Tuesday, October 23, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – காலி ஃப்ளவர்


போன பருவத்தில் கொஞ்சம் வித்தியாசமான காய்கறியாக முட்டை கோஸ் முயற்சித்து ஓரளவு வெற்றியும் கிடைத்தது. இந்த பருவத்தில் இன்னொரு முயற்சியாக காலி ஃப்ளவர். இங்கே அக்ரி இன்டெக்ஸ் போன போது காலி ஃப்ளவர் விதை கிடைத்தது. சரி, இந்த தடவை இதை முயற்சி செய்யலாம் என்று வாங்கி வந்தேன்.

காலி ஃப்ளவர். வெஜ் மக்களுக்கு காய்கறியில் ஒரு சிக்கன் மாதிரி தான். தந்தூரி காலி ஃப்ளவர், சில்லி காலி ஃப்ளவர் என்று எல்லாம் செய்ய ஏற்ற ஒரு காய்கறி. எல்லா குழந்தைகளுக்கு பிடித்த ஒரே காய்கறி இதுவாக தான் இருக்கும்.

முட்டைக்கோஸும் காலிஃப்ளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. விதை, செடி எல்லாமும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. காலி ஃப்ளவர் ஒரு குளிர் பிரதேச காய்கறி. சிலர் இங்கு நன்றாக வராது, பூச்சி தாக்குதல் நிறைய இருக்கும் என்றார்கள். 

இருந்தாலும் இந்த ஜூலையில் நாற்று விட்டு எடுத்து நட்டி விட்டேன்.ஒரு அடி இடைவெளியில் மொத்தம் 12  செடிகள் நட்டி விட்டேன். கோஸ் வந்ததை விட செடி ரொம்ப செழிப்பாக வந்தது. கொஞ்சம் முன் எச்சரிக்கையாக ஒரு தடவை கொஞ்சம் மஞ்சள் கரைசளையும், ஒரு தடவை பஞ்சகாவியாவும் தெளித்து விட்டேன். 

விதைத்து இரண்டாவது மாதத்தில் பூக்க ஆரம்பித்தது. சில செடிகள் ரொம்ப ஆரோக்கியமாக வளர்ந்தது, சில கொஞ்சம் சுருண்டு கொண்டு போய் விட்டது. சில செடிகளில் பூ ரொம்ப குட்டியாக வந்தது. மற்ற செடிகளில் பூ ரொம்ப ஆரோக்கியமாக வளர்ந்தது. வெயில் பூவில் ரொம்ப விழாமல் இருக்க செடியின் இலையை மடக்கி குடை போல ஒரு கிளிப் வைத்து மாட்டி விட்டேன் :-). இந்த அடை மழைக்கு கொஞ்சம் முன்னதாக தப்பிக் கொண்டது. 

இணையத்தில் இருந்து, காலிஃப்ளவரில் பொட்டாசியம், விற்றமின் பி 6, ஆகியவை உள்ளன. இதில் விற்றமின் சி மிக அதிகமாக உள்ளது. மேலும் இது நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறியாகும். காலிஃப்ளவர் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது.

விதைத்து மூன்றாவது மாதம் (அக்டோபர்) அறுவடை செய்தாகி விட்டது. பூ ரொம்ப திரட்சியாகவும் ருசியாகவும் இருந்தது. கொஞ்சம் அதிகமாக அக்கறை எடுத்தால் இன்னும் நன்றாகவே பலன் கொடுக்கும் என்று நினைக்கிறேன். இந்த வருட பலன் கீழே,

 












26 comments:

  1. ஆஹா... அருமை... எங்கள் வீட்டுத் தோட்டத்திலும் இது போல் செய்ய வேண்டும்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன். நீங்களும் முயற்சி செய்து சொல்லுங்க :-)

      Delete
  2. விளைச்சல் நல்லா இருக்கு!!!!

    ரொம்ப வெய்யில் இதுகளுக்கு ஆகாது என்பதால் பாத்தியின் நாலு மூலைகளிலும் கம்பிகள் நட்டு விண்ட் ப்ரேக் Wind Break என்று சொல்லும் வலைத்துணியால் பந்தல் போடலாம். ரொம்ப உயரம் வேணாம். ஒரு மீட்டர் உயரமே அதிகம்.

    இது போட்டால் அடிக்கிற வெய்யில், செடிக்கு உரைக்காது. முயற்சி செஞ்சு பாருங்க.

    சண்டிகரில் இருந்தப்ப வீட்டு ஓனர்(கீழ்தளம்) தோட்டத்தில் பார்த்துருக்கேன். இங்கே நியூஸியில் ஏராளமா விளையுது. 99 செண்டுக்குக் கடையில் ச்சீப்படுதேன்னு வீட்டுலே விதைக்கலை:-)

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்ற மாதிரி வலை போட்டு கண்டிப்பாக முயற்சிக்கலாம். சின்னதாய் ஒரு இடத்தில செய்து பார்க்கிறேன் அடுத்த முறை. நன்றி டீச்சர்.

      Delete
  3. அருமையா இருக்கு காலி ஃப்ளவர்

    ReplyDelete
  4. உங்க பதிவிற்கு இன்றைக்குத்தான் வருகிறேன்.
    RSSஓடையில் இணைந்துள்ளேன்.
    மிக நல்ல பதிவுகள்

    ReplyDelete
    Replies
    1. Thanks for your comment and referring my blog :-)

      Delete
  5. தோட்டம் அருமையாக உள்ளது. எனக்கும் இது போன்ற கனவுகளுண்டு. இப்போதுதான் இடம் பார்க்கிறோம். வாய்ப்பான இடம் அமைந்து வி்ட்டால் நானும் முயற்சிக்கிறேன். தற்போதைக்கு மொட்டை மாடியில் ஏதேனும் முயற்சிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி. மொட்டை மாடியில் நிறைய தோட்டம் போடலாம். இந்த வாரம் பசுமை விகடனில் கூட ஒரு கட்டுரை வந்திருக்கிறது. நானும் என்னுடைய தோட்டத்தை மொட்டை மாடியில் விரிவு படுத்த நினைத்திருக்கிறேன்.

      Delete
  6. நன்றாக இருக்கிறதுங்க உங்க தோட்டம்!

    கோவையில் வீடு என்றதும் ஒரு ஆர்வத்தில் கிட்டத்தட்ட உங்களின் பலபதிவுகளைப் படித்துவிட்டேன், நானும் கோவைதான்! :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி மஹி. நீங்களும் கோவையா. சூப்பர். கோவைல எங்கே?

      Delete
    2. கோவைல எங்கே?/// THUDIYALUR-nga, neenga?

      Sorry about the delayed reply and commenting in English. Will come again later with Tamil. :)

      Delete
    3. ரொம்ப பக்கம் தான். நான் சரவணம்பட்டி.

      Delete
  7. காலி ஃபிளவர் இங்கே சீப்பாகத் தான் கிடைக்கிறது...
    அதனால் வெண்டையை நான் முயற்சிக்கிறேன்.
    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. காலி ஃபிளவர் சீப்பா. இங்கே சில நேரம் சீப்பா கிடைக்கும். சில நேரம் ஒரு பூ 60 ரூபா வரை விற்கும். விலையை விட நம் தோட்டத்தில் செழிப்பா வந்தால் நமக்கு சந்தோசம் தானே :-)

      வெண்டைக்காய் எளிதாக வரும். முயற்சி செய்து பாருங்கள்.

      Delete
  8. காலி ஃபிளவர் அருமையாக விளைந்திருக்கின்றது.

    நம்நாட்டில் மலைநாட்டில்தான் பெரும்பாலும் பயிரி்டுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அமாம். எதிர் பார்த்ததை விட நன்றாக வந்திருக்கிறது.

      Delete
  9. இலங்கையில் இது விலை அதிகமான மரக்கறிவகையுள் உள்ளதால், அடிக்கடி உண்டதில்லை. இங்கே சிலசமயம் ஒன்று 1 யூரோவுக்கு கிடைக்கும்.
    இதை இலங்கையில் கோவாப்பூ எனவே குறிப்பிடுவோம். இதன் வகைகளை
    வெள்ளையை முட்டைக்கோவா, இலைக் கோவா எனவே குறிப்பிடுவார்கள்.
    இங்கே சிவப்புக் கோவாவும் உண்டு. அது சற்று கசப்புச் சுவை, அதைச் சீவி வினாகிரி, உப்பு,மிளகு, முட்டை வெள்ளைக்கருக் கலந்த 'சோஸ்' விட்டுப் பச்சையாக உண்பார்கள்.
    தங்கள் தோட்டம் மிக நன்றாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி யோகன். இங்கேயும் சில நேரம் விலை அதிகம் தான். சில சமயம் இருபது ரூபாய்க்கே பெரிய நல்ல பூ கிடைக்கும். கோவாப்பூ - பேர் நல்ல இருக்கே. தமிழில் இதற்கு பெயர் இல்லை என்று நினைத்தேன் :-)

      Delete
  10. சிவா,

    நேரம் இருந்தால் இங்கே கலர் பாருங்க:-)

    http://thulasidhalam.blogspot.co.nz/2012/01/blog-post_09.html

    ReplyDelete
    Replies
    1. செம கலர்புல்லா இருக்கு :-)

      Delete
  11. maama we grow mint it is a success

    ReplyDelete
  12. maama cauliflower one parcal

    ReplyDelete