ஜூன்
சீசனுக்கு மே இரண்டாவது வாரத்தில் நான் ஆரம்பித்தேன்.
முதலில்
விதைக்க நேரடி விதைப்பு தேவையா, இல்லை Nursery Tray பயன்படுத்தலாமா என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். விதை ரொம்ப
சிறியதாக, அதிக எண்ணிக்கையில் தேவை படும் போது (கீரை, கேரட் மாதிரி) நேரடியாக தான்
விதைக்க வேண்டும். முள்ளங்கி, பீட்ரூட் நேரடியாக விதைப்பதுண்டு. கிட்டத்தட்ட மற்ற
காய்கறிகள் எல்லாமே நான் Nursery
Tray பயன்படுத்தி
தான் நாற்று தயார் செய்கிறேன்.
Nursery Tray-யின் ஒரு பயன் என்னவென்றால், மே நடுவில்
விதைப்பை ஆரம்பிப்பதால் கோடை வெயில் அதிகமாக இருக்கும். அவரை, வெண்டை போன்றவற்றை
நேரடியாக பாத்திகளில் விதைக்கும் பொழுது நிறைய நீர் விட வேண்டிய இருக்கும். தவிர நிறைய
வெயிலின் தாக்கமும் இருக்கும். Nursery Tray-ல்
நடும் போது தொடக்கத்தில், பாதி நேரம் நிழல் வரும் இடமாய் பார்த்து வைக்கலாம்.
தண்ணீர் பயன்பாடும் மிக குறைவு. வெயில் ஜூனில் கொஞ்சம் குறைந்து வரும் போது,
எடுத்து நட தயாராய் இருக்கும்.
Nursery Tray பயன்பாடு பற்றி இந்த பதிவில் விவரமாய்
எழுதி இருக்கிறேன். நமக்கு தேவையான செடிகளை திட்டமிட்ட பிறகு, ஒவ்வொன்றிலும்
எத்தனை செடிகள் தேவை என்பதை தோராயமாக (நம் தேவை, தோட்டத்தில் இருக்கும் இடம்
போன்றவற்றை பொறுத்து) முடிவு செய்து அதற்கு ஏற்றாற்போல் நாற்று எடுக்க விதைக்கலாம்.
நான் பொதுவாய் தேவைக்கு இரண்டு மடங்காக விதைப்பதுண்டு. சில செடிகள் முளைப்பு திறன்
50% அளவுக்கு இருக்கும் பட்சத்தில், அது
போதுமானதாக இருக்கும். சின்ன சின்ன விதைகள் போடும் போது (கோஸ், காலி ஃப்ளவர்
மாதிரி) ஒரே குழிக்குள் இரண்டு மூன்று விதைகள் போடலாம். அத்தனையும் முளைத்தால்
ஒன்றை விட்டு விட்டு மற்றதை பிடுங்கி போட்டு விடலாம். இல்லாவிட்டால் நன்றாக
வளர்ந்த பிறகு தனி தனி செடியாக பிரித்து வைக்கலாம்.
Nursery Tray-ல் நடும் போது வெறும் Coir Pith மற்றும் மண்புழு உரம் மட்டும் போதும் (1:1 என்ற விகிதத்தில்). செம்மண் கலக்க கூடாது. அப்படி
கலந்தால், நாற்று எடுத்து நடும் போது, வேரில் இருந்து எல்லாமும் உதிர்த்து விழும்.
அப்படியே ஒரு தக்கை போல வராது.
நாற்று
ஒரு மாதம் வரை Tray-ல் வைக்கலாம் (செடியை பொறுத்தது.
சுரைக்காய் போன்ற பெரிய செடிகளை சீக்கிரமே எடுத்து நடலாம்). நாம் முதலில் கலக்கும்
மண்புழு உரம் போதுமானதாக இருக்கிறது. தனியாக ஏதும் Liquid Fertilizer மாதிரி விட தேவை இல்லை.
தினமும்
தவறாமல் நீர் ஊற்ற வேண்டும். ஒரு நாள் தவறினாலும், நாற்று வாடி விடும் (இடம்
கொஞ்சம் என்பதால், நீர் பிடிப்பு அவ்வளவாய் இருக்காது). நாற்று வந்து இரண்டு
வாரத்தில் நல்ல வெயிலில் வைக்கலாம்.
நான்
இப்போது 50 குழிகள் இருக்கும் Tray தான் பயன்படுத்துகிறேன். 98 குழிகள் இருக்கும் Tray அவ்வளவாய் நன்றாக இல்லை (ரொம்ப சிறிய
குழிகள் என்பதால், செடி கொஞ்சம் வளர்ந்த பிறகு வேர் போக இடம் இருப்பதில்லை. நீர்
பிடிப்பும் ரொம்ப குறைவு).
நாற்றுகளை
ஒரு இரண்டு அல்லது மூன்று இலை அடுக்குகள் வந்த பிறகு அதற்கான பாத்திகளில் எடுத்து
நடலாம். ரொம்ப நாள் Tray-ல் விட்டுவிட கூடாது. செடி வளர்ச்சி
குன்றி போய் விடும். நடுவதற்கு ஒரு நாள் முன்பு கொஞ்சம் குறைவாக நீர் விட்டால், Tray-ல் இருந்து எடுக்க எளிதாக இருக்கும். லேசாய்
ஒவ்வொரு குழியையும் கீழேயும், பக்கவாட்டிலும் அழுத்தினால் ஓட்டிகொண்டிருப்பது
விட்டுவிடும். பிறகு செடியை பிடித்து மெதுவாய் இருத்தால் அப்படியே தக்கை போல
வந்துவிடும். முடிந்த அளவுக்கு முழுதாய் எடுக்க முயற்சிக்கலாம். சிறிய
செடிகளில் வேர் அவ்வளவாய் வந்திருக்காது.
அப்போது பாதியை உடைந்து வரும். அது பிரச்னை இல்லை. மேல் பகுதி உடைந்து விடாமல்
எடுத்தால் போதும்.
ஜுன்
சீசன் லே-அவுட்
வழக்கம்
போல முக்கிய காய்கறிகளான தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, அவரை, கொத்தவரை
ஆகியவற்றை மெயின் பாத்திகளில் நட்டேன். இந்த முறை வெண்டை, அவரை, கொத்தவரை வரிசையாக
நடாமல், கலந்து (ஒரு வெண்டை, ஒரு அவரை, ஒரு கொத்தவரை என்று மாற்றி மாற்றி) நட்டு
விட்டேன். ஒவ்வொரு பருவத்திலும் பயிர் சுழற்சி முறையையும் கடை பிடிக்க வேண்டும்
(போன முறை தக்காளி வைத்த இடத்தில் இந்த முறை அவரை, இந்த மாதிரி).
முட்டைகோஸ்,
காலி ஃப்ளவர், Broccoli இந்த மூன்றையும் மாடியில் தனி தோட்டமாய் Grow Bags அமைத்து விட்டேன் (ஒவ்வொரு பையிலும் ஒரு
செடி). அதோடு முள்ளங்கி, காரட், பீட்ரூட் மூன்று
நீண்ட பைகளில் அதே தோட்டத்தில் வைத்தேன்.
கீரையை
மொத்தமாய் மேலே மாடியில் அமைத்து விட்டேன்.
பாகல்,
மிதி பாகல், பீர்க்கங்காய் மூன்றையும் வீட்டின் முன்னால் அமைத்த புதிய கொடியில் விட்டேன்.
பக்கவாடில் முன்பு அமைத்த கொடியில் புடலை, சுரை. மாடியில் உள்ள கொடியில் சுரை,
பாகல் (மிச்சம் இருந்த செடிகள்) மற்றும் வெள்ளரி. இது இந்த சீசனில் கொடிகள்.
இந்த
முறை, இந்த மொத்த தோட்டம் அமைப்பில் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்று
இருக்கிறேன். ஒவ்வொரு காய்கறியின் விளைச்சல் காலம் எவ்வளவு, எவ்வளவு விளைச்சல்
எடுக்கலாம், எந்த மாதிரியான பூச்சி தாக்குதல் வருகிறது, ஒவ்வொரு செடியின்
பராமரிப்பு – இப்படி நிறைய விவரங்களை சேகரித்து கற்றுக் கொள்ளலாம் என்று
இருக்கிறேன். அதை ஒவ்வொன்றாய் வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.
(தொடரும்)
தேங்காய் நார்க்கழிவிற்கு பதில் மரத்தூள் பயன்படுத்தலாமா?
ReplyDeleteமரத்தூள் பயன்படுத்தலாம். சிலர் அதையும் கலந்து பயன்படுத்துகிறார்கள். ஆனால் முழுமையாக அதை ஒரு வளர்ப்பு மீடியாவாக பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை. கொஞ்சம் விவரம் சேகரித்து கூறுகிறேன்.
Deleteமிக அருமையான விளக்கங்களுடன் பகிர்வுக்கு மிக்க நன்றி .
ReplyDeletesustainable eco friendly விரும்பிகள் முட்டை வரும் அட்டை பெட்டி (எங்க ஊர் முட்டைகள் அளவில் பெரியவை :) அவற்றில் அல்லது முட்டை ஓடுகளை seedling starter ஆக பயன்படுத்தலாம் .
நான் சமீபத்தில் பட்டாணி செடிகளை காலி முட்டை ஓட்டில் வளர்த்து நிலத்தில் இறக்கினேன் .ஒன்றிரண்டை க்ரோ பாகில் போட்டேன் .நன்றாக வளர்கிறது .
உங்கள் பதிவுகள் பார்த்து ஆர்வமுடன் சில பல காய்கறிகளை நட்டுள்ளேன் .மிக்க நன்றிகள்
நல்ல ஐடியா. முட்டை அட்டை பெட்டி பயன்படுத்தி நாற்று எடுக்கிறீர்களா. சூப்பர் :-))
Deleteபட்டாணி வளர்ந்தவுடன் படம் எடுத்து போடுங்கள். பார்க்கலாம்.
Does this garden on top floor attracts mosquitos?? if yes, how to prevent, if no what prevautions have to be taken.
ReplyDeleteThis will be very good for wannabes like me.
-Surya
I don't think we need to worry about mosquitoes in garden. Usually the garden won't be that dense to attract mosquitoes. But you need to make sure there is no water stagnant around. It will be just usual procedure to avoid mosquitoes. Nothing specific to garden
Deleteசார்,உங்கள் பக்கம் பார்த்தென். மிகவும் நன்று.நான் விழுப்புரம் மாவட்டம். இங்கு என்ன பூ,காய்கரி செடிகள் வளர்க்களம்.இங்கு குரங்கு தொல்லை அதிகம்.பூ,காய்கள பிய்த்து விடுகிரது.என்ன செய்யலாம்
ReplyDeleteநன்றி.
Deleteநீங்கள் இப்போது தான் ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால், தக்காளி, கத்தரி, வெண்டை, அவரை, மிளகாய் செடிகள், கீரை என்று ஆரம்பிக்கலாம். பூவில் நீங்கள் அழகு செடிகள் போலவா (செண்டு, கார்நெஷன் மாதிரி) இல்லை மல்லி,முல்லை மாதிரி வளர்க்க ஆசையா?
குரங்கு தொல்லை சில பேர் கூறி இருக்கிறார்கள். நாம் எதாவது கவர் செய்து (Shade Net வைத்து) வளர்க்க முடியுமா? அதை நாம் விரட்ட முடியுமா என்று தெரியவில்லை. வீட்டில் நாய் குட்டி ஏதும் இருந்தால் வராது. மற்ற படி Covered Gardening ஏதும் முடியுமா என்று பாருங்கள்.
மிக அருமையான விளக்கங்களுடன் பகிர்வுக்கு மிக்க நன்றி .
ReplyDeleteஅண்ணே கலக்கிடிங்க....சூப்பர் பிளானிங். நம்ம தோட்டம் பிளான் எதுவுமே இல்லாம அப்படியப்படியே இருக்கு. பப்பாளி 3, கொய்யா, தென்னை, மாதுளை 2, மல்லிகை, இன்னும் செடி கொடிகள் இருக்கு....எதாவது ஐடியா கொடுங்க அண்ணே. சரி, நம்ம வீட்டுல துணி துவைக்கிற சோப்பு தண்ணி எல்லாம் தோட்டத்துக்கு தான் போகுது. இது எதாவது செடி, மரங்களோட வளர்சிய பாதிக்குமா?
ReplyDeleteநன்றி :-))
Deleteஇருக்கும் மரங்களை அப்படியே விட்டு விடலாம். புதிதாக ஏதும் காய்கறி தோட்டம் ஆரம்பித்தால் கொஞ்சம் திட்டமிட்டு ஆரம்பிக்கலாம். ஏதும் உதவி தேவை பட்டால் கூறுங்கள்.
சோப்பு என்றால், ரின், சர்ப் மாதிரியா? நல்லதில்லையே. மண் வளத்தையும் கெடுத்து மரத்தையும் கொடுத்திருமே. கண்டிப்பாக அந்த நீரை பயன்படுத்த வேண்டும் என்றால் ஏதும் Filter Arrangements நிறுவி பயன்படுத்தலாம். நேரடியாக நிலத்தில் விட்டால் பாழ் தான்.
அழகாக இருக்கிறது. வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி மாதேவி :-)
Deleteஉந்கலுதிஅய் தளம் இன்றைய வலைச்சரத்தில் பாராட்டப்பட்டுள்ளது .
ReplyDeleteஇணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/5.html
வாழ்த்துக்கள்.
என்னுடைய வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி மேடம். மற்ற தளங்களை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteHi Mr.Siva!
ReplyDeleteI am really happy to see your blogge. It is very useful. I would like to start Maadi Thottm... I needed your advice and where can i get tools and materials for to do the garden.
Thanks.
Hi, Thanks for checking. Where are you located? What kind of garden you are planning to start? Please send a mail to my mail id. Will share the details based on your need.
Delete