Friday, July 25, 2014

அக்ரி இன்டெக்ஸ் - 2014



  
மேலே உள்ள படம் Google–ல் இருந்து எடுத்தது. இப்படி தான் இருந்தது இந்த வருடம் அக்ரி இன்டெக்ஸ்.  கடந்த மூன்று வருடமாக நான் அக்ரி இன்டெக்ஸ் போய் கொண்டிருக்கிறேன். இப்படி ஒரு கூட்டத்தை பார்த்ததில்லை. எங்கே இருந்து கிளம்பினார்கள் என்று தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் கூட்டம்..கூட்டம்..கூட்டம்.. எந்த ஸ்டாலிலும் நின்று விசாரிக்க கூட இடம் இல்லை. சொல்ல போனால் நெருங்க கூட முடியவில்லை.

மக்களுக்கு திடீரென்று gardening மேலே ரொம்ப ஆர்வம் வந்து விட்டதா (அதிகமா gardening ஸ்டால்களில் தான் கூட்டம்). இல்லை, அதிக விளம்பரத்தின் விளைவா என்று தெரியவில்லை (சனி-ஞாயிறு பொழுது போக்காக).

சனிக்கிழமை நமது ப்ளாக் நண்பர்கள் அரவிந்தனும், விஜயும் தஞ்சாவூர்/காரைக்காலில் இருந்து வந்திருந்தார்கள். நான் சனிக்கிழமை போக திட்டமிடவில்லை என்றாலும், நண்பர்களை பார்க்கலாம் என்று குடும்பத்தோடு போனேன். Hall-A –ல் கூட்டத்தை பார்த்தே வீட்டில் வெளியே வந்து விட்டார்கள் (நீங்க வேணும்னா சுத்திட்டு வாங்கன்னு). அவ்ளோ கூட்டம்.

ஒரு சுற்று சுற்றி விட்டு, அரவிந்தனையும், விஜயையும் சந்தித்தேன். நம் தோட்டம் ப்ளாக் மூலம் அறிமுகமாகி, நேரில் சந்திப்பது ரொம்ப சந்தோசமாய் இருந்தது. அவ்வளவு தூரத்தில் இருந்து (தஞ்சாவூரில் இருந்து) இதற்காகவே வந்திருந்தது, அவர்களில் தோட்டம் மீதான ஆர்வத்தை பார்த்து ஆச்சரியமாய் இருந்தது. எல்லோரும் சேர்ந்து என் வீட்டிற்கு வந்து, என் தோட்டத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு மறுபடி கொடிசியா கிளம்பினார்கள்.

ஞாயிற்று கிழமை. நம்ம தோட்ட ஆர்வத்தையும், தோட்டத்தையும் பார்த்து எதிர் வீட்டில் உள்ள தம்பியும் ‘அண்ணா, நானும் தோட்டம் போட ஆசை. கொஞ்சம் விவரம் கொடுங்க என்று கேட்டிருந்தான். சரி, கீரை தோட்டத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று நானும் அந்த தம்பியும் ஞாயிறு காலை ஒன்பதரைக்கே கிளம்பி விட்டோம் (கொஞ்சம் கூட்டம் குறைவா இருக்கும் என்ற நம்பிக்கையில்). நாங்க போகும் போதே அங்கே ஒரு பெரிய கூட்டம் நின்று கொண்டிருந்தது. ஆரம்பத்திலேயே சென்றதால் ஓரளவுக்கு கூட்டம் பரவாயில்லை. கூட்டம் வருவதற்குள் வேகமாக வாங்க ஆரம்பித்தோம்.

கொஞ்சம் Grow Bags, விதைகள் வாங்கினோம். Coir Pith 5 KG Block நிறைய ஸ்டாலில் இருந்தது. ஆனால் எல்லோருமே விலை Rs.100 என்றார்கள. நீண்ட தேடலுக்கு பிறகு ஒரு கடையில் Rs.50-க்கு கிடைத்தது. இரண்டு வாங்கி கொண்டோம். இந்த வாரம் தான் மாடியில் தோட்டம் அமைத்து கொடுக்க வேண்டும். ஆர்வத்தை பார்த்து பிறகு மற்ற செடிகளும் ஆரம்பிக்கலாம் என்று சொல்லி இருக்கிறேன்.

என்னுடைய பர்சேஸ் என்று பார்த்தால் இந்த முறை பெரிதாய் ஒன்றும் இல்லை. இரண்டு Hand Sprayer (Each Rs.80 – 1 Lt Capacity) வாங்கினேன். கொஞ்சம் பூ விதைகள். கொஞ்சம் Poly Grow Bags. அவ்ளோ தான்.

சென்னையில் இருந்து ப்ளாக் நண்பர் தங்கவேல் வந்திருந்தார். இங்கே கோவையில் இருந்து சுகந்தா மேடம் வந்திருந்தார்கள். அவர்களையும் சந்தித்து விட்டு மதியம் கிளம்பினேன்.   

இந்த வருடம் வழக்கத்தை விட வீட்டுத் தோட்டம் சம்பந்தமாக நிறைய கடைகளை பார்க்க முடிந்தது. நிறைய விதை கடைகள் இருந்தது (ஆனால் அவர் அவர்களுக்கென்று ஒரு Brand வைத்திருந்தார்கள்). Biocarve, Omaxe மாதிரி விதைகளை எங்கும் பார்க்க முடியவில்லை. Nursery Tray நிறைய இருந்தது. ரொம்ப விலை குறைவாகவே கொடுத்தார்கள் (வெறும் பதினைந்து ரூபாய் தான்). வெளியே Hydroponic system வைத்து ஒரு பெரிய தோட்டம் ஓன்று Demo-க்காக வைத்திருந்தார்கள். நிறைய செடிகள், செம செழிப்பாக இருந்தது. பார்த்தவுடனே கெமிக்கல் உரம் என்பது தெளிவாக தெரிந்தது. Drip System வைத்து நீரிலேயே எல்லா சத்துகளையும் கரைத்து செலுத்தி வளர்த்து இருக்கிறார்கள். ஆனால் உருப்படியாய் Hydroponic systemஒன்றும் இல்லை.        
  இந்த வருடம் நிறைய ஸ்டால்கள் இருந்தது. ஒரே பிரச்னை கூட்டம் தான். இப்படி கூட்டம் இருக்க கூடாது. உள்ளே வரும் கூட்டம் எதாவது வாங்கி, வந்த வேலை முடிந்ததுடா, அப்பாடா என்று ஓட வேண்டிய இருக்கிறது. ஒரு விவரமும் கேட்க முடியவில்லை. ஒன்றுமே கற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த மாதிரி கண்காட்சிக்கு இப்படி எது ஷாப்பிங் திருவிழா மாதிரி கூட்டம் தேவை இல்லை. சனிக்கிழமை நான் போகும் போது டிக்கட் இல்லாமல் இலவசமாக உள்ளே அனுப்பினார்கள். பிறகு வெள்ளை வேட்டி சட்டையில் வந்தவர்களுக்கு அனுமதி இலவசம் என்றார்கள. இணையத்தில் பதிவு செய்து SMS  வைத்திருபவர்களுக்கு இலவசம் என்றார்கள்.

இப்படியே வருடா வருடம் கூட்டம் சேர்ந்தால், இந்த அக்ரி இன்டெக்ஸ்-க்கான பயனே இல்லாமல் போய் விடலாம். முடிந்தால் இந்த கூட்டத்தை சமாளிக்கும் விதத்தில் எதாவது செய்தால் பயன் இருக்கும் (தோட்டம் சம்பந்தமான கடைகளை தனியாக, நிறைய இடம் கொடுத்து போடலாம்).   

12 comments:

  1. உண்மைதாங்க நானும் ஞாயிறன்று நிறைய வாங்கலாம்னு ப்ளானோட போனேன் 11.30 மணிக்கு டிக்கெட் கியூவில் நின்று 12.30 உள்ளே போய் அலை கடலெனும் கூட்டம் என்னைத் தள்ளிக்கொண்டே சென்றதில் வெறுப்பில் நோட்டிஸ்களை அள்ளிக்கொண்டு வெளியேறினேன். ஒன்றுமே வாங்காமல் வெளியேறிய முதல் அக்ரி இண்டென்ஸ்

    ReplyDelete
    Replies
    1. டிக்கட் எடுக்கவே அவ்வளவு நீளமான வரிசை. நான் இப்படி பார்த்ததே இல்லை. முன்பு ஒரு முறை புதிய தலைமுறை வ.ஊ.சி பார்க்கில் ஒரு விவசாய கண்காட்சி போட்டபோது சுத்தமாக கூட்டம் கிடையாது. மொத்தமே ஒரு இருபது பேர் தான் இருந்திருப்போம். இப்படி ஒரு கூட்டத்தை நான் கண்காட்சியில் கூட பார்த்தது இல்லை. ரொம்ப மாதம் எதிர்பார்த்து கடைசியில் தண்டமாக போய் விட்டது.

      Delete
  2. சந்தித்தது ரொம்ப சந்தோசமாய் இருந்தது! மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்களையும் விஜயையும் சந்தித்ததில் ரொம்ப சந்தோசம் அரவிந்த் :-) சீக்கிரம் இன்னொரு மீட்டிங் போட்டிடலாம் ..

      Delete
  3. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நம்பவே முடியவில்லை ,டிக்கெட் வாங்கிப் பார்க்கும் அளவிற்கு மக்களா ?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். நுழைவு கட்டணம் முப்பது ரூபாய். விவசாயிகள் பார்வையில் பார்த்தால் இது அதிகமாக தெரியும் (இலவசமாகவே விட்டால் தானே நிறைய பேருக்கு பயன் கிடைக்கும் என்று). ஆனால் கூட்டத்தை பார்த்தால் என்ன பயன் பெற்றார்கள் என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து வழக்கமாய் நிறைய வாங்க திட்டமிட்டு போனவர்கள் சொன்னது 'இந்த முறை ஒன்றுமே வாங்க முடியவில்லை..இப்படி வந்தது இது தான் முதல் முறை' என்று.

      Delete
  4. அண்ணே...

    சென்னை அண்ணா நகரில் இருக்குற தமிழ்நாடு விவசாய பல்கலை கழகத்தின் சென்னை தகவல் மற்றும் பயிற்சி மையம், வர்ற ஆகஸ்ட் 14ம் தேதி (14.8.14) "சமையலறை தோட்டம்" (Kitchen Gardening) அப்படிங்கற தலைப்புல ஒருநாள் பயிற்சி நடத்துது. நேரம் 9.30 am 5.00 pm.

    பயிற்சி கட்டணம் 400 ரூபாய். மதிய உணவு, தேநீர், பயிற்சி கையேடு ஆகியவையும், பயிற்சி நிறைவு சான்றிதழும் கொடுக்குறாங்க.

    தொடர்பு எண்: 044-26263484

    மண்புழு உரமும் விக்கிறாங்க. 2 கிலோ 30 ரூபா.

    பதிவுல போட்டிங்கனா சென்னை மக்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.

    நன்றிணே..

    S.சேர்மராஜ், சென்னை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சேர்மராஜ். கண்டிப்பாக பதிவில் போடுகிறேன்.

      Delete
  5. உங்களை பார்த்தது மிகவும் சந்தோசமாக இருந்தது அண்ணா.....இணையத்தில் அறிமுகம் ஆகி நேரில் சந்தித்தது ஒரு அற்புதமான அனுபவம் அண்ணா.....உங்களுடன் கண்காட்சியில் சுத்த முடியாதது தான் சற்று வருத்தமாக இருந்தது அண்ணா.....நீங்க எங்க ஊரு பக்கம் வாங்க அண்ணா......தோட்டம் செமயா இருந்துது அண்ணா....மறுபடி பார்க்க ஆசையாக உள்ளது....அரவிந்த் அண்ணனையும் சந்தித்ததில்
    மிக்க மகிழ்ச்சி அண்ணா....நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு 4,5 ரவுண்டு கண்காட்சியை சுற்றி விட்டு சென்றோம் அண்ணா...இணையம் மூலமாக சிறந்த நண்பர்கள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. தோட்டம் மாதிரி உருப்படியான ஒரு விசயத்தில் ஆர்வம் உள்ள நண்பர்களை சந்திப்பது ரொம்பவே சந்தோசமான நிகழ்வுகள். உனக்கு தோட்டம் சம்பந்தமாக என்ன உதவி தேவைபட்டாலும் சொல். கோவையில் கிடைத்தால் கண்டிப்பாக உதவுகிறேன். உனக்கு கிடைக்கும் தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்

      Delete