Sunday, March 23, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – முள்ளங்கி

நமது மாடி தோட்டத்தில் இருந்து முதல் அறுவடை. சிறிய அளவிவில் ஒரு சோதனை முயற்சியாக சில காய்கறிகளை மட்டும் வைத்து தொடங்கி இருந்தேன். இதில் கீரைகள் ரொம்பவே எளிதாகவும், வேகமாகவும் வளர்கிறது. பாலக்கீரை, பருப்புக்கீரை, அரைக்கீரை மூன்றையும் கீரைக்கான பெரிய பைகளில் போட்டிருந்தேன். ரொம்ப செழிப்பாக வந்திருக்கிறது.

அடுத்து முள்ளங்கி. நான் இதுவரை கிழங்கு வகைகளில் உருளை, கேரட், பீட்ரூட் முயற்சி செய்திருக்கிறேன். இதில் பீட்ரூட் மட்டும் சொதப்பியது. பொதுவாய் கிழங்கு வகைகளை தரையில் விதைக்கும் போது மண்ணின் தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது. மண் இறுகி இருந்தால் சரியாக வருவதில்லை. நாம் மாடிதோட்டத்தில் Coir Pith Based media பயன்படுத்தும் போது இது போன்ற கிழங்கு வளர ரொம்ப எளிதாய் இருக்கிறது. மண் இறுகிப்போகும் பிரச்னை இருப்பதில்லை.

முள்ளங்கியை நான் இப்போது தான் முதன்முறையாக முயற்சி செய்கிறேன். முள்ளங்கி விதைகள் எளிதாகவே கிடைக்கிறது. (இப்போது கிடைத்த Do it Yourself Kit-ல் கூட ஒரு பெரிய பாக்கெட் இருக்கிறது). முள்ளங்கியை நேரடியாகவே நடலாம். ஒவ்வொரு செடிக்கும் அரை அடி இடைவெளி இருந்தால் போதும். நான் முதலில் சின்னதாய் ஒரு பையிலும் (மொத்தம் எட்டு செடிகள்), பிறகு ஒரு நீண்ட பையிலும் (மொத்தம் 24 செடிகள்) போட்டு விட்டேன்.

நீங்கள் படத்தில் பார்க்கும் நீண்ட பை, 3 அடிக்கு 1 ஒரு அடி அளவுள்ளது. இது சாதாரணமாக சப்போட் இல்லாமல் வைக்க முடியாது. இங்கே அதனால் நான் சின்னதாய் ஒரு டிசைன் போட்டு, இங்கே நமது நண்பர் ஒருவரின் சிறிய தொழிற்சாலையிலேயே கொடுத்து செய்து வாங்கி கொண்டேன். இந்த Frame Structure வைத்து நாம் இன்னும் பெரிய பைகள் கூட (பத்து அடி நீளம் கூட) அமைக்க முடியும். இந்த Frame-களை சில கம்பெனிகள் பையோடு சேர்த்தே விற்கின்றன. ஆனால் விலை மிக அதிகமாக இருக்கிறது. 



 முள்ளங்கியின் முளைப்பு திறன் நன்றாகவே இருக்கிறது. கிட்டதட்ட எல்லாமே முளைத்து வளர்ந்தது. முள்ளங்கியின் ஒரு சிறப்பு, முளைத்து இரண்டு மாதத்திலேயே நமக்கு அறுவடைக்கு வந்துவிடுகிறது. கேரட் மாதிரி மாத கணக்கில் காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. செடிகள் முதலில் இருந்தே செழிப்பாக வளர்ந்தது. கொஞ்ச நாளில் கிழங்கு உருவாவது மேலேயே தெரிய ஆரம்பித்தது. முள்ளங்கி கிழங்கு கொஞ்சம் வெளியே தெரியும் படியே வருவதால் நமக்கு வசதி. கிழங்கு அறுவடைக்கு தயாரா என்பதை நாம் கண்ணால் பார்த்தே, வேண்டும் போது பிடுங்கி கொள்ளலாம்.       

ஒரே ஒரு முறை சின்ன பையில் இருந்த செடியில் பூச்சி தாக்குதல் இருந்தது. ஆரஞ்சு நிறத்தில் கருப்பாய் புள்ளி போட்ட சின்னதாய் வண்டுக் கூட்டம். எல்லா இலைகளையும் எக்கச்சக்க முட்டைகளை போட்டு இருந்தன. இப்போது வேப்பிலை சாறு, இஞ்ஜி சாறு எல்லாம் தெளித்து பார்த்து அலுத்து விட்டது. (இதில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய இருக்கிறது). ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்து மொத்தமாய் எல்லா செடியின் இலைகளையும் கையால் கழுவி விட்டுவிட்டேன். பிரச்னை முடிந்தது. அதன் பிறகு வரவே இல்லை. ( இந்த அவரை செடியில் பூச்சிகளுடன் போராட்டம் இந்த வருடம் அதிகமாகவே இருக்கிறது. எங்கே இருந்து தான் செடியை கண்டுபிடிக்கின்றன என்று தெரியவில்லை. நானும் குப்பையை அள்ளி போட்டு பார்த்தேன், இஞ்ஜி சாறு தெளித்து பார்த்தேன், சோப்பு நீர் தெளித்து பார்த்தேன். ஒன்றும் வேலைக்காகவில்லை. நண்பர்கள் விவரம் தெரிந்தால் உதவுங்கள்).     

முள்ளங்கி கிட்டதட்ட கேரட் வகை போல இருந்தாலும், செடி இரண்டுமே வேறு வேறாய் தான் இருக்கிறது. முள்ளங்கியை ரொம்ப எளிதாய் வரும் காய்கறிகளில் நிச்சயம் குறிப்பிடலாம். இப்போது எங்கள் வீட்டு சமையலில் முள்ளங்கி சாம்பார் நிரந்தமாய் விட்டது. அறுபது நாளிலேயே விளைச்சல் வருவதால், கொஞ்சம் திட்டமிட்டு வளர்த்தால் வருடம் முழுவதும் வீட்டுக்கு தேவையான முள்ளங்கியை எளிதாக எடுக்கலாம்.














36 comments:

  1. It is a good yield sir u can use the leaves as greens they r very tasty too.,

    ReplyDelete
  2. Great sir, u can use the leaves as greens they r also very tasty

    ReplyDelete
    Replies
    1. Thanks Madam. We haven't tried the greens. But planning to give a try this time. Thanks for the suggestion :-)

      Delete
  3. அருமையான முயற்சி..பாரட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜேஸ்வரி மேடம்

      Delete
  4. எவ்வளவு பொறுமையாக முயற்சி செய்து, அழகாக வளர்த்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. முள்ளங்கி கீரையும் சமைத்து சாப்பிடலாம். நம் வீட்டுத்தோட்டத்தில் என்றால் தனி சிறப்புதான்.
    பார்க்கவே அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி மேடம். கீரையாக இதுவரை சமைத்து பார்க்கவில்லை. உண்மை தான். வீட்டுத் தோட்டம் என்றால் சிறப்பு தான். கடையில் வாங்கி சமைக்க ஒருவித பயம் இருக்கும் (அவர்கள் அடிக்கும் பூச்சி மருந்துகள் இலைகளில் தான் அதிகம் உறிஞ்சி கொள்ளும். அதனால்). வீட்டில் நாம் இயற்கையாய் விளைவிப்பதால் கண்டிப்பாக செய்து பார்கிறேன்.

      Delete
  6. மாடி தோட்டம் பற்றிய தகவல்களுக்கு உங்கள் blog படிக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் அளவிற்கு தகவல்கள் கிடைக்கின்றன. வீண் செலவு செய்யாமல் தோட்டம் அமைப்பது பற்றி எழுதுகிறீர்கள். விற்பனையாளர்களின் அதீத விலை பற்றி நானும் சிந்தித்தது உண்டு. எதேச்சையாக google search மூலம் உங்கள் வலை பதிவிற்கு வந்த நான் இப்போது, உங்கள் வலைதள முகவரியை நினைவில் நிறுத்தி அடிக்கடி வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. எனக்கு தெரிந்த தகவல்களை, என் அனுபவத்தில் வரும் ரிசல்ட் வைத்து எழுதுகிறேன். நண்பர்கள் நாம் இன்னும் ஒரு படி மேலே போய் தோட்டம் பற்றிய தகவல் பரிமாற்றம் செய்தால் நிறைய பயன் கிடைக்கும். என்னால் முடிந்த அளவுக்கு தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். தங்களின் கமென்ட் பார்க்க மிக்க சந்தோசம். நன்றி

      Delete
  7. Nice harvest with useful tips. Radish leaves are edible, u can cook them as we do for other keerai's Siva sir..it's good for health. Try it soon. :)

    ReplyDelete
    Replies
    1. Sure Mahi Madam. We tried Beet Root as keerai when we had in our garden. Now will give a try this also. The leaves are more greener (as you see in the photo). So should be good :-)

      Delete
  8. நன்றாக உள்ளது...முள்ளங்கி...வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராதா அவர்களே

      Delete
  9. முள்ளங்கியுமா!!! பார்க்க நன்றாக இருக்கு. உங்க பகிர்விற்கு மிக்க நன்றி .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ.ப்ரியா. நன்றி. உங்கள் மடலை பார்த்தேன் :-) . பதில் அனுப்புகிறேன்

      Delete
  10. வீட்டுத் தோட்ட ஆர்வத்தைத் தூண்டி
    பயனுள்ள பதிவுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வீட்டுத் தோட்ட ஆர்வத்தைத் தூண்டிபயனுள்ள பதிவுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. உண்மையில், கலக்குகிறீர்கள். பாராட்டுக்கள். முள்ளங்கி உடல் நலத்துக்கு உகந்தது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி யோகன் :-) . ஆமாம். முள்ளங்கி ரொம்ப நல்லது என்கிறார்கள். எளிதாகவும் வருகிறது. அதுவும் நல்லது தான்

      Delete
  13. As a beginner your informations are very useful to me. How many seeds you put in the small green bag since I having the same too.I also bought the 'Do it yourself kit' and tried of get rid of the insect from avarai plant also ....

    ReplyDelete
    Replies
    1. Hi, I put around 6 seeds in each bag for Radish. That should be enough if you have full sunlight and space around the bag to get decent yield.

      Avarai plan insect issue gave horrible experience to me this time :-( . I tried all possible ways. hmmm.. Not able to get ride of them.. Finally had to get ride of the plan itself.. Have to find some way soon..

      Delete
  14. வாவ்!!!! மாடித்தோட்டம் அருமை!

    நம்ம வீட்டில் இப்போதான் ஒரு பச்சை வீடு போட்டுருக்கோம். க்ரீன் ஹௌஸ். குளிர் காலம் முடிஞ்சதும் காய்கள் பயிர் செய்யணும். முள்ளங்கியே போட்டால் ஆச்சு:-)

    ReplyDelete
    Replies
    1. நன்றி டீச்சர். நீங்க பச்சை வீடு போட்டாச்சா. அப்போ கலக்குங்க. முள்ளங்கி கண்டிப்பா போடுங்க. எளிதாக விளைச்சல் எடுக்கலாம்.

      Delete
  15. அந்த ஆரஞ்சில் கருப்புப்புள்ளி வண்டுகளை 'லேடி பக்'ன்னு சொல்றோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். அது அப்படி தான் இருந்தது. ஆனால் ரொம்ப சின்னதாய் கூட்டமாய் இருந்தது. அதனால் தான் குழப்பமாய் இருந்தது.

      Delete
  16. Best idea to cultivate these vegetable Sir

    ReplyDelete
  17. anna mulangi mel irukum keerai sathanada...na kelvi paten.thangaludaiya blog migvum arumai.

    ReplyDelete
    Replies
    1. நன்றி

      முள்ளங்கி இலையை கீரையாக சமைத்து சாப்பிடலாம். நாங்களும் செய்தோம். ஆனால் எனக்கு அவ்வளவாய் பிடிக்க வில்லை. பீட்ரூட் இலை செம ருசியாக இருக்கும். இது அந்த அளவுக்கு இல்லை.

      Delete
  18. சார் நான் புதிய வருகை கோவையிலிருந்து. சிறிய முயற்சியாக மாடித் தோட்டம் அமைக்க முயற்சி செய்து (சோதனை முயற்சி) அதன் பின்னர் விரிவான மாடித் தோட்டம் அமைக்க எண்ணியுள்ளேன். வீட்டுத் தோட்டத்திற்கான இடம் தாராளமாய் உள்ளது ஆனால் விலங்குகள் தொல்லை. எனினும் தீராத ஆசையினால் முயற்சியில் இறங்கி வெண்டை, கத்தரி, பாலக்கீரை ஆகியவற்றை நடவு செய்துள்ளேன். வெண்டை மற்றும் கத்தரி நன்றாக வளர்கிறது. பாவம் பாலக்கீரை என்னிடம் மாட்டிக் கொண்டு சில விதைகள் மட்டுமே தாக்குப்பிடித்து வளர்ந்துள்ளது. அதன் படங்களை உங்கள் மெயிலுக்கு அனுப்பி வைக்கிறேன். பார்த்து விட்டு பதில் அனுப்புங்கள். நன்றி. சு.கந்தசாமி, கோவை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. தங்கள் மடலுக்கு பதில் அனுப்பி உள்ளேன். பாருங்கள். விலங்குகள் தொல்லை என்றால் வேலி அமைக்கலாமே. எந்த மாதிரி விலங்குகள்?

      Delete