Showing posts with label Gardening Queries. Show all posts
Showing posts with label Gardening Queries. Show all posts

Sunday, January 4, 2015

தகவல் – தோட்டம் – 2015 Plans

நண்பர்கள் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த 2015 நம் எல்லோருக்கும் இனிதாய் அமையட்டும். இந்த 2015-ல் தோட்டத்தில் நிறைய முயற்சிக்க நினைத்திருக்கிறேன். தோட்டம் பற்றி நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் (முக்கியமாக பூச்சி கட்டுப்படுத்துதல்), அப்புறம் எனது கனவு மாடித் தோட்டம் அமைப்பது இப்படி நிறைய.

இந்த வருடத்தின் முதல் பதிவாய், சின்னதாய் ஒரு அறிவிப்பு. அதற்கு முன், பொதுவாய் இணையத்தில் ஒருவர் அறிமுகம் ஆகும் போது எப்படி அழைப்பது என்று ஒரு தயக்கம் இருக்கும். என்னை சிலர் ‘சார்’ என்கிறார்கள், சிலர் ‘ஐயா’ என்று கூறி கலங்க வைக்கிறார்கள் J. சரி, என்னை பற்றி சின்னதாய் ஒரு அறிமுகம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நண்பர்களும் ‘நண்பரே’ ‘அண்ணா’ ‘தம்பி சிவா’ என்று அழைக்க வசதியா இருக்கும் என்று நினைக்கிறேன் J

என்னை பற்றி சொல்லவேண்டும் என்றால், சொந்த ஊர் திருநேல்வேலி அருகில் திசையன்விளை. வளர்ந்தது, பள்ளி படிப்பு எல்லாம் திருச்செந்தூர் அருகில் நாசரேத்தில்.  பொறியியல் படிப்பு சென்னையில் (MIT, Chrompet). பிறந்த வருடம் 1976 (வயது 38). வேலை, இங்கே கோவையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில். கடந்த பதினான்கு வருடமாக சாப்ட்வேர் துறையில் தான். முதலில் சென்னையில் வேலை, பிறகு ஒரு ஐந்து வருடம் அமெரிக்காவில் (Minneapolis, 2001 – 2005) , பிறகு சென்னை. தற்போது கோவையில் செட்டில்.    

நிறைய நண்பர்கள் மெயில் மூலமாக தொடர்பு கொண்டு தோட்டம் பற்றி விவரம் கேட்கிறார்கள், சந்தேகங்கள் கேட்கிறார்கள். என்னால் முடிந்த, தெரிந்த தகவல்கள் பகிர்ந்து கொள்கிறேன். ரொம்ப முக்கியமாக நண்பர்களிடம் இருந்து நிறைய தகவல்களும், உதவிகளும் எனக்கும் கிடைக்கிறது. இந்த பகிர்தல் எனது தோட்ட ஆர்வத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றிருக்கிறது.

எல்லோருமே வீட்டு தோட்டத்தை ஒரு பொழுது போக்காக தான் செய்கிறோம். நமது வழக்கமான அலுவலக வேலைகள், குடும்ப நேரங்கள் போக கிடைக்கும் நேரத்தில் தோட்டத்திற்கு நேரம் செலவிடுகிறோம். அப்படி நேரம் ஒதுக்க ஒரு சில பேரால் மட்டுமே இப்போது முடிகிறது. அப்படி ஆர்வம் உள்ள நண்பர்கள் வட்டம் இந்த ப்ளாக் மூலம் கிடைத்திருப்பது ரொம்பவே சந்தோசமான விஷயம்.

நான் இணையத்தில் செலவழிக்கும் நேரம் ரொம்பவே குறைவு. அவ்வளவாய் நேரம் கிடைப்பதில்லை. நிறைய நண்பர்கள் மடலில் சில விவரங்கள் கேட்கிறார்கள். சிலர் கமென்ட் போடும் போதே தங்களது மொபைல் நம்பர் கொடுத்து விடுகிறார்கள். நான் பொதுவாய் அந்த கமென்டுகளை Publish செய்வதில்லை (அவர்களது Privacy கருதி). தனியாக ஒரு மடல் அனுப்பி கொள்வேன். நிறைய நேரங்களில் அப்படி நம்பர் கொடுக்கும் நண்பர்களை உடனே அழைத்தும் பேச முடிவதில்லை.

இந்த வருடத்தில் இருந்து நம்முடைய தோட்டம் பற்றிய பகிர்தலை கொஞ்சம் streamline பண்ணலாம் என்று தனியாக ஒரு மொபைல் நம்பரும் (809 823 2857), மெயில் ஐடி (thooddamsiva@gmail.com) ஒன்றும் கொடுத்திருக்கிறேன். நண்பர்களிடம் பேச இது உதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த எண்ணில் ஞாயிறு மட்டும் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை இருப்பேன் (கொஞ்சம் Time Management. அவ்வளவே). தோட்டம் பற்றி பேசவேண்டும் என்றால் அழையுங்கள். நிறைய பேசலாம்.

அன்புடன்,
சிவா