Saturday, July 18, 2015

விகடனில் ‘தோட்டம்’ வலைப்பூ

நண்பர்களுக்கு வணக்கம். இந்த வாரம் அவள் விகடன், வீட்டுத்தோட்ட சிறப்பிதழாக வந்திருக்கிறது. அதில் ‘பூத்துக் குலுங்க வழிகாட்டும் ‘தோட்டம்’ வலைப்பூ’ என்ற தலைப்பில் எனது தோட்டம் ப்ளாக் பற்றி ஒரு பக்கத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். இந்த வாரம் அவள் விகடன் முடிந்தால் வாங்கி பாருங்கள்.

விகடனில் இருந்து என்னை தொடர்பு கொண்டு வீட்டுத்தோட்ட சிறப்பிதழாக வரும் இதழ் வர இருப்பதாக கூறி நமது ப்ளாக் பற்றி விவரம் கேட்டார்கள். இந்த சீசன் செடிகள் இப்போது தான் நாற்றாக நிற்பதால் படம் எடுக்க முடியவில்லை. போன சீசனின் படங்களையே கொடுக்க வேண்டியதாகி விட்டது. இந்த அளவுக்கு இந்த வலைப்பூவை கண்டு கொண்ட விகடன் குழுவிற்கு மிக்க நன்றி.   

இங்கே கோவை வந்த பிறகு தோட்டம் ஆரம்பித்த போது, ஆர்வத்தில் எடுத்த படங்களை ஒரு வலைப்பூ ஆரம்பித்து போடலாமே என்று ஆரம்பித்து, நண்பர்கள் உங்கள் ஆதரவில் இந்த அளவுக்கு இந்த வலைப்பூ வளர்ந்திருக்கிறது. இந்த அளவுக்கு ஊக்கம் கொடுத்த வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


 
நன்றி : விகடன்

80 comments:

 1. ஆஹா.... மகிழ்ச்சி! மனம் நிறைந்த இனிய பாராட்டுகள். மேலும் தோட்டம் வளரட்டும்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி டீச்சர் :)

   Delete
 2. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே :)

   Delete
 3. Replies
  1. நன்றி நண்பரே :)

   Delete
 4. வணக்கம்
  வாழ்த்துக்கள் நண்பரே.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே :)

   Delete
 5. Replies
  1. நன்றி நண்பரே :)

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே. ஒரு சின்ன வேண்டுகோள். கமெண்ட் கொடுக்கும் போது உங்கள் தொலைபேசி எண்ணை கொடுக்காதீர்கள். சிலரது கமெண்டுகளை இதனாலேயே அப்படியே போடாமல் விடவேண்டிய இருக்கிறது. உங்கள் ப்ரைவசி நம் ப்ளாக்கால் கெட கூடாது. இல்லையா.

   Delete
 7. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 8. anbula siva aval vikatan padithom mika magilchi ungal muyarchiku miguntha paratukal

  ReplyDelete
 9. சிவா அண்ணா வணக்கம்
  ரொம்ப சந்தோசம் அண்ணா....... என்னவோ நாங்கள் விகடன்ல வந்தது மாதிரி பெருமையா இருக்கும்.... வாழ்த்துகள் அண்ணா.......

  ReplyDelete
  Replies
  1. நன்றி இசக்கி முத்து.

   Delete
 10. Continue your service. Very very interesting.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் சிவா...

  ReplyDelete
 12. வணக்கம், வீட்டுத் தோட்ட சிறப்பிதழ் என விளம்பரம் கண்டு அவள் விகடன் வாங்கினேன். அதில் தங்களைப் பற்றிய பதிவினைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. உங்களின் வலைப்பூ நெடுந்தொடர் என்றால், விகடன் சிறப்பிதழோ 'டைடில் கார்டு' போல் இருந்தது. சிறப்பிதழ் சிறப்பாக இல்லை என்பதே என் கருத்து.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே.

   விகடன் சிறப்பிதழில் இன்னும் கொஞ்சம் விவரம் எதிர்பார்த்தேன். சின்னதாய் ஒரு இணைப்பாக வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் விவரங்கள் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

   Delete
 13. நான் மாடியில் கத்தரிக்காய் தக்காளி தலா பத்து செடி வைத்து 65. நாள் ஆகிறது பூக்கள் அனைத்தும் காய்ந்து விடுகிது. 15. நாளைக்கு ஒரு முறை பஞ்சகவ்வியம் தெளிக்கிறேன் இயற்கை உரம் மும் கொடுக்கிறேன் பிஞ்சு கள் விட என்ன செய்வது.செடிகள் நன்றாக. வளர்ந்துள்து. மாவு பூச்சி உள்ளது 3G கரைசல் ம் தெளித்தாகி விட்டேன். கட்டுப்பாடு இல்லை. ஆலோசனை வழங்குக

  ReplyDelete
  Replies
  1. 3G கரைசளுக்கெல்லாம் பூச்சிகள் அசைந்து கொடுப்பதில்லை. நானும் முயற்சித்து பார்த்திருக்கிறேன். பூ காய்ந்து விடுகிறதா, இல்லை உதிர்ந்து விடுகிறதா?. பஞ்சகாவ்யா தெளிப்பதால் சரியாகி விடும் என்று கூறமுடியாது. மாவுப்பூச்சியை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்துவது எளிது. முடிந்த அளவுக்கு ரொம்ப பாதித்த இலைகளை நீக்கி அழித்து விடுங்கள். 5 மி.லி வேப்பெண்ணையை ஒரு லிட்டரில் கலந்து இரண்டு சொட்டு dish washer liquid விட்டு வாரம் இருமுறை தெளித்து வாருங்கள். நிறைய பரவி இருந்தால் கட்டுப்படுத்துவது கொஞ்சம் கடினம் தான். முயற்சித்து பாருங்கள்.

   Delete
 14. இனிய வாழ்த்துகள். வீட்டுத் தோட்ட சிறப்பிதழ் வீட்டுத்தோட்டம் போடும் ஆவலை அதிகமாக்கிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி. சீக்கிரம் உங்கள் வீட்டுத் தோட்டத்தை ஆரம்பியுங்கள்.

   Delete
 15. வாழ்த்துகள் அண்ணே...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சேர்ம ராஜ்

   Delete
 16. வாழ்த்துக்கள் நண்பரே ... உங்கள் தோட்டம் இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள். நான் கிராமம் இயற்கை விவசயம் செய்ய இயலை வில்லை . இங்கு உள்ள மக்கள் ரசாயன உரத்தையும் ,பூச்சி மருந்தையும் தெய்வமாக நினைகிறார்கள் . என்னை பைத்தியம் என்கிறார்கள் . வயலுக்கு மாட்டு சாணம் மட்டும் போட்டு சாகுபடி பண்ண நினைத்தாள் ஏன் யுரிய போடாமல் . வீண் செலவு செய்கிறான் என்கிறார்கள் .

  ReplyDelete
  Replies
  1. விவசாயத்தை ஆர்வமாய், ஈடுபாட்டோடு செய்யும் விவசாயிகள் குறைவாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான திட்டங்களோ, உதவிகளோ பெரிதாய் நம் அரசு செய்வதில்லை. பெய்யும் மழை எல்லாம் வீணாய் கடலில் போய் கலக்க, அதை காக்க பெரிய திட்டம் ஏதும் இல்லை. எல்லோருமே கிடைக்கும் ரசாயன உரங்களை போட்டு முடிந்த அளவுக்கு விளைச்சல் எடுத்து லாபம் பார்த்தால் போதும் என்ற நிலைமை தான் இருக்கிறது.யாருக்கும் பொறுமையாய் முயற்சி எடுத்து, நேரம் செலவழித்து விவசாயம் பார்க்க ஆர்வம் இல்லை. அதற்குண்டான சப்போட்டும் இங்கு இல்லை. அதனால் உங்களை அப்படி தான் சொல்வார்கள். நீங்கள் திருப்தியாய் செய்யுங்கள். நல்ல பலன் கிடைக்க வாழ்த்துகள்.

   Delete
 17. சென்னையி ல் என் பெண் வீட்டுத் தோட்டத்தில் 7,8 வருஷமாக ஒரு நாரத்தை மரம்,நாரத்தையில்லை சாத்துக்குடியாம். வளர்ந்து நிற்கிறது. பூக்கவும் இல்லை காய்க்கவும் இல்லை. செழிப்பாக நீண்ட முட்களுடன் ஓங்கி உயர கிளைபரப்பி வளர்ந்துள்ளது. என்ன செய்யலாம். ஏதாவது யோசனை உண்டா?அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. 8 வருடமாய் ஒன்றுமே பூக்கவில்லை என்றால் அந்த நாற்றின் தன்மையாக கூட இருக்கலாம். இப்போது பெரிதாய் ஏதும் செய்ய முடியுமா என்று தெரியவில்லையே சகோதரி. அது விதை ஏதும் போட்டு வளர்த்தார்களா இல்லை நர்சரியில் வாங்கியதா?

   Delete
 18. வாழ்த்துக்கள் ! வலையுலகில் மட்டுமல்லாமல் இப்போது மக்களிடமும் போய் சேர்ந்துவிட்டது உங்க தோட்டம். சந்தோஷமா இருக்கு !

  வாழ்த்தை சொல்லிவிட்டு சும்மா போகக் கூடாதே, அதனால் ஒரு சின்ன கேள்வி. பாவக்காக் கொடியில் நிறைய பூக்கள் பூக்கின்றன, ஆனால் காய்ப்பதில்லை, இப்போதைக்கு எங்கள் ஊரில் சரியான வெயில்தான், எதனால் இப்படியிருக்கும் ? அது முளைத்ததே எனக்கு ஆச்சரியம்தான், காய்த்தால் கூடவே சந்தோஷமும் சேர்ந்துகொள்ளும் :)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

   பாவல் காய் மொட்டு வைக்கிறதா? இல்லை வெறும் பூ மட்டும் தான் பூக்கிறதா? காய் மொட்டு வைத்தால், பூப்பதற்கு முன்பே வெம்பி விடுகிறதா? காய் மொட்டே வைக்கவில்லை என்றால் விதையின் தன்மை குறைந்ததாக கூட இருக்கலாம்.

   Delete
  2. மொட்டு வைத்துதான் பூக்கிறது, ஆனால் காய் வராமல் பூ கொட்டிடுது. நீங்க சொல்ற மாதிரி தன்மை குறைந்ததுதான் கரெக்ட். விதை வாங்கிப் போடவில்லை. கடையில் இருந்த காய்களில் பழுத்து வெடித்திருந்ததை எடுத்து வந்து போட்டேன். இன்னும் சில நாட்கள் பார்த்துவிட்டு பிடுங்கி விடுகிறேன். தகவலுக்கு நன்றி சிவா.

   Delete
  3. ஹைய்ய்யோ, இன்னிக்கு பாவக்கா செடியில் குட்டிக்குட்டி பாவக்காய்கள் வந்திருக்கு. என்னதான் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டிலிருந்து விதவிதமா பாவக்காய்கள் வாங்கி வந்தாலும் வீட்டில் காய்க்கிறது எனும்போது ஒரு சந்தோஷம், அதான் வந்து சொல்லிட்டுப் போறேன்.

   Delete
  4. உங்கள் சந்தோசம் உங்கள் எழுத்துகளிலேயே தெரிகிறது :) . அதே செடி தான் காய்த்திருக்கிறதா? ரொம்ப சந்தோசம். எப்படி அறுவடை வந்திருக்கிறது என்று பறிக்கும் போது கூறுங்கள்.

   Delete
  5. சந்தோஷம்தான், நிச்சயமா வந்து சொல்றேன் :)

   இது மிதி பாவக்காய். அதே செடியில்தான் காய்க்கிறது. இரண்டு விதமான பூக்கள் பூக்கின்றன. ஒன்று கொட்டிவிடுகிறது, மற்றொன்று காயாகிறது.

   Delete
  6. நிறைய கொடிவகைகளிலும் வெறும் பூ மொட்டு, காய் கொட்டு (காம்பில் காயோடு ) என்று வரும். காய் மொட்டும் பூத்து சரியாக மகரந்த சேர்க்கை நடந்தால் தான் பிஞ்சி பிடிக்கும்.

   Delete
 19. வாழ்த்துகள்.....

  ReplyDelete
 20. வணக்கம் நாண் 12 Grow bag தயார் செய்ய சிமென்ட் சாக்கு நிறைய தேங்காய் நார் கழிவு 2 சாக்கு. மண்புழு உரம் 2 சாக்கு. மணல் 2 சாக்கு ம் வைத்துள்ளேணன். இதனுடன் உயிர் உரம் கலக்க வேன்டுமா. என்ன என்ன கலக்க வேன்டும். எவ்வளவு அளவு கலக்க வேன்டும். வேறு முறைகள் ஏதும் இருந்தாலும் தெரிவிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. இந்த பதிவை பாருங்க

   http://thooddam.blogspot.in/2014/01/blog-post.html

   உயிர் உரம் என்று தனியாய் கலக்க வேண்டியதில்லை.

   Delete
 21. Aval vikatan padithapinbu thaan ungal thooddam valaipoo patri arithen. Neengal kovaiyil irupathu arinthu ennum magilchi. Naan epothu thaan maadi thotam arambikiren. Viraivil ungal thotathai parka virumbukiren.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி.

   கண்டிப்பாய் தோட்டத்தை பார்க்க வாங்க. தனிமடல் ஓன்று அனுப்பி விடுங்க.

   Delete
 22. congrats i am a follower of your blog i am very happy to see your interview in aval vikatan.After seeing your blog i am very much interested in gardening. It gives so much refreshment to my mind on seeing your garden fruit, veg,flowers photographs

  ReplyDelete
 23. மிக்க மகிழ்ச்சி .மனமார்ந்த வாழ்த்துக்கள் இது உங்களுடைய உழைப்பிற்கும் ,ஆர்வத்திற்கும் கிடைத்த வெற்றி தொடரட்டும் ..

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே. உங்களை அக்ரி இன்டெக்ஸ்-ல் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எனக்காக ஊரில் இருந்து விதைகள் எடுத்து வந்ததை பார்த்த போது ரொம்ப சந்தோசம். சீக்கிரம் ஒரு நாள் மீண்டும் சந்திப்போம்.

   Delete
 24. மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் தோட்டம் வளரட்டும்!

  ReplyDelete
 25. வாழ்த்துக்கள்! தோட்டம் இன்னும் பல்கிப் பெருகிச் செழித்து வளர்ந்து வளம் தரவும், உங்கள் சேவை தேவையுள்ளோரைச் சென்று சேரவும் இனிய வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
 26. வா.வ்!! அவள் விகடனில் உங்கள் ப்ளாக் அறிமுகமாயிருப்பது மகிழ்ச்சி. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சிவா.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ப்ரியா. டூர் எல்லாம் முடிச்சிட்டு வாங்க. பேசலாம்.

   Delete
 27. வாழ்த்துகள்

  ReplyDelete
 28. உங்கள் பதிவு அவள் விகடனில் அங்கீகரிப்பட்டதைப் படித்து மகிழ்ச்சி வாழ்த்துக்கள்... உங்களின் பதிவுகள் படி எங்கள் மாடித் தோட்டமும் தயாராகி வருகிறது... நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி எழில். உங்கள் புதிய மாடி தோட்டம் நன்றாக வர வாழ்த்துக்கள். ஏதும் உதவி, விவரம் தேவைபட்டால் கூறுங்கள்.

   Delete
 29. விகிடனில் உங்கள் தோட்டம் பற்றி படித்தேன்,பின் உங்கள் வலைப்பூ பார்த்தேன்,மிக அருமை.
  இந்த ஆடி 18ல் விதை போட மண்ணை தயார் படுத்தி கொண்டு இருக்கிறேன். மண் புழு உரம் இங்க கிலோ 40ருபாய். எனது கேள்வி என்னவென்றால், மீன் கழிவுகளை(குடல்....) மண்ணுக்குள் போடலாமா? மண்ணுக்கு அது உரமா?

  ReplyDelete
 30. நன்றி நண்பரே. நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்?

  மீன் கழிவுகளை மண்ணில் போட்டால் உரம் ஆகாது. மீன் கழிவுகளை பயன்படுத்தி மீன் அமிலம் தயாரிப்பார்கள். அவை செடிகளுக்கு தெளித்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும். மீன் அமிலம் என்று கூகிள் செய்து பாருங்கள். விவரம் கிடைக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி சகோதரா. நான் மீனாக்ஷி சிவகாசி ல் வசிக்கிறேன்.

   Delete
 31. அவள் விகடன் செய்தியை பார்த்துவிட்டு உங்கள் வலைப்பூவை கண்டுகொண்டேன். புதிதாக மாடி தோட்டம் ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் பதிவுகள் மிகவும் உபயோகப்படும். வாழ்த்துகளும் நன்றிகளும்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே. ஏதும் தகவல், உதவி தேவைபட்டால் கூறுங்கள்.

   Delete
 32. வாழ்த்துக்கள்ங்ணா..அவள் விகடன்ல உங்கள் வலைப்பூவை படிச்சங்ணா உங்கள் வலைப்பூவும் அருமையா இருக்குதுங்க.எங்க வீட்ல கொஞ்சமா கீரை போட்ருக்ற நேரத்ல ரொம்ப உபயோகமா எங்க்ளுக்கு இருக்கும்.திருப்பூர் சரவணக்குமார்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சரவணக்குமார். கீரையை அறுவடைக்கு முன்னமே இன்னும் இரண்டு தொட்டிகளில் விதை போட்டு வந்தால் நமக்கு தடை இல்லாமல் கீரை கிடைத்துக்கொண்டே இருக்கும். ஏதும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

   Delete
 33. உங்கள் அனுபவபதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது அண்ணா

  ReplyDelete
  Replies
  1. நன்றி சண்முகம் :)

   Delete
 34. தோட்டம் வலைப்பூ வாசத்தின் எல்லை விரிவடைந்திருக்கிறது. மகிழ்ச்சி.

  ReplyDelete