பசுமை விகடனில்
இருந்து இரண்டு மாதத்திற்கு முன்னமே அழைத்து தோட்டம் பற்றி
கேட்டார்கள். அப்போது தான் சீசனை ஆரம்பித்து இருந்ததால் செடிகள் எல்லாம் சிறியதாக
இருப்பதால் பெரிதாய் ஏதும் செடிகளை பார்க்க முடியாது, ஒரு இரண்டு மாதம் கழித்து
படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தேன். இரண்டு வாரங்களுக்கு
முன்பு வந்து சின்னதாய் ஒரு பேட்டியும் எடுத்து, குடும்பத்தோடு படமும் எடுத்து
சென்றார்கள். இந்த வாரம் பசுமை விகடனில் வந்திருக்கிறது. நண்பர்கள் முடிந்தால்
பசுமை விகடன் வாங்கி பாருங்கள்.
அவள்
விகடனில் முதன் முதலாய் தோட்டம் வலைப்பூ பற்றி எழுதி, இப்போது எனது தோட்டத்திற்கு
ஒரு விரிவான கவரேஜ் கொடுத்த விகடன் குழுவுக்கு மிக்க நன்றி
 |
| நன்றி - பசுமை விகடன் |
 |
| நன்றி - பசுமை விகடன் |