Friday, May 11, 2012

அணில் (ANIMAL) Watching


வீட்டில் செடி, மரம் நிறைய இருப்பதால் அணில், குருவி, காக்கா என்று ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.. சில நேரம் பறவைகள் வெயில் தாங்க முடியாமல் வீட்டில் ரோஸ் தொட்டியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளித்துக் கொண்டிருக்கும். நிறைய அணில்கள் வீட்டில் காக்காவுக்கு வைத்த சாப்பாட்டிற்கு அதோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கும். இப்படி நிறைய காட்சிகளை பார்க்கலாம். 

ஒரு நாள் பொழுது போகாமல் அணிலுக்கு உணவு வைப்பது மாதிரி ஓன்று செய்யலாம் என்று ஆரம்பித்தேன். முன்பு வளர்த்த love birds  கூட்டிலிருந்து Tray-வை எடுத்து வேப்பமரத்தில் கட்டி ஒரு மேடை அமைத்தேன். கொஞ்சம் பொட்டுக்கடலை, திணை, சூரியகாந்தி விதை என்று போட்டு வைக்க, நிறைய அணில்கள் ரெகுலராக வர ஆரம்பித்தது. இப்போது அணில்களுக்கு Breakfast, lunch, dinner என்று மூன்று வேலையும் சாப்பாடு என் வீட்டில் தான். எடுத்த சில படங்கள் கீழே (Dialogs added by me ),








5 comments:

  1. அருமை.

    சண்டிகர் வீட்டிலும் எப்போதும் அணில்கள் வந்துகொண்டு இருக்கும். சமைச்ச சனாவைக்கூட அதுகள் விட்டு வைப்பதில்லை:-)))))

    ReplyDelete
  2. wow...nice pics.

    nagu
    www.tngovernmentjobs.in

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தொடர் வருகைக்கு நன்றி நாகு.

      Delete
  3. நன்றி துளசி அவர்களே. உங்கள் பதிவுகளை 2005-2006 களில் படித்திருக்கிறேன். இன்னும் நீங்கள் எழுதி கொண்டிருப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete