Saturday, June 14, 2014

தகவல் - அக்ரி இன்டெக்ஸ் 2014 (Agri Intex 2014)

அக்ரி இன்டெக்ஸ் பற்றி போன வருட பதிவுகளில் நிறைய எழுதி இருக்கிறேன். வீட்டு தோட்டம் ஆர்வம் இருக்கும் கோவை வாசிகளுக்கு வருடா வருடம் வரும் ஒரு திருவிழா மாதிரி தான் இது. தோட்டம் பற்றி, விவசாயம் பற்றி, செடிகள் பற்றி நிறைய விசயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். முன்பு தோட்டத்திற்க்கு தேவையான நிறைய பொருட்களுக்கு அக்ரி இன்டெக்ஸ் ஸ்டால்களை நம்பி தான் இருந்தேன். அக்ரி இன்டெக்ஸ் ஸ்டால்கள் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள் ஏராளம்.


நமது ப்ளாக் நண்பர்கள் சிலர் ‘அக்ரி இன்டெக்ஸ் பற்றி விசாரித்தார்கள். வெளி ஊர்களில் இருந்தும் கூட சில நண்பர்கள் விசாரித்தார்கள். சிலர் நமது தோட்டத்தை பார்க்கவும் என்னிடம் விசாரித்திருக்கிறார்கள். ஆர்வம் இருக்கும் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றாய் இந்த வருடம் ‘அக்ரி இன்டெக்ஸ்போகலாமே என்று தோன்றியது. இந்த வருடம் 18-July (Fri) - 21-July (Monday) தேதிகளில் வருகிறது. இன்னும் சரியாக ஒரு மாதம் தான் இருக்கிறது. நான் எப்படியும் கண்டிப்பாய் போவேன். அங்கு வர நினைத்திருக்கும் நண்பர்கள் 20-July (ஞாயிற்று கிழமை) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அங்கே கொடிசியா வளாகத்திலேயே சந்திக்கலாம். அப்படியே மொத்தமாய் ஒரு ரவுண்ட் ஸ்டால் விசிட் போகலாம். அப்படியே நம்ம தோட்டதிற்க்கும் ஒரு விசிட் போட்டுடலாம். ஆர்வம் இருக்கும் நண்பர்கள் ஒரு மெயிலை (gsivaraja@gmail.com) தட்டி விடுங்க. பிளான் போட்டுடலாம்.




முந்தைய அக்ரி இன்டெக்ஸ் பற்றிய பதிவுகள்,


11 comments:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    பொழுது போகிறது!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன். எங்கே எனது அறிமுகம் என்றாலும் உடனே நேரம் எடுத்து வந்து கூறி விடுகிறீர்கள். மிக்க நன்றி.

      நானும் போய் பார்த்தேன். ரொம்ப சந்தோசமாய் இருந்தது.

      Delete
  2. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சிவா.
    பயனுள்ள பகிர்வு.நன்றி

    ReplyDelete
  3. நன்றி. அக்ரி இன்டெக்சை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    …- இதயன்

    ReplyDelete
    Replies
    1. இந்த பக்கம் வந்தால் கூறுங்கள் இதயன்

      Delete
  4. 18.08.2014 அக்ரி இன்டெக்சைஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.....

    ReplyDelete
    Replies
    1. இந்த பக்கம் வந்தால் கூறுங்கள். நாம் இங்கே கொடிசியா வளாகத்தில் சந்திக்க முயற்சி பண்ணலாம்.

      Delete
  5. kindly change the thursday as friday sir...because 18 july 2014 is friday

    ReplyDelete
    Replies
    1. சரி செய்து விட்டேன் விஜய். நன்றி.

      தனி மடல் ஒன்றும் உங்கள் மடலுக்கு அனுப்பி இருக்கிறேன். பாருங்கள்.

      Delete