Monday, October 8, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – வெண்டை


தக்காளி, கத்தரி, மிளகாய்க்கு அடுத்தபடி வீட்டு தோட்டத்தில் எளிதாக வரும் ஒரு செடி வெண்டை. ரொம்ப உபயோகமான காய்கறி. விதைத்து சீக்கிரமே பலன் கொடுக்கும் செடியும் கூட. எல்லா காலத்திலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் காய்க்கும். 

வெண்டை விதை எல்லா உரக்கடைகளிலும், கோவை விவசாய கல்லூரியிலும் கிடைக்கும். நான் பொதுவாக ஊரில் இருந்து வாங்கி வருவது உண்டு. விதைத்து நாற்று எடுத்தும் நடலாம், நேரடியாகவும் நடலாம். செடிக்கு ஒரு அடி இடைவெளியில் நட வேண்டும். வீட்டு உபயோகத்திற்கு 12 செடிகள் நட்டால் போதுமானதாக இருக்கும்.

வெண்டை நான்காவது இலை வரும் போதே மொட்டு வைத்து பூக்க ஆரம்பித்து விடும். விதைத்து இரண்டாவது மாதத்திலேயே நமக்கு வெண்டைக்காய் கிடைக்க ஆரம்பித்து விடும். ஒரு செடி கிட்டத்தட்ட 7 அடி உயரம் வரை  வளரும். ஒரு செடியில் 20 ல் இருந்து 25 காய் வரை கிடைக்கும் (500 gms). 12 செடியில் இருந்து வாரம் நமக்கு 400 – 500 கிராம் வரை 3 மாதம் வரை தொடர்ந்து கிடைக்கும். 12 செடியில் இருந்து மொத்தம் 5ல் இருந்து 6 கிலோ வரை மகசூல் எடுக்கலாம்.

பொதுவாக வெண்டையில் மாவு பூச்சி போல சாறு உறிஞ்சும் வெள்ளை பூச்சி வருகிறது. இதை கண்டு கொள்ளாமல் விட்டால் இந்த பூச்சி சாற்றை உறிஞ்சுவதால், செடியில் குருத்து காய்ந்து விடுகிறது. செடியின் வளர்ச்சி அதோடு நின்று விடுகிறது. வீட்டு தோட்டம் என்பதால் நாம் லேசாக ஒரு குச்சியை வைத்து அந்த பூச்சிகளை தட்டி விட்டால் செடிகளை காப்பாற்றி விடலாம். நான் பூச்சி மருந்து என்று இது வரை ஒன்றும் முயற்சிக்கவில்லை.

சரியான நேரத்தில் பார்த்து வெண்டைக்காயை பறிக்க வேண்டும். ஒரு நாள் கூட விட்டாலும் காய் முற்றி விடும். 

வெண்டைக்காயின் பயன் என்று பார்த்தால் (விக்கியில் இருந்து), ஞாபக சக்தியை தூண்ட வெண்டைக்காயை சமையல் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரத்தத்தை சுத்தமடையச் செய்து அதனைச் சீராக செயல்படச் செய்கிறது.  இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களைக் கரைக்கிறது.   இரத்த அழுத்தத்தைப் போக்கி இதய அடைப்புகளைத் தடுக்கிறது. 

என் தோட்டத்தில் இருந்து சில படங்கள்,

 
 
 
 
 
 
 
 


28 comments:

  1. useful blog helpful informations.

    I like gardening.. since living in an apartment couldn't keep much plants

    selvi

    ReplyDelete
    Replies
    1. நன்றி செல்வி அவர்களே. Apartmentல் தொட்டியில் முடிந்த அளவு செடி வளர்க்கலாம். நான் சென்னையில் இருந்த பொது வெண்டைக்காய் அப்படி தான் வளர்த்திருக்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்.

      Delete
  2. மிக மிக உபயோகமான படங்கள் பார்த்த உடன் தோட்டம் போட வைக்கும் முயற்றில் இறங் கிவிட்டேன் நன்றி நட்புடன் நக்கீரன்

    ReplyDelete
    Replies
    1. கேட்க ரொம்ப சந்தோசம் நக்கீரன். தோட்டம் போட்டவுடன் ஒரு தகவல் சொல்லிருங்க :-)

      Delete
  3. சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.

    http://pnaptamil.blogspot.com

    ReplyDelete
  4. எங்க வீட்டிலும் ஒரு பருவம் வெண்டை விவசாயம் முடிச்சு,நல்ல பலன் கிடைச்சது.

    அருமையாயிருக்கு உங்க தோட்டம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி..

      அப்படியா.. உங்க வீட்டு தோட்டத்தில் இருந்தா..சூப்பர்.வேற ஏதும் வளர்க்கிறிர்களா?

      Delete
  5. நல்ல பகிர்வு... பலருக்கும் பயன்படும்... நன்றி...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_9.html) சென்று பார்க்கவும்...

    நேரம் கிடைத்தால் என் தளம் வாங்க... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் அவர்களே. வலைசரம் பார்த்தேன். வந்து எனக்கு தெரிவித்ததற்கு ரொம்ப நன்றி. சந்தோசமாக இருக்கிறது.

      Delete
  6. அன்புள்ள திரு சிவா அவர்களுக்கு வணக்கம்.

    உங்கள் தோட்டக்கலை பற்றிய இரு கட்டுரைகளை வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_9.html

    மிகச் சிறப்பாக எழுதுகிறீர்கள்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என் தோட்டம் வலைத்தளம் பற்றி இனிய அறிமுகத்துக்கு நன்றி அம்மா. எனக்கு பிடித்த தோட்டம் பற்றி எனக்கு தெரிந்த சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி.

      அன்புடன்,
      சிவா

      Delete
  7. hello sir, i hav b'come a fan of ur blog..very useful..i too have a good kitchen garden. but i coudn't get all the seeds..
    jasmine,calicut

    ReplyDelete
    Replies
    1. Thanks Madam for your visit and comment. Regarding seeds, I am able to get most of the seeds from some exhibition and from Tamil Nadu Agri University here in Coimbatore. I used to get some other seed from fertilizer shops in my native place. Let me know if you need any seed. I can try to help you.

      Delete
  8. வணக்கம்.

    நான் வாழ்க்கையில் இதுவரை வெண்டைக்காய்
    செடியைப் பார்த்ததே இல்லை. முதல் முறையாக
    உங்கள் வலைக்குள் பார்த்தேன். மிக்க நன்றி.
    வெண்டைக்காய் இங்கே (பிரான்சு) குளிர் தேசத்தில் விளையுமா...?

    பதிவு அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அருணா அவர்களே. குளிர் பிரதேசம் பற்றி ஐடியா இல்லை. பொதுவாக குளிரில் செடிகள் கொஞ்சம் கஷ்டம் தான். அதற்க்கு ஏற்ற மாதிரி செடி/காய்கறிகள் முயற்சிக்கலாமே (காரட் மாதிரி)

      Delete
  9. சிவா!
    உண்மையிலேயே உங்கள் படங்களைப் பார்த்துப் பேரானந்தமடைந்தேன். வெண்டி விதைகளை நாட்டிவிட்டு அது முளைக்கக் காத்திருப்போம். படிப்படியாக உங்கள் படங்கள் என்னை 45 வருடங்களுக்கு முன் கூட்டிச் சென்றது.
    தொடர்ந்து செய்யுங்கள் இவை மனதுக்கும் இதம் உடலுக்கு வலுத் தரும் பயனுள்ள பொழுதுபோக்கு!

    அருணா செல்வம் அவர்களுக்கு!
    இங்கு பலர் தோட்டம் செய்கிறார்கள், சிலர் வெண்டி,பாகல், புடலை செய்துள்ளார்கள். இங்கும் வரும்-
    ஆனால் மாசிக் கடைசியில் குளிர் அடங்கி வெப்பநிலை +5 பாகை இருக்கும் போது விதைகள் நடவேண்டும் , முதல் சூரியவெளிச்சத்துக்குள் முளைவந்து விட்டால் வைகாசியிலிருந்து பூப்பூக்கும்,.
    சில சமயம் கோடை முன்னுக்குப் பின்னுக்கு ஆனால் குளிரினால் இளம் கன்றுகள் சோர்ந்து விடும்
    அவற்றைத் தவிர்க்க சிலர் பிளாஸ்ரிக் கூடாரமிடுவர்.
    இல்லாவிடில் வீட்டின் உள் சிறு சாடிகளில் விதையைப் போட்டு யன்னலோரம் வைத்து மாசி மாதம் வளர்க்கத் தொடங்கினால் பங்குனிக் கடைசியில் 4 - 5 இலையுடன் கன்றுகள் தண்டு தடித்து இருக்கும், அவற்றை பங்குனி கடைசி சித்திரை முதல் வாரத்தில் நிலத்தில் நட்டால் குளிரைத் தவிர்க்கலாம். சித்திரைக் கடைசியில் பூ பூக்கத் தொடங்கும். குளிர் பற்றி அஞ்சத்தேவையில்லை.
    முயற்சி செய்து பார்க்கவும்.
    பாரிசில் என் வீட்டு மாடத்தில் சாடியில் பாகற்காயும், பச்சமிளகாயும் காய்த்தது.




    ReplyDelete
    Replies
    1. உங்கள் கமெண்டை படிக்க ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. எனக்கு நேரம் கிடைக்கும் போது முடிந்த அளவுக்கு எதாவது எழுதுகிறேன். உங்கள் பதில்கள் எனக்கு மிகவும் ஊக்கம் கொடுக்கிறது. நன்றி.

      Delete
  10. விதைத்து எத்தனை நாள்களில் செடி துளிர்விடும்

    ReplyDelete
    Replies
    1. ஒரு வாரத்தில் அவரை, வெண்டை எல்லாம் முளைத்து விடும்.

      Delete
  11. முயற்சி செய்தேன், இந்த பக்கத்தில் உள்ள முதல் படம் போல செடி வந்துள்ளது, ப்ளாஸ்டிக் டப்பாவில் வைத்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்லது கணேஷ். கடைசியாக வெண்டை காய்த்தா?

      Delete
  12. sir,
    yenga veetu maadi thottathula kathirikkai, kotthavarai, kaaramani , chedi avarai, pookkal mattume ullathu. sila natkal kalithu pookkal kotti vidugirathu, yentha kaayum varavillai, kaaranam veyila allathu veru yethum unda. theriviyungal.

    ReplyDelete
    Replies
    1. மணலில் சத்து குறைவாக கூட இருக்கலாம். எந்த மாதிரி கலவை எடுத்தீர்கள். தவிர எத்தனையாவது மாறி? காற்று அதிகமாக இருக்குமோ?

      Delete
  13. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete