கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். 'HORTI INTEX 2014' என்றொரு தோட்டக்கலை கண்காட்சி (7 - 9 November) கொடிசியா வளாகத்தில் இந்த வார இறுதியில் நடக்கிறது. கடந்த ஜூலையில் கொடிசியாவில் நடந்த 'AGRI INDEX 2014' செம சொதப்பலாக இருந்தது (அலைகடலாக மக்கள் திரண்டு வந்து எவனையும் மூச்சு கூட விடாமல் விரட்டினார்கள்). பிறகு Vijaya Trade Center-ல் நடந்த 'HORTI TECH 2014', ஆளே இல்லாமல் காத்து வாங்கியது. இப்போது வருட இறுதியில் 'HORTI INDEX 2014'. கொடிசியா வளாகத்தில் என்பதால் பிரமாண்டமாய், நிறைய ஸ்டால்கள் இருக்கும். இந்த முறை வீக் எண்ட்டில் பொழுது போகாத மக்களுக்கு கடவுள் வேறு வழி ஏதாவது காட்டட்டும் என்று வேண்டிக்கொண்டு நானும் போகலாம் என்று இருக்கிறேன். நீங்களும் வாருங்கள்