Saturday, June 27, 2015

தகவல் – தோட்டம் பொருட்கள் (சென்னை)


எனக்கு வார இறுதியில் நமது ப்ளாக் நண்பர்களிடம் இருந்து வரும் அழைப்புகளில் முக்கால்வாசி சென்னையில் இருந்து தான் வருகிறது. தமிழ்நாட்டில் முக்கால்வாசி பேர் சென்னையில் தான் இருக்கிறார்கள் போல :-).

நிறைய பேர் மாடித் தோட்டம் பற்றி தான் ஆர்வமாய் கேட்கிறார்கள். முக்கியமாக Grow Bags, மண்புழு உரம் மற்றும் Coir Pith எங்கே வாங்கலாம் என்று கேட்கிறார்கள். கோவையில் தோட்டம் சம்பந்தமாக எங்கே என்ன கிடைக்கும் என்று என்னிடம் நிறைய விவரங்கள் இருக்கிறது (நண்பர்கள் மூலமாகவும், இணையம் மூலமாகவும் தேடி கண்டுபிடித்தது). ஆனால் சென்னையை பற்றி பெரிதாய் விவரம் இல்லை. என்னால் எந்த அளவுக்கு கோவையில் இருந்து உதவி செய்ய முடியும் என்று தெரியவில்லை.

Coir Pith block-வை விட மிக முக்கியமாக நமக்கு மண்புழு உரம் தேவை. நிறைய தேவை (எனது ஒரு சீசனில் மண்புழு உர தேவை 200 Kg ). அதை நாம் மற்ற ஊர்களில் இருந்து அனுப்பி வைப்பது சாத்தியமில்லை (சுண்டைக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம் என்பது போலாகிவிடும்). மண்புழு உரம் லோக்கலில் வாங்குவது தான் நல்லது. ஆனால் சில நண்பர்கள் கிலோ 30 ரூபாய்க்கு வாங்குவதாக கூறினார்கள். இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்கி தோட்டம் போட்டால் கம்பெனி அநியாயத்திற்கு நஷ்டத்தில் தான் ஓடும். மண்புழு உரத்தின் விலை இங்கே TNAU-ல் கிலோ Rs.6. நான் வெளியே கிலோ Rs.7.50 க்கு வாங்குகிறேன். கிலோ பத்து ரூபாய் வரை கொடுக்கலாம். Grow Bags, விதைகள் கூட இணையத்தில் வாங்கி கொள்ளலாம். ஆனால் தோட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு மண்புழு உரம் கிடைப்பது பற்றி விசாரித்துக் கொள்ளுங்கள்.       

அடுத்தது விதைகள். பத்து ரூபாய்க்கு மேல் விதை பாக்கெட்டுக்கு செலவு செய்யாதீர்கள். நான் போன பதிவில் பரமேஸ் பற்றி விவரம் கொடுத்திருந்தேன். அவரிடம் எல்லா விதைகளும் கிடைக்கிறது. இல்லாவிட்டால் பக்கத்தில் உரக்கடைகளில் விசாரித்து பாருங்கள். இங்கே கோவையில் Arjun Grow Bag-ல் எல்லா விதைகளும் கிடைக்கிறது. வேண்டுமென்றால் என்னால் வாங்கி அனுப்ப முடியும் (நண்பர் பரமேஸ் கொடுத்திருக்கும் பட்டியலில் இல்லாத விதைகள் ஏதும் இருந்தால்). சில ஆங்கில காய்கறிகள் (Capsicum, Cauliflower, Baby Corn, Broccoli) விதைக்கு மட்டும் இணையத்தில் 30-40 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம் (Omaxe Hybrid Seeds, Biocarve seeds).      

என்னிடம் இருக்கும் சென்னை தகவல்கள் கீழே,

மண்புழு உரம்

     நண்பர் ShedraBala போன வாரம் பகிர்ந்து கொண்ட தகவல்,

     மண்புழு உரம் in Porur,( Near MGR Statue), Arcot Rd, Chennai.
Sundaram Agro Center. Ph: 044-2476 7599.
Per kg Rs.10.

     தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் (TNAU) – மாதவரம் அல்லது திருவான்மியூர் எண் கிடைத்தால் விசாரித்து பாருங்கள். திருவான்மியூர் TNAU-ல் இருந்து ஒருவர் எண் கிடைத்திருக்கிறது. விசாரித்து பார்த்து பகிர்ந்து கொள்கிறேன்.  

இது தவிர லோக்கல் நர்சரிகளில் வைத்திருப்பார்கள். விலை குறைவாக தான் இருக்கலாம். விசாரித்து பாருங்கள்.

Grow bags, Coir Pith Blocks, விதைகள்.

இது நமது பிளாக் நண்பர் மூலமாக கிடைத்த தகவல். நேற்று SUSI SEEDS-ஐ தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களிடம் எல்லாமும் கிடைக்கிறது. Coir Pith 5 Kg Block விலை Rs.120 என்றார்கள். விலை பரவாயில்லை தான். மண்புழு உரம் Rs.30/Kg என்றார்கள். இது மிக விலை அதிகம். ஆனால் Grow bags, Coir Pith Blocks, விதைகள் வாங்கி கொள்ளலாம். T.Nagar Bus Stand அருகில் உள்ள Police Station-க்கு எதிரில் உள்ள தெரு என்றார்கள் (Natesan Street). இந்த தெருவில் இதே போல நிறைய கடைகள் இருப்பதாக இந்த தகவலை பகிர்ந்து கொண்ட நண்பர் கூறினார்.  
     
SUSI SEEDS,
Shop No:2-C, Ground Floor, Singapore Complex,
32/24 Natesan Street,
T.Nagar, Chennai - 600017.
                 
Parallel Street to Ranganathan Street, T.Nagar.
                 
Phone: 044 - 24337787
             9962955119

நம்மில் நிறைய சென்னை நண்பர்கள் தோட்டப் பொருட்கள் கிடைக்கும் இடம் பற்றி விவரம் வைத்திருப்பீர்கள். அதை மற்ற நண்பர்களுக்கும் பயன்பட இந்த பதிவில் உங்கள் கமெண்டுகளை பதியுங்களேன். நாம் மொத்தமாக தொகுத்து கொடுத்தால் நிறைய நண்பர்களுக்கு பயன்படும்.

மற்ற ஊர்களில் இருக்கும் நண்பர்களும் உங்கள் ஊர்களில் கிடைக்கும் பொருட்கள் விவரம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நண்பர் Vallamuthu Madheswaran பகிர்ந்து கொண்ட தகவல்,

சென்னை நியூ பெருங்களத்தூரில் 1 கிலோ  5.50 ரூபாய்க்கு மண்புழு உரம் கிடைக்கிறது. நியூ பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1/2 கிலோமீட்டர் தொலைவில் வேளாண்துறை உள்ளது. அங்கு கிடைக்கிறது. 


தோழி Shobana janani பகிர்ந்து கொண்ட சென்னை தகவல்,

Shop to buy seeds n other garden products at T.NAGAR
Sakthi seeds ,
Uma complex(first complex from mambalam Railway station)
21,natesan st,
t.nagar,chennai-17

ph:044-24329207,9444874389,7401035222

26 comments:

  1. Profile-ல் உங்கள் கைபேசி எண் இருந்தால் நண்பர்களுக்கு தெரிவிக்க உதவியாக இருக்கும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ப்ளாக் பேனரிலேயே கொடுத்திருக்கிறேன் தனபாலன். சிலர் என்னை அழைத்து தோட்டம் சம்பந்தமாக விவரம் கேட்கிறார்கள். என்னிடம் இருக்கும் விவரங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

      Delete
  2. நல்ல தகவல்.
    தொடர்க உங்கள் சேவை

    ReplyDelete
  3. Thanks. You are doing very good job.

    ReplyDelete
  4. Hi Siva,

    முதல் முறை தோட்டம் ஆரம்பித்து இருப்பதால் உங்களிடம் பல கேள்விகள் கேட்க உள்ளேன். தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

    1. புடலை கொடி ஒரு அடி கூட வளரவில்லை ஆனால் பூவும் பிஞ்சும் வந்துவிட்டது. இந்த கோடியை எடுத்து விடலாமா இல்லை பந்தல் போடலாமா?

    2. வெண்டையும் அதே போல்தான். 2 அடுக்கு மட்டுமே இலை வந்துள்ளது அனால் பூ வந்து விட்டது.

    3. அவரையும் அதே போல் தன ஆனால் பூ வரவில்லை அனால் பழுத்துவிட்டது.

    4. தக்காளி நோய் வந்தது போல உள்ளது. கத்தரி பூ பூக்கிறது அனால் காய் காய்கவில்லை

    5. அஸ்வினி பூச்சிக்கு என்ன செய்வது. பஞ்சகாவ்வயா வேலை செய்ய வில்லை. இது தக்காளி, கத்தரி செடிகளில் வந்துள்ளது. கையால் தேய்த்தும் பார்த்து விட்டேன். அடுத்த இரண்டு நாளில் வந்து விடுகிறது.

    சென்மண்ணும் cocopitம் 1:1 என்று கலத்துளேன். மண் புழு உரம் இபொழுது தான் எங்கு கெடைக்கும் என்று விசாரித்து வாங்கியுள்ளேன். அதை இப்பொழுது எப்படி செடிகளுக்கு இடுவது.

    Thanks in Advance.



    Thanks with Regards,

    Vallamuthu M.

    ReplyDelete
    Replies
    1. ஹாய்,

      மொத்தமாய் உங்கள் செடிகளின் பிரச்னை சத்துக் குறைவாக தெரிகிறது. Coir Pith மீடியாவில் செடி வளர்க்கும் போது மண்புழு உரம் மிக அவசியம். வெறும் செம்மண் கலவை உதவாது. முதலில் அதை சரி செய்து பார்ப்போமா?.

      எனது இந்த பதிவை பாருங்கள், எவ்வளவு மண்புழு உரம் கலக்க வேண்டும் என்று கொடுத்திருக்கிறேன். இப்போதைக்கு முடிந்த அளவுக்கு மேல் மட்டத்தில் மண்புழு உரம் போட்டு கலந்து விடவும்

      http://thooddam.blogspot.in/2014/01/blog-post.html

      இப்போது நரங்கி, வளர்ச்சி இல்லாமல், சின்னத்திலேயே பூத்த செடிகளில் உரம் இடுவதால் பெரிதாய் மாற்றம் ஏதும் வராது. முடிந்தால் புதிய கலவையில் புதிதாய் விதை இட்டு செடி கொண்டு வரவும்.

      அஸ்வினி பூச்சிக்கு பஞ்ச காவ்யா, வேப்பெண்ணை எல்லாம் வேலைக்கு ஆகாது. கோக் வாங்கி தெளியுங்கள் (சிரிக்கப்படாது :) . எளிதாய் பூச்சிகள் எல்லாம் செத்து போய் விடும். அப்புறம் அந்த பக்கம் வரவே வராது. நான் ரெண்டு வருசமா இப்படி தான் அவரையை காப்பாற்றி விளைச்சல் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்த பதிவை பாருங்கள்,

      http://thooddam.blogspot.in/2015/03/blog-post.html

      அன்புடன்,
      சிவா

      Delete
  5. Try at tnau Anna nagar

    ReplyDelete
    Replies
    1. நன்றி. மண்புழு உரம் திருவான்மியூர், மாதவரம் வேளாண் துறைகளிலும் கிடைக்கலாம்.

      Delete
  6. Shop to buy seeds n other garden products at T.NAGAR
    Sakthi sees ,
    Uma complex(first complex from mambalam Railway station)
    21,natesan st,
    t.nagar,chennai-17
    ph:044-24329207,9444874389,7401035222

    ReplyDelete
    Replies
    1. Thanks for the detail Shobana. I have included in the post itself.

      Delete
    2. நன்றி தோழி.

      Delete
  7. siva sir,
    I got problem in tomato plant leaf.Actually some white line r there n its gradually spread all over the leaf.so i ve cut many leaves.But it ll come again in good leaf n spread.i don know what type of problem it is?Pls help me.

    ReplyDelete
    Replies
    1. The infection seems to be Whitefly. If you see the white line/spiral around leaf, it could be Whitefly only. If you have any photo, please send it to me.

      As you did, remove the infected leaf and destroy them (don't just throw it). Try neem oil spray ( 5 to 10 ml) for one liter. Add 2-3 drops of soap liquid (dish washer). Spray on both side (both top and leaf bottom). It might work.

      The challenge it, you need to spray continuously for few days to see some result. Again the won't just flew away on first day itself for neem oil. Try this and see if we get some result.

      Delete
  8. நண்பர்களுக்கு வணக்கம்,
    சென்னையில் coco pith and Vermicompost, Organic Manure, Bio Fertilizers, Panchakavya இந்த பொருட்கள் வாங்க

    Mr.Prabhu 98848-48219
    MANI DHARMA BIOTECH Pvt Ltd.,
    Kamatchi Nagar, Madhanandhapuram,
    Chennai. (Near Porur).

    இவர்கள் சென்னையில் தோட்ட பொருட்கள் உற்பத்தியாளர்கள்.



    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி நண்பரே

      Delete
  9. hello sir,
    arjun grow bags are available in salem also. vermicompost rate rs.15 per kg. if u know any other dealers inform me.

    sri arjun tarpaulin industries,
    arjun towers 47,rajaji road,salem-636007.
    contact no: 0427-2417121/51/91

    ReplyDelete
    Replies
    1. கிலோ Rs.15 என்பது மிக அதிகம். அவ்வளவு விலைக்கு வாங்கி தோட்டம் போட்டு கட்டுப்படி ஆகாது :) Rs.6 - Rs.10 தான் சரியான விலை. சேலத்தில் எங்கு கிடைக்கும் என்ற விவரம் இல்லை. உங்கள் தகவல் சேலம் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி

      Delete
  10. Thanks for the info.. which grow bags are apt for terrace gardening? LDPE or HDPE? what is the difference between the two? Life of the bags? I am a beginner to terrace gardening. You are doing a great job

    ReplyDelete
  11. Thanks Madam.

    HDPE bags are good and durable for long time. LDPE are polythene based bags (they say - UV treated). HDPE bags are different hard materials. I have HDPE bags and even after 4 years they looks like new with no damage.

    ReplyDelete
  12. For online shopping you can try SK organics, all the materials are good and they offer for reasonable price also, it is located in Ambattur, Chennai friends can make use of it..:)

    ReplyDelete
  13. HI siva,

    can you please share the contact details and address of new perungalathur shop?

    Thanks,
    Sudha

    ReplyDelete
    Replies
    1. ஹாய்,

      //நியூ பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1/2 கிலோமீட்டர் தொலைவில் வேளாண்துறை உள்ளது// இப்படி கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் அங்கே போய் வேளாண்துறை என்று விசாரித்தாலே நிறைய பேர் சொல்வார்கள்.

      Delete
  14. Can anybody tell me WHR I can get d gardening material s in tirunelveli or tuticorin district??

    ReplyDelete
    Replies
    1. Sister,

      As discussed, please go ahead with ordering from Subhiksha organics

      Delete