி கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி நந்தகுமார். நீங்கள் சொல்வது சரி தான் ( seven sisters ) இவைகள் ஒற்றை பட எண்ணில் தான் கூட்டமாய் இருக்குமாம் (ஐந்து, ஏழு எண்ணிக்கையில்).

      செய்யும் பொது கண்டிப்பாய் கூறுகிறேன். கூட இரண்டு செய்து விடலாம்.

      Delete
  9. உங்கள் பதிவுகளை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன்.
    மிகவும் அருமையான பதிவுகள். வாழ்த்துக்கள்,தொடருங்கள்.

    ReplyDelete
  10. அருமையாக இருந்தது இந்த பதிவு.......... மேலும் படங்களும் ரொம்ப அழகு ... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. Very happy to see the pictures. I too tried this in my native place home. It was working nice. But after some days crows came and started dominating other small birds.

    ReplyDelete
    Replies
    1. Thanks SIV

      There is not much crow issue here even though there are crows around (one nest also in the nearby neam try). The other big birds (like Sembam used to visit to drink water). Otherwise all the small birds rules my garden :-).

      Delete
  12. மிகவும் அருமையான பதிவுகள். வாழ்த்துக்கள்..
    உங்கள் பதிவுகளை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன்.
    வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  13. இதையெல்லாம் பார்த்து இரசிக்கவே உங்கள் வீட்டிற்கு வரலாம் போல் உள்ளது.... எத்தனையோ பேர் பல சூழல் தகவல்களை பகிர்ந்து கொண்டு இருக்கும் போது நீங்கள் உண்மையான சூழலியலாளர்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம். எல்லாவற்றுக்கும் மேலே அந்த பறவைகள் எல்லாம் வருவதே நம் முயற்சிகளுக்கு ஒரு தூண்டுதல்.

      Delete
  14. Excellent job.... peaceful place... boomiyil oru sorgam :)

    ReplyDelete
  15. Thanks. Right. Being with Nature is always peaceful :)

    ReplyDelete
  16. It is very awesome sir..
    The respect towards you has gone up and up after seeing this...
    Inspire of your work , You are finding time to do all this and sharing your experience .
    What you do is really awesome and inspires people like me.

    ReplyDelete
    Replies
    1. Thanks Kannan. If few people got similar interest and do something similar to this in their house, I will be happy. It is nothing extraordinary here. It is how we were in village and now we are moving away from all these. I am just trying to bring those to some extend in my home here :)

      Delete
  17. poonil kuruvi namathu tiruelveli pakkam ipo kanavillai

    ReplyDelete
    Replies
    1. நானும் ஊரில் பார்க்க முடியவில்லை. இங்கே கோவையில் நிறைய சுற்றுகிறது. ஊரில் சிட்டுக் குருவிகளை நிறைய பார்க்க முடிந்தது.

      Delete
  18. vanakam sir, paravaigalin padangal parka manathukku santhoshamaga ullathu intha padangalai paravaigal patriya paadam edukka en manavargalukku kattinen athisayamaga parthargal !!!!! ( nanne thaiyal kuruviyai padathil than parthen ) ungal muyarchikku paratugal

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot. Happy to hear your updates. Hope atleast few student get some desire towards nature after seeing the birds :))

      Delete
  19. I have added a couple of contraptions in my roof garden for the birds, some bowls of feed like wheat, ragi, corn seeds etc, couple of bowls of water and an earthern pot , tiles arranged diagonally for assisting in nesting. Photos attached. Now Myna,Babblers, red vented Bulbul, Sun birds , Tailor birds and few squirrels are regular visitors. I want suggestions for improvement- like and specific plants to grow , how to arrange bird perches etc. Also rats are a menace- I do not want to use Ratkill etc ,for fear of killing the squirrels by mistake- How to control the rat menace- Any ideas ?

    ReplyDelete
    Replies
    1. Hi,

      Happy to hear your updates. Keep going.

      I haven't tried anything specific to understand more on this friend. As I had written, I am keeping food and water for them and the trees around the garden provide shelter to them.

      For rat, may be you can keep rat traps and try to capture them live. I am not sure how rats disturb others as rat mostly comes in night where all other comes in daytime.

      Delete