Saturday, January 9, 2016

என் வீட்டுத் தோட்டத்தில் – கார மிளகாய் (Hot Pepper)



நாம ஏதாவது கண்காட்சி போனால், வீட்டுக்கு ஏதாவது வாங்குகிறோமோ இல்லையோ ஒரு ஐநூறு ரூபாய்க்காவது விதைகள் வாங்கினால் தான் வெளியே வருவது. அதிலும் இந்த ஹைப்ரிட் விதை பாக்கெட் நிறைய படம் பார்த்தே விதை பாக்கெட்டுகள் நம் கைகளில் வந்துவிடும். அது நமக்கு வேண்டிய காய்கறியா, நம்ம ஊருக்கு ஒழுங்கா வருமா என்பதெல்லாம் இரண்டாவது தான். அப்படித்தான் இந்த Hot Pepper விதையும். மிளகாய் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என்று ஒரு கலவையாக மெழுகு போல அடுக்கிய அட்டை படத்தை பார்க்கவே ரொம்ப அழகாய் இருந்தது. அப்புறம் என்ன, ஒரு பாக்கெட் வாங்கியாகி விட்டது. பத்து விதைக்கு விலை வெறும் 55 ரூபாய் தான் :)

இந்த சீசனில் மற்ற மிளகாய்கள் ரொம்பவே சொதப்பியது. காலாவதியான ஹைப்ரிட் விதையும், நண்பர் பரமேசிடம் வாங்கிய நாட்டு விதைகளும் சுமாரான விளைச்சலையே கொடுத்தது. நிறைய செடிகள் இலை சுருண்டு போய் சரியாகவே வரவில்லை (இது கற்றுக் கொள்ள வேண்டிய இன்னொரு ஏரியா). அதை எல்லாம் ஈடுகொடுக்கும் வகையில் இந்த Hot Pepper விளைச்சல் தேவையான மிளகாயை கொடுத்தது (அதனால் நான் ஹைப்ரிட் விதையை எல்லாம் பரிந்துரைக்கவில்லை :) )

மொத்தம் பத்து விதையில் எட்டு போல முளைத்திருக்கும். அதில் ஒரு மூன்று செடியை மாடியில் பையில் வைத்துவிட்டு, சிலவற்றை தரையில் வைத்து விட்டேன். தரையில் வைத்த செடிகள் சுமாராகவே காய்த்தது. ஆனால் மாடியில் வைத்த செடி காய்த்து கொட்டிவிட்டது. பறித்ததில் நிறைய காயபோட்டு வற்றலுக்கே பயன்படுத்தும் அளவுக்கு மூன்று செடிகளிலும் விளைச்சல்.

மிளகாயை பார்க்கவே அழகு. இதை சிலர் ‘வானம்பாடி மிளகாய்’ ‘வானம் பார்த்த மிளகாய்’ என்றார்கள். மற்ற மிளகாய் எல்லாம் தரை பார்த்து கொண்டிருக்க, இந்த மிளகாய் வானம் நோக்கி வளர்கிறது. வெளிர் பச்சை நிறத்தில் ஆரம்பித்து ஆரஞ்சு நிறம் மாறி கடைசியில் சிவப்பு நிறத்தில் மாறுகிறது. எல்லா நிறத்திலும் செடியில் மிளகாய் பார்க்க கிட்டத்தட்ட Ornamental Chilli மாதிரி இருக்கிறது. தோட்டத்தில் வரிசையாய் வைத்து விட்டால் ஒரு அலங்கார செடி போல ஆகிவிடும் போல.

காரம் பட்டையை கிளப்புகிறது (அதான் Hot Pepper என்று பெயர் வைத்திருக்கிறார்கள்). இந்த தை பட்டத்திற்கும் ஒரு பாக்கெட் வாங்கி வைத்திருக்கிறேன்.  













 
 கீழே இருப்பது வெறும் ஒரு செடி தான். பூங்கொத்து மாதிரி இது மிளகா கொத்து. 







நாங்களும் அதே மாதிரி அடுக்கி போட்டோ எடுப்போம்லா :)





42 comments:

  1. சூப்பரோ சூப்பர் என்ன ஒரு அழகு

    ReplyDelete
  2. Superb! I have seen these peppers in my uncle's farm. It's called as "vaanam paththa milagai" !! 😀

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மகி. வானம் பார்த்த மிளகாய் என்றும் சொல்கிறார்கள்.

      Delete
  3. வணக்கம். நான் ஏற்கனவே இலை சுருட்டல் நோய் பற்றி உங்களிடம் விளக்கம் கேட்டிருந்தேன். ஞாபகம் இருக்கிறாதா? என்ன செய்வது என்று தெரியவில்லை. தெரிந்தால் கேட்டு சொல்கிறேன் என்று பதிலுரைத்து இருந்தீர்கள். இப்போதைய பதிவிலும் இலை சுருட்டல் பற்றி கவலைப்பட்டிருக்கிறீர்கள். இனி கவலையை விடுங்கள். நானே முயற்சி செய்து ஒரு 'மருந்தைக்' கண்டுபிடித்திருக்கிறேன். இது பற்றி வலைதளங்களில் தேடியபோது, அதற்கான காரணங்கள் பெரும்பாலும் 'வைரஸ்' தாக்குதல் என்றே இருந்தது. ஒரு மேல்நாட்டு வலைதளத்தில் 'calcium deficits' இருந்தாலும் இவ்வாறு நிகழலாம் என்று இருந்தது. உடனே சோதனை முயற்சியாக, வெற்றிலை பாக்கு போடுவதற்கு உபயோகப்படுத்தப்படும் 'சுண்ணாம்பு' வாங்கி, முயற்சி செய்து பார்த்தேன். அற்புதமான முன்னேற்றம். இலை சுருட்டலில் இருந்த மிளகாய் செடிகளும், கத்தரி செடிகளும், புதிதாக இலைகள் விட்டபோது, நல்ல செழுமையாக துளிர்க்க ஆரம்பித்து, நீண்ட இலைகளாக வளர்ச்சி அடைந்தன. காய்ப்பும் நன்றாகவே உள்ளது. பிடுங்கிப் போட்டுவிடலாம் என்றிருந்த செடிகளின் அற்புத வளர்ச்சி என்னை மகிழ்ச்சி அடையச் செய்ததுடன், 'மாடித் தோட்டம் சிவா'விற்கு தெரியாத வித்தையை நாம் கண்டுபிடித்து விட்டோம் என்ற பெருமிதமும் ஏற்பட்டுள்ளது. சரி என்ன செய்ய வேண்டும் - ஒரு தொட்டிக்கு இரண்டு ரூபாய் 'சுண்ணாம்பு' பாக்கெட் என வாங்கிக் கொண்டு, அதனை தண்ணீரில் கரைத்துக் கொண்டு, தெளிந்த நீரை ஒரு வாரம் என ஊற்றி வரவேண்டும். அந்த காலக் கட்டங்களில் வேறு உரங்கள் எதுவும் வேண்டாம். ஒருவாரம் கழித்து, சாதாரண முறையில் பராமரித்து வந்தால், இரண்டு வாரங்களில், புதிய குருத்துகள் தோன்றி, புதிய இலைகள் முளைத்துவிடும். முயற்சி செய்து பாருங்கள். பலன் இருந்தால் உங்கள் பதிவில் வெளியிட்டு அனைவருக்கும் தெரிவியுங்கள். ஹி ஹி ஒரு சின்ன விண்ணப்பம் - இதனை 'நிமித்திகன் வைத்தியம்' என்று அழைக்கத் தொடங்கினால் மகிழ்ச்சி அடைவேன். பின்னாட்களில் இதற்காக 'நோபல் பரிசு' கிடைத்தாலும் கிடைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே. சுண்ணாம்பு நான் பயன்படுத்தும் ஒரு பொருள் தான். ஆனால் அது கால்சியம் குறைபாடு வந்து இலை பழுப்பு நிறம் காட்டினால் கரைத்து கொஞ்சம் ஊற்றி விட்டால் சரி ஆகும். கடையில் இரண்டு டப்பா வாங்கும் போதே கடைக்காரர் எதற்கு என்று கேட்பார். செடிக்கு என்று சொல்லும் போது சிரிப்பார்.

      அது இலை சுருட்டலுக்கு பயன்படுகிறதா? பரவாயில்லையே. நானும் முயற்சித்து பார்க்கிறேன். நீங்கள் சொன்ன முறையையே செய்து பார்கிறேன். பார்க்கலாம்.

      கண்டிப்பாக இதை 'நிமித்திகன் வைத்தியம்' என்றே அழைக்கலாம் :) . 'நோபல் பரிசு' கிடைத்தால் அந்த சுண்ணாம்பு கடைக்காரருக்கும் பாதி கொடுத்து விடுங்கள். என்னையும் கவனித்துக் கொள்ளுங்கள் :)

      Delete
    2. கண்டிப்பாக, குருவிற்கு இல்லாத முதல்மரியாதையா?

      Delete
    3. தற்போது நிலவி வரும் தொடர் பனி, மழைக்கு வேர் அழுகல் நோய், நுனி கருகல் நோய், இலை சுருட்டல் நோய் பரவ வாய்ப்புள்ளது. நுனி கருகல் நோய் தாக்கிய செடியின் நுனி இலைகள் கருகிவிடும். இந்த நோய் தீவிரமாகும்போது நுனியிலிருந்து கீழ்நோக்கி பரவி, பூக்களும் உதிர்ந்து விடும். இதனைக் கட்டுப்படுத்த நிலத்தில் தண்ணீர் தேங்க விடக்கூடாது.
      இலை சுருட்டல் நோய், இலையின் நடு நரம்பில் சுருண்டு உருமாற ஆரம்பிக்கும். மேலும் குட்டை வளர்ச்சி, இடைகணுக்கள், சிறிய இலையாக காட்சியளிக்கும். பூ மொட்டுக்கள் பெரிய அளவை அடையும் முன் உதிர்ந்து விடும்.
      நோய் வெள்ளை ஈ மூலம் பரவுகிறது.
      -தோட்டக்கலைத்துறை,இளையான்குடி.

      Delete
    4. தகவலுக்கு நன்றி நண்பரே.

      Delete
  4. Entha year enga villagelaium entha suruttai noi problem than Anna but enga veetla Ella eanga thottathil

    ReplyDelete
    Replies
    1. மேலே நண்பர் இல்லை சுருட்டல் நோய் பற்றி கூறி இருக்கிறார். பாருங்கள்.

      Delete
  5. வாவ்! அழகு கண்ணை கட்டுதே.வாழ்த்துக்கள்.
    நம்நாட்டிலும்இவ்இனம் உண்டு.

    நான் சாதாரண இனம் தொட்டியில்நாட்டி பலன் கிடைத்தது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. இந்த மிளகாயின் வண்ணம் தான் அழகு.
      இப்போது ஏதும் செடி நட்டி இருக்கிறீர்களா?

      Delete
  6. வாவ்.. நல்ல விளைச்சல்.. சீனி மிளகாய் என்று ஒரு வெள்ளை மிளகாய் குட்டி குட்டியாக இருக்குமே.. அதை முயற்சித்திருக்கிறீர்களா அண்ணா?? அதுவும் நல்ல காரமாக இருக்கும்.. அம்மா வீட்டில் இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. சீனி மிளகாய் விதையும் போட்டு இருந்தேன். அனால் சரியாய் வரவில்லை. இப்போது நண்பர் அதன் வற்றல் நிறைய கொடுத்திருக்கிறார். அதை இந்த சீசனில் போட்டு பார்க்க வேண்டும். அதை கேரளா மிளகா என்றும் சொல்கிறார்கள். ஆமாம், அது சும்மா சுள்-னு காரம் இருக்கும்.

      Delete
    2. நாட்டு விதைகள் இவரிடம் கிடைக்குமாம் அண்ணா..
      யோகநாதன்
      9442816863
      முகநூலில் யாரோ ஷேர் செய்ததை பார்த்தேன்.. உங்களுக்கு பயன்படுமா என்று பாருங்கள்..

      Delete
    3. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அபி. பார்க்கிறேன்.

      Delete
  7. அருமையாக இருக்கிறது! நன்றி!

    ReplyDelete
  8. Sir vanakkam ungalaloda site parthuthan naan siriya oru thottam muyarchi pannittu irukken maadiyil konjam keerai vendai pagarkai peerkangai suraikai mullangi pottu irukken veetil tharayil thakkali kathari sedi avarai kothavarai milagai pottu irulken muthal muyarchi yenbathal konjam excited aga irukku aana onnu sir ithu satharanama visayam illai nu puriyuthu you r great sir

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம்.

      நாம் நேரம் ஒதுக்கி, ஈடுபாட்டோடு செய்தல் எளிது தான். நீங்கள் சொன்ன மாதிரி அவளோ சாதாரண விஷயம் இல்லை தான். உங்கள் செடிகளின் வளர்ச்சி, அறுவடை பற்றி வளர்ந்து அறுவடை செய்ததும் கூறுங்கள். வாழ்த்துகள்.

      Delete
  9. எங்கள் வீட்டில் சும்மாவே காய்த்து தள்ளுகிறது.. செடி இன்னும் பெரியதாக வளரும் நன்றாக வளர விடுங்கள்..
    காந்தாரி மிளகாய் இதை விட காரம் அதிகம் மிக சிறிய ரகம்..
    முயலுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. காந்தாரி மிளகாய் என்றால் மேலே அபி சொன்ன குட்டி மிளகாய் தானே. செம காரம் தான். என் செடி காய்த்து ஓய்ந்து விட்டது. அடுத்த முறை விட்டு பார்கிறேன்.

      Delete
  10. pona thadavai kathirikkai photo pottu perumoochu vida vaithu vittergal, oru kai kaipathirke dhavam kidakka vendiirukirathu, ippodhu milagai, santhoshamaga irukkirathu parpatharku. adutha pattam vidhai yenniku vidhaika pogirergal.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம்

      அடுத்த பதவின் படமும் உங்களை பெருமூச்சு விட வைக்கும் என்றே நினைக்கிறேன் :). பார்க்கலாம்..

      அடுத்த பட்டத்திற்கு இந்த வாரம் (பொங்கல்) ஆரம்பிக்க இருக்கிறேன். தை பட்டம். சரியாக கோடையில் விளைச்சல் எடுக்க சரியாக இருக்கும்.

      Delete
  11. அருமை. இதே வகையில் எங்க வீட்டில் கருப்பு மிளகாய் வைத்திருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி.

      நான் கூட இந்த கருப்பு (அடர் ஊதா நிறம்) நிற மிளகாய் செடி இங்கே ஒரு இடத்தில் பார்த்தேன். கருப்பு மிளகாய் விதை எங்கே வாங்கினீர்கள்? கூற முடியமா?

      Delete
  12. சிவா நலமா.
    சூப்பராக இருக்கு.கண்ணைக்கவருது மிளகாய். செம காரம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ப்ரியா. தனி மடல் பார்த்தேன். பதில் அனுப்பி இருக்கிறேன். பாருங்கள்.

      Delete
  13. சிவா,

    பார்க்கவே அழகா இருக்கு !

    இங்கு வந்த புதிதில் உழவர் சந்தையில் இதே வண்ண மிளகாய் செடி கட்டுக‌களைப் பார்த்து, ஆர்வமுடன் வாங்கிவந்து சட்னி அரைத்தால் ? ....... அவ்வ்வ்வளவு காரம் ! நீங்க வச்சிருக்குற இந்த செடி ஒருதடவை காய்ப்பதோடு நிறுத்திவிடுமோ ? ஏனென்றால் சந்தையில் வேரை நீக்கிவிட்டு, முழு செடியையே விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள்.

    எங்கள் வீட்டு மிளகாய் அறுவடையையும் இப்படித்தான் அழகழகாக அடுக்கிய‌டுக்கி வைத்து புகைப்படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன். போதும்போதும் எனுமளவுக்குக் காய்த்துவிட்டன. காயவைத்தும் வைத்திருக்கிறேன். எந்தப் பூச்சி பிரச்சினையும் இல்லாமல் செடிகள் ஜம்மென்று வளார்ந்தன.

    இடையில் குளிர் & புது இடத்தில் போதிய சூரிய வெளிச்சமின்மை இவற்றால் வாடிப்போயுள்ளனர். ஆனாலும் காய்ப்பதை நிறுத்தவில்லை.

    ReplyDelete
    Replies
    1. பொதுவாய் மிளகாய் செடியை வெட்டி விட்டு பிறகு அறுவடை நான் எடுத்ததில்லை. ஒரே விளைச்சல் என்று தான் நினைக்கிறேன். சில நண்பர்கள் வெட்டி தளிர்க்க விட்டு விளைச்சல் எடுப்பதாக கூறி இருக்கிறார்கள்.

      இவ்வளவு அழகாய் மிளகாய் இருந்தால் புகைப்படம் எடுக்கவே ஒரு சந்தோசம். இல்லையா :). இந்த தை பட்டதிலும் சில செடிகள் விதைக்கலாம் என்று வைத்திருக்கிறேன்.

      Delete
    2. Siva - intha milakai kaithu konde irukum, vetta vendiyathu illai.

      Delete
    3. அப்படியா ஹரி.. நல்லது.. இந்த முறை அப்படியே விட்டு பார்க்கிறேன்

      Delete
  14. ஒரே பையில் இரண்டு தக்காளி நாற்று ஊன்றி வளர்க்களாமா?

    ReplyDelete
    Replies
    1. ஒரு அடி பை என்றால் ஒரு செடி மட்டும் வைப்பது நல்லது. அதற்கு மேல் அகலம் இருந்தால் இரண்டு செடி வைக்கலாம்.

      Delete
  15. நான் பாண்டிக்கு அருகில் வசிக்கிறேன் சிவா அண்ணா . நான் மாடி தோட்டம் அமைக்க விரும்புகிறேன் .எப்படி அமைப்பது?. தேவையான வை எங்கு கிடைக்கும் ?.மண் எப்படி தயார் செய்வது?. தேவையான உரம், விதை எங்கு கிடைக்கும் ?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே,

      இந்த பதிவுகளை பாருங்கள். உங்கள் கேள்விகளை கொடுங்கள்.
      http://thooddam.blogspot.in/2014/01/blog-post.html
      http://thooddam.blogspot.in/2014/02/1-coir-pith-seedling-tray-grow-bags.html
      http://thooddam.blogspot.in/2014/04/2.html (Seeds, Panchakavya, Compost)
      http://thooddam.blogspot.in/2015/06/blog-post.html

      https://www.youtube.com/watch?v=iAOnw1oooEE
      https://www.youtube.com/watch?v=vWB5v8U9qPQ

      Delete
  16. hello sir,
    என்னுடைய நீண்ட நாள் முயற்சியாக இப்போதுதான் மாடி தோட்டம் அமைத்திருக்கிறேன். நான் இங்கே தோட்டக்கலை office இல் விதைகள் வாங்கி வந்துள்ளேன். ஒரு growbag இல் ஒரு பாக்கெட் விதைகள் போடலாமா அல்லது கொஞ்சம் மட்டும் போடலாமா என்று doubt ஆக உள்ளது. என்ன செய்வது??

    அதேபோல் என்னுடைய கத்திரி செடியில் எல்லா இலைகளும் உதிர்ந்து விட்டது. எப்படி சரி செய்வது ?

    ReplyDelete
    Replies
    1. ஹாய்,

      கீரையை தவிர்த்து மற்ற எல்லா காய்கறி செடிகளுக்கும் இடையே ஒரு அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒரு அடி அகல பை என்றால் ஒரு கத்தரி அல்லது ஒரு தக்காளி செடி தான் வைக்க முடியும். 1 1/4 அடி என்றால் இரண்டு செடி வைக்கலாம். இது தான் கணக்கு. அதற்கு ஏற்றார் போல திட்டமிட்டு கொள்ளுங்கள்.

      கத்தரி செடி எவ்வளவு நாள் ஆகிறது? பழுத்து காய்ந்து விழுகிறதா இல்லை பச்சையாகவே காய்கிறதா?

      Delete
  17. I have sprayed "HIT" mosquito repellent which gave good result for இலை சுருட்டல். Of course this is costly.

    ReplyDelete
    Replies
    1. HIT on Plant.. OMG.. Hit is the most poisonous thing in home.. it will kill the plant itself.. And why we want to spray on a organic garden.. :)

      Delete