Monday, April 1, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – செடி அவரை


அவரையில் இரண்டு ரகங்கள் உண்டு. ஒன்று செடியில் காய்ப்பது (குத்து அவரை), இரண்டாவது கொடியில் காய்ப்பது (பந்தல் அவரை). செடி அவரை என்று ஒன்று இருப்பதை இங்கு கோவை விவசாய கல்லூரியில் தான் பார்த்தேன். எல்லாம் அறிவியல் வளர்ச்சி தான். இனி செடியில் புடலை, பாகற்காய் கூட காய்க்கலாம் :-).
கொடி வகைகளில் அவரை தான் ரொம்ப அடர்த்தியாக நிறைய இடத்தை நிரப்பிக் கொண்டு வளரும். ஆனால் நிறைய காய் கொடுக்கும். நீண்ட காலத்துக்கு அறுவடை எடுக்கலாம். செடி அவரை வளர்ப்பதில் நமக்கு பந்தல் தேவை இல்லை. தவிர விதைத்து இரண்டு மாதத்தில் காய் பறிக்கலாம்.   
அவரை செடியை ஒரு அடி இடைவெளியில் விதைத்தால் போதும். செடிக்கு ஐந்து, ஆறு கிளைகள் மட்டும் தான் வரும். ஒவ்வொரு கிளையிலும் பத்தில் இருந்து பதினைந்து காய் வரை கிடைக்கும். ஒரு பன்னிரண்டு செடி வைத்தால் ஒரு வீட்டுக்குப் போதுமானதாக இருக்கும்.
காய்கறிகளில் நிறைய பூச்சித் தாக்குதல், செடி அவரையில் தான் வருகிறது. இங்கே பொதுவாய் வரும் பிரச்சனை, அசுவினி போன்று சாறு உறுஞ்சும் பூச்சி. இவைகள் கூட்டமாய் செடியின் தளிர்கள், பூக்களில் இருந்து சாற்றை உறிஞ்சி செடியை வாடிப்போக வைத்து விடும். இது தவிர காய் துளைப்பான் பூச்சி தொந்தரவும் இருக்கிறது. இவைகள் காயில் துளை போட்டு அவரை விதையை சாப்பிடும். துளைபோட்ட அவரையை நாம் சமையலுக்கு பயன்படுத்த முடியாது. பறித்து தூர தான் போட வேண்டும். இயற்கை விவசாயத்தில் நிறைய பூச்சிக்கொல்லி முறைகள் இருக்கின்றன. வேப்பிலை, இஞ்சி, பூண்டு, மிளகாய் போன்றவைகளின் கலவையில் நிறைய மருந்து தயாரிக்கலாம். நான் இன்னும் இது போன்று ஆரம்பிக்கவில்லை. இந்த வருடம் முயற்சிக்க வேண்டும்.
இப்போதைக்கு நம்ம பூச்சிக் கொல்லி, சாம்பல் தான் :-). நிறைய எடுத்து தினமும் செடிமேல் தூவி வர, ஒரு வாரத்தில் எல்லாம் காணமல் போய் விடும். சாம்பல் பயன்படுத்துவது இயற்கை விவசாயத்தில் பரிந்துரைக்கப்படும் ஒன்றே. இங்கே என்  Office-க்கு இரண்டு வாரத்திற்கு முன்பு வந்திருந்த நம்மாழ்வார் ஐயாவும் சாம்பல் பயன்பாடு பற்றி கூறினார். சாம்பல் பயன்படுத்துவதால் செடிக்கோ, பூவுக்கோ எந்த பாதிப்பும் வராது. இப்போதைக்கு என்னுடைய முக்கியமான பூச்சிக் கொல்லி இது தான். 


 
 
 
 
 
 
 
 
 

28 comments:

 1. வீட்டில பறிச்ச காய்களை எடை போட மெஷின் வேற வைச்சிருக்கீங்களா? :) சூப்பருங்க! :)

  அவரை அருமை..மற்றகாய்களும் ப்ரெஷ்ஷா இருக்கு. என்ஜாய்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மகி.

   ஆமாம். சும்மா ஒரு சின்ன மெசின். அவ்ளோ தான். :-)

   Delete
 2. சுவையான பதிவு. கோடை காலத்தில் சிறு வீட்டுத் தோட்டம் வைப்பது உண்டு. அண்மையில் Pole Beans Bush Beans என்று இரு வகையில் எதைத் தேர்தெடுப்பது என்று எண்ணிவிட்டு, அவற்றின் தமிழ்ப் பெயர் என்னவாக இருக்கும் என்று எண்ணினேன். நீங்கள் குத்து வரை பந்தல் அவரை என்று குறிப்பது இவைதானா? போன கோடையில் பந்தல் அவரை? நன்கு வளர்ந்த பிறகு ஒரு வகைப் பூச்சி!! இவற்றின் தண்டை வெட்டி விட்டது. என்ன ஏது என்று தெரியவில்லை. முடிந்தால் தமிழ் விக்கிநூலில் (http://ta.wikibooks.org) வீட்டுத் தோட்டம் பற்றி ஒரு சிறு நூல் தொடங்கலாமே.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நற்கீரன் அவர்களே. ஆமாம். குத்து அவரையும் செடி அவரையும் ஓன்று தான். கொடி அவரையும் பந்தல் அவரையும் ஓன்று தான்.

   விக்கி பற்றி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை. பார்க்கிறேன். நூல் எழுதும் அளவுக்கு எனக்கு விவரம் தெரியாதே..

   Delete
 3. பூச்சிக் கொல்லி - சாம்பல் தான் என்பது முக்கியமாக தெரிந்து கொண்டேன்... நன்றி...

  அவரை பார்க்க பார்க்க பரவசமூட்டுகிறது... பாராட்டுக்கள்.... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். சாம்பல் நன்றாகவே வேலை செய்யும்.

   நன்றி.

   Delete
 4. விளைச்சல் மேலும் பெருகட்டும்..

  ReplyDelete
 5. அவரை பதிவு அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாலா அவர்களே.

   Delete
 6. இந்த அவரை வகைகளை இலங்கையில் போஞ்சி எனவும் கூறுவோம். இவற்றில் கொடி அவரை வகைகளே அதிகம். செடி வகை சிலவே.
  அத்துடன் வடஇலங்கையில் பிரபலமான பயத்தங்காய் எனவும் அதன் நீளம் கருதிக் குரங்குவால் பயத்தங்காய் என காரணப் பெயரிட்டழைக்கும் ஒரு வகைக் கொடி அவரையுள்ளது அது ஒவ்வொன்றும் ஒன்றரை அடி நீளமாக வரும். கட்டாயம் பந்தலிலேயே வளரவிடவேண்டும்.
  சாம்பல் பூச்சிகொல்லி, அதனால் தான் கோழி போன்ற பறவைகள் சாம்பல் குளிப்பதை அவதானித்திருப்பீர்கள், அத்துடன் உரமும் கூட.

  ReplyDelete
  Replies
  1. பயத்தங்காய் நாங்களும் சாப்பிட்டு இருக்கிறோம். ஆனால் அது உளுந்து மாதிரி ஒரு பயறு தானே?
   இது தவிர சாட்டவரை என்று ஒன்றும் உண்டு. அது ரொம்ப பெரியதாக, தடிமனாக இருக்கும்.

   ஆமாம். சாம்பல் குளிப்பது இதனால் தானா.. நல்ல தகவல்

   Delete
 7. அவரை இங்கே கிடைப்பதில்லை. பீன்ஸ் மட்டுமே. நற்கீரன் சொல்வதும் இக்ந்த பீன்ஸ் வகைகளைத்தான்.செடி பீன்ஸ், கொடி பீன்ஸ் ரெண்டும் வருது, அதிலும் கொடி பீன்ஸ் நல்லாவே காய்க்குது. வேலி ஓரமா விதைகளை நட்டால் நமக்கு வேலை மிச்சம்:-)

  தினம் தோட்டத்துக்குத் தண்ணீர் ஊற்றும்போது இதையும் போய் ஒரு நோட்டம் விடுவேன். கொஞ்சம் இளசா இருக்கும்போதே பறிச்சுடணும். தினம் கொஞ்சம் சேகரம் செஞ்சு ஃப்ரிட்ஜில் வச்சுருவேன். தேவையான அளவு ஆனதும் சமைக்க ஆரம்பிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி டீச்சர் .

   இங்கே பீன்ஸ் சுத்தமாக வருவதில்லை. விதை பிரச்சனையா என்று தெரியவில்லை. சில முறை முயற்சி செய்து பார்த்திருக்கிறேன்.,

   Delete
 8. வாவ்! செடி அவரை. வாழ்த்துகள்.

  பறித்திடுகின்றேன் காய்களை :))

  ReplyDelete
  Replies
  1. நன்றி மாதவி அவர்களே. இங்கே கோவை வந்தால் பறிக்கலாம் :-)

   Delete
 9. அவரை அருமை சுவையான பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. இனி சாம்பலை தேடி ஓடனும் என்று நினைக்கிறேன்...என் வீட்டு மாடியில் வைத்துள்ள சில செடிகளிலும் இந்த பிரச்சனை இருக்கு,முயற்சிக்கனும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் குமார். சாம்பல் தான் வழி. :-)

   Delete
 11. படமும் தகவலும் அருமை! சிவா! நன்றி!

  ReplyDelete
 12. பயத்தங்காய் நாங்களும் சாப்பிட்டு இருக்கிறோம். ஆனால் அது உளுந்து மாதிரி ஒரு பயறு தானே?

  இது உழுந்து மாதிரியல்ல!

  கூகிள் படங்களில் "பயத்தங்காய்" எனப் போட்டுத் தேடினால் 7,8 கொடியுடன், 9,11, 13 ஆவது படமாக உள்ளவை அவை. பார்க்கவும்.
  http://sinnutasty.blogspot.fr/2009/08/blog-post_15.html

  ReplyDelete
  Replies
  1. லிங்க் பார்த்தேன். இப்போது தெரிகிறது. இதை நான் இங்கும் பார்த்திருக்கிறேன். பகிர்தலுக்கு நன்றி யோகன்.

   Delete
 13. அவரை விதை எங்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா

  ReplyDelete
  Replies
  1. அவரை செடி விதைகள் பரவலாய் எல்லா விதை கடைகளிலும் கிடைக்கிறது. நீங்கள் எந்த ஊர் என்று சொல்ல முடியுமா?

   Delete