போன பதிவில் கோவையில் வீட்டுத் தோட்டம்
பயிற்சி வகுப்புகளின் ஆக்கம் பற்றி எழுதி இருந்தேன். நான் இணையத்திலும், சில Exhibition
stalls மூலமாகவும், நேரிலும் தோட்டத்திற்க்கு தேவையான
பொருட்கள் இங்கே கோவையில் கிடைக்கும் விவரங்களை இந்த பதிவில் பகிர்ந்து
கொள்கிறேன். நண்பர்கள் மற்ற நகரங்களில் உள்ள நிறுவனங்கள்/விவரங்கள் பற்றியும்
பகிர்ந்து கொண்டால் மற்றவர்களுக்கு உதவியாய் இருக்கும்.
COIR PITH
Coir Pith (தேங்காய் நார் தூள்)
பற்றி விவரமாக என்னுடைய மாடித் தோட்டம் முதல் பதிவில் கூறி உள்ளேன். மாடித்
தோட்டம் என்று போகும் போது Coir Pith மிக முக்கிய
பொருளாக இருக்கிறது. Coir Pith வைத்து மீடியா
தயாரிக்கும் போது தொட்டிகளின் எடை ரொம்பவே குறைவு. எனது அனுபவத்தில் தரையில்
சுமாராக வரும் செடிகள், கீரைகள் கூட இந்த Coir Pith
மீடியாவில் அருமையாக வருகிறது.
இது ஒரு கிலோ, ஐந்து கிலோ என compress
செய்து கேக் வடிவில் கிடைக்கிறது. இங்கே கோவையில் சித்ரா கிருஷ்ணசாமி அவர்கள்
Coir Pith-ஐ மாடி தோட்டத்தை ஊக்குவிக்கும் ஒரு
சேவையாக அவர்கள் வீட்டிலேயே ஒரு அலுவலகத்தில் வைத்து ஐந்து கிலோ கேக் COIR
PITH Rs.30 க்கு
கொடுக்கிறார்கள். மாடி தோட்டத்தை ஊக்குவிக்க இதை ஒரு சேவையாகவே அவர்கள் இங்கே
கோவையில் செய்து வருகிறார்கள். கூடவே Swastika என்று
நிறுவனமாய், Dailydump.org நிறுவனத்தோடு இணைந்து காய்கறி கழிவுகளை மக்கவைத்து உரமாக மாற்றும் Compost
Kamba-க்களையும் ஒரு சேவையாக பெங்களூரில் இருந்து
வரவழைத்து அதே விலைக்கு இங்கே கோவையில் தருகிறார்கள். நான் ஒரு நாள் டெமோ பார்க்க
சென்றிருந்தேன். Compost Kamba ஓன்று வீட்டில்
நிறுவ ஐடியா இருக்கிறது. செய்தபிறகு விவரமாய் எழுதுகிறேன்.
ARJUN GROW Bags என்ற நிறுவனம் சில Fair போன போது அறிமுகம் ஆனது. அவர்களிடம் தான்
நான் முதன் முதலில் Coir Pith வாங்கி
முயற்சித்தேன். Rs.45 என்ற விலையில் கொடுத்தார்கள்.
இதை தவிர இதே ஐந்து கிலோ Coir Pith கேக்கை 100-க்கும் 120-க்கும் விற்கும் நிறுவனங்கள்
கூட நிறைய இருக்கின்றன. கேட்டால் EC கம்மி
செய்திருக்கிறோம். Sterilize செய்திருக்கிறோம்
என்று கூறி குழப்பி விடுகிறார்கள். விவரம் இல்லாத மக்கள் அதையும் வாங்கி
போகிறார்கள், அது ஏதோ கிடைக்காத பொருள் என்று. இங்கே பொள்ளாச்சி அருகில் எக்கச்சக்க
Coir Industries எக்கச்சக்கமாய் இருக்கிறது. அங்கே போனால்
இன்னும் விலை குறைவாகவே வாங்கி வரலாம்.
EC-ஐ குறைக்க நன்றாக அதை நீரில் அலசி
போட்டால் போதும். நான் முதன் முதலில் Coir Pith
வாங்கிய போது, விவரம் தெரியாமல் உதிர்த்து அப்படியே பயன்படுத்து விட்டேன். மறுமுறை
ஒரு Fair, போனபோது ‘கண்டிப்பா
கழுவி தான் பயன்படுத்தணும். இல்லன்னா செடி முளைக்காது என்றார்கள்’.
ஆனால் நான் முதலில் நிரப்பிய தொட்டியில் அருமையாக Dahliaபூ
செடியும், தக்காளியும் வளர்ந்திருக்கின்றன. எனவே EC பற்றி
ரொம்ப குழப்பி கொள்ள தேவை இல்லை.
COIR PITH in KOVAI
1.
பெயர்/நிறுவனம் - Chitra Krishnaswamy / Swastika
தொடர்பு எண் – முருகன் என்பவரை 9842215935 எண்ணில் தொடர்பு கொண்டு பேசி பாருங்கள்.
இடம் - Chandragandhi Nagar, near PSG Hospital.
வழி : சித்ரா/கொடிசியாவில் இருந்து அவினாசி
ரோட்டில் வரும் போது (Towards GandhiPuram), Fun Republic Mall ஒட்டிய
Signal தாண்டியதும், அடுத்த சிக்னல் PSG. அதை ஒட்டி இடது பக்கம் திரும்பவும் (ஒரு பழமுதிர்சோலை சிக்னல் அருகில்
இருக்கும். அதை ஒட்டி இடது பக்கம்)
NURSERY/SEEDLING TRAY
Nursery Tray பற்றி இந்த பதிவில்
விவரமாய் எழுதி உள்ளேன். நாம் தோட்டத்தில் எல்லா விதமான காய்கறி, பூக்கள் என்று
முயற்சி செய்ய Nursery Tray உதவியாய் இருக்கும்.
விதைகளின் முளைப்பு திறன் அதிகரிக்கும். நமக்கும் வாங்கிய விதைகளின் Germination
Rate-ஐ எளிதாக கண்டுபிடிக்கலாம். நாற்று எடுத்து
பாத்திகளில்/தொட்டிகளில் எடுத்து நடுவது எளிது.
Nursery Tray இங்கே லோக்கல்
நர்சரிகளில் கிடைப்பது இல்லை. போன முறை Agri Index 2013-ல்
ஒரு ஸ்டாலில் Standard Tray – 98 holes (7 by 14) இருபது
ரூபாய்க்கு கிடைத்தது. ஒரு ஐந்து வாங்கி வந்தேன். அதன் பிறகு பார்த்த எல்லா கண்காட்சிகளிலும்
ஒரே ஒரு நிறுவனம் மட்டும் Standard Tray
விற்கிறார்கள். அநியாய விலை (ஐம்பது ரூபாய்). போன வாரம் இங்கே புதிய தலைமுறை-யின்
விவசாய கண்காட்சியிலும் அதே நிறுவனம், அதே விலை தான். Coir Pith-ஐ Rs.120 என்றார்கள். மக்களும் ஒரு சின்ன Grow Bag-ல்
ஒரு தக்காளி செடியில் ரெண்டு தக்காளியை பார்த்ததும், என்ன விலை என்று கூட
தெரியாமல் வாங்கி தான் போகிறார்கள்.
Standard Tray –ஐ பயன்படுத்தும்
போது குழிகள் சின்னதாய் இருப்பதால் சீக்கிரமே எடுத்து நட வேண்டிய வரும். அதனால் 50
holes ( 5 by 10) Tray தேடி பார்த்த போது எங்கும் கிடைக்கவில்லை.
இணையத்தில் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு Justdial எல்லாம்
தேடி, கடைசியாய் இங்கே Satish Agro –கை கண்டுபிடித்தேன். எல்லா விதமான Nursery
Tray-யும் வைத்திருக்கிறார்கள். Standard Tray
– 98 holesஐ Rs.20க்கும் ,
50 Holes Tray- Rs.25க்கும் கொடுத்தார்கள். ஒருவழியாய் Nursery
Tray தேடல் முடிந்தது.
1.
பெயர்/நிறுவனம் – SATISH AGRO TECH
இடம் - 18/1,
Shanmuga Nagar, Sungam ByPass Road
வழி – உக்கடம் டவுன் பஸ் ஸ்டாண்டில் இருந்து சுங்கம் பை-பாஸ் சாலையில்
வரும் போது ரெயில்வே லைன் மேம்பாலம் தாண்டியவுடன் இடது பக்கம் திரும்பினால் திருச்சி
ரோடு, KG Cinemas எல்லாம் வரும். அதில் திரும்பாமல், ஒரு
ஐம்பது அடி நேரே போனால் வலது பக்கம் இருக்கும் (கொஞ்சம் ரோட்டில் இருந்து கீழே
இருக்கும்)
GROW BAGS
மாடித் தோட்டம் எனும் போது எடை அதிகமான
சிமெண்ட் தொட்டிகளை தவிர்பதர்க்காகவும், கையாள எளிதாக இருக்கும் என்பதற்காகவும்
நாம் இந்த GROW BAGS பயன்படுத்துகிறோம். GROW BAGS-ல் இரண்டு வரை இருக்கிறது. ஓன்று பாலிதீன் வகை (கீழே இருப்பதில்
வெள்ளை நிறம்), மற்றொன்று பிளாஸ்டிக் தார்ப்பாய் போன்ற ஒரு Material-ல் வருவது (கீழே இருப்பதில் பச்சை நிறம்). பாலிதீன் வகை கொஞ்சம் விலை
குறைவாக இருக்கும். பிளாஸ்டிக் தார்ப்பாய் போன்ற Material-ல்
வரும் பைகளை நமக்கு தேவையான அளவு thickness வைத்து வாங்கி
கொள்ளலாம். அவைகள் 80 GSM thickness முதல் 200
GSM thickness வரை (Paper thickness
மாதிரி) நாம் கேட்ட Material-ல் செய்து
கொடுக்கிறார்கள். கீரை வளர்க்க வட்டமாய் வாங்கும் பைகளை நாம் குறைந்த GSM-ல் வாங்கி கொள்ளலாம். அதிக GSM போகும்
போது விலை அதிகமாக இருக்கும். ஆனால் நீண்ட காலம் உழைக்கும். எல்லோருமே இந்த GROW
BAGSகள் இரண்டில் இருந்து நான்கு ஆண்டுகள் வரை
உழைக்கும் என்கிறார்கள்.
பொதுவாய் Standard Size Bag (பச்சை/ஆரஞ்சு நிற பை) Rs.50 க்கு
கொடுக்கிறார்கள். சில நிறுவனங்கள் அதையே Rs.60 க்கும்,
Rs.70 க்கும் கூட விற்பதை பார்த்திருக்கிறேன். ஐம்பது
ரூபாய்க்கு குறைவாக நான் பார்த்ததில்லை.
நான் இதுவரை பார்த்ததில் ARJUN GROW
BAGS நிறுவனம் கொஞ்சம் உருப்படியாய் தெரிந்தது. நான்
அவர்களிடம் 3 feet by 1 feet rectangular bags மூன்று
ஆர்டர் செய்து Rs.90 க்கு வாங்கி இருந்தேன். GROW BAGSநன்றாக இருந்தது.
1.
பெயர்/நிறுவனம் - ARJUN GROW BAGS
இணைய முகவரி - http://arjuncontainergardening.com/products.html
தொடர்பு எண் - http://arjuncontainergardening.com/contact_us.html
Update as of Oct 2015
இப்போது Arjun Grow Bag நிறுவனம் இடம் மாறி விட்டார்கள். "Subhiksha Organics" என்று புதிய பெயரில் திருச்சி ரோடு இராமநாதபுரம் மாறி விட்டார்கள். நாம் காந்திபுரத்தில் இருந்து சுங்கம் ரவுண்டானா தாண்டி செல்லும் போது Alvenea School (இடது பக்கம்) தாண்டி ஒரு கி.மீ போனதும் இடது பக்கம் Naturals Spa மற்றும் வையகம் ஆர்கானிக் ஷாப் வரும். அதை ஒட்டி இடது பக்கம் ஒரு தார் ரோடு போகும். அதில் இரண்டாவது Right (You will see a small arch made with railway track rod with name 'கிருஷ்ணா காலனி') பிறகு அந்த தெரு முடிவில் left. அதில் இருந்து ஐந்தாவது கட்டிடம். கீழே உள்ள தொடர்பு என்னை அழைத்துக் கொள்ளுங்கள். SUBHIKSHA ORGANICS
Ph: 9443777778 / 9443034667 / 0422 - 23 11 577 / 0422 - 23 22 577
Mail : subhikshaorganics@gmail.com
இந்த விவரங்கள் எல்லாம் என்னுடைய தேடலில் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே கொடுக்கிறேன். இதை விட வேறு நிறுவனங்கள் விவரம் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கோவை நண்பர்கள் தோட்டம் சம்பந்தமாக,
தோட்டம் பொருட்கள் சம்பந்தமாக என்ன உதவி, விவரம் தேவை பட்டாலும் என்னை தொடர்பு
கொள்ளலாம். முடிந்த அளவுக்கு உதவி செய்கிறேன். gsivaraja@gmail.com க்கு
ஒரு மெயிலை தட்டி விடுங்கள்.
You are doing a very useful post/work Siva sir! My best wishes to your garden and your service!!:)
ReplyDeleteThanks Madam :-)
Deleteமற்றவர்களுக்கு பயன்படும் விதமாக, அருமையாக, கூகுள் படமும் தந்து விபரங்களை கூறியிருக்கிறீங்க சகோ. நிச்சயம் மற்றவர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும். நன்றி
ReplyDeleteநன்றி. இந்த தகவல் ஒரு இரண்டு பேருக்காவது பயன்பட்டால் சந்தோசம் தான் ;-)
Deletemikka nandri tholare.... kandipaga payanulla thagaval
ReplyDeleteநன்றி சரவணன்
Deleteபாஸ் கலக்குறீங்க.. ரொம்ப பொறாமையா இருக்கு. ரொம்ப ஆர்வமா எழுதறீங்க.. தொடர்ந்து இது போல எழுத வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி கிரி
DeleteIt is a great service sir, thank u for your detailed information.
ReplyDeleteநன்றி மேடம். நான் முடிந்த அளவுக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன். நண்பர்களும் உங்களுக்கு தெரிந்த விவரங்களை கூறுங்கள்.
Deletevery useful information sir,Thank u.,
ReplyDeleteஅருமையான பணி. .பாராட்டுக்கள்.
ReplyDeletecan you pl send me your mobile number , just to get idea how to do steps from seed to plant.
ReplyDeletesure Ganesh. Please send your e-mail address to gsivaraja@gmail.com
Deleteதங்களுடைய பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது
ReplyDeleteஅக்ரி யில் நானும் ஒரு கிட் வாங்கியுள்ளேன் . அதன் பாக்கி பொருட்கள் தந்து விட்டார்களா ?
நன்றி ராதாமணி அவர்களே . இன்னும் மீத பொருட்களை கொடுக்கவில்லை. தேர்தல் நேரம் என்பதால் கொடுக்க தடையாம். தேர்தல் முடிந்த பிறகு தான் பார்க்க வேண்டும்.
Deleteதங்களுடைய பதிவு உபயோகமாக இருந்தது. can u pls send some coir pith outlet address in chennai?
ReplyDeleteThanks. I will check with some friends in Chennai and get the details for you.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்.
அறிமுகம் செய்தவர்-தியானா
பார்வையிட முகவரி -வலைச்சரம்
அறிமுகம்செய்த திகதி-31.07.2014
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறகடிக்கும் நினைவலைகள்-7: சின்ன வயதில் கனவு சுமந்த வாழ்க்கை சின்னநெஞ்சில் வடம் பிடித்தது துள்ளித்திரியும் வயதினிலே தூண்டில் போட்டு விளையாடிய காலங்கள் ...
வாருங்கள்அன்புடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தகவலுக்கு நன்றி ரூபன். நானும் போய் எனது வலை அறிமுகத்தை பார்த்தேன். தெரிவதற்கு நன்றி :-)
Deleteஇன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..
ReplyDeleteதகவலுக்கு நன்றி ராஜேஸ்வரி :-)
DeleteDear Mr.Siva sir,
ReplyDeleteThat was a really wonderful topic posted. I also planned to start roof garden in my house the main thing is where is coir pith available in chennai.
Sivaprakasam.k
Hi,
DeleteThanks for your comment. Please check the below post for details
http://thooddam.blogspot.in/2015/06/blog-post_27.html
மாடித்தோட்டத்திற்குக் கண்டிப்பாக ரூஃப் வேண்டுமா?விலை சற்று கூடுதலாக இருக்கிறதே? செடி வளர்ப்புப் பையை மாடியில் வைப்பதற்கு, கீழே விரிக்க எந்த வகையான பாலித்தீன் விரிப்பு தேவைப்படும்?
ReplyDeleteமாடித் தோட்டத்திற்கு கண்டிப்பாக ரூஃப் போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. காற்று நிறைய அடிக்கும் பட்சத்தில் அதை தடுக்க வேண்டும் என்றால் ShadeNet அமைக்கலாம்.
Deleteகீழே ஏதும் விரிக்க தேவை இல்லை. நான் நிறைய பதிவுகளில் இதை பற்றி கூறி இருக்கிறேன்.
மாடித் தோட்டக் கூரை குறித்த தகவலுக்கு நன்றி. தங்களது பதிவில் கூறியபடி சதீஸ் அக்ரோவில் குழித்தட்டும் வாங்கி விட்டேன்.
ReplyDeleteநல்லது நண்பரே. உங்கள் தோட்டம் நன்றாக வர வாழ்த்துகள்
Deleteவாழ்த்திற்கு நன்றி.சிறக்கட்டும் உங்கள் சேவை .
Delete