சைக்கிள் கேப்ல ஏதாவது வளர்த்து அறுவடை எடுத்தால் சந்தோசம் தானே. அப்படித்
தான் இந்த முறை மாடியில் ஏற்கனவே நெருக்கமாய் இருந்த பைகளுக்கு இடையில் இரண்டு
முலாம்பழம் கொடியையும் விட்டேன். விதை Omaxe Hybrid Seed (இணையத்தில் வாங்கியது). வழக்கமான 1 அடி X 1 அடி
பையில் ஒவ்வொரு செடி வைத்து விட்டேன்.
முலாம்பழம் வெள்ளரி செடி மாதிரி தான். எளிதாக வளரும் செடியாகவே
இருக்கிறது. ஒரு பத்து இலை வந்ததுமே மொட்டு வைக்க ஆரம்பித்து விட்டது. நிறைய
மொட்டுக்கள் காய் மொட்டுகளாக வந்து, பிஞ்சும் பிடித்தது. பரவாயில்லையே என்று
நினைக்கும் நேரத்தில் கூட்டம் கூட்டமாய் எறும்பு வந்து பூக்கள், இலை என்று ஓன்று
விடாமல் மேய ஆரம்பித்தது. இலை, பூ, பிஞ்சி என்று எதில் பார்த்தாலும் எறும்பு
கூட்டம் தான்.
அந்நேரத்தில் நமது ப்ளாக் நண்பர் தாராபுரத்தில் இருந்து என்னை பார்க்க வந்திருந்தார். அவர் தான் பார்த்துவிட்டு
இலையின் அடியில் நிறைய இலைப்பேன் போன்ற பூச்சிகள் இருப்பதாக கூறினார். அதை
நீக்கினால் எறும்பு தானாக போய் விடும் என்றும் கூறினார்.
பிறகு ஒரு லிட்டர் அளவுக்கு நீரில் இரண்டு உள்ளங்கை அளவுக்கு வேப்பம்
புண்ணாக்கு கரைத்து, பொறுமையாக ஒவ்வொரு இலைக்கும் அடியில் உள்ள பூச்சிக் கூட்டத்தை
கையை வேப்பம் புண்ணாக்கு நீரில் நனைத்து நன்றாக இலைகளை தேய்த்து விட்டேன். கொஞ்சம்
நேரம் எடுத்தாலும் ரொம்ப தாக்குதல் இருக்கும் போது செடியை காப்பாற்ற இந்த முறை தான்
உடனே பலன் கொடுக்கும். வீட்டுத் தோட்டத்தை பொருத்தமட்டும் நாம் எல்லா நேரங்களிலும்
ஒரு Sprayer-ல் வைத்து தெளித்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. தாக்குதல்
அதிகமாக இருக்கும் போதும், நம்மால் கைகளால் பூச்சிகளை நீக்கி விட முடியும் என்றால்
அதை செய்துவிட்டு, பிறகு ஒரு முறை வேப்பம் புண்ணாக்கு தெளித்து விட்டால் பூச்சி
தாக்குதல் அத்தோடு நின்று விடும். இரண்டு நாள் தொடர்ந்து இதே போல இலைகளை வாஷ்
செய்த பிறகு, பூச்சிகள் நிரந்தரமாய் போய் விட்டது. பெரிய ஆச்சரியம், கூட்டமாய்
வந்த எறும்புகள் எல்லாம் இடத்தை காலி செய்து விட்டு போய் விட்டன.
என்னுடைய கவனக் குறைவினால் நிறையவே பூச்சிகள் இருந்ததால் முதலில்
பிடித்த நிறைய பிஞ்சிகள் அப்படியே வெம்பி, உதிர்ந்து போய்விட்டது. செடிக்கு ஒன்றாக
மொத்தம் இரண்டு காய்கள் தான் தப்பித்து வந்தது.
முலாம்பழம் பழுத்தவுடன் அதன் தோலின் நிறம் நல்ல மஞ்சள் நிறமாய்
மாறும். நிறம் மாறிய பிறகு லேசாய் அழுத்தி பார்த்தும் பழுத்து விட்டதா என்று
பார்த்துக் கொள்ளலாம். மாடியில் வெறும்
சிமெண்ட் தரையில் கொடிகள் விடும்போது காய்களுக்கு, பிஞ்சி விடும் போதே தேங்காய்
நார் கொண்டு சின்னதாய் ஒரு படுக்கை அமைத்து விடலாம். இதனால் சிமெண்ட் தரை வெப்பமோ,
தரையில் உரசி காய்களுக்கு ஏதும் பாதிப்போ வரமால் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த முறை பெரிதாய் விளைச்சல் எடுக்க முடியவில்லை என்றாலும், முதல்
முயற்சி என்ற வகையில் இந்த அறுவடை வெற்றியே. தவிர ஒரு பெரிய பாடம் ஒன்றையும்
கற்றுக் கொண்டேன். நாம் பொதுவாய் எறும்பு கூட்டம் செடியில் உலாவுவதை பார்த்தால்,
எறும்பை தான் கட்டுப்படுத்த நினைப்போம். இலைகளிலும், காய்களிலும் வெள்ளையாய் தெரிவதை
எறும்பு தான் ஏதோ கூடு கட்டி முட்டை போடுகிறதோ என்று நினைப்போம். இந்த பிரச்சனை
சீத்தா மரம், வெண்டை செடிகளில் பார்க்கலாம். ஆனால் அவைகள் எல்லாம் எறும்புக்கு
சம்பந்தம் இல்லாதவை, பூச்சி தாக்குதல் என்று நண்பர் சிவகுமார் தான் விளக்கினார். அந்த
பூச்சிகள் சுரக்கும் ஒருவித இனிப்பு சுவைக்காக தான் எறும்புகள் கூட்டமாய் செடிகளை
ஆக்கிரமிக்கின்றன. எறும்புகள் அந்த பூச்சிகளை செடியின் மற்ற இடங்களுக்கும் பரவ
உதவுகிறது. இப்படி இரண்டு பேருக்கும் ஒரு கொடுக்கல்-வாங்கல் டீல் இருக்கிறது. முடிந்தால்
எறும்புகளை கட்டுப்படுத்தினால் பூச்சிகள் பரவாமல் தடுக்கலாம். இல்லை பூச்சிகளை
ஒழித்தால் எறும்புகள் தானாகவே அந்த இடத்தை காலி செய்து போய் விடும். முலாம்பழத்தை
வைத்து கற்றுக் கொண்ட பாடம் இது தான்.
கீழே பார்க்கும் பூச்சி தாக்குதல் எந்த அளவுக்கு இருக்கிறதென்று
பார்த்தாலே தெரியும். ஒரே ஒரு வேப்பம் புண்ணாக்கு வாஷ் தான், பிறகு எந்த
தொல்லையும் இல்லை.
ada, Cantaloupe!!!
ReplyDeleteYes friend..
Deleteகஷ்டப்பட்டு வளர்த்து பறித்த முலாம்பழம் ஆச்சே, இனிப்பு கூடுதலாவேத் தெரியுது. எறும்பு வந்தால் கொஞ்சம் கவனம் தேவை. நம்ம பேன் போல இலைப்பேன் ஒன்றும் இருக்கிறதா !! அடுத்த முறை நிறைய காய்க்கட்டும் :)
ReplyDeleteநன்றி மேடம். மறுபடி புதிய செடி வளர்ந்து பூத்து விட்டது. இந்த முறை கொஞ்சம் கவனமாக பார்த்து கொண்டு வரவேண்டும்.
Deleteரொம்ப நாட்களாக உங்கள் தளத்தை மிகவும் சுவாரஸ்யமாகப் படித்து வருகிறேன். தோட்டக்கலையின் ஆசான் என்று உங்களைச் சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். படிப்பவர்களில் நிறைய பேருக்கு தோட்டக்கலையில் நிச்சயம் பெரும் ஆர்வம் வந்திருக்கும்! தொடரட்டும் உங்கள் தோட்டக்கலை ஆர்வம்!
ReplyDeleteஅவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை மேடம். ஆர்வமும், அதற்கான நேரமும் ஒதுக்கும் போது எல்லாமே நன்றாகவே வரும். அவ்வளவே :)
Deleteசிவா அண்ணா,
ReplyDeleteகோவையில் என் சித்தி வீட்டிலும் முலாம் பழம் அவர்களாக விதை போடவில்லையாம் எப்படியோ முளைத்த தாம் தெரிந்தவர் இன்ன செடி என்று சொல்லவும் இருக்கட்டும் என்று விட்டார்கள் இப்பொழுது 4,5 முறை விதை போட்டு செடிக்கு 2 பழமாக எடுத்து விட்டார்கள். வாழ்த்துக்கள் அண்ணா!!
நல்லது அபி. செடிக்கு ரெண்டா.. சூப்பர். நான் இந்த முறை ஒரு மூன்றாவது எடுத்துவிட்டு சொல்கிறேன் :))
Deleteமிகவும் நல்ல பயனுள்ள பதிவு
ReplyDeleteஇயற்கை விவசாயத்தில் ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு பாடம்,
ReplyDeleteஇயற்கை சோதிக்கும் ஆனால் கைவிடாது நன்றி.
நீங்கள் சொல்வது சரி நண்பரே. நாம் இயற்கையோடு இருக்கும் வரை அது நம்மை கைவிடாது,
Deleteஅருமை முலாம் பழம் செடி எவ்வளவு நீளம் படர்கிறது.காய்ப்பு பிடிக்க எவ்வளவு நாள் ஆகிறது
ReplyDeleteநீளம் என்றால் வழக்கமான ஒரு வெள்ளரி கொடி போல தான், எட்டு முதல் பத்து அடி வரை வரும். விதைத்து மூன்று மாதம் கழித்து பழம் பறிக்கலாம்.
DeleteYour blog is awesome and it is looking even more interesting with the colorful pics.. Thanks for such a wonderful block..
ReplyDeleteSoon i want to trail some plants in my terrace ...
One more thing i want to ask you since you are much in touch with people in seeds & agriculture also
If you have idea of where Millet available at affordable price , pla share..
In chennai , every millet is available around Rs.100-120/Kg which i think too costly
Thanks Kannan for your nice comment.
DeleteI haven't checked on millet prices.But I am not sure if TNAU is selling it. Generally Millet is made costly now. Let me check few shops here and let you know.
Thanks for your reply siva..
DeleteFew things i would like to ask you, before starting terrace garden.
1.After mixing the coir pith , soil and fertilizer for the first time , how often do i need to put fertilizer.
2.Can the same mixture can be reused for next time?
3.Based on your experience can you able to share what is growing period for greens and vegetables .
1. Initially once in two week you need to add one hand full of vermi compost. Once started flowering, once in a week.
Delete2. Yes You can use the same mix for few years. You need to just add some vermi compost at the top whenever starting new plant (around 1/4 - 1/2 kg depend on size of the bag)
3. Are you asking about yielding time for each plant? Each plant varies and generally you will get yield in 2 1/2 - 3 month
ஆஹா முலாம்பழமும் வைத்து பறித்தாச்சா. சூப்பர் சிவா. இடையில் பூச்சிகளுக்கு நல்ல டிப்ஸ். அனுபவமே பாடம்.
ReplyDeleteநன்றி பிரியா :)
DeleteGood job. If we put large amt of manure. It will cause any prob brother?
ReplyDeleteYes. Too much of fertilizer also will cause problem to plants.
DeleteHi Siva,
ReplyDeleteSuper, innum ethavathu kaai sedi/kodigalai vitu vaithullergala? :)
Thanks with Regards,
Vallamuthu M.
:) Thanks Vallamuthu. Innum neraiya irukku list-la.. Onnonna try panna vendiyathu thaan.. Yetho nalla varutho atha permanent list-la sethukka vendiyathu thaan :)
Deleteமிகவும் பயனுள்ள பதிவுகள், தினமும் உங்கள் பிளாக்கில் புதிய பதிவு வந்துள்ளதா என்று ஆவலுடன் பார்க்கிறேன்
ReplyDeleteநன்றி நண்பரே.
Deleteநான் இரண்டு வாரத்திற்கு ஒரு பதிவு என்ற கணக்கில் தான் பதிவு எழுதுகிறேன். சில நேரம் வாரம் ஒரு முறை பதிகிறேன். உங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி.
அருமை சிவா அண்ணா அருமை .
ReplyDeleteஎங்கள் வீட்டில் வெள்ளரி போட்டு இருக்கேன் இதுவரை நிரைய பூக்கள் பூத்தது ஆனால் இரண்டு பிஞ்சுதான் கிடைத்தது . பெருங்காய தூளும் தண்ணீரில் கலந்து ஊற்றி பார்த்தேன் ஆனாலும் பலன் இல்லை.சாணி மற்றும் ஆட்டு உரம் மட்டுமே பயண்படுத்துகிறேன்
நன்றி.
Deleteஒரு செடி நன்றாக காய்ப்பதற்கு நிறைய காரணிகள் உள்ளன. நல்ல உரம் மட்டும் விளைச்சலை தருவதில்லை. எனக்கும் எல்லாமே நன்றாக வருவதில்லை. நானும் வெள்ளரி முதன் முதலாய் போட்டேன். சீக்கிரம் 'என் வீட்டுத் தோட்டத்தில்" வரிசையில் பார்க்கலாம் :)
சிவா சார் வணக்கம்.
ReplyDeleteஎங்க வீட்ல மாடி தோட்டம் அமைத்திருந்தோம் 50 செடிகள் வைத்திருந்தோம்.இங்கு தமிழ் நாடு அரசாங்கம் நீங்களே செய்து பாருங்கள் (டூ இட் யுவர்-ஸெல்ப் கிட்) இங்கே இன்னும் வரவில்லை அதனால் நாங்களே விதை , உபயோகமற்ற வாட்டர் கேன் (20 litr), நிழல் வலை , போன்ற எல்லா வசதிகளும் செய்து வைத்தோம் எதோ கொஞ்சம் காய்கள் கிடைத்தன ,ஆனால் இந்த பாலா போன அதிக சூர்யா வெப்பம் செடிகளை விட்டுவைக்கவில்லை அனைத்தும் கருகி போயின,வாடி போயின ,மொத்தம் 30,000 ரூபாய் நஷ்டம் ,அம்மா ,அப்பா,நான் ,தாத்தா அனைவர்க்கும் மிகவும் வருத்தமும் கவலையும்தான் மிச்சம்,இனிமே இந்த வேலையே வேணாம் என்று தாத்தா சொல்லிவிட்டார் .நீங்க நல்ல பண்றீங்க சிவா வாழ்த்துக்கள்
நண்பருக்கு வணக்கம். ரூ. 30,000 என்பது ரொம்ப பெரிய பட்ஜெட். நீங்கள் எந்த ஊர்? எத்தனையாவது மாடியில் தோட்டம் அமைத்தீர்கள்? என்ன கலவை (ஊடகம்) செடி வளர்க்க பயன்படுத்தினீர்கள் என்று கூற முடியுமா? என்ன என்ன செடிகள் வளர்த்தீர்கள்? நாம் சரியாக நீர் ஊற்றும் பொது வெயிலில் கருகி செடி போவதில்லை. கொஞ்சம் விவரம் கூறினால் நாம் மீண்டும் சின்ன அளவில் ஆரம்பித்து பார்க்கலாம்.
Deleteஉங்களை போல ஆரவம் உள்ள நண்பர்கள் பின்வாங்க கூடாது. என்னால் முடிந்த அளவுக்கு உதவி/விவரம் கொடுக்கிறேன். சின்ன அளவில் (ஒரு பத்து பையில் சின்ன பட்ஜெட் - ரூ.1000-2000 ) ல் ஆரம்பித்து பார்க்கலாமே. விவரம் பகிர்ந்து கொள்ள முடிந்தால், thooddamsiva@gmail.com - க்கு ஒரு மடல் அனுப்புங்கள்.
கலக்கல் , பாராட்டுக்கள். எனக்குப் பிடித்த பழம். உங்கள் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது.
ReplyDeleteநன்றி நண்பரே :)
Deleteவணக்கம் சார்
ReplyDeleteசிவா சார் உங்களுக்கு mail அனுப்பியுள்ளேன் பாருங்கள்
பதில் அனுப்பி உள்ளேன் நண்பரே
Delete
ReplyDeleteஇங்குள்ள எறும்புகள் எங்க தோட்டத்திற்கும் வந்துவிட்டன :)
எங்க வீட்டு மணத்தக்காளி செடியில் கருப்பு எறும்புகள் வந்து, இலைகளின் அடியில் கருப்பு நிற முட்டைகள்(இலைப்பேன்) இருந்தன. பூச்சி விழுந்த இலைகளை நீக்கிவிட்டு பூண்டு அரைத்து இலைகளில் தடவி விட்டு, ஓரளவுக்குப் பரவாயில்லை எனும் அளவில் இருக்கிறது.
இந்தப் பதிவைப் பார்க்கவில்லை என்றால் 'எறும்புதானே' என சாதாரணமாக விட்டிருப்பேன். பதிவுக்கு நன்றி சிவா.
நன்றி மேடம். மணத்தக்காளியில் இந்த எறும்பு/பூச்சி பிரச்னை சில நேரம் அளவுக்கு அதிகமாகவே தொந்தரவு செய்கிறது. அந்த இலையில் அப்படி என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. பூண்டு கரைசல் உங்கள் பார்முலாவா.. நல்லது. தொடர்ந்து இரண்டு முறையாவது அப்ளை செய்யுங்கள். கட்டுப்படுத்தி விடலாம்.
Deleteவேப்பம் புண்ணாக்கு இங்கே அன்னூரில் ஒரு உரக்கடையில் வாங்குகிறேன். சந்தை நுழைவு வாசலுக்கு எதிரில்.
ReplyDeleteஎறும்பு செடிகளின் மீது நிறைய காணப்பட்டால் ஏதும் பூச்சி இருக்கும். மற்றபடி சின்ன சின்ன புற்று மாதிரி பையில் தெரிந்தால் ஏதும் பவுடர், மஞ்சள் தெளித்து பார்க்கலாம். மஞ்சளினால் செடிகளுக்கு எந்த பாதிப்பும் வராது. மஞ்சளுக்கு எந்த அளவுக்கு கட்டுப் படுகிறது?
Super good work ungaludaiya web parthathu very sack enaku velleri seed vendum please
ReplyDeleteHello Madam, உங்களுக்கு இதே வெள்ளரி மற்றும் இதர நாட்டு விதைகள் வேண்டும் என்றால் இந்த பதிவை பாருங்கள்.
Deletehttp://thooddam.blogspot.in/2015/06/blog-post.html
நீங்கள் கோவை என்றால் இந்த வெள்ளரி விதைகள் வேண்டும் என்றால் என்னிடம் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
please your contact no tell me
ReplyDeleteHi,
DeleteI have given my number in the top (blog banner) itself. You can call me on Sundays. Otherwise, please send a mail to me. I will respond with details immediately.
Hello Sir,
ReplyDeleteAwesome news. I knew lots of information from your blog.
Thank you so much.
Ramesh S
Chennai
Thanks Ramesh
DeleteNeenga maadiyil ethanai sathura adi parappil thottam amaithullergal
ReplyDeleteOru 600 Sq.feet irukkum..
Delete