வெங்காயம் பற்றி முன்பே ஒரு பதிவு போட்டிருந்தேன். அது ஒரு சோதனை
முயற்சியாக இரண்டு தொட்டியில் போட்டது. பெரிதாய் வீட்டுத் தேவை எல்லாம் பூர்த்தி
செய்யாது. நம்ம தோட்டத்திலும் வெங்காயம் பறித்தோம் என்று ஒரு திருப்தி. அவ்வளவே.
வீட்டுத் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்று கொஞ்சம் பெரிய அளவில்
இந்த முறை ஆரம்பித்தேன் (பெரிய வெங்காயம்). ஹைப்ரிட் விதை தான் (Omaxe seeds). அதில் இரண்டு வெரைட்டி உண்டு. நான் இந்த முறை எடுத்துக் கொண்டது DARK RED என்று ஒரு வகை. நல்ல செக்க செவேல் என்று ஒரு ரகம். ஆந்திரா வெங்காயம் வகை
என்று நினைக்கிறேன்.
நாம் வெங்காயம் விதை வாங்கும் போது ஒரு பாக்கெட்டில் அளவுக்கு
அதிகமாகவே நிறைய விதை இருக்கும். அதில் பாதி அளவே போதுமானதாக இருக்கும் (நீங்கள்
எவ்வளவு போட போகிறீர்கள் என்பதை பொருத்து).
வெங்காயத்தை நேரடியாக விதைக்காமல் நாற்று எடுத்து பின் நடும் போது
சரியான இடைவெளி விட்டு நட முடியும். மூன்று நர்சரி தட்டுகளில் கிட்டத்தட்ட 125 நாற்றுகள் தயார் செய்து, எடுத்து நடும் அளவுக்கு வந்ததும் (ஒரு நான்கு
ஐந்து இலைகள் வந்ததும்) தனி தனி பைகளில் மாற்றி விட்டேன்.
வெங்காயம் ஒரு புல் செடி போல இருப்பதால் நர்சரி தட்டில் இருந்து
அவ்வளவு எளிதாய் அப்படியே எடுக்க கொஞ்சம் கடினம். கவனமாக எடுத்தாலும் அப்படியே
தக்கை போல சில செடிகள் தான் வரும். நிறைய செடிகள் வேரோடு தனியாய் மண் ஏதும்
இல்லாமல் வந்துவிடும். அதை அப்படியே நட்டுவிட்டால் வாடாமல் வந்து விடுகிறது. அதனால்
அப்படியே எடுக்க முடியவில்லை என்று கவலைப்பட தேவையில்லை. நாற்று ஏதும்
வீணாவதில்லை. சில நாற்றுகள் வேர் இல்லாமல் அப்படியே வந்து வீணாகி போகும். அதனால்
எப்பவுமே தேவைக்கு கொஞ்சம் அதிகமாக நாற்றுகள் எடுத்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பையிலும் பத்து செடிவரை வைக்கலாம். ஒரு பெரிய வெங்காயம்
அளவுக்கு கொஞ்சம் அதிகமாக ஒவ்வொரு செடிக்கும் இடைவெளி இருந்தால் போதும். நான்
மொத்தம் எட்டு பைகளில் மொத்தம் ஒரு நூறு நாற்றுகள் வைத்து விட்டேன்.
செடியை ரொம்ப ஆழமாக நடவேண்டியது இல்லை. ஒரு இஞ்ச அளவுக்கு ஆழத்தில் வைத்தாலே
போதும். வெங்காயம் வைக்கும் போது அது முக்கால்வாசி மண்ணிற்கு மேலே தான் வரும்.
அதனால் ஒன்றும் பிரச்னை இல்லை.
Growing Media வழக்கம் போல Coir
Pith, Red Sand, Vermi Compost கலவை
தான். நடவு செய்து ஒரு மாதம் கழித்து ஒரு முறை மண்புழு உரம் இட்டேன். இப்போது
பையில் வைக்கும் செடிகளுக்கு மேலும் கொஞ்சம் ஊட்டம் கொடுப்பதற்காக நல்ல செம்மண்
இரண்டு Mug அளவுக்கு ஒரு பெரிய பக்கெட்டில் எடுத்து நன்றாக நீரில் கரைத்து அதை
ஒரு Mug அளவுக்கு ஒவ்வொரு பையிலும் ஊற்றி விடுகிறேன். பைகளில் மணலை தனியாக
சேர்க்க முடியாது என்பதால் நன்றாக கரைத்து ஊற்றி விட்டால் அதில் இருக்கும்
கனிமங்கள் செடிக்கு சேரும்.
விதைத்து மூன்றரை மாதங்களில் வெங்காயம் அறுவடைக்கு தயாராக வந்தது. செடியில்
வெங்காயத்தை (அளவு, திரட்சி) பார்த்தாலே
அறுவடை செய்யலாமா நமக்கு தெரியும். செடியின் நுனியும் லேசாக காய ஆரம்பிக்கும்.
எட்டு பைகளில் 3 ½ கிலோ பறித்தோம். இன்னும் ஒரு கிலோ அளவுக்கு பைகளில் வெங்காயம் பறிக்காமல் இருக்கிறது.
கிட்டதட்ட மொத்தம் ஐந்து கிலோ கிடைத்திருக்கிறது.
இது வீட்டுத்தேவையை பூர்த்தி செய்ய போதுமா என்று வீட்டில் கேட்டால்,
ஒரு மாதத்திற்கு போதும் என்கிறார்கள். வாரம் குறைந்தது சின்ன வெங்காயம் ஒரு கிலோ,
பெரிய வெங்காயம் ஒரு கிலோ தேவையாம் (சொந்தம் எல்லாம் எதாவது விசேஷம் என்று ஓன்று
கூடிவிட்டால் பிரியாணி செய்றேன் என்று இந்த நாலு கிலோவையும் ஒரே நாளில் காலி செய்து
விடுவார்கள்). அப்புறம் சும்மாவா வெங்காயம் விலை சில நேரம் ரெக்க கட்டி பறக்குது. இந்த
கணக்கில் பார்த்தால் வெங்காயத்துக்கே ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி போடணும் போல :-).
ஆச்சர்யம்...ஆனால் உண்மை...நல்ல உழைப்பு....வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteவெங்காயத்தையும் முயற்சி செய்துவிட்டீர்களா? நாம் உற்பத்தி செய்யும்போதுதான் விலை பற்றி யோசனை வருகிறது. ஆனாலும் இந்த விலை இடைத்தரகர்களுக்குத்தான் லாபம். விவசாயிக்கு உழுதவன் கணக்குப்பார்த்தால் பழமொழிதான்.
ReplyDeleteஆமாம் நண்பரே. இன்னும் கூட பெரிய அளவில் செய்தால் தான் தேவையை பூர்த்தி செய்ய முடியும் போல.
Delete//ஆனாலும் இந்த விலை இடைத்தரகர்களுக்குத்தான் லாபம். விவசாயிக்கு உழுதவன் கணக்குப்பார்த்தால் பழமொழிதான்.// உண்மை தான். இங்கே காய்கறி விலை உயர்வால் விவசாயிகள் பயன் பெறுவதே இல்லை. எல்லாம் தரகர்களின் லாபம் தான். கடைசியில் நுகர்வோர் தான் ஏமாளிகள்.
வணக்கம்
ReplyDeleteயாவருக்கும் பயன்பெறும் வகையில் செய்முறை விளக்கத்துடன் அசத்தி விட்டீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
Deleteஆகா நன்றாக இருக்கிறது....பார்ப்பவர்களை உடனே தோட்டம் போட தூண்டும்...
ReplyDeleteபசுமையான வெங்காயத்தாள்களையும் வீணாக்காமல் சமைக்கலாம். சத்தும் கூட.
ReplyDeleteஅருமையா வந்திருக்கு வெங்காயம்.
நன்றி மேடம்.
Deleteஆமாம் மேடம். வெங்காய தாள்களை சமைக்கலாம். செடி அறுவடை அளவுக்கு வந்தபிறகு நன்றாக இருக்குமா என்று தெரியவில்லை.
வெங்காயம் நல்லா வந்திருக்கு . இங்கு வெங்காயம் பற்றி கவலையில்லை.விலை ஓரேமாதிரித்தான். இதேமாதிரி டார்க்ரெட் வெங்காயம் தான் நான் பாவிப்பது. உங்க ஊர் பெரியவெங்காயம் மாதிரி இருக்கும்.
ReplyDeleteநன்றி ப்ரியா
Deleteஇங்கே வெங்காயம் விலை இருபது ரூபாயில் இருந்து நூறு ரூபாய் வரை தாராளமாய் போய் வரும். வீட்டுத் தோட்டத்தை கொஞ்சம் திட்டமிட்டால் அதை சமாளிக்கலாம் என்று நினைக்கிறேன்.
நன்று நண்பரே, மிக அருமை.
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteநான் முல்லங்கி விதை போட்டேன். அவை அனைத்தும் நெருக்கமாக இருக்கிறது. அதை எடுத்து தூரம் தூரமாக நாடலாமா அல்லது அப்படியே விடலாமா.
ReplyDeleteசெடி இன்னும் தொடக்க நிலை என்றால் பிடுங்கி கொஞ்சம் இடைவெளி விட்டு நடுங்கள். கிழங்கு வைக்க இடம் வேண்டும் இல்லையா. என்னுடைய பழைய முள்ளங்கி பதிவை பாருங்கள்.
DeleteThank you Boss
Deletesir evllovo try panniyum... diy kit chennailla kidaikkala ..pls help me sir
ReplyDeletediy kit க்கு காத்திருக்க வேண்டாம். தனி தனியாக வெளியே வாங்கி உங்கள் தோட்டத்தை ஆரம்பியுங்கள். எல்லா இடத்திலும் இதே பிரச்சினை தான்.
Deleteநானும் ஓமக்ஸ்ல் விதை வாங்கி விதைத்து 15 நாட்கள் ஆகி விட்டது இன்னமும் முளைக்கவில்லை காரணம் என்ன என்று சொல்ல முடியுமா?
ReplyDeleteவெங்காயம் விதைகளை சொல்கிறீர்களா? எப்படி விதைதீர்கள் (மண்ணிலா இல்லை Nursery Tray (Coir Pith மீடியாவிலா?). மண்ணில் என்றால் சும்மா கிளறி தூவினீர்களா இல்லை தனி தனியாக விதைதீர்களா? கூற முடியுமா?
DeleteNursery Tray ல் மண் மற்றும் பித் சேர்த்து விதைத்தேன் இருபது நாட்கள் ஆகிறது முளைக்கவில்லை தயவுசெய்து காரணம் கூறவும்
ReplyDeleteOmaxe பொதுவாக பிரச்சினை ஏதும் வராது. ஓன்று கூட முளைக்கவில்லை என்றால் என்னவென்று தெரியவில்லை. தினமும் நீர் தெளிதீர்களா? எப்போதும் ஈரம் இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும். மற்றபடி முளைப்பதில் பிரச்சினை வரகூடாது.
Deleteஆம் தினமும் நீர் ஊற்றி கவனித்து வந்தேன் பயன் இல்லை
DeleteYou have a Green Hand which could be god's gift! I keep reading all your blogs without missing! What a magic you got in your hands!
ReplyDeleteThanks for your nice words :). It is all about our involvement and the time we spent. Nothing more :)
DeleteSuper
ReplyDeleteநன்றி அண்ணா
Deleteநான் வெங்காயம் நட்டு 1மாதம் ஆகிவிட்டது.தங்களின் ஆலோசனை பின்பற்றி உள்ளேன்.
ReplyDeleteநல்லது சகோதரி. வாழ்த்துகள். செடி எப்படி வந்து கொண்டிருக்கிறது என்பதை கூறுங்கள்.
Delete