Monday, June 2, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – கருணைக் கிழங்கு





நாம் வழக்கமாய் போடும் செடிகளை தவிர, எப்போதாவது வித்தியாசமாய் முயற்சிப்பது நம்ம தோட்டத்தை இன்னும் fresh-ஆக வைத்துக் கொள்ள உதவும். நாமாக முயற்சித்து அதில் ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்தால் சந்தோசம் தானே.  

முன்பு இது போல தான் உருளைகிழங்கு முயற்சி செய்து ஓரளவுக்கு பலனும் கிடைத்தது. இப்போது கருணை கிழங்கு. இதை பிடி கரணை என்றும் சொல்கிறார்கள். குழம்பு வைக்க வாங்கிய சில கிழங்குகள் நல்ல Fresh-ஆ தெரிந்தது. முளை விடுவது போல இருந்தது. சரி, ஒரு Try விட்டு பார்க்கலாம் என்று ஒரு மூன்று கிழங்குகளை எடுத்து முளைக்க போட்டு விட்டேன்.

இது போல பெரிய செடிகளை (பப்பாளி, முருங்கை செடிகள் போல) படத்தில் உள்ளது போல சின்ன Nursery Bag-ல் போட்டு விடலாம். இந்த பைகள் விலை குறைவு தான். கிலோ கணக்கில் கிடைக்கிறது. நான் போன முறை இங்கு Agri Index-ல் வாங்கினேன்.

கிழங்கை முளை விட்டு வர சரியாக ஒரு மாதம் ஆனது. கொஞ்சம் பொறுமை அவசியம். எப்படி வரும் என்றே தெரியாமல் முயற்சிப்பதிலும் ஒரு த்ரில்லிங் இருக்கு. சின்னதாய் ஒரு பூ மொட்டு மாதிரி வர ஆரம்பித்தது. அது பெரிதாகி வெடித்து உள்ளே இருந்து ஒரு குடை போல இலைகள் விரிந்து செடி மலர்ந்தது. இரண்டு செடிகளை தரையிலும், ஒன்றை ஒரு பெரிய Nursery Bag-லும் வைத்து விட்டிருக்கிறேன்.  

இந்த செடியில் ஒரு விஷேசம், செடியில் குருத்து ஏதும் இல்லை. முதலில் வரும் மூன்று இலைகள் தான் இருக்கிறது. புதிதாய் ஏதும் இலை வர குருத்து ஏதும் இல்லை. பக்க கிளை மட்டும் ஓன்று வருகிறது.  
 
கிழங்கு வர இன்னும் நான்கு-ஐந்து மாதம் ஆகலாம் என்று நினைக்கிறேன். அதனால் இதை Part-1 ஆக கொடுக்கிறேன். எப்படி கிழங்கு வருகிறது என்பதை பொறுத்து சில மாதங்கள் கழித்து Part-2 வரலாம் :-)














16 comments:

  1. ரசனையே அலாதிதான் சிவா. ஒவ்வொன்றாய் ரசித்து எழுதியிருக்கிறீங்க. உண்மையிலே த்ரிலிங் காகதான் இருக்கும். வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  2. பார்ப்பதற்கு அழகாக இருக்கும்...

    ReplyDelete
  3. படங்களுடன் பதிவு,
    பயனுள்ள பதிவுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல முயற்சி. நான் ஆர்டிச்சோக் நட்டு அறுவடை செய்தாச்சு:-)

    சேனைக்கிழங்கு ஒரு துண்டு எடுத்து நட்டுப் பாருங்கள். பூக்கும் தினம் மட்டும் ஒரு பெரிய டர்க்கி டவலால் மூக்கைப் பொத்திக்கொள்ளணும்:-)

    ReplyDelete
    Replies
    1. ஆர்டிச்சோக்-ஆ. சூப்பர். நான் google image பார்த்து தான் ஆர்டிச்சோக்-னா என்னவென்று கண்டுபிடித்தேன். இதை சிலர் சமைப்பதை டி.வில தான் பார்த்திருக்கிறேன்.

      சேனை கிழங்கா..அவ்ளோ வாசமாவா இருக்கும் :-) :-)

      Delete
  5. குழந்தையின் வளர்ச்சிப் போல செடியின் வளர்ச்சியை பக்கத்துல இருந்து எடுத்திருக்கீங்க!!

    ReplyDelete
  6. செடி நட்டு,வளர்ந்து வருவதை பார்ப்பது ஆனந்தமானது. ஆனந்தமாக அனுபவித்து கருணைக்கிழங்கு வளர்ந்ததை அருமையாக வெளியிட்டு உள்ளீர்கள்.

    ReplyDelete
  7. மிக்க நன்றி காயத்ரி அவர்களே.

    ReplyDelete
  8. சிவா!
    உங்கள் ரசனை அலாதி, எனக்கும் முளையுடன் எதைக்கண்டாலும் முளைக்க வைக்கலாமா? எனும் யோசனைவரும். கடைசியாக ஒரு பலாக்கொட்டை சாடியில் நட்டு வைத்துள்ளேன்.
    இந்தக் கிழங்கை கரணை என்பதா? கருணை என்பதா? , இன்னுமொரு வகையுள்ளதே கிழங்கு சட்டிபோல் இருப்பதால் சட்டிக்கரணை என்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி யோகன் :-)

      பலா மரம் வைக்கும் அளவுக்கு இடம் இருக்கிறதா? ரொம்ப நல்லது.

      //இந்தக் கிழங்கை கரணை என்பதா? கருணை என்பதா?// எனக்கும் இந்த சந்தேகம் எழுதும் போது வந்தது. இணையத்தில் நிறைய இடத்தில கருணை கிழங்கு என்று தான் போட்டிருந்தார்கள். கரனை என்றும் சொல்வார்கள்.

      வாழை அண்டி போல இருக்கும் கிழங்கை சேனை கிழங்கு என்பார்கள். பிடி கரனை போல பளபளப்பாய் ஒரு கிழங்கும் இருக்குமே. அதை சேப்பங் கிழங்கு என்பார்கள்.

      Delete
  9. கருணைக்கிழங்கு எங்க வீட்டிலும் வைத்திருக்கிறேன் முதல் முறை ஒரு கிலோ கிழங்கு கிடைத்திருக்கும்.. எப்போ எடுப்பதுன்னு தெரியாம ஏதோ ஒரு சமயத்தில் எடுத்து அது சரியா விளையாம இன்னம் இருக்கிறது வளர்ந்து கொண்டே..

    ReplyDelete
    Replies
    1. நானும் இன்னும் முழுமையாக எப்போது பிடுங்க வேண்டும் என்று பார்க்க வில்லை. செடியின் இலை கொஞ்சம் பழுத்து காய தொடங்கும் போது சரியாய் இருக்கும் என்று எதிலோ படித்ததாக நியாபகம். அதற்க்கு ஒரு நான்கு, ஐந்து மாதம் ஆகும் என்று நினைக்கிறேன். சரியாக அறுவடை செய்தால் அதிஷ்டம் தான் :-) :-)

      Delete