இப்போது
‘வீட்டுத் தோட்டம்’ ‘மாடித் தோட்டம்’ பற்றி பயிற்சி வகுப்புகளை நிறைய பார்க்க
முடிகிறது. அதை பற்றி ஒரு சின்ன கண்ணோட்டம். நான் இது வரை கலந்து கொண்ட இரண்டு பயிற்சி
வகுப்புகளையும் வைத்து பார்த்தால் ஓன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. அங்கே வருபவர்களுக்கு
எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். Coir Pith-ஐ காட்டுகிறார்கள. ஆனால் அது எங்கு
கிடைக்கும், விலை எவ்வளவு, எப்படி பயன்படுத்த வேண்டும், என்ன என்ன கலந்து பயன்
படுத்த வேண்டும் என்பது ஏதோ சம்பந்தமே இல்லாத விஷயம் மாதிரி விட்டு விடுகிறார்கள்.
ஆனால் Humic Acid, VAM என்று ஏதேதோ பற்றி மூச்சு முட்ட அரைமணி
நேரம் பாடம் எடுக்கிறார்கள். முதல் முறை தோட்டம் போட ஏதும் விவரம் கிடைக்குமா
என்று வரும் மக்கள் கூட்டத்திற்கு Humic Acid, Hydroponics
பற்றி சொல்லி என்ன ஆக
போகிறது?
விதை
பற்றி, நாற்று தயாரிப்பது பற்றி, மண் கலவை பற்றி என்று எதுவுமே சொல்வது இல்லை. ஒரு
குறிபிட்ட நகரத்தில் நடக்கும் போது, அங்கே இருக்கும் தோட்டம் சம்பந்தமான
நிறுவனங்களை பற்றி சில விவரங்கள் கொடுக்கலாம் (Coir Pith, Nursery
Tray எங்கே
கிடைக்கும் என்பது பற்றி). அதையும் செய்வது இல்லை. ஆனால் WWW.WWW.WW போனீங்கன்னா நம்ம நண்பர் ஒருவர் வித்துகிட்டு
இருக்கார் என்று சொல்ல தெரிகிறது. ஒரு Virtual World-ஐ Create செய்வதிலும் தெளிவு. கடைசியில் மக்கள் போனதுக்கு அங்கே இருக்கும்
ஸ்டால்களில் கிடைக்கும் பொருட்களை வாங்கி கொண்டு வருகிறோம். அவ்ளோ தான் ஒவ்வொரு
பயிற்சி வகுப்பும்.
நான்
போன முறை சென்ற போது Coir
Pith பற்றி
கேட்டதற்கு எனக்கு கிடைத்த பதில் ‘இங்கே அவ்ளோ நல்லது கிடைப்பதில்லை. EC value எல்லாம் ரொம்ப அதிகமா இருக்கும். வேணும்னா
சொல்லுங்க. நாங்க வரவழைச்சு தர்றோம்’ என்பது தான். ஆனால் EC என்றால்
என்ன என்றோ, அதை எப்படி குறைக்கலாம் என்றோ மூச்சு கூட விடுவதில்லை. தகவல்
பரிமாற்றம் என்பதை செய்து விடக்கூடாது என்பதிலும் தெளிவாய் இருக்கிறார்கள். அதன்
பிறகு தேடி பார்த்ததில், Coir
pith-க்கு நான்
கிட்டதட்ட மூன்று இடங்களை இங்கே கண்டு பிடித்திருக்கிறேன்.
ஒரு
தோட்ட பயிற்சி என்றால், அதற்கு தேவையானது என்ன, எங்கே கிடைக்கும், அதை எப்படி
தயார் செய்ய வேண்டும் என்பதை சொல்லி கொடுக்க வேண்டாமா? அதை விட்டுவிட்டு நான்கு
அடியிலும் தோட்டம் போடலாம், எட்டு அடியிலும் தோட்டம் போடலாம் என்று தேவை இல்லாத
டெமோ வேறு. இதை பொதுமக்களிடம் போய் வீட்டு தோட்டம் பற்றி ஒரு விழிப்புணர்வு கொண்டு
வர செய்ய வேண்டும். ‘வீட்டுத் தோட்டம் பயிற்சி கருத்தரங்கு’ என்று வைத்து விட்டு செய்யக் கூடாது.
அங்கே வருபவன் அத்தனை பெறும் ஏற்கனவே தோட்டம் போட நினைத்து விவரங்கள் கிடைக்குமா
என்று தான் வருவான். அவனிடம் போய் விழிப்புணர்வு பிரச்சாரம் மாதிரி தொடக்கம் முதல்
இறுதி வரை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
தோட்டம்
என்பது ரொம்பவே எளிதானது. நல்ல மண், நல்ல விதை, நல்ல வெயில் படும் இடம் இருந்தால்
எந்த செடியும் எளிதாய் வரும். ஆனால் ஒவ்வொரு பயிற்சியியும் ஒரு சில பொருட்களுக்கான
விளம்பர கூட்டம் மாதிரி தான் போகிறது. தோட்டம்
எளிதாய் எப்படி அமைக்கலாம், அதை பற்றி எந்த அடிப்படை புரிதலையும் சொல்லிக் கொடுக்க
கூடாது என்று உறுதியாய் இருக்கிறார்கள். வெளியே ஒரு ஸ்டாலில் ரொம்ப சிறிய Polythene Grow Bag-ல் ஏதோ ஆர்கனிக் உரம் நிரப்பி, கீரை
வளர்க்கலாம் இந்த பையில், விலை வெறும் 180
தான் என்கிறார்கள். விலையை பார்த்தால் தலை சுற்றியது. இதையே நாம் தயார் செய்ய வெறும் நாற்பது ரூபாய் தான் ஆகும்.
அந்த விவரங்கள் மக்களுக்கு தெரிய கூடாது என்பதிலும் தெளிவு. எதை எடுத்தாலும் ஆர்கானிக்
என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். Humic Acid போட்டால் தான் செடி நன்றாக வளரும் என்கிறார்கள். மக்களை அப்படி யோசிக்க
வைப்பதும் இந்த பயிற்சி வகுப்புகளின் நோக்கமாய் இருக்கிறது.
மக்கள்
கூட்டமும் அங்கே விதை கடைகளில் போய் ‘இது ஆர்கானிக் விதை தானே’ என்று கேட்டு வாங்குகிறது. எனக்கு
தெரிந்து Open Pollinated
மற்றும் ஹைப்ரிட்
விதைகள் தான் கேள்விப்பட்டிருக்கிறேன். Organic, Inorganic எல்லாம் விதையில் எங்கே இருந்து வந்தது என்று
தெரியவில்லை.
மண்புழு
உரம் வீட்டிலேயே தயாரிக்கலாம் என்கிறார்கள் (நாம் எத்தனை பேர் பண்புழுவை வாங்கி
போட்டு செய்ய தயாராய் இருப்போம் என்று தெரியவில்லை). ஆனால் அதை விட எளிதான முறைகள்
இருக்கிறது. அதை சொல்லுவதில்லை.
தமிழக
அரசு வழங்க இருக்கும் மாடி தோட்டம் Kit பற்றி
லேசாய் போகிற போக்கில் ஒரு Slide. அதை
பற்றி ஒரு விவரம் கூட வாயை திறந்து சொல்ல வில்லை. கூட்டத்தில் எல்லோருமே எந்த
எண்ணுக்கு போன் செய்ய வேண்டும், அந்த website என்று கேட்டார்கள். அதை அரைகுறையாக சொல்லி போனார்கள். தண்டத்திர்க்கு
தேவை இல்லாத நோட்டீஸ் எல்லாம் அடித்து வர்றவன் கையில் எல்லாம் திணித்தவர்கள், அந்த
Kit பற்றி ஒரு சின்ன நோட்டீஸ் அடித்து கொடுத்த்திருக்கலாம்.
இல்லை, ஒரு பத்து நிமிடம் அதை பற்றி விவரம் கூறி இருக்கலாம். பணம் முதலில் நாம்
கட்டவேண்டியதில்லை, Register
செய்தால் போதும்
என்று சொல்லி இருக்கலாம். அதெல்லாம்
சொன்னால் ஒரு 10% மக்களாவது அதற்கு பதிவு செய்து
இருப்பார்கள். ஆனால் அது தான் நோக்கம் இல்லையே.
இன்னொரு
முக்கியமான பகுதி, இயற்கை முறையில் தோட்டத்தில் பூச்சிகளை கட்டுபடுத்துவது. இது
ரொம்ப சிக்கலான ஒரு பகுதி. இதை பற்றி எதுவுமே பேசுவதில்லை. சும்மா மஞ்சளை கரைத்து
தெளிதாலோ, இஞ்ஜி,பூண்டு கரைத்து தெளிதாலோ ஒன்றும் பெரிதாய் பலன் கிடைப்பதில்லை.
இதை பற்றி கொஞ்சம் விவரங்கள் இருந்தால் கூறலாம். அதெல்லாம் ஏதோ சம்பந்தம் இல்லாத
விஷயம் மாதிரி தான் ஒவ்வொரு பயிற்சி வகுப்புகளும் தயார் செய்யப்படுகிறது.
வணக்கம்
ReplyDeleteஅனைவருக்கும் பயன் பெறும் வகையில் பதிவு உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
Deleteஅட ராமா :(
ReplyDeleteஇங்கே நியூஸியில் வீட்டுத் தோட்டத்தின் பராமாரிப்பு மற்றுமின்றி ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் என்னென்ன செய்ய வேண்டும், எவைஎவைகளை நடவேண்டும், எவைகளை பிடுங்கி
எடுக்கவேண்டும் , எங்கே அதுக்குண்டான பொருட்கள் கிடைக்கும் என்றெல்லாம் ப்ரோஷர்களை அங்கங்கே கார்டன் சென்ட்டர் எனப்படும் செடி , மரம் விற்கும் இடங்களில் எல்லாம் இலவசமாத் தருகிறார்கள்.
தர்றது என்ன.... அங்கே அடுக்கி வச்சிருப்பதை எடுத்து வரலாம். ஃபிப்ரவரி செய்ய வேண்டியதைப் போன வாரம் கொண்டு வந்தேன்.
ஆமாம் டீச்சர். இங்கே கோவையில் அப்படி தான் நடக்கிறது. சென்னையில் நண்பர்கள் சிலர் கலந்து கொண்ட பயிற்சியில் நீங்கள் கூறியிருப்பது போல நிறைய விவரங்கள் கொண்ட கையேடு கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக சென்னையை சுற்றி என்ன பொருட்கள் எங்கு கிடைக்கும் என்று.
Deleteஇங்கே கோவையில் இப்படி தான் இருக்கிறது. பார்க்கலாம்.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சிவா. நான் இதுவரை எந்த பயிற்சி வகுப்பிலும் கலந்துகொண்டதில்லை. ஆகவே அவைகளைப் பற்றி நான் சொல்ல ஒன்றுமில்லை. எனது ஆசான் இணையம் மட்டும்தான். இப்போது ஆர். எஸ். நாராயணன் அவர்கள் எழுதியுள்ள மாடித்தோட்டம் குறித்த புத்தகம் வாங்கியுள்ளேன். படித்துவிட்டு எழுதுகிறேன்.
ReplyDeleteநல்லது தங்கவேல். புத்தகம் மூலமாக, இணையம் மூலமாக நிறைய தகவல் தெரிந்து நாமே முயற்சி செய்து கற்று கொள்ளலாம். நீங்கள் கற்று கொண்டதை கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
DeleteMr. Thangavel,
DeleteCan you give me the details of R.S.Narayanan's terrace garden book I need to buy.
நீங்கள் சொல்வதெல்லாம் அப்பட்டமான உண்மை...
ReplyDeleteபணம் ஒன்றே குறிக்கோள்...
பணம் செய்யலாம். யாரும் இலவச சமூக சேவை செய்ய வேண்டியதில்லை. ஆனால் வருபவர்கள் என்ன எதிர்பார்த்து வருவார்கள் என்று கூட புரியாத மாதிரி நடிக்க தேவை இல்லை. முடிந்த அளவுக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம் இல்லையா. அது தான் என் ஆதங்கம்.
Deleteஇப்படி ஒரு கிளாசில் சேர்ந்து என் பால்கனியை பாபிலோன் தொங்கும் தோட்டமாக ஆக்கலாம் என நினைத்தேன் . நல்ல வேளை என் பர்ஸ் இளைக்கவில்லை
ReplyDeleteநன்றி
இப்படி ஒரு கிளாசில் சேர்ந்து என் பால்கனியை பாபிலோன் தொங்கும் தோட்டமாக ஆக்கலாம் என நினைத்தேன் . நல்ல வேளை என் பர்ஸ் இளைக்கவில்லை
ReplyDeleteநன்றி
பாபிலோன் தோட்டமாக்க திட்டமா :-) . எளிது தான். ஆனால் நாமே கற்றுக்கொண்டு எளிதாய் செய்யலாம். கொஞ்சம் அடிப்படை தெரிந்தால், நீங்களே நிறைய கற்று கொள்ளலாம். உங்கள் மாடி தோட்டத்திற்கு வாழ்த்துக்கள்.
Deleteமுற்றிலும் உண்மை சிவா ஸார் நானும் இதே தான் நினைத்தேன் , பயிற்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்டவர்கள் எல்லோருமே வீட்டு தோட்டத்தின் அவசியத்தை உணர்தததால் தான் பயிற்சிக்கு வந்துள்ளார்கள் அவர்களுக்கு அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தான் சொல்லித்தரவேண்டும், மிக எளிதாக வீட்டிலேயே எப்படி காய்கறி கழிவுகளிலிருந்து காஂபொஸ்ட் தாயார் செய்வது, எந்த காய்கறிகளை சுலபமாய் வளர்க்க முடியும், எந்த காய் எந்த மாதத்தில் விதைக்க வேண்டும், எவற்றையெல்லாம் நடவு செய்ய வேண்டும் இது போன்ற மிக முக்கிய அடிப்படை தகவல்கள் எதுவுமே இந்த பயிற்சியில் சொல்லித்தரவில்லை என்பது வேதனையான விசயம் தான்.
ReplyDeleteவந்தவர்கள் எல்லோருமே வேறு வழி இல்லாமல் தான் அமர்ந்து இருந்தார்கள். அவர்களுடைய Time Management-ஐயும கற்று கொடுக்க வேண்டும் என்ற உணர்வையும் பார்த்து புல்லரித்து போயிற்று. நாம் நண்பர்கள் சேர்ந்து திரட்டும் விவரங்களை பகிர்ந்து கொண்டாலே நமக்கு போதும்.
Delete"Humic Acid, VAM என்று ஏதேதோ பற்றி மூச்சு முட்ட அரைமணி நேரம் பாடம் எடுக்கிறார்கள். முதல் முறை தோட்டம் போட ஏதும் விவரம் கிடைக்குமா என்று வரும் மக்கள் கூட்டத்திற்கு Humic Acid, Hydroponics பற்றி சொல்லி என்ன ஆக போகிறது? "
ReplyDeleteசரியா சொன்னீங்க. இது போல புரியாததை கூறி கொஞ்ச நஞ்ச ஆர்வத்தையும் இவர்கள் குழி தோண்டி புதைத்து விடுகிறார்கள் :-(
கனஜீவாமிர்தம்,
ReplyDeleteமுட்டை ரசம் - பயிர் வளர்ச்சி ஊக்கி
வேம்பு புங்கன் கரைசல்
மீன் அமினோ கரைசல்
பீஜாமிர்தம்
அக்னி அஸ்திரம்
பிரம்மாஸ்திரம்
சுக்கு அஸ்திரா
நீம் அஸ்திரா
Archae பாக்டீரியா கரைசல்
தேமோர் கரைசல்
அரப்பு மோர் கரைசல்
பழக்காடி கரைசல்
பஞ்சகாவ்யா
எல்லா பயிற்சி வகுப்புகளும் அப்படி அல்ல. தமிழ்நாடு விவசாய பல்கலை கழகத்தின் சென்னை தகவல் மற்றும் பயிற்சி மையம், அண்ணா நகரில் இருக்கிறது. மாதம் ஒருமுறை வீட்டுத் தோட்ட பயிற்சி நடத்துகிறார்கள். கட்டணம் 400 ரூபாய்தான். மேலும் தகவலுக்கு-044-26263484 அல்லது http://thalaivazhaivirundhu.blogspot.in/2013/08/3.html The Offshoot ஆழ்வார்பேட்டையில் நடத்தும் இலவச பயிற்சிக்கும் செல்லலாம்-9791088189 http://thalaivazhaivirundhu.blogspot.in/2014/02/workshop-on-organic-terrace-gardening.html
ReplyDeleteAnna i attended a class in kayalpatnam last week.it was really useful.only 20rs for registration fee but they gave some country seeds for that 20rs.had a superb aval payasam n sprouted green gram as snacks.they had some books for sale n organic products with reasonable price.totally it was good thanks to the efforts of kpm brothers.
ReplyDeleteபயிற்சி வகுப்புகள் காயல்பட்டினம் வரை வந்து விட்டதா.. அடடா.. Rs.20 fee தானா..அது தான் நம்ம ஊரு. நான் இங்கே Rs.750 கொடுத்து முன்பு ஒன்று அட்டென்ட் பண்ணினேன். பூச்சிக் கொல்லி பற்றி ஏதும் கூறினார்களா?.. பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களுக்கும் பயன்படட்டும்..
DeleteAnna. நீங்கள் மாடித்தோட்டம் பற்றி ஒரு புக் எழுதுங்களேன் Pls with ur experience n amazing photography! It l b so useful for all ur fans like me.pls try anna!
ReplyDeleteஅந்த அளவுக்கு இன்னும் கற்றுக் கொள்ளவில்லை சகோதரி.. இந்த பூச்சிக் கொல்லி ஏரியா இன்னும் நேரம் செலவிட வேண்டும்..அதன் பிறகு தான் ஓரளவுக்கு எனக்கும் தோட்டம் பற்றி தெரியும் என்று சொல்ல முடியும் :))
Delete