Friday, September 11, 2015

பசுமை விகடனில் தோட்டம்



பசுமை விகடனில் இருந்து இரண்டு மாதத்திற்கு முன்னமே அழைத்து தோட்டம் பற்றி கேட்டார்கள். அப்போது தான் சீசனை ஆரம்பித்து இருந்ததால் செடிகள் எல்லாம் சிறியதாக இருப்பதால் பெரிதாய் ஏதும் செடிகளை பார்க்க முடியாது, ஒரு இரண்டு மாதம் கழித்து படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்து சின்னதாய் ஒரு பேட்டியும் எடுத்து, குடும்பத்தோடு படமும் எடுத்து சென்றார்கள். இந்த வாரம் பசுமை விகடனில் வந்திருக்கிறது. நண்பர்கள் முடிந்தால் பசுமை விகடன் வாங்கி பாருங்கள். 

அவள் விகடனில் முதன் முதலாய் தோட்டம் வலைப்பூ பற்றி எழுதி, இப்போது எனது தோட்டத்திற்கு ஒரு விரிவான கவரேஜ் கொடுத்த விகடன் குழுவுக்கு மிக்க நன்றி


நன்றி - பசுமை விகடன்

நன்றி - பசுமை விகடன்

37 comments:

  1. வாழ்த்துகள்...

    வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன். புதுக்கோட்டை சந்திப்பு பற்றி பார்த்தேன். நான் என்னுடைய தகவல்களையும் பதிவு செய்கிறேன். நன்றி

      Delete
  2. Sir,I m impressed ur garden work. I want to start garden like this. Kindly guide me. My mail Id barani_hll@ yahoo.co.in

    ReplyDelete
    Replies
    1. Thanks Barani. Please go through the posts and let me know your question. You can mail me with your queries.

      Delete
  3. சூப்பர் சிவா.!! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ப்ரியா. பயணம் எல்லாம் முடிந்து திரும்பி வந்தாச்சா :)

      Delete
  4. Sir I like gardens but I don't know where I will get country seeds in thanjavur or trichy otherwise what is the website available for country seed's. Thanks and congrats

    ReplyDelete
    Replies
    1. Hi, please check this post http://thooddam.blogspot.in/2015/06/blog-post.html

      Delete
  5. சிவா அண்ணா,
    சூப்பரா இருந்தது. நான் படித்து விட்டேன். ஆனா சிவராஜா குடும்பத்தினர்னு பேர் போடவும் யாரோனு நினைச்சுட்டு தான் வாசிக்க ஆரம்பிச்சேன். கோவை சரவணம்பட்டி னு படிச்சவுடனே நீங்கனு புரிஞ்சுகிட்டேன். வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. நன்றி அபி. இந்த முறை முழு பெயரும் கொடுத்து விட்டார்கள் :)

      Delete
  6. புதிதாக ஒரு குரோ பேக்கில் தாங்கள் கூறியவாறு கலவைகளை நிரப்பி அதில் ஒரு தக்காளி நாற்றினை நடுகிறோம் .செடி காய்த்து முடியும் வரை ஆரம்பத்தில் போட்ட மண்புழு உரம் மட்டும் போதுமா? இடையில் உரம் கொடுக்க வேன்டுமா? எவ்வளவு? எத்தனை நாளைக்கு ஒரு முறை?என்ன உரம்?

    ReplyDelete
    Replies
    1. இடையில் கொஞ்சமாய் உரம் கொடுக்க வேண்டும். தொடக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு உள்ளங்கை அளவு மண்புழு உரம் போடுங்கள். பூக்க ஆரம்பித்ததில் இருந்து வாரம் ஒரு முறை அதே அளவு உரம் போடுங்கள். மண்புழு உரம் மட்டும் போதும்.

      Delete
  7. வாழ்த்துக்கள் சிவாண்ணா.....
    உங்களையும், உங்கள் தோட்டத்தையும், உங்கள் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அண்ணா... " தோட்டம் அமைப்பதென்பது நிறைய செலவு செய்யும் வேலை என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி பெரிய அளவில் ஒரு வியாபார வட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள் ஆனால் அது குறைந்த செலவில் எளிதாக செய்யும் வேலை" என்று நீங்கள் கூறியது அருமை அண்ணா.... நான் மாடித்தோட்டம் ஆரம்பித்ததே உங்களால் தான்... என்னைப்போல இன்னும் பலரது ஆர்வத்தை நீங்கள் தூண்ட வாழ்த்துக்கள் அண்ணா..இந்த துறையில் நீங்கள் பலருக்கும் வழிகாட்டியாக இருக்கிறீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.. தங்கள் பணி இன்னும் சிறப்பான முறையில் தொடர வாழ்த்துக்கள் அண்ணா.....

    ReplyDelete
    Replies
    1. நல்லது தம்பி. நிறைய நேரம் இருந்தும் முழுதாய் பேச முடியவில்லை என்பது போல தோன்றியது. சீக்கிரம் மீண்டும் சிந்திப்போம். நீங்கள் நிறையவே தோட்டம் சம்பந்தமாக செய்கிறீர்கள். அதை தொடருங்கள். அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நண்பர்களுக்கு பயன்படட்டும்.

      இன்று தான் நீங்கள் வாங்கி வந்த செடிகளை எல்லாம் வைக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போது நிறைய பேசலாம்.

      Delete
  8. மதுரையில் காயர் பித் கிடைக்கும் இடம் வேளாண்மை ஸ்டோர், 17A, கீழ வெளி விதி நெல்பேட்டை, மதுரை 1 மண் புழு உரம் விவசாய கல்லூரியில் கிலோ 10 ரூபாய் .சனி,ஞாயிறு விடுமுறை.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி. இது மதுரை நண்பர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். அடுத்த பதிவில் இதை தனியாக பகிர்ந்து கொள்கிறேன்.

      Delete
  9. Siva,
    Our garden visit yesterday was vey good. Unable to spend more time. Your plan of planting is very good. Hope to get country seeds from you!!!!. My mom was telling me about mullu kathrikai. She told me that it will be very tasty. Definitely call you.
    Sukanya

    ReplyDelete
    Replies
    1. Happy to have you and your family as part of the garden visit last week. We couldn't spend more time on discussing any topic on gardening. We will definitely do in our next meeting.

      Sure. Once I get the seed from mul kaththari, I will share with our friends. I will keep you posted once it is ready.

      Delete
  10. Siva,
    Nice work.congradulations about the article. Good garden with variety of plants. All the best

    ReplyDelete
    Replies
    1. Thanks Sukanya :) . Long way to go to set-up my dream garden :)

      Delete
  11. வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  12. Hi siva,

    COngrats :) . Neengalay oru Book(online also ok) potralam.

    Thnaks iwth Regards,
    Vallamuthu M.

    ReplyDelete
    Replies
    1. நன்றி.

      புத்தகம் போடும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை. கற்றுக் வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது :) .

      Delete
  13. வாழ்த்துக்கள் நண்பரே . இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் .
    தோட்டம் சிவா என்கிற பெயர் தான் பொருத்தமா இருக்கு .
    அளவான குடும்பம் வளமான வாழ்வு . வாழ்க வளமுடன் .

    ReplyDelete
  14. உங்க குடும்பத்தினரையும் பார்த்தாச்சு. மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் சிவா !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மேடம் :)

      Delete
  15. அருமை வாழ்த்துக்கள் நண்பரே:-)

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. உங்களை அழைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த வாரம் அழைக்கிறேன்.

      Delete
  16. I saw your site super up I want purchase article pls contact address in trichy thanks

    ReplyDelete
    Replies
    1. I don't have details for Trichi. You can check in Subhiksha Organics (they are in Kovai and Salem). Check the below post for details

      http://thooddam.blogspot.in/2014/02/1-coir-pith-seedling-tray-grow-bags.html

      Delete