Tuesday, May 22, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – ரோஜா


பொதுவாக ரோஜா செடி 10 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை விற்கிறார்கள். காஷ்மீர் ரோஸ், பட்டன் ரோஸ், பன்னீர் ரோஸ், கொடி ரோஸ் என்று நிறைய வெரைட்டி கிடைக்கும். தோட்டம் ஆரம்பித்த போது கிட்டத்தட்ட 25 ரோஜா வெரைட்டி வைத்திருந்தேன். எல்லா நிறத்திலும் எங்கு பார்த்தாலும் ரோஜா தான். மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்று வண்ண மயமாய் இருந்தது. தொட்டியிலும் தரையிலும் ரோஜா செடிகள் இருந்தது. ஆனால், நிறைய ஒட்டு செடிகள் ஒரு வருடத்தில் எதாவது ஒரு நோயில் பட்டுப்போய் விடுகின்றன. 

ரோஜா என்றால் இந்த ரோஸ் நிறத்தில் பூக்கும் பன்னீர் ரோஜா தான். அவ்வளவு அழகும் மனமும் இருக்கிறது. எந்த பிரச்சனையும் இல்லாமல் வருடம் முழுவதும் கொத்து கொத்தாக பூத்து கொண்டிருக்கிறது. நிறைய பேர் என் வீட்டில் வந்து இந்த ரோஜா இதழ்களை பறித்துக்கொண்டு போவார்கள். 

ரோஜா செடி பராமரிக்க இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வருடம் கொஞ்சம் இதற்கென நேரம் செலவிட்டு மறுபடியும் எல்லா ரோஜா செடியும் வைத்து ஒரு தோட்டம் தயார் செய்யலாம் என்றிருக்கிறேன். 

இப்போது என் தோட்டத்தை அழகு படுத்திக் கொண்டிருக்கும் பன்னீர் ரோஜா சில கீழே,

கொத்து கொத்தாய் ஒரு கிளையில் மொட்டுக்கள்,



தொட்டியில் பூத்துக்குலுங்கும் மலர்கள்,






அழகாய் பூக்கள்,







கீழே பார்ப்பதும் பன்னீர் ரோஜா தான். இது ரொம்ப அடர்த்தியான பூ. மனமும் அதிகம்.





10 comments:

  1. அழகான பூக்கள்.

    ஹைப்ரீட் வகையில் வாங்கிய செடிகளும் காரணம் ஏதும் இல்லாமலே சட்ன்னு காய்ஞ்சு, பட்டுப் போயிருது.

    நம்ம வீட்டில் இப்போ எட்டு வகைகள் தான்:(

    ReplyDelete
  2. nice rose.

    nagu
    www.tngovernmentjobs.in

    ReplyDelete
  3. நன்றி துளசி மேடம். நீங்க சொன்ன மாதிரி ஹைப்ரீட் ரோஸ் எல்லாம் அப்படி தான் பட்டுப் போயிருது. மறுபடி வைத்துப் பார்க்கலாம் என்று இருக்கிறேன். பார்க்கலாம். எட்டு வகைகளா.. சூப்பர். என்னிடம் ரெண்டே வகை தான் இப்போ இருக்கு :-)

    நன்றி நாகு.

    ReplyDelete
  4. என்ன என்ன அந்த ரோஜா தொட்டியில் கலந்து உள்ளீங்க என்று சொல்லுங்க..மிக அழகாய் இருக்கிறது. வெயில் எப்பவும் இருக்கும் இடமா ரோஜா வைக்கணுமா? முழு விபரம் எழுதுங்கள். நான் இருப்பது சென்னையில்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமுதா அவர்களே. எல்லா செடிகளுக்கும் வெயில் நிறைய பட்டால் நல்லது தான். மாடியில் என்றால் காய்ந்து விடாமல் இருக்க தினமும் நீர் விடுங்கள். கொஞ்சம் செடி மக்குகளை தொட்டிகளில் பரப்பி விட்டால் நீர் வேகமாக காய்ந்து விடாது.

      Delete
  5. superb!!!!watching ur blog for long days....

    ReplyDelete
  6. my mom s watching ur blog for a long time.... she dnt have a blog so it took long days to say ur exellence...try to visit my blog.... http://violetbellpoem.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. Hi Sri Nithi. Happy to see your comments. I have noticed your comments very late. Sorry about that. Keep sharing your comments. Convey my regards to your mom also.

      Delete
  7. hello siva, im living in hyderabad, but im from coimbatore. im so interested in growing plants. last year nearly 10 types of roses i purchased and kept in my garden. but after 1 or 2 times its not flowering. im having only 1 local rose. i want that pink colour local rose and other local roses also. can i know from where we can get in coimbatore. its so lovely ur photos. and can u plz give any suggestions for my plants to get flowers in my plants plz

    ReplyDelete
    Replies
    1. Hello madam. Nice to see your comment and queries. I got most of the local (Naddu - Panner) roses from a local nursery garden only. There is one good nursery garden in Ganapathy ( Forgot the name). It is just before the main Ganapathy bus stand on the left side when you come from Gandipuram. (Middle of petrol bunk and Ganapathy bus stand). You can get the dark pink rose also there. But you may not get these panner roses all time. During some seasons only it will be available. You can have a check when you visit Coimbatore. You can check any other nursery garden also around Coimbatore near your place.

      Delete