இந்த சீசனில் முடிந்த அளவுக்கு நாட்டு ராகங்களாக நட இருக்கிறேன்.
நண்பர் பரமேசிடம் வாங்கிய நாட்டு விதைகளையும், முன்பு வாங்கி இருந்த சில ஹைப்ரிட்
விதைகளையும் மே இறுதி வாக்கில் Nursery Tray-க்களில் நட்டு
விட்டேன். கிட்டத்தட்ட எட்டு Tray-க்கள், நானுறு
விதைகள். இதில் இந்த சீசனது பட்டியல் இது தான்,
வெண்டை (நாட்டு வகை)
செடி அவரை (நாட்டு வகை)
தக்காளி (நாட்டு வகை)
மஞ்சள் தக்காளி (நாட்டு வகை)
ஹைப்ரிட் தக்காளி (DIY Kit-ல் வந்தது)
பச்சை கத்தரி (நாட்டு வகை)
ஓடவை ஊதா கத்தரி (நாட்டு வகை)
வெள்ளை கத்தரி (போன வருடம் எடுத்த விதை)
சீனி மிளகாய் (நாட்டு வகை)
சம்பா மிளகாய் (நாட்டு வகை)
ஹைப்ரிட் மிளகாய் (DIY Kit-ல் வந்தது)
மிதி பாகல் (நாட்டு வகை)
புடலை (நாட்டு வகை)
வெள்ளரி (நாட்டு வகை)
கும்பு சுரை (நாட்டு வகை)
குடை மிளகாய் (வெள்ளை)
குடை மிளகாய் (Mixed Color)
Hot Pepper (Omaxe Hybrid Seed)
காலி ஃப்ளவர் (Omaxe
Hybrid Seed)
முட்டை கோஸ் (Omaxe
Hybrid Seed)
Baby Corn (Omaxe Hybrid Seed)
Sweet Corn (Omaxe Hybrid Seed)
Water Melon (Omaxe Hybrid Seed)
Musk Melon (Omaxe Hybrid Seed)
தூதுவளை
கண்டங்ககத்தரி
இந்த சீசனில் முயற்சிக்க போகும் புதிய செடிகள் என்று பார்த்தால், போன HortiTech-ல் வாங்கிய சில Omaxe ஹைப்ரிட் விதைகள்
(வெள்ளை குடை மிளகாய், Hot
Pepper மிளகாய், Musk Melon). நாட்டு ரகங்களில் கண்டங்கத்தரி, தூதுவளை, ஆகியவற்றை கூறலாம். தவிர
பரமேஸ் கொடுத்த சில புதிய நாட்டு ராகங்கள் (சீனி மிளகாய், சம்பா மிளகாய், மஞ்சள்
தக்காளி, கும்பு சுரை)
Omaxe Hybrid Seeds for this season |
அடிப்படை காய்கறிகளை (தக்காளி, கத்தரி, வெண்டை, அவரை மற்றும் கொடிகள்)
தரையிலும், மற்ற காய்கறிகளை (குடை மிளகாய், முள்ளங்கி வகைகள்) மாடியில் Grow Bag-களிலும் வைக்க இருக்கிறேன். போன முறை முட்டை கோஸ்-ம், காலி ஃப்ளவர்-ம்
Grow Bag-ல் வைத்து அவ்வளவு செழிப்பாய் வரவில்லை. இவைகளுக்கு நிறைய சத்து
தேவைப்படுகிறது. சின்ன Grow
Bag-களில் வைக்கும் போது செடி வளர்ந்த பிறகு
அவ்வளவாய் உரம் சேர்க்க முடிவதில்லை (இடம் இருப்பதில்லை, அப்படி சேர்த்தாலும்
அவ்வளவாய் வளர்ச்சி வருவதில்லை). அதனால் இவைகளை மட்டும் இந்த முறை தரையில் ஒரு
பாத்தியில் வைக்க இருக்கிறேன்.
விதைகள் எல்லாம் முளைத்து விட்டது. வெண்டையின் முளைப்பு திறன் ரொம்பவே
குறைவாக இருந்தது. பதினைந்து விடைகளில் மொத்தமே நான்கு செடிகள் தான் முளைத்தது.
அதனால் இரண்டு வாரம் பார்த்துவிட்டு புதிதாய் ஒரு Tray-ல் போன
சீசனில் விதைக்கு விட்டு எடுத்த நாட்டு விதைகளை போட்டு விட்டேன். அவை எல்லாமும்
முளைத்து அருமையாக வந்திருக்கின்றன. கொத்தவரை ஓன்று கூட முளைக்கவில்லை. கண்டங்கத்தரியும்,
துதுவளையும் போட்ட ஐந்து விதைகளில் ஒன்றே ஓன்று தான் முளைத்திருக்கிறது. கொஞ்சம்
பார்த்து காப்பாற்றி கொண்டு வரவேண்டும்.
சீசனை தொடங்குவதற்கு முன்னமே தேவையான அளவு மண்புழு உரம் (150 Kg @ Rs7.50/Kg,
வீட்டில் இருக்கும் மரங்களுக்கும் சேர்த்து) வாங்கி வைத்து விட்டேன். அதோடு TNAU போய் ஒரு மூன்று
லிட்டர் பஞ்சகாவ்யாவும் (Rs.80/Ltr), அன்னூர் போய் 25 Kg (Rs.20/Kg) வேப்பம் புண்ணாக்கும் வாங்கி வைத்து விட்டேன் .இந்த சீசனுக்கு இது போதும்.
Nursery Tray-க்களில் செடிகள் முளைக்கும் போதே வாரம் ஒரு முறை பஞ்சகாவ்யா கலந்து
நீர் ஊற்றி, தெளித்து வந்தால் நாற்றுகள் நன்றாக வரும்.
போன வாரத்தில் இருந்து செடிகள் ஒவ்வொன்றாய் அதற்குரிய பாத்திகளில் நட
ஆரம்பித்து விட்டேன். Sweet
Corn, Baby Corn, அவரை செடிகள் எல்லாம்
எடுத்து பாத்திகளில் வைத்து விட்டேன். புடலை, சுரை, பாகல், வெள்ளரி செடிகளையும்
தரையில் வைத்து விட்டேன். தக்காளி,
மிளகாய், கத்தரி, கோஸ் செடிகளை இந்த வாரம் எடுத்து நட வேண்டும். மற்றவைகளை Grow Bag-களில் வைக்க வேண்டும். கீரைகள் எல்லாம் மாடியில் Grow Bag-களில் வளர ஆரம்பித்து விட்டன.
இந்த முறை புதிதாய் சேர்த்திருக்கும் ரகங்கள் எப்படி வருகிறது என்று
பார்க்க வேண்டும். இவை எல்லாம் செப்டம்பரில் அறுவடைக்கு தயாராக இருக்கும். இந்த
சீசன் செடிகளின் வளர்ச்சி, அறுவடை, மற்ற பிரச்சனைகள் பற்றி வரும் வாரங்களில்
பகிர்ந்து கொள்கிறேன்.
அவரை நாற்றுகள் |
தக்காளி - பீன்ஸ் |
மிளகாய் - பாகல் - புடலை - வெள்ளரி |
கத்தரி |
மிளகாய் |
முட்டை கோஸ் (Cabbage) |
Sweet Corn - Baby Corn - Water melon - Musk Melon - Avarai |
Sweet Corn - Baby Corn |
Garden Tips – 001
பஞ்சகாவ்யாவை ஒரு பக்கெட்டில் வைத்து தினமும் இரண்டு முறை ஒரு
குச்சியை வைத்து நன்றாக கலக்கி விட்டு வந்தால் இரண்டு-மூன்று மாதங்களுக்கு வைத்து
பயன்படுத்தலாம். நல்ல குளிர்ச்சியான நிழலில் வையுங்கள். கொசு, பூச்சிகள் உள்ள
விழாத மாதிரி மூடி இருக்கும் பக்கெட்டில் வைத்து, மூடியில் காற்று போகும் படி
சின்ன சின்ன துளைகள் நிறைய போட்டு வைத்தால் போதும்.
Garden Tips – 002
Nursery Tray-ல் விதைகள் நடும் போது புதிதாய் Coir Pith மீடியா
தயாரித்து உபயோகிக்கவும். ஏற்கனவே பயன்படுத்திய Coir Pith கலவையை
பயன்படுத்தும் போது முளைக்கும் செடிகள் கூடவே நிறைய களைகளும் (புற்கள், பிற
செடிகள்) வளர ஆரம்பிக்கும்.
Garden Tips – 003
Nursery Tray-ல் விதைகள் நடும் போது கத்தரி, தக்காளி மாதிரி சிறிய விதைகளை ஒரே
குழியில் இரண்டு-மூன்று விதைகள் போட்டு விடவும். முளைப்பு திறன் குறைவாக இருக்கும்
பட்சத்தில் ஒவ்வொரு குழியிலும் ஒரு செடியாவது வரும். சில நேரம் நல்ல முளைப்பு
திறன் உள்ள விதைகளாக இருப்பின் ஒரே குழியில் நான்கைந்து செடிகள் வளர்ந்து விடும். அவற்றை
உடனே நீக்காமல் கொஞ்சம் வளரவிட்டு பிறகு அவற்றில் நல்ல திரட்சியான செடியை
விட்டுவிட்டு மற்றவற்றை வெட்டி விடலாம் (பிடுங்க கூடாது. பிடுங்கினால் நாம் விட
நினைத்த செடியின் வேரும் பாதிக்கும்).
வெண்டை மற்றும் கொடிவகைகளை நாற்றாக நடலாமா?
ReplyDeleteபெரிய விதைகளை நேரடியாகவே நடலாம். பாத்திகள் தயாராக இல்லாத பட்சத்தில் நாம் தட்டுகளில் நட்டு பிறகு எடுத்து நடலாம்.
DeleteAll the best for a nice harvest!! 😀
DeleteThanks Mahi
Deleteஇயற்கை உரங்கள் அனைத்தும் எங்கே கிடைக்கும் ? நான் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம்.
ReplyDeleteநீங்கள் லோக்கல் நர்சரி கார்டனில் மண்புழு உரம் என்று கேட்டுப் பாருங்கள். விவரம் கிடைக்கும்.
Deleteமகளிர் சுயஉதவி குழுக்கள் விற்பனை செய்யும் கடைகளில் மண்புழு உரம் கிடைக்கிறது..
Deleteநானே மண்புழு உரம் ரெடி பண்ண முடிவு பண்ணிடேன் நண்பர்களே . மண்புழு காக காத்து இருகிறேன் .இயற்கை விவசாய நண்பர் ஒருவர் மண்புழு தருவதாக உறுதி அளித்து உள்ளார் . இந்த வாரத்தில் ரெடி பண்ண ஆரம்பித்து விடுவேன் .
Deleteநல்லது நண்பரே. மண்புழு உரம் தயாரிக்க ஆரம்பித்தவுடன் எப்படி வருகிறது என்று கூறுங்கள். எனக்கும் இங்கே ஒருவர் உதவி செய்வதாக கூறினார். வீட்டில் தான் மண்புழு என்றாலே அலறுகிறார்கள் :)
DeleteI am Prabhu from chennai. I am also interested in earthworms. Can anybody help me on this ?
DeleteDid you check in TNAU there ( in Anna Nagar, Tiruvanmiyur, Madhavaram branches?).
Deleteவாழ்த்துகள் சிவாண்ணா
ReplyDeleteநன்றி இசக்கி முத்து
DeleteSuper, All the Best Boss :)
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteஹாய் சிவா,
ReplyDeleteஉங்கள் பதிவில் இருந்து ஒரு சிறிய சந்தேகம், வருடம் ஒரு முறை மண் மற்றும் மண்புழு உரத்தை மற்ற வேண்டுமா?.
மண்ணில் வரும் விதைகள் nursery tray-vil வளரவில்லை. nursery tray கலவை எப்படி இருக்க வேண்டும்?
Thanks with Regards,
Vallamuthu M.
மண்புழு உரம் என்பது உரம் தான். அதில் மாற்ற வேண்டும் என்று ஓன்று இல்லை. ஒவ்வொரு சீசனின் தொடக்கத்திலும் உரம் போட்டு ஆரம்பிக்க வேண்டும். சீசனின் இடையில் தேவைபட்டால் உரம் இடலாம்.
Deleteநான்கு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மேல் மண்ணை மற்றும் கொஞ்சம் புதிதாய் போடலாம்.
நர்சரி கலவை Coir Pith ; மண்புழு உரம் 1:1 என்ற விகிதத்தில் கலந்து கொள்ளவும். மண் கலக்க கூடாது.
vazhthukkal thiru siva avargaley
ReplyDeleteVAZHTHUKAKAL SIVA SIR
ReplyDeleteநன்றி
Deleteஹாய் சிவா அண்ணா,
ReplyDeleteமண்புழு உரம் எங்கே வாங்கறீங்க?
வேப்பம் புண்ணாக்கு பயன் படுத்துவது எப்படி?
TNAU / Asiaan Organics வாங்கும் coir pith -ல் மண் இல்லாமல் செடிகள் நன்றாக வளரும் என்கிறார்கள். நீங்கள் முயற்சித்ததுண்டா?
நன்றி அகிலேஷ்.
Deleteமண்புழு உரம் இங்கே TNAU-ல் வாங்குவேன். நவாவூர் பிரிவில் ஒரு இடத்திலும் வாங்குவதுண்டு.
வேப்பம் புண்ணாக்கு கொஞ்சம் (ஒரு mug அளவுக்கு) எடுத்து ஒரு பக்கெட் தண்ணீரில் கலந்து நிலத்தை கிளறி செடிகளுக்கு ஊற்றி விடுவேன்.
coir pith -ல் மண் கலக்காமல் வரும் என்றால் அதில் வேறு உரம் ஏதாவது கலந்து கொடுப்பார்கள். விலை அதிகமாக இருக்கும். விவரம் தெரிந்தால் கூறுங்கள். நாமே செய்வது என்றால் கொஞ்சம் செம்மண் கலந்தால் எல்லா கனிமங்களும் செடிகளுக்கு கிடைக்கும்.
அருமையான பதிவு உபயோகமுள்ள தகவல்கள் நன்றி சிவா சார்
ReplyDeleteதோட்டம் சிவா அண்ணா வணக்கம்
ReplyDeleteமாடித்தோட்டம் பற்றி ஏதோ தகவல் தேடும்போது தற்செயலாக உங்க பிளாக் பக்கம் வந்தேன்.. அவ்வளவுதான் ஒரு வாரமா பரிட்சைக்கு படிக்கிற மாதிரி உங்க முதல் பதிவு வரைக்கும் படிச்சாச்சு ணா. அதுமட்டுமில்லாம சிவபுராணம் கீதம் சங்கீதம்னு உங்க எல்லா பதிவையும் படிச்சாச்சு ( அதில் இருந்து கேள்வி எல்லாம் கேட்க கூடாது ) ரொம்ப நல்லா எழுதுறீங்க.. தோட்டம் பற்றி நெட்ல நிறைய தகவல் இருந்தாலும் அதையெல்லாம் படிச்சோம்னா தோட்டம் போடுற ஆசையே போய்டும் ஒன்னுமே புரியாது... ஆனா நீங்க உங்க தோட்டத்தில என்ன பண்றீங்களோ அதை பத்தி மட்டும் எழுதுறதால எல்லாருக்கும் நாமளும் முயற்சி பண்ணி பாக்கலாம்னு ஒரு ஆர்வம் வரும்.. அதுக்காகவே ஒரு சபாஸ்ணே... நல்ல சேவை... தொடரட்டும் உங்கள் பணி... வாழ்த்துகள்..
நன்றி இசக்கி முத்து. சிவபுராணம் வரை படிச்சிட்டிங்களா. ரொம்ப சந்தோசம் :)
Deleteஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. நான் கற்றுக் கொள்வதை அப்படியே எழுதுகிறேன். அவ்வளவே. இதை பார்த்து உங்களை போல இரண்டு பேர் தோட்டம் போட ஆரம்பித்தால் சந்தோசமே.
நான் கிராம புறத்தில் இருந்தாலும் உங்கள் பதிவை படித்த பிறகுதான் அதிக ஆர்வம் வந்தது நண்பரே . நான் ஸ்டுடியோ வைத்து உள்ளேன். இந்த ஆண்டு இயற்கை விவசாயம் தான் என்று முடிவு பன்னி விட்டான் நண்பரே . பஞ்ச கவ்யம், மண்புழு உரம் எல்லாம் நானே ரெடி பண்ண முயற்சி செய்து வருகிறேன்.
Deleteஇது போன்று கேட்கும் போது ரொம்ப சந்தோசமாய் இருக்கிறது. நன்றி நண்பரே.உங்கள் நண்பரின் முயற்சி வெற்றிகரமாய் அமைய வாழ்த்துகள். புதிதாய் விவரம் ஏதும் இருந்தால் என்னிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். நானும் கற்றுக்கொள்கிறேன்
Deleteதோட்டம் சிவா அண்ணா வணக்கம்
ReplyDeleteஎனக்கு சில கேள்விகள்...
மண்புழு உரம் tnau ல rs 6க்கு கிடைக்குதுனு சொன்னீங்க.. அப்புறம் ஏன் வெளியே 7.50க்கு வாங்குறீங்க.. நவாவூர் பிரிவுல எந்த கடை.. (நான் துடியலூர்ல இருக்கிறேன்)
Coir pith block இப்ப எங்க வாங்குறீங்க... என்ன விலை...
Grow bag வெயில்ல இருந்தா இத்து போறதில்லயா... அப்படியே இருக்குதா...
தயவுசெய்து பதில் சொல்லுங்கணே...
பின்குறிப்பு இதுவரைக்கும் நான் ஒரு செடி கூட வீட்ல வைக்கல.. உங்க பிளாக்கை படிச்சுநான் ஒரு தோட்டம் போட்டா அந்த பேரும் புகழும் உங்களையே சேரும்..)
நீங்கள் முதலில் இந்த வாரம் கொடிசியாவில் நடக்கும் Agri Intex விவசாய கண்காட்சிக்கு கண்டிப்பாக போங்க. ( 17th - 20th July). நிறைய விவரங்களும், பொருட்களும் கிடைக்கும்.
DeleteTNAU வில் உரம் சில வாங்காதது, அவர்கள் வார நாட்களில் மட்டுமே இருப்பார்கள். சனி கிழமை கூட திறக்காது. தவிர நிறைய நேரம் கிடைப்பதில்லை. அதனால் தான் வெளியே வாங்குவேன். வெளியே 10 - 20 கிலோ என்று குறைவாக வாங்கினால் கிலோவுக்கு Rs.10 ஆகிவிடும். நிறைய வாங்கினால் மட்டுமே லாபம். பிறகு நவாவூர் எண் கொடுக்கிறேன். முதலில் உங்கள் தோட்டத்தை திட்டமிட்டு கொள்ளலாம்.
இது வரை செடி வளர்க்க வில்லை என்று வேறு கூறுகிறீர்கள். என்ன சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள். முடிந்த அளவுக்கு உதவுகிறேன். Coir Pith இங்கே நொய்யல் சென்டரில் வாங்கலாம். எனது பழைய பதிவில் (தகவல் - தொடரில்) விவரமாய் இருக்கும்.
Grow bag வெயிலுக்கு ஒன்றும் ஆகாது. கவலை வேண்டாம் :)
நன்றி சிவா அண்ணா
Deleteஅர்ஜின்ல தான் எல்லாமே வாங்கியிருக்கோம். நவாவூர் பிரிவு கடை எண் கொடுங்களேன்... நாங்க அங்க வடவள்ளி பக்கம் தான்.. ஒரு 25 grow bags வைத்துள்ளேன். கீரை வர ஆரம்பித்துவிட்டது மற்றவை எப்படி என இனிதான் பார்க்கணும். நன்றி உங்கள் பதிவுகளுக்கு
ReplyDeleteநல்லது எழில். தனி மடல் ஓன்று அனுப்புங்க.
ReplyDeleteதோட்டம் சிவா அண்ணா வணக்கம்
ReplyDeleteநீங்க பஞ்சகவ்யம் எப்ப வாங்குனீங்க ? நான் இன்னைக்கு போய் வாங்குனேன் tnauல லிட்டர் 100ருபாய் அண்ணா...... Ensல... மண்புழு உரம் கிலோ 10 ருபாய் ஆக்கிட்டாங்க... 10 கிலோவா ஒரு சாக்குல போட்டு தர்ராங்க... சாக்கு நாம கொண்டு போன 100 ருபாய்.. அவங்க தர்ர சாக்கோட வாங்குனா 110 ருபாய்... நான் 20 கிலோ மண்புழு உரம் (220) 2 லிட்டர் பஞ்சகவ்யம் (200) வாங்குனேன்....
நான் ஒரு மாதத்திற்கு முன்பு தான் வாங்கினேன். லிட்டர் ரூ.80 என்று தான் வாங்கிகேன். இப்போது கூட்டி விட்டார்கள் போல. நவாவூர் பிரிவிலும் கிலோ பத்து ரூபாய் தான் (நாம் பத்து கிலோ என்ற அளவில் வாங்கும் போது). நான் 100-150 கிலோ என்ற அளவில் வாங்கும் போது கிலோ Rs.7.50 என்று கொடுத்தார்கள். நம்பர் அனுப்புகிறேன். விசாரித்து பாருங்கள்.
Deleteநன்றி அண்ணா
Deleteசிவா அண்ணா வணக்கம்
ReplyDeleteஇன்னொரு விசயம்.... மணபுழு உரம் இப்போ வெள்ளி கிழமை மட்டுமே கிடைக்கிறது.... Tnauல்... 9.00 to 12.00 மட்டும்
இது வேறையா. திங்கள்-வியாழன் முழு நேரம், வெள்ளி மட்டும் பாதி நேரம். இப்படி தானே இருந்தது. சரியாக விசாரித்தீர்களா?
Deleteவிட்டா ரேசன் கார்டோடு வரிசையில் நிற்க வைத்து விடுவார்கள் போல :) ,
ஹா...ஹா... உண்மைதான்.
Deleteரேசன் கார்டு மட்டும்தான் கேட்கவில்லை.... நான் ஏற்கனவே புதன் கிழமை அன்று போய்ட்டு வந்தேன் அண்ணா.... வெள்ளி கிழமை மட்டுமே கிடைக்கும் என்று சொல்லி விட்டார்கள்.. வாங்கும்போதும் நன்றாக விசாரித்துவிட்டேன்.. 9.00 ல் இருந்து ஸ்டாக் இருக்கும்வரை மட்டும் தானாம்..
நன்றி மதன். தனி மடல் ஓன்று அனுப்பி வையுங்க. விவரம் அனுப்புகிறேன்.
ReplyDeleteHello sir,
ReplyDeleteI'm sudha from madurai.... ur blog is very usefull.I'm already some plants in my home.will u pls guide me where can I get grow bags,coi pith,veg seeds, keerai natural in madurai. some of my plant are infected by white colour insects d full of black ants.how to solve this problem.
Hello Madam.
ReplyDeleteThanks for your comment. Regarding availability of material in Madurai, I don't have details. If we have any friends from Madurai seeing this, please share any information if you have. Please send a mail to me (thooddamsiva@gmail.com). There are few companies from kovai who can send it to Madurai with nominal price for packaging/shipping. I will share those details. You can call my on Sunday Morning on the given number in blog.
Regarding the white bugs, have a check on the below post. What method you are trying now to remove them?
Ant is a issue here in my thooddam also :( . I am also exploring a good option to get ride of them. Yet to get a solid solution :(
http://thooddam.blogspot.in/2015/03/blog-post.html
Hi anybody support me to get all type of seeds at chennai
ReplyDeleteHi,
DeletePlease check these two posts regarding seeds,
http://thooddam.blogspot.in/2015/06/blog-post.html
http://thooddam.blogspot.in/2015/06/blog-post_27.html
Hi siva na. I'm Deepa. Esaki muthu.'s friend. I'm frm sivananthapuram. Started roof Gardening few months bk. Ur posts r very useful for beginner like me. Superb na. Thank u
ReplyDeleteHi Pradeepa, Thanks for your comment. Nice to see you here. Please keep sharing your feedback and comments.
DeleteDear Siva Sir,Iam Kalirajan from Trichy. Working in BHEL. While searching for roof gardening I got your blogs. Very helpful for beginning gardening. I got seeds from exhibition, biocarve and local shop. Plants are growing in plastic grow bag with Cocopeat, makkiya tholu uram and little Vermicompost. I have to wait for some time for the result.
ReplyDeleteHi, Thanks for your comment. Good to hear about your garden. Keep posted with the progress and the yield you get. Share your experience and learning also which will help me and other friends here.
Delete