Thursday, May 3, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் - கோஸ் (Cabbage)


வழக்கமான காய்கறிகளான தக்காளி, கத்தரி, மிளகாய் கூட வித்தியாசமாக இந்த தடவை கோஸ் (Cabbage)  முயற்சி செய்தேன். பொதுவாக கோவையில் பொருட்காட்சியிலும், மலர் கண்காட்சியிலும் தவறாமல் இரண்டு மூன்று காய்கறி விதை கடை என்னை மாதிரி ஆளுங்களுக்காக இருக்கும். இங்கே எல்லா விதைகளும் கிடைக்கும். ஒரு 10 பாக்கெட்டாவது வாங்கினால் தான் எனக்கு திருப்தி. பீட்ரூட், கேரட், கோஸ் என்று அத்தனையும் வாங்கலாம். ஆனால் சில நேரம் குடை மிளகாய் என்று வெறும் மிளகாய் விதையை தலையில் கட்டி விடுவார்கள். கடைசியில் மூன்று மாதம் கழித்து காய்க்கும் போது தான் தெரியும். இதை தவிர கோவை விவசாய பண்ணையிலும் விதை தரமான விதை கிடைக்கும். ஆனால் ரொம்ப பொதுவான அவரை, வெண்டை, கத்தரி தான் கிடைக்கும்.

கோஸ் விதை கடுகு மாதிரி இருக்கிறது. பொதுவாக தனியாக நாற்று எடுத்து பிறகு நடும்படி போட்டிருந்தது. நான் நேராக பாத்தியிலேயே விதைத்து விட்டேன். ஒரு வாரத்தில் முளைத்து விட்டது. நன்றாகவே செடி வந்தது.





நவம்பரில் விதைத்ததால் சரியாக டிசம்பர் குளிரில் நிறைய பூச்சி செடியை அரிக்க ஆரம்பித்தது. பொதுவாக நவம்பர் டிசம்பர் இங்கே கோவையில் செடிகளுக்கு ஒரு கஷ்ட காலம். ஒருவழியாக குளிரையும், பூச்சி தொல்லையையும் தாக்கு பிடித்து செடி நன்றாகவே வந்தது.




பெப்ரவரியில் இருந்து ரொம்ப செழிப்பாக எந்த பிரச்சனையும் இல்லாமல் வளர்ந்தது.




முழுமையாக கோஸ் ரெடியாக விதைத்து கிட்டத்தட்ட 5 முதல் 6 மாதம் பிடிக்கிறது. முதல் கோஸ் கொஞ்சம் சிறியதாக வந்தது (Weight – 500 gms). இன்னும் நான்கு செடி காய்த்திருக்கிறது. 






மொத்தத்தில் முயற்ச்சிக்கு பலன் கிடைத்த மாதிரி தான். வருட காய்கறி பட்டியலில் தாராளமாக வைத்துக் கொள்ளலாம்


8 comments:

  1. பாராட்டுகள் அருமையாக உள்ளது முட்டைகோசு. நாங்கள் எல்லாம் தொட்டியில் தான் வளர்க்க வேண்டும்

    நாகு
    www.tngovernmentjobs.in

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி நாகு

    ReplyDelete
  3. மிக‌ அருமைய‌ன‌ காய்க‌றிக‌ள். உருளையும் கோஸும் அழ‌காக‌ இருக்கின்ற‌ன‌. சூப்ப‌ர் ஃபோட்டோஸ். எப்ப‌டி உன‌க்கு இவ்வ‌ள‌வு ஈடுபாடு இந்த‌ காய்கறி தோட்ட‌த்தில்! உன் தோட்ட‌த்தை பார்க்கும் போது இனி நான்‍‍‍‍‍‍_வெஜ்ஜை விட்டு விட‌லாம் போல் தோன்றுகிற‌து. கோய‌மபுத்தூர் வ‌ந்தால் ந‌ல்ல‌ காய்க‌றி சாப்பாடு கிடைக்கும். கீப் இட் அப்.

    அன்புட‌ன் க‌.சிவ‌குமார்.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா.காய்கறி தோட்டம் சின்ன வயதில் நம் வீட்டில் இருந்தது தானே. இப்போது இடம் இருக்கிறது. ஆரம்பித்து விட்டேன். மனதுக்கு பிடித்த ஒரு விஷயம் இந்த தோட்டம். :-)

      Delete
  4. எனக்கும் தோட்டம் பிடிக்கும். ஆனால்..... இங்கே குளிர் ஆளைக் கொல்லுது:(

    ReplyDelete
    Replies
    1. :-) . குளிரில் ஒன்னும் வர மாட்டேங்குது. குருத்து அப்படியே கருகி போய்டுத்து. குளிர் காலத்தில் தோட்டத்திற்கு ஓய்வு தான்..

      Delete
  5. சரி, இந்த கோஸிலிருந்து திரும்ப விதை சேகரிக்க‍ முடியுமா? இல்லை மீண்டும் கடைக்குப் போய் வாங்கணுமா?

    ReplyDelete
    Replies
    1. கடைக்கு தான் போகணும். விதை வரும் வரை விட வேண்டும் என்றால் நீண்ட காலம் ஆகும்.

      Delete