Friday, August 15, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – சிவப்பு உருண்டை முள்ளங்கி (Red Globe Radish)

ஜூன் சீசனில் இருந்து முதல் ‘என் வீட்டுத் தோட்டத்தில் வருகிறது. முதலாய் கொஞ்சம் வித்தியாசமாக Red Globe Radish.

முள்ளங்கி பற்றி ஏற்கனவே விரிவாக முன்பு ‘என் வீட்டுத் தோட்டத்தில் வரிசையில் எழுதி இருந்தேன். முட்டைகோஸ், காலி ஃப்ளவர் விதை வாங்க Biocarve.com –ல் பார்த்த போது இந்த Red Globe Radish-ம் கண்ணில் சிக்கியது. பார்க்க அழகாய் இருக்கிறதே, வழக்கமான முள்ளங்கிக்கு இது கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும் என்று இதையும் சேர்த்து ஆர்டர் செய்தேன்.

நீண்ட Growbag-ல் (1 by 3 feet ) பாதிக்கு இந்த சிவப்பு முள்ளங்கியும், பாதிக்கு வழக்கமான வெள்ளை முள்ளங்கியும் போட்டு விட்டேன். இந்த முள்ளங்கியும் ரொம்பவே எளிதான செடியாகவே இருக்கிறது. எந்த பிரச்னையும் இல்லாமல் வளர்ந்தது. செடி வெள்ளை முள்ளங்கி மாதிரி தான் இருக்கிறது. பெரிதாய் ஒன்றும் வித்தியாசம் இல்லை.


Biocarve விதைகளின் முளைப்பு திறன் 50% தான் இருந்தது. மற்றபடி செடிகளின் வளர்ச்சி நன்றாக இருந்தது. வழக்கம் போல Coir pith, vermin compost, செம்மண் கலவை தான் Growing media. பூச்சி தாக்குதல் ஒன்றும் இல்லை. விதைத்து 45 நாளில் அறுவடைக்கு வந்துவிடும். ரொம்ப நாள் விட்டுவிட்டால் முற்றி விடும். விதைத்து 45 - 50 நாட்களுக்கும் பார்த்து பறித்து விட வேண்டும்.
28 comments:

 1. வணக்கம்
  தோட்டம் செய்வதுபற்றி தெளிவான விளக்கம் தந்தமைக்கு வாழத்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. இங்கு சிகப்புமுள்ளங்கி தான் அதிகமாக கிடைக்கிறது. சில நேரங்களில் தான் வெள்ளை முள்ளங்கி கிடைக்கும்.

  நன்றாக இருக்கிறது தோட்டத்தை பார்க்க. நாமே உற்பத்தி செய்து பார்த்து,சாப்பிடுவது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முயற்சிக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மேடம். இங்கே வெள்ளை முள்ளங்கி தான் பார்க்க முடிகிறது. விலை கூட கிலோ ஐம்பது ரூபாய் வரை இப்போது விற்கிறது. மற்ற காய்கறிகளை பார்க்கும் போது இப்போது இதன் விலை அதிகம் தான்.

   வீட்டு தோட்டத்தின் முக்கியமே நாமே விளைவித்து சாப்பிடுவது தான். நீங்க சொன்ன மாதிரி அதுல ஒரு திருப்தியும் சந்தோசமும் நிறையவே இருக்கு.

   Delete
 3. Good to see this. Congrats!

  ReplyDelete
 4. வாவ் சிவா சிவப்பு முள்ளங்கி சூப்பர். நன்றாக வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ப்ரியா. அங்கே தோட்டம் எல்லாம் இப்போ எப்படி இருக்கு. டூர் எல்லாம் முடிஞ்சதா? தனியா ஒரு மடல் அனுப்பறேன்.

   Delete
 5. taste எப்படினே இருக்கு.

  அண்ணே ஒரு urgent help.

  நம்ம வீட்டு மாமரத்திலயும் அதுக்கு பக்கதுல இருக்குற சப்போட்டா மரத்துலயும் பச்சை கலரு கம்பளி பூச்சி நிறைய வருது. தெரியாம உடம்புல பட்டு ஒரே அரிப்பு + வீக்கம். நேத்து மட்டும் கிட்டத்தட்ட 50 கம்பளி பூச்சிய கொன்னு இருப்பேன்...இன்னும் இருக்கு....

  என்னனே பண்ணலாம்? தேடி தேடி கொல்ல ரொம்ப நேரம் ஆகுது. short cut எதாச்சும் இருக்கா?

  ReplyDelete
  Replies
  1. ருசி வெள்ளை முள்ளங்கி மாதிரி தான். நன்றாக இருக்கிறது. பெரிதாய் வித்தியாசம் இல்லை.

   கம்பளி பூச்சியா? பொதுவா முருங்கையில் தானே வரும். இது வேற மாதிரி பச்சை கலரிலா. பொதுவா கம்பளி பூச்சி மாதிரி என்றால் ஒரு கம்பில் துணி சுற்றி மண்ணெண்ணெய் ஊற்றி தீ பந்தம் மாதிரி செய்து காட்டி காலி செய்வோம். கீழே அரவிந்த் சொன்ன மாதிரி சோப்பு தெளித்து பாருங்கள். ஆனால் அவ்வளவு எளிதாய் இடத்தை காலி செய்யுமா என்று தெரியவில்லை. சின்ன மரம் என்றால் நான் சொன்ன மாதிரி பந்தம் ஒன்றை வைத்து காட்டி காலி செய்யுங்க. அடிக்கடி மரத்தை நோட்டம் விடுங்கள். ஏதேனும் முட்டையோ, குஞ்சுகளோ கூட்டமாய் தெரிந்தால் அப்போதே எளிதாய் காலி செய்து விடலாம். சாணம் கரைத்து மரத்தில் மொழுகி விட்டும் பார்க்கலாம்.

   Delete
  2. கம்பளிப் பூச்சி மாமரத்தில் கூட வருங்க.....கடந்த இரண்டு வருட காலமாக வருடம் தவறாமல் வந்து கும்மியடித்து எங்களை சங்கடப் படுத்தியது இந்த பச்சைக்கலர் கம்பளிபூச்சி....ஆனா இந்த வருசம் அதனால் எங்களைத் தொல்லைப் பண்ண முடியாது ....ஏன்னா நாங்க மரத்தை அடியோடு வெட்டிட்டோம் (மரம் வெட்டியது வேற பிரச்சனையானால்....)

   Delete
  3. நெருப்பு பந்தத்திற்கு அவ்வளவு எளிதில் அவை சாகமாட்டாது...நான் டிரைப் பண்ணியிருக்கிறேன்...சூட்டை நன்றாக தாங்குகிறது....சோப்புத் தண்ணீரி தெளித்து முயற்சி பண்ணலாம்

   Delete
  4. சோப்புத் தண்ணீர் தெளிக்கும்போது மிகவும் தண்ணீராக இல்லாமல் சலவை சோப்பை கெட்டியாக கரைத்துக் கொண்டு தெளித்தால் பலன் இருக்கும்.. இல்லையென்றால் பூண்டு பெருங்காயம் பச்சைமிளகாயை அரைத்த கரைசலை தெளிக்கலாம்...

   Delete
 6. சிகப்புமுள்ளங்கி பார்த்தவுடன் சாப்பிடவேண்டும் போல உள்ளது , உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! நான் தற்போதுதான் தொடங்கி உள்ளேன் , உங்கள் ஆலோசானை பெற கை பேசி மூலம் தொடர்புகொள்கிறேன் ,,,

  ReplyDelete
 7. துணி துவைக்கும் சோப்பை தண்ணீரில் கரைத்து ஸ்ப்ரே செய்யவும், ஒரளவு கட்டுப்படும், முயற்சி செய்யவும்

  ReplyDelete
 8. சிவா!
  இதை இங்கு பச்சையாகச் சாப்பிடுவார்கள். குறிப்பாக புகையூட்டிய வற்றல் இறைச்சியுடன் சேர்த்து உண்பர். சற்று உறைப்புச் சுவையும்
  இருக்கும், Black Radish, இது மரவள்ளிக் கிழங்கு போல் இருக்கும். அதையும் பச்சையாகவே உண்பர்.
  ஆனாலும் உங்களுக்கு கிழங்குகள் நல்ல பெரிதாக விளைந்துள்ளன.

  ReplyDelete
  Replies
  1. நன்றி யோகன்.

   Black Radish-ஆ. கேரட் மாதிரி நீளமா இருக்குமா ? இங்கே நான் பார்த்ததில்லை. இந்த சிவப்பு, பொதுவாய் கிடைக்கும் வெள்ளை முள்ளங்கி மாதிரி தான். அதே ருசி, அதே மாதிரி சமையல் தான். வடிவம் மட்டும் தான் வித்தியாசம்.

   Delete
 9. தோட்டம் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

  http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2012/12/green-is-always-lush-on-other-side-of.html

  ReplyDelete
 10. Dear Siva,

  Good effort. Can I contact you on this for further info? pl send your email/contact info to akaasi at gmail

  ReplyDelete
  Replies
  1. Sure Kasi. I sent a mail. Please mail me with your details. We can talk

   Delete
 11. Hi Siva,

  It is an excellent home gardening, Can I know your address if you permit I would like to visit to try in my home in Chennai.

  Sincerely,

  Shanmugam.R

  ReplyDelete
  Replies
  1. Hi Shanmugam. We will meet some time for sure. Will mail later in detail. I am in Coimbatore.

   Delete
 12. Sir,
  Your all postings with pics are very nice. But the Red raddish, cauliflower,corn etc can be grown in Chennai climate? . Also it would be helpful for beginners like me, the method of seeding..

  Thanks in advance

  ReplyDelete
 13. Hi,

  You can grow this in Chennai Climate also. Radish are very normal plant only and can sustain any weather. If you are keeping in terrace, consider having any shareNet to minimize the heat (Particularly in Summer season).

  Regarding 'method of seedling', there is no trick or method to follow. For any seed, I use a Coir Pith + Vermi Compost in 1:1 ratio and spread it in the nursery tray. Just put the see in half depth of the tray. Water it everyday. Keep in mild sunlight for 2 -3 week. No specific method to know specific for any seed. I follow this for all the seed/plant I grow.

  ReplyDelete
 14. my plants are infected with MAAVU POOCHI... how to eradicate them?

  thanks in advance.

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் வேப்பெண்ணை கூட இரண்டு துளி Dishwashing Liquid-ம் கலந்து தெளித்து பாருங்கள். ரெகுலராக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தெளித்து பாருங்கள். பூச்சி குறைவாக இருந்தால் நாம் கைகளாலேயே அவைகளை நீக்கி விடலாம்.

   Delete