பதிவிற்கு போவதற்கு முன் ஒரு தகவல். நமது ப்ளாக் நண்பர் சேர்மராஜ் பகிர்ந்து கொண்டது. நன்றி சேர்மராஜ்
"சென்னை அண்ணா நகரில் இருக்குற தமிழ்நாடு விவசாய பல்கலை கழகத்தின் சென்னை தகவல் மற்றும் பயிற்சி மையம், வர்ற ஆகஸ்ட் 14ம் தேதி (14.8.14) "சமையலறை தோட்டம்" (Kitchen Gardening) அப்படிங்கற தலைப்புல ஒருநாள் பயிற்சி நடத்துது. நேரம் 9.30 am 5.00 pm.
பயிற்சி கட்டணம் 400 ரூபாய். மதிய உணவு, தேநீர், பயிற்சி கையேடு ஆகியவையும், பயிற்சி நிறைவு சான்றிதழும் கொடுக்குறாங்க.
தொடர்பு எண்: 044-26263484
மண்புழு உரமும் அங்கே கிடைக்கிறது. கிலோ 15 ரூபா.'
"சென்னை அண்ணா நகரில் இருக்குற தமிழ்நாடு விவசாய பல்கலை கழகத்தின் சென்னை தகவல் மற்றும் பயிற்சி மையம், வர்ற ஆகஸ்ட் 14ம் தேதி (14.8.14) "சமையலறை தோட்டம்" (Kitchen Gardening) அப்படிங்கற தலைப்புல ஒருநாள் பயிற்சி நடத்துது. நேரம் 9.30 am 5.00 pm.
பயிற்சி கட்டணம் 400 ரூபாய். மதிய உணவு, தேநீர், பயிற்சி கையேடு ஆகியவையும், பயிற்சி நிறைவு சான்றிதழும் கொடுக்குறாங்க.
தொடர்பு எண்: 044-26263484
மண்புழு உரமும் அங்கே கிடைக்கிறது. கிலோ 15 ரூபா.'
பயிற்சி வகுப்புக்களை நான் பொதுவாய் சிபாரிசு செய்வதில்லை. அதுவும் நானூறு ஐநூறு செலுத்தி போவது. நானே போய் நொந்திருக்கிறேன். TNAU -ல் என்பதால் கொஞ்சம் ஒருபடியாய் இருக்கலாம். விருப்பம் இருந்தால் போய் பாருங்கள்.
________________________________________________________________________
இந்த சீசனின் தற்போதைய நிலவரத்தை,
செடிகளின் நிலைமையை பார்க்கலாம். மே
கடைசியில் ஆரம்பித்த செடிகளின் இப்போதைய வளர்ச்சியை பார்க்கலாம்.
இந்த சீசனின் மிக பெரிய பிரச்னை காற்று
தான். பொதுவாய் ஆடி மாதம் தான் காற்று பேயாட்டம் ஆடும். இப்போதெல்லாம் ஜூன்
தொடக்கத்தில் இருந்தே (ஆனி மாதம்) அடிக்கும் காற்று ஆளையே தூக்கி போய்விடும் போல.
இந்த வருடம் அநியாயத்திற்கு காற்று அடிக்கிறது.24 மணி
நேரமும் ஓய்வில்லாமல் அடிக்கிறது. செடி என்ன தான் பண்ணும். மாடியில் ShadeNet
வைத்து அமைத்த அமைப்பை எல்லாம் காற்று கம்போடு பிடுங்கி
போட்டுவிட்டது. இவ்வளவுக்கும் நன்றாக சிமெண்ட் எல்லாம் போட்டு உறுதியாக தான்
போட்டேன். சவுக்கு கம்புகளை உடைத்தே போட்டுவிட்டது.
நிறைய அவரை செடிகளை அசைத்து
வேரோடு பிடுங்கியே போட்டுவிட்டது. சில செடி, கொடிகளின் தளிரை அப்படியே ஒடித்து
போட்டுவிட்டது. இவ்வளது சேதாரத்தை எதிர்பார்க்கவில்லை. அடுத்த சீசனை கொஞ்சம்
தாமதமாய் ஆரம்பிக்க யோசித்து கொண்டிருக்கிறேன் (ஆடியில் விதைக்கலாம் என்று). ஆனால்
ஜூன்-ஜூலை மாதம் வேஸ்டா போய் விடும். இப்போதே நல்ல அறுவடை கிடைக்க ஆரம்பித்து
விட்டது. அது ஓன்று தான் யோசனை.
காற்று பிரச்னை இருந்தாலும் இந்த சீசன்
எதிர்பார்த்தது போல ரொம்ப நன்றாகவே வந்திருக்கிறது.
வெண்டை, அவரை, கொத்தவரை
காற்றில் ஒன்றிரண்டு செடிகள் போனாலும்,
செடிகள் எல்லாமே நன்றாகவே வந்திருந்தது. இந்த வருடத்தில் ஒரு சிறப்பு என்னன்னா,
இந்த மூன்றுமே நாட்டு செடிகளாக கொண்டு வந்தது. அடுத்த பருவத்திற்கு விதைக்கும் சில
காய்களை விட்டு வைத்திருக்கிறேன். நாட்டு அவரை காய் வழக்கமாய் இங்கே TNAU-ல்
வரும் அவரையை விட கொஞ்சம் சின்னதாய், கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கிறது. அதனால்
வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாய் பறித்தால் தான் கூட்டுக்கோ, குழம்புக்கோ
சேர்க்கிறது. அவரை ருசி உண்மையிலேயே வழக்கமாக இருப்பதை விட நன்றாக இருக்கிறது.
நன்றாக பூத்திருந்தது, காற்றில் நிறைய பூ உதிர்ந்து விட்டது.
தக்காளி, கத்தரி, மிளகாய்
தக்காளி தான் ரொம்பவே காற்றில் மாட்டிக்
கொண்டது. அதனால் இந்த முறை பெரிதாய் விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. இதுவும்
நாட்டு செடி தான். ஓரளவுக்கு காய்திருக்கிறது. நிறைய பூ உதிர்ந்து விட்டது. ஆடி
முடிவதற்குள் ஒரு வழியாகி விடும் போல (சரியாக காற்றடிக்கும் இடத்தில் மாட்டிக்
கொண்டது).
கத்தரி, மிளகாய் நன்றாக வந்திருக்கிறது. கத்தரியில் வெள்ளை மற்றும்
ஊதா இரண்டுமே காய்க்க ஆரம்பித்து விட்டது.
கோஸ், காலி ஃப்ளவர், Broccoli, முள்ளங்கி, கேரட், பீட்ரூட்
நம்ம
English Garden எதிர்பார்த்ததை விட ரொம்பவே நன்றாக வந்து
கொண்டிருக்கிறது. கோஸ், காலி ஃப்ளவர், Broccoli மூன்றுமே செழிப்பாக வளர்ந்திருக்கிறது.
மாடிக்கு கொஞ்சம் கீழ் தளத்தில் அமைத்ததனால் காற்றில் இருந்து தப்பித்துக்
கொண்டது. மாடி சுவர் ஒரு அரண் போல அமைந்து விட்டது.
பூக்கும் போது பூச்சி தாக்குதல் ஏதும்
இல்லை என்றால் நல்ல அறுவடை கிடக்கும். கொஞ்சம் கவனமாகவே பார்த்து கொள்கிறேன்.
முள்ளங்கி அறுவடை எடுத்தாச்சு. பீட்ரூட்-ம் கேரட்டும் இப்போது தான் வளர்ந்து
கொண்டிருக்கிறது.
கொடிகள்
மாடியில்
அமைத்த கொடி காற்றில் போய் விட்டது. அதற்காக ஐநூறு ரூபாய் செலவழித்து ShadeNet
எல்லாம் அமைத்து இந்த முறை எப்படியும் மாடியில் கொடிகளை கொண்டு
வந்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். கடைசியில் காற்று எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு
போய்விட்டது. புடலையும் பாகலும் நன்றாக அப்போது தான் மொட்டு விட ஆரம்பித்தது.
கடைசியில் மிஞ்சியது ஒரு புடலை காயும், சில பாகற்காயும் தான்.
முன்னால்
அமைத்த கொடியில் பீர்க்கையும், பாகற்காயும் அழகாய் படர்ந்து இருக்கிறது. பாகல் காய்க்க
ஆரம்பித்து விட்டது. பீர்க்கை இப்போது தான் மொட்டு வைத்திருக்கிறது.
அடுத்த
கொடியில் நாட்டு புடலை (குட்டை மற்றும் நெட்டை) இப்போது தான் பந்தலை தொடும்
அளவுக்கு வளர்ந்திருக்கிறது. கொஞ்சம் செழிப்பு குறைவாக தான் தெரிகிறது. இன்னும்
கொஞ்சம் கவனம் தேவை படும் என்று நினைக்கிறேன்.
கீரை தோட்டம்
பொன்னாங்கண்ணி, பாலக்கீரை, புளிச்சகீரை, அரைக்கீரை, சிறுகீரை,
பருப்புக்கீரை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை, கொத்தமல்லி என்று அத்தனையையும் வைத்து
அமைத்து. அருமையாய் வந்துகொண்டிருக்கிறது. கிட்டதட்ட எல்லா கீரைகளிலும் அறுவடை
எடுத்தாச்சு. கீரை தோட்டத்தை பற்றி விவரமாய் ஒரு பதிவில் எழுதுகிறேன்.
(தொடரும்)
