வெங்காயம், பொதுவாய் வீட்டுத் தோட்டத்தில் பேசப்படாத ஓன்று. மாடித்
தோட்டம் என்றால் தக்காளி, கத்தரி, மிளகாய், அவரை, வெண்டை என்ற அளவில் முடித்துக்
கொள்வோம். வெங்காயத்தை ஒரு முக்கிய காய்கறியாக யாரும் பெரிதாய் எடுத்துக்
கொள்வதில்லை. ஆனால் நம்மை நிறைய நேரம் தலைச்சுற்ற விடுவது வெங்காயம் விலை தான்.
நிறைய நேரங்களில் ஊடங்களில் தவறாமல் இடம் பெறும் ஓன்று வெங்காயம் விலை. சில நேரம்
கிலோ பத்து ரூபாய் என்று அடிமாட்டு விலைக்கு விற்கும் வெங்காயம், பல நேரங்களில்
கிலோ அறுபது ரூபாய், என்பது ரூபாய் என்று ஏறி வீட்டில் வெங்காய சட்னி, வெங்காய
தோசைக்கு எல்லாம் வேட்டு வைத்து விடுகிறது.
விலை கூட பரவாயில்லை, இப்போவெல்லாம் சின்ன வெங்காயத்திற்கும் பெரிய
வெங்காயத்திற்கும் வித்தியாசமே தெரிவதில்லை. சந்தையில் ‘அடடா, சின்ன வெங்காயம்
முத்து போல குண்டு குண்டா இருக்கே’ என்று போய் விசாரித்தால் அதை பெரிய வெங்காயம்
என்கிறார்கள். பெரிய வெங்காயம் சைஸே இப்படி என்றால், சின்ன வெங்காயத்தை உரித்து
அதில் ஒளிந்திருக்கும் வெங்காயத்தை கண்டுபிடித்து சட்னிக்கு வெங்காயத்தை
சேர்ப்பதற்குள் விடிந்து விடுகிறது. அந்த வேலை சில நேரம் என் தலையிலேயே விழுந்ததின் விளைவே மாடித்தோட்டத்தில்
இவ்வளவு வெங்காயம்.
முன்பு பெரிய வெங்காயம் பெரிய அளவில் முயற்சித்து வெற்றியும்
கிடைத்ததை இந்த பதிவில் கொடுத்திருந்தேன். அதே போல சின்ன வெங்காயத்தையும் பெரிய
அளவில் முயற்சித்தால் என்ன என்று ஆரம்பித்து விட்டேன்.
வெங்காயம், விதையில் இருந்தும் கொண்டு வரலாம், வெங்காயத்தில் (bulb) இருந்தும் கொண்டு வரலாம். சின்ன வெங்காயம் விதை இங்கே கோவை வேளாண்
கல்லூரியில் (TNAU) கிடைக்கிறது. விலை இருபது ரூபாய் (முன்பு பத்து ரூபாயாக இருந்தது.
நான் இந்த முறை ஜூலையில் அக்ரி இன்டெக்ஸ்-ல் வாங்கும் போது இருபது ரூபாய் ஆக்கி
விட்டார்கள்). சந்தையில் நல்ல நாட்டு வெங்காயம் கிடைத்தால் அதையும்
பயன்படுத்தலாம்.
விதைகளில் இருந்து நாற்று கொண்டு வரும் போது, நமக்கு விலை
குறைவாகிறது. ஒரு இருபது ரூபாய் பாக்கெட்டில் இருந்தே நாம் பல நூறு செடிகள்
எடுக்கலாம். தவிர, வெங்காயம் என்ன வகை, என்ன தரம் என்பது தெளிவாக தெரியும். ஆனால்,
விதையில் இருந்து நாற்று எடுத்து கொண்டு வரும் போது, வெங்காயத்தை நேரடியாக
விதைப்பதில் விளைச்சல் எடுப்பதை விட கூட இரண்டு மாதம் விளைச்சலுக்கு காத்திருக்க
வேண்டும்.
நேரடியாக வெங்காயத்தை விதைப்பதில் கொஞ்சம் செலவு ஆகலாம். தவிர
சந்தையில் வாங்கும் வெங்காயத்தின் தரமும், விளைச்சலும் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால்
நாம் சீக்கிரமே விளைச்சல் எடுக்கலாம்.
வெங்காயத்தை நாற்று எடுத்து நடுவது, தகுந்த
இடைவெளி விட்டு நட எளிதாக இருக்கும். நாற்று எடுக்க நர்சரி ட்ரே பயன்படுத்த
வேண்டாம் (முன்பு பெரிய வெங்காயத்திற்கு நர்சரி ட்ரே பயன்படுத்தி இருப்பேன். அது
தேவை இல்லை). ஒரு பெரிய Grow
Bag-ல் கீரை மாதிரி தூவி நாற்று எடுத்து, அதை
எடுத்து நடலாம். வெங்காய நாற்றுகள் வேரில் மண் உதிர்ந்து போனாலும், வேர் கொஞ்சம்
சேதாரம் ஆனாலும் எடுத்து நட்டிய பிறகு எளிதாக பிடித்து வளர்கிறது. அதனால் ரொம்ப
நேர்த்தியாக எடுத்து நட வேண்டிய அவசியம் இல்லை.
முன்பு வெங்காயம் விதையாக போட்டால் விதைக்கு ஒரு வெங்காயம் மட்டும்
தான் வரும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த முறை ஒவ்வொரு செடியில் இருந்தும்
கொத்தாக நான்கு-ஐந்து வெங்காயம் வந்திருந்தது.
வெங்காயம் அறுவடை வீடியோ - https://www.youtube.com/watch?v=cQlnWqea4y4
அருமை ...
ReplyDeleteநன்றி மேடம்.
Deletevery nice to see, good effort sir.
ReplyDeleteநன்றி மேடம்
Deleteஅருமை.நானும் வெங்காயம் நடவு ஆரம்பித்து விட்டேன்.
ReplyDeleteநல்லது நண்பரே. அது பற்றி பதிவு ஏதும் போட்டால் கூறுங்கள். உங்கள் வெங்காய தோட்டத்தையும் பார்க்க ஆவலாய் உள்ளேன்.
DeleteAnna super video. I have tried with small onion in my terrace garden,it came very well but due to this recent rain it got wasted.I like to try one more time with small onion, please inform how much of water required for the onion.
ReplyDeleteThanks Vivek. Check in Agri University (TNAU) in Chennai locations. I didn't see any small onion seeds online. We can get the big one in websites
DeleteWatering is normal like other vegetables (Once in two days or as required). If you are not getting seeds, you can use onion itself
DeleteThanks anna
Deletewhr shall v get the seeds in chennai, could u plz help us to get the seeds.
ReplyDeleteவெங்காய பட ஐடியா நன்றாக இருக்கிறதே! முயற்சி செய்து பார்க்கிறேன்.நன்றி.
ReplyDeleteமுயற்சித்து பார்த்து கூறுங்கள் நண்பரே
Deleteஅருமை
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDeleteசூப்பரா இருக்கு அண்ணா... அம்மா வீட்டில் (வயல்) முதல் முறையாக ஒரு முறை மட்டும் வெங்காயம் போட்டார்கள்.. சரி வரவில்லை என்று அடுத்து போடவில்லை...
ReplyDeleteநன்றி அபி. வெங்காயம் வயலில் போட்டார்களா?. விதையில் இருந்தா, இல்லை வெங்காயம் விதைத்தா?
Deleteவிதை போட்டு போட்டார்கள் அண்ணா..
Deleteசிவா அண்ணா
ReplyDeleteஅருமை.... நானும் வெங்காயம் முயற்சித்தேன்.. நீங்கள் படத்தில் காட்டியிருக்கும் அதே விதைதான்.. ஆனால் விளைச்சல் இந்த அளவு வரவில்லை.. ஒரு செடிக்கு ஒரு வெங்காயமே வந்தது.. பல செடிகளில் அது கூட இல்லை .. வெங்காய தாள் மட்டும் செழிப்பாக இருந்தது...
நான் வெங்காயத்திற்கு என்று தனி பை பயன்படுத்த வில்லை... தக்காளி, கத்தரி பைகளில் கிடைத்த இடத்தில் விதைத்து விட்டேன்.. தண்ணீர் அதிகமாக ஊற்றியதால் இப்படி ஆகிவிட்டதாக வீட்டில் சொன்னார்கள்.. சரி இது வேலைக்காகாது, மாடியில் வராது போல என்று விட்டுவிட்டேன்.. உங்கள் பதிவை பார்த்த பிறகு மீண்டும் முயற்சிக்கலாம் என்று தோன்றுகிறது.. இம்முறை தனியாக பை தயார் செய்து விடுகிறேன்.. கீரை வளர்ப்பு பை இதற்கு போதுமா??
நன்றி அண்ணா...
நன்றி இசக்கி.
Deleteகீரை பையை விட கொஞ்சம் உயரம் அதிகமான பையாக இருந்தால் நல்லது (ஒரு முக்கால் அடி உயமும், ஒன்றரை அடி அகலமும் உள்ள பை எதுவாக இருக்கும்). வெங்காயம் சொதப்ப சான்ஸ் இல்லை. தனி பையில் மீண்டும் முயற்சி செய். நன்றாக வரும்.
உங்கள் எழுத்தை போல் குரலும் கவர்ச்சியானது......
ReplyDeleteவீடியோவில் குரல் மிஸ்ஸிங்.....
பயனுள்ள ஆக்கம்.....
இணையத்தில் ஏற்கனவே பார்த்தா மீண்டும் தேடி பார்ப்பதில் பல சிக்கல்கள் ...
நாம் நினைக்கும் நேரத்தில் இணைப்பு கிடைக்க வேண்டும் ....!
அல்லது அதை பெறும் இடத்தில் நாம் இருக்க வேண்டும்.....!
வீடியோ பதிவுகள் மிகச்சிறந்த ஊடக வழிகாட்டி....
உங்கள் வீ.பதிவுகள் அனைத்தும் ,பதிவிறக்கம் செய்து பாதுகாத்து வருகிறேன்....
சந்தேகம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்.....
பணி சிறக்க வாழ்த்துக்கள் சிவா.....
//உங்கள் எழுத்தை போல் குரலும் கவர்ச்சியானது// :)
Deleteநன்றி சுரேஷ். இந்த பதிவில் பெரிதாய் வீடியோ ஏதும் திட்டமிடவில்லை. நண்பர்களுக்கு பார்த்தால் இன்னும் ஆர்வம் வரும் என்று ஒரு அவசரத்தில் இணைத்தேன். அதனால் டப்பிங் ஏதும் செய்யவில்லை.
நண்பரே...'வணக்கம்' அருமையான பதிவு.தொடர்ந்து இது போல் நல்ல,நல்ல பதிவுகள் தந்தமைக்கு 'நன்றி' வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி நண்பரே
DeleteInteresting. Thanks for sharing. I used a couple of onions that sprouted and planted in my terrace garden. Came out well. Shall try to get seeds here in Chennai .. somewhere.
ReplyDeleteJayanthi Sridharan.
Thanks Madam. Check in TNAU in Chennai. You might get the seeds.
DeleteI have a question. Does the depth where we put the seeds matter. Does it differ from plant to plant? Can you please elucidate? Thank You.
ReplyDeleteNot much Madam. We don't have to have any measurement for depth for each plant. Just go by plant/seed size. 1 1/2 inch depth should be sufficient. If the plant has grown a lot before we place them, we can increase the depth. A 3/4 - 1 feet height bag should be sufficient for onion
Deleteதை பட்டம் என்பது ஜனவரி மாதாம் எந்த தேதியில் ஆரம்பப்பிப்பது.என்ன விதைகள் விதைக்களாம்.நாற்று நடுவதையா?விதை விதைப்பையா? எதை கனக்கில் எடுத்துகொள்வது.
ReplyDeleteநல்ல கேள்வி நண்பரே. விதைப்பது என்று தான் நினைக்கிறேன் ('ஆடிப்பட்டம் தேடி விதை' என்று தானே சொல்கிறார்கள்). இருந்தாலும் சில விவசாய நண்பர்களிடம் விசாரித்து பார்க்கிறேன்.
Deleteவிதை விதைப்புக்கு ஏற்ற பட்டம்.
Deleteஜனவரி 15க்கு மேல்,பிப்ரவரி 15க்குள் கத்தரி,மிளகாய், பாகல்,தக்காளி,பூசணி,சுரை,முள்ளங்கி,கீரைகள்,புடல்,
வெண்டை,பீர்க்கன்,கோவைக்காய்.
Thank You for such a useful information.
ReplyDeleteNice and useful post.
ReplyDeleteCan you tell me about how to maintain rose plant (panneer rose)
and what should be used as fertiliser ?
and can we plant onions around other major plants ?
Thanks.
DeletePanneer Rose (Naaddu rose) generally won't require any maintenance. For fertilizers, I just use the regular Vermicompost only. That should be enough. I never used any fertilizer that we get from Nursery specific for roses.
Depend on the space you have, you can plant onion in between other crops.
thanks siva...Because of you, we also started gardening....Thanks for your useful tips.....
ReplyDeleteJeeva
Happy to hear your words Jeeva. Keep learning and expand your new garden. Happy gardening :)
DeleteSuper Anna last month nanum try pannen neradiyaga vengayam nadavu seithen but vengayam varave ellalai vengayathal than nandraga vanthathu. But unga blog vantha pinpu neraiya katrukonden. Etharku munpu ellame sothapal karanan puriyamal erunthen but unga blog vanthapinpu ungaloda alosanaipadi sandla freeness pannen really super Anna.but nan kairpath use pannala ethu village enga athu rate athikama eruku so athuku pathila kaintha elaithai with sand and animals waste use pandrena. Panchakavya first time prepare panni use pandren nalla erukuna. Sorry Anna ethu windows phone tamil typa panna mudiyala athan eppadi
ReplyDeleteநல்லது சண்முகபெருமாள். காயர் பித் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மற்ற மாற்று பொருட்கள் எளிதாக கிடைக்கும் போது அதையே பயன்படுத்தலாம். எல்லா காய்கறிகளையும் முயற்சியுங்கள். வாழ்த்துகள்.
Deletehi
ReplyDeletei have requested for few suggestions in your mail.pls guide me
sarathy
Hi, I think I replied for your queries. Can you check and confirm. If not, please re-send again.
Deleteநண்பர் சிவா
ReplyDeleteஎவ்வளவு பை வெங்காயம் வைத்தீர்கள். நான் இப்போதைக்கு இரண்டு பை மட்டும் வைத்து இருக்குறேன் . நன் வெங்காயத்தை அப்படியே நட்டேன் (ஒரு விவசாயி வெங்காயத்தை நாடும் பொது அதை முக்கல் பகுதி மட்டும் மண்ணில் மறையும் படி நட வேண்டும் இன் ஒரு புத்தகத்தில் படித்தேன்)
வணக்கம் நண்பரே.
Deleteநான் மொத்தமாய் கிட்டத்தட்ட பதினைந்து பைகளில் போட்டிருக்கிறேன் (முக்கால் அடி உயரம். ஒன்றரை அடி அகலம்). இதில் ஐந்து பைகளில் விதை நாற்று, ஐந்து பைகளில் நேரடி வெங்காயம் விதைப்பு, ஐந்து பைகளில் பெரிய வெங்காயம் நாற்று. இப்படி. தவிர நீண்ட (ஒரு அடி அகலம், மூன்றடி நீளம்) பை மூன்றிலும் போட்டிருக்கிறேன்.
ஆமாம். வெங்காயமாய் வைக்கும் போது அது முளைக்க எதுவாக நுனி பகுதி வெளியே தெரியும் படி வைக்க வேண்டும்.
சூப்பர் அறுவடை.
ReplyDeleteநன்றி மேடம்.
DeleteNamaskaram Anna
ReplyDeleteSorry, I am just confused little, if we are using a onion bulb as a seed and we going to get one onion from a plant, what is purpose of cultivating a onion bulb. !!!!!!!!!
Hi, I didn't mention that. Earlier with seeds, I got one bulb. Now seeing more bulb even with seeds. But when you plant bulb, you will get more onion.
DeleteAnna, did you made wholes in the bag nearer to the bottom. I saw a video in the Tamil Nadu government DVD and they insist to make whole. Please let me know your comment anna.
ReplyDeleteThe bags will have holes at the bottom for drainage purpose. If it is not there, we can put few at the bottom before filling it with growing media
Delete