நான்
ஜனவரியில் பதிவு செய்த அரசின் ‘DO IT YOURSELF KIT’ஐ போன வாரம் முதல் கொடுக்க ஆரம்பித்து
இருக்கிறார்கள். இங்கே கோவையில் நான் போன் செய்து கேட்ட போது வீட்டிற்க்கே வந்து
கொடுப்பதாக கூறினார்கள். கூறிய படி, சனிக்கிழமை காலையில் ஒரு வேனில் வந்து எல்லா
பொருட்களையும் கொடுத்து, பில் போட்டு காசு வாங்கி போய் விட்டார்கள். விலை – Rs. 1325.
அதில்
இருபது பாலிதீன் GROW
BAGS. ஒவ்வொன்றிக்கு
தேவையான Coir Pith Block,
அதற்குள்ளேயே pack செய்து வைத்திருக்கிறார்கள். GROW BAG அளவு ஒரு அடிக்கு ஒரு அடி (கொஞ்சம்
அதிகம்) என்ற அளவில் பெரிதாகவே இருக்கிறது. பையின் தரமும் நன்றாகவே தெரிகிறது.
அவர்கள் கொடுத்திருக்கும் செய்முறை படி அதை அப்படியே நீரில் நனைத்து பயன்படுத்த
கூறி இருக்கிறார்கள். நீரில் அலசி பயன்படுத்த வேண்டுமென்று ஒன்றும் கூறவில்லை.
கொடுத்திருக்கும் Bio
Fertilizer மற்றும் Fungicide கலந்து விட்டால் ஒரு
வாரத்தில் Coir Pith மக்கி போய் விடும் என்றும், அதன் பிறகு
நாற்று நட கூறி இருக்கிறார்கள். ஆனால் பட்டியலில் இருந்க்கும் சூடோமொனஸ் இன்னும்
வரவில்லை. ஒரு வாரத்தில் மறுபடி வந்து தருவதாக கூறி சென்றிருக்கிறார்கள்.
விதைகள்
என்று பார்த்தால், ஒவ்வொரு பாக்கெட்டிலும் அளவுக்கு அதிகமாகவே விதைகள் இருக்கிறது. கொத்தமல்லி, பாலக்கீரை, சிறுகீரை
எல்லாம் 100 Gms அளவில் பெரிதாகவே இருக்கிறது. தக்காளி,
கத்தரி, வெண்டை, மிளகாய் எல்லாம் US Agriseeds என்றொரு நிறுவனத்தில் விதைகளாய் இருக்கிறது. எல்லாமும் இந்த
பெப்ருவரியில் பேக் செய்யபட்டதாக இருக்கிறது. இன்னும் ஒரு வருடம் பயன்படுத்தலாம்.
ஆனால் எல்லாமே Hybrid ரகங்கள் (F1 Hybrid) தான். இதை தவிர, முள்ளங்கி, கொத்தவரை, பீன்ஸ்
விதைகளும் இருக்கிறது.
தோட்டதிற்க்கான
உபகரணங்கள் என்று பார்த்தல், ஒரு ஐந்து லிட்டர் பூ வாளி, ஒரு கை தெளிப்பான் (Hand Sprayer) , மண் அள்ள ஒரு Shovel-ம் ஒரு Fork
Type Shovel –ம், 50 Holes Nursery Tray-ம் இருக்கிறது. பூ வாளி மற்றும் இதர பொருட்கள்
பிளாஸ்டிக் தரத்தை பார்த்தால் உறுதியாக நன்றாகவே இருக்கிறது. இவை எல்லாமே என்னிடம்
நிறைய இருப்பதால் இவைகள் பயன்பட போவதில்லை. யாருக்காவது கொடுக்க வேண்டியது தான்.
உரம்
மற்றும் பூச்சி கொல்லி பொருட்களில் எக்கச்சக்க ரசாயன பொருட்கள். NPK 19:19:19 உரம் (Nitrogen (N), Phosphorus (P), and Potassium (K) Mix) ஒரு கிலோ பாக்கெட் இரண்டும் (Water Soluble Fertilizer., trichoderma viride Bio fungicide (Coir Pith-ஐ மக்க வைக்க), NeeMarin 300 என்றொரு பூச்சிக் கொல்லி மருந்தும்
இருக்கிறது. இவைகளே விலை ஐநூறு வரும் போல. என் தோட்டத்தில் இதுவரை மருந்துக்கு கூட
எந்த ரசாயனமும் உரமாகவோ, பூச்சி கொல்லியாகவோ பயன்படுத்தியது கிடையாது. எனக்கும்
கடந்த மூன்று வருடமாக செடிகள் எல்லாம் நன்றாக தான் வருகின்றன. நன்றாக தான்
காய்க்கின்றன. வெறும் Coir
Pith, மண்புழு உரம்,
கொஞ்சம் மணல் கலந்த கலவையில் என் மாடி தோட்டம் கலக்கலாய் தான் வந்து
கொண்டிருக்கிறது. வீட்டுதோட்டத்திற்கு இந்த ரசாயனங்கள் எதற்கு என்று தெரியவில்லை.
இது குப்பையில் தான் போகும் என்று நினைக்கிறேன்.
இதை
தவிர முக்கியமான 4 by 4
meter Polythene Sheet இன்னும்
கொடுக்கவில்லை. அதை தவிர அசோஸ்பயிரில்லம், சூடோமொனாஸ், பாஸ்போ-பாக்டீரியா என்று
மூன்று பொருட்களும் கொடுக்கவில்லை. இன்னும் வரவில்லை, இன்னும் ஒரு வாரத்தில்
வந்தவுடன் வீட்டிற்க்கே வந்து தருவதாக கூறி சென்றிருக்கிறார்கள்.
// யாருக்காவது கொடுக்க வேண்டியது தான். // நன்று... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி :-)
Deleteஆமாம். ஏற்கனவே நிறைய தோட்டக் கருவிகள் வீட்டில் கிடக்கிறது. அதனால் தான் :-)
சிவா, ஆன் லைன்லா புக் பண்ணுனீங்க?
ReplyDeleteஉஷா, நான் நேரில் போய் புக் செய்தேன். விவரமாக இந்த பதிவில் கூறி உள்ளேன். பாருங்கள். ஆன் லைனிலும் புக் செய்யலாம். ஆனால் முதலில் போனில் பேசி பாருங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இந்த பதிவில் உள்ளது.
Deletehttp://thooddam.blogspot.in/2014/01/do-it-yourself-kit.html
ஒரு கிட் பெறுவதற்கு எப்படி விண்ணப்பம் செய்வது? எப்படி உபயோகிப்பது என விளக்கம்/அல்லது புத்தகத்தில் படித்து முயற்சிக்கும் பொது சந்தேகம் வந்தால் விளக்கம் கேட்க ஏதும் தொலைபேசி எண் உண்டா?
ReplyDeleteவிவரமாக இந்த பதிவில் கூறி உள்ளேன். பாருங்கள்.
Deletehttp://thooddam.blogspot.in/2014/01/do-it-yourself-kit.html
சந்தேகம் வந்தால் அவர்களிடம் தொடக்கத்திலேயே கேட்டுக்கொள்ளலாம். எல்லா எண்களும் அந்த பதிவில் கூறி உள்ளேன்.
உங்க பதிவு நிச்சயம் மற்றவர்களுக்கு உதவும். மிகவும் அருமையா தெளிவாக படங்களுடன் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி.
ReplyDeleteநன்றி ப்ரியசகி அவர்களே.
Deleteஅருமையான பணி. .பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றி அரவிந்தன்
Deleteநன்றி தனபாலன். படித்து பார்த்தேன். நானும் நேரம் கிடைக்கும் போது நீங்கள் கூறி இருக்கின்ற சில மாற்றங்களை செய்து பார்க்கிறேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
ReplyDeleteI am also in coimbatore. Can I get your appointment for visiting ur garden. It will more confident.
ReplyDeleteHi . You are welcome to my garden.You can plan a visit on Sunday morning (before 10 AM preferable). Please mail me separately
Delete