போன பதிவின் ஒரு வீடியோ தொகுப்பாய் இந்த பதிவை கொடுக்கிறேன். சும்மா
ஒரு வீடியோவை எடுத்து போடலாம் என்று ஆரம்பித்து, வெறுமனே வளர்ப்பு ஊடகம் மட்டும்
இல்லாமல் மாடித்தோட்டம் பற்றி விளக்கம் கொடுக்க சில விவரம் சேர்த்து எடிட்டிங்,
டப்பிங் என்று வேலை பெரிதாகி போனதால் இந்த பதிவு தாமதமாகி போனது. முதன் முதலாய்
மாடித் தோட்டம் ஆரம்பிக்க தேவையான தகவல்களை முடிந்த அளவுக்கு இந்த வீடியோ
தொகுப்பில் கொடுத்திருக்கிறேன்.
தவிர தீபாவளிக்கு சென்னை (மடிப்பாக்கம்) வேறு போய் இருந்தேன். வேலை
நிறைய இருந்ததால் முன்னமே கூற முடியவில்லை. சென்னை மழை, புயலில் சிக்கி
சின்னாபின்னமாகி கிடக்கிறது. அதிலும் மடிப்பாக்கம் ராம் நகர் ஏரியாவில் (ஏரியில்) இப்போது படகு போக்குவரத்து ஆரம்பித்து
இருப்பார்கள். 2006 –
2007 ல் நீச்சல் அடித்து ஆபிஸ் போன அனுபவம்
எனக்கும் உண்டு. அதிர்ஷ்டவசமாக தண்டவாளம் எல்லாம்
தண்ணீரில் மூழ்கும் முன் கோவை வந்து விட்டேன்.
இங்கேயும் ஒரே மழை தான். இரண்டு வாரமாக தோட்டத்திற்கு தண்ணீரே விட அவசியம் வர வில்லை.
எனது முதல் வீடியோ முயற்சி. நிறைகள், குறைகளை தயங்காமல் பகிர்ந்து
கொள்ளுங்கள். வரும் வீடியோ பதிவுகளை மேன்படுத்த உதவும்.
YouTube URL - https://youtu.be/iAOnw1oooEE
YouTube URL - https://youtu.be/iAOnw1oooEE
வணக்கம்
ReplyDeleteசிறப்பான விளக்கம்... பகிர்வுக்கு நன்றி..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிகவும் அருமை சார்! இந்த வீடியோ பதிவை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி! நான் ஒரு IT கம்பெனியில் தற்பொழுது பனி ஆற்றுகிறேன்! எனக்கும் ஒரு மாடி தோட்டம் அமைக்கவேண்டும் என்று ஆர்வம் அதிகம் உள்ளது ஆனால் அதற்கு ஒரு வழிகாட்டுதல் இல்லாமல் இருந்தேன்! இப்பொழுது நம்பிக்கை வந்துவிட்டது! உங்களுடன் சில நேரம் இதை பற்றி பேச சில நிமிடங்கள் கிடைக்குமா சார்?
ReplyDeleteஅன்புடன்,
மதன்கோபால்
தி நகர்.
சென்னை.
நன்றி நண்பரே. உங்களது மாடித்தோட்டம் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள். முடிந்த அளவுக்கு நேரம் ஒதுக்கினால் நன்றாகவே வரும். என்னை ஞாயிறு காலையில் தொடர்பு கொள்ளலாம். மேலே நம்பர் கொடுத்திருக்கிறேன். முடிந்தால் ஒரு மடல் thooddamsiva@gmail.com க்கு அனுப்புங்கள். உடனே பதில் கொடுக்கிறேன்.
DeleteThere cannot be a better demo. Thank you very much and a 'O" for your capsicums.
ReplyDelete=Jayanthi Sridharan=
Thanks Madam :).
Deleteஅருமையான பதிவு. இந்த பட தொகுப்பை தயாரிக்க மிகவும் சிரமம் பட்டு உள்ளீர்கள். நன்றி நன்றி.
ReplyDeleteகட்டணபயிற்சியில் கூட இவ்வாறு விளக்கம் பெற முடியாது. இவ்வாறு தயார் செய்து அறுவடை காலம் முடிந்தபிறகு பையில் உள்ள மண்ணை மீண்டும் எவ்வாறு பயன்படுத்துவது அடுத்த பயிறுக்கு
ReplyDeleteநன்றி.
Deleteஒரு அறுவடை முடிந்த பிறகு செடிகளை பிடுங்கி விட்டு, ஒரு அரைகிலோ மண்புழு உரம் மட்டும் மேல் மட்டத்தில் கலந்து செடி வைத்து விடலாம். மண் கலக்க வேண்டியதில்லை. இந்த விவரத்தையும் சேர்த்திருக்கலாம். கேள்விக்கு நன்றி.
Thx
ReplyDeleteIts very useful information sir. thanks you for such a wonderful information and sharing.
ReplyDeleteThanks friend
Deleteவாவ் சிவா! சூப்பர். மிகமிக பயனுள்ள பதிவு. ரெம்ப நன்றி. இப்படி தொட்ர்ந்து வீடியோ பதிவா தருவது நல்லது முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ப்ரியா. கண்டிப்பாக இனி நிறைய வீடியோ பதிவுகள் பதிய பார்க்கிறேன். அங்கே தோட்டம் பற்றி உங்கள் ப்ளாக்கில் சத்தமே இல்லையே. என்னாச்சு?
Deletenice video sir. can we use coconut husk directly instead of coir pit for filling the bottom half of the grow bag.the top half can be as suggested by you.
ReplyDeleteIt may not be advisable to use coconut husk for half of the grow bag. Few reason, it might create lot of empty space and might promote fungus and other unnecessary growths. It will get filled with top rich media in the gap and as we water all nutrients at the top might slowly get at the bottom. Also water also might get drain quickly
Deleteதெளிவான விளக்கங்கள், செயல்முறைகளோடு இணைந்து வழிகாட்டும்
ReplyDeleteசிறப்பான அறிமுகம். தோட்டம் சிவாவின் தொண்டு போற்றற்குரியது.
சோ.அப்பூதி
மிக்க நன்றி ஐயா. நீங்கள் கொடுத்த டாகுமென்ட் படித்துக் கொண்டிருக்கிறேன். தேவையான தகவல்களை எடுத்துக் கொள்கிறேன். உங்கள் தொடர்வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.
Deleteஅண்ணா.... வீடியோ பார்த்திட்டு பேச்சே வரலை எனக்கு.. இந்த அளவுக்கு யாரும் மெனக்கெட மாட்டார்கள். வாழ்த்துக்கள் அண்ணா...
ReplyDeleteநன்றி அபி. உங்களை போல சில நண்பர்களுக்கு பயன்பட்டால் சந்தோசமே :)
Deleteதோட்டம் சிவா அவர்களே! வீட்டுத்தோட்டம் குறித்த தங்கள் பதிவுகள் அனைத்தினையும் படித்து விட்டேன். கருத்து தான் இடவில்லை. நான் வலைப்பூ தொடங்க முன் படித்ததனால் கருத்துகள் இடவில்லை மன்னிக்கவும்.
ReplyDeleteமிகவும் பயன் தரு தொடர்களாக உங்கள் பதிவுகள் இருப்பதும் காலத்துக்கு ஏற்ப அத்தியாவசியமானதாய் இருப்பதும் தங்கள் பதிவுகளின் வெற்றிக்கும் வழி கோலும்.
தங்கள் சம்மதம் கேட்காமல் கில்லர்ஜி அவர்களின் கடவுளைக்கண்டேன் தொடர்பதிவில் அடுத்து தொடர தங்கள் வலைப்பூவை இணைத்து விட்டேன். இயலும் போது தொடருங்களேன்.
http://alpsnisha.blogspot.ch/2015/11/blog-post_15.html
நன்றி தோழி. எனது வலைப்பூ அறிமுகம் மாதிரி செய்து விட்டீர்கள். மிக்க நன்றி. உங்கள் பதிவையும் கொஞ்சம் படித்தேன். (உங்கள் இரண்டு கேள்விகள்/ஆசைகள்). மற்றதையும் படிக்கிறேன். என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி. முடிந்த அளவுக்கு கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
Deleteசிவா அண்ணா,
ReplyDeleteஅருமையான பயனுள்ள பதிவு, நல்ல முயற்சி நன்றாகவும் வந்திருக்கிறது..
வாழ்த்துக்கள் அண்ணா... தொடருங்கள்...
நன்றி இசக்கி. முடிந்த அளவுக்கு வீடியோ பதிவிகளையும் கொண்டு வரலாம் என்று இருக்கிறேன்.
Deleteஇதுக்காக காத்திருந்தேன் சிவா இத்தனை நாட்கள், மிகவும் பயனுள்ள பதிவு, அருமையான விளக்கத்துடன் கூடிய வீடியோ. தோட்டம் எப்படி அமைப்பது என்று தெரிந்திருந்தாலும், முக்கியமானது மண் கலவை , இதில் தான் இருக்கிறது செடியின் வளர்ச்சி மற்றும் மகசூல். இதற்காக நீங்கள் எவ்வளவு ஆராய்ச்சி செய்திருப்பீர்கள் என்று புரிகிறது. குடை மிளகாய் கலர்புல், பார்பதற்கே என்ன ஒரு அழகு.
ReplyDeleteநானும் மடிப்பாக்கம்தான், வேளச்சேரி முழுவதும் நீர்தான். படகு பயணம் ஆரம்பித்துவிட்டது. கோவையில் மழை இல்லையா.
வாழ்த்துக்கள், உங்கள் முழு தோட்டத்தையும் ஒரு வீடியோ பதிவிடுங்கள்.
நன்றி நண்பரே. ஆராய்ச்சி என்பதை விட முயற்சி என்றே சொல்லலாம். அது தானே நம் தோட்டத்திற்கு அடிப்படை :)
Deleteநீங்க மடிப்பாக்கமா.. அச்சோ..எந்த ஏரியா? ராம் நகர் எல்லாம் கொடுமைக்கு நீரில் மூழ்கி கிடக்குமே..
நான் இருப்பது புழுதிவாக்கம் அருகில். மடிப்பாக்கம்,வேளச்சேரி,புழுதிவாக்கம் மொத்தமும் மிதக்கிறது. எங்கள் வீட்டில் தண்ணீர் வந்துவிட்டது, மிகவும் மோசமான ஒரு சூழ்நிலை. மொத்த சென்னையும் தண்ணீரில்தான்.
Deleteஇயற்க்கைக்கு எதிராக மனிதர்கள் இருந்தால் இதுதான் நடக்கும். தண்ணீர் தேவை என்று வேண்டுகிறோம், இயற்க்கை கொடுக்கும் தண்ணீரை நாம் பயன்படுத்த தவறிவிட்டோம், பயனில்லாமல் வீணாகிறது தூய்மையான விலை மதிப்பில்லாத மழை நீர்.
இனியாவது அரசு சிந்தித்து செயல்படட்டும்.
நிஷா அவர்கள் தளம் மூலம் உங்கள் தளத்திற்கு முதலில் வருகை தந்துள்ளேன்! தொடர்கிறேன்!
ReplyDeletenalla pathivu, semmanirku bathilaga thotta mann payanpaduthalama? grow bag uram poda poda fullagi vittal veru bag matra venduma? ungal thotta pani thodaratum
ReplyDeleteநன்றி மேடம். செம்மண்ணுக்கு பதிலாக தொட்ட மண் பயன்படுத்தலாம். நல்ல வளமையான மண்ணாக (வெறும் ஆற்று மணல் மாதிரி எடுக்க வேண்டாம்) இருக்கமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
Deleteநாம் பைகளில் மேல் மட்டம் இரண்டு-மூன்று இன்ச் இடம் விட்டு தானே நிரப்பி இருப்போம். தவிர நாம் போடும் கொஞ்சம் உரம் மேல் மட்டத்தை நிரப்பாது. அவைகள் கரைந்து போய் விடும்.
Excellent Siva :), Thanks for making it as video. Very useful for the beginners like me. I have already started the terrace gardening with reference of your blog, hopefully successful :)
ReplyDeleteThanks Friend. If it is useful for beginners like you, I will be more happy. Thanks for your words. All the best for the new garden. Happy gardening.
Deleteவணக்கம் சிவா,,,
ReplyDeleteஉபயோகமான காரியம் சிவா. வாழ்த்துக்கள் தங்களின் உழைப்பு நிச்யம் பலன் கொடுக்கும் , தங்களின் வலைப்பதிவுகளைப் படித்தபின் நானும் சிரிய அளவில் மாடித் தோட்டம் வைத்திருக்கிறேன் நன்றாக வந்துள்ளது வாழ்த்துங்கள் வளர்கிறேன் ,,, நன்றி
நன்றி நண்பரே. உங்கள் சிறிய தோட்டம் நன்றாய் வர வாழ்த்துக்கள். ஏதும் சந்தேகம் இருந்தால் ஒரு மடல் அனுப்புங்கள். தெரிந்த விவரங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
Deleteதெளிவான ஒளிப்படத்திற்கு நன்றி அண்ணா,
ReplyDeleteஉங்களின் கடந்த வருட பதிவுகளில், இன்னுமொரு கலவை விகிதம் சொல்லி இருந்தீர்கள்.
தென்னைநார் கழிவு, செம்மண் , மண்புழு உரம் விகிதம் முறையே 2 : 2 : 1
மற்றும் பை முழுக்க கலவை மட்டுமே நிரப்பும் முறை.
இதில் மண்புழு உரம் தேவை பாதியாக குறைகிறது.
இது சரியா? விளைச்சலில் எதுவும் வித்தியாசம் இருக்குமா?
முதலில் நான் இந்த வீடியோவில் உள்ள படி ஒரு விகிதமும், நீங்கள் கூறிய ஒரு விகிதமும் எடுத்து முயற்சித்தேன். செம்மண் நிறைய (2 பங்கு), மண்புழு உரம் கொஞ்சம் (1 பங்கு) எடுத்த கலவை திருப்தி இல்லை. நான் வீடியோவில் கூறிய விகிதம் தான் இப்போது நிரந்தரமாக பயன்படுத்துகிறேன்.
Deletemigavum arumana elimaiyana vilakkam... nandri siva
ReplyDeleteAnother excellent post siva. Thanks for sharing. It is very useful for beginners :) Also is it possible to grow tomatoes using seeds from a tomato( waste or which is at home). Rather than buying from nursery? If so can you please share the method.
ReplyDeleteThanks Sudha.
DeleteYou can use the fully ripped tomato from kitchen. It will grow without any issue. But the problem is, mostly it will be hybrid seed (unless we get it as native fruit/naddu thakkali) and the yield will not be good from the new plant. Generally recommended to buy seed for the first time. If we get native seed, we can take seed from that fruit and use it forever.
Great job Siva!! Spent your valuable time to make this video to help beginners like me..appreciate your attitude, energy and efforts..very useful .. Got seeds from friend Paramez after seeing your blog..good germination rate..but pest ate all my greens.. Will send a mail regarding that..please help..
ReplyDeleteThanks sangeetha for your comment.
DeletePlease mail me the details. Will check and reply back
migavum upayogamana thagaval nandri
ReplyDeleteThanks friend
Deletesiva sir, unga full thottamum paraka avalaga irukkirom,.
ReplyDeletesure Madam :) . Will wait for next season (January) and get a video. We will also plan for a garden visit around March (when I will have the plants in the garden with yield).
Deletevery usefull
ReplyDeleteDear sir very useful post, can we use sugercane baggase for the bottom filling
ReplyDeleteThanks Aravindan.
DeleteRegarding using sugarcane, I doubt whether it will meet the purpose due to the below reasons,
- It may not retain the water and might drain quickly due to more porous in nature.
- Due to more gaps, it might encourage fungus and other growth which will affect plant
- It might invite termite and other insects as they like it much.
Just give a try in few bags and if you get success, we can take it forwards.
Thanks anna for the very useful video.
ReplyDeleteThanks Vivek for your comment
DeleteAnna shall we use sugarcane wastes instead of coir wastes please give your suggestion
ReplyDeleteHi, I replied above for the same question. Please check
DeleteHello Siva Anna, Impressed with all your posts and thank you very much for the video. I have shared the video in the OTG Facebook group giving a small English summary. I hope that is OK.
ReplyDeleteThanks Bala. Thanks for taking this to some more interested friends in gardening. I am good :)
Deleteவீடியோ சூப்பர் சிவா ! அதிலும் விளக்கம், சாதாரண பேச்சுத்தமிழில் இருந்தது சிறப்பு. அடுத்தடுத்த வீடியோக்கள் என்னவாக இருக்கும் என அறிய ஆவல். இப்போது நிறைய பேரின் கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கும். தொடரட்டும் உங்களின் உதவும் எண்ணம், வாழ்த்துக்கள் !!
ReplyDeleteநன்றி மேடம். எனது முதல் முயற்சி. எப்படி பேச முடிகிறதோ. அப்படியே பதிந்து விட்டேன். உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.
Deleteநன்றி நண்பரே.. அருமையான வலைபதிவு.. மிக்க பயனுள்ள தகவல்கள். எங்கள் வீட்டில் 3 மாதங்களுக்கு முன்பாக சிறு மடி தோட்டம் அமைத்தோம். நாங்கள் மண்புழு உரம் மற்றும் செம்மண் கலவை மட்டுமே உபயோகபடுத்தினோம். அதில், கொத்தமல்லி நல்ல விளைச்சல். வெண்டைக்காய் தற்போது தான் வர ஆரம்பித்துள்ளது. தக்காளி செடி நன்றாக வளர்ந்துள்ளது, ஆனால் இது வரை காய் வரவில்லை. இடையில், நண்பர் ஒருவரின் யோசனையின்படி, 2 வாரங்களுக்கு ஒரு முறை வேப்பம் புண்ணாக்கு உபயோகபடுத்தினோம் (பூச்சி கட்டுபடுத்த).
ReplyDeleteநீங்கள் கூறியுள்ளபடி அடுத்த முறை கோகோ பிட் உபயோகபடுத்துகிறோம்
சில கேள்விகள் - 1. வேப்பம் புண்ணாக்கு உபயோகபடுத்த தேவையா?
2. நாங்கள் மண் தொட்டியில் தான் செடிகள் வளர்கிறோம். கண்டிப்பாக HDPE பைகள் உபயோகபடுத்த வேண்டுமா?
3. முழுவதும் வெயிலில் இருப்பதால் தீங்கு ஒன்றும் இல்லையே?
4. தங்கள் வீடியோவில் முதலில் வெண்டை செடியை trayyil வளர்த்து பின் அதை grow bagil வைத்தீர்கள். அப்படி தான் செய்ய வேண்டுமா? அல்லது நேரடியாக தொட்டியில் வளர்க்கலாமா?
மிக்க நன்றி..
நன்றி நண்பரே.
Deleteஉங்கள் கேள்விகளுக்கு எனது பதில்கள்.
1. வேப்பம் புண்ணாக்கு கலக்க வேண்டியதில்லை. பருவத்திற்கு ஒரு முறை செடி கொஞ்சம் வளர்ந்த பிறகு சிறிது நீரில் கலந்து விட்டால் ஏதும் வேர் பூச்சி, நோய் கட்டுப்படுத்த உதவும்.
2. நானும் சும்மா கிடந்த மண் தொட்டியில் காயர் பித் போட்டு செடிகள் வைத்திருக்கிறேன். பைகளில் தான் வளர்க்க வேண்டும் என்பதில்லை.
3. முழுவதும் வெயிலில் இருப்பது நல்லது. செடியும் நன்றாக வரும்.
4. பெரிய விதைகளை நேரடியாகவே விதைக்கலாம். ட்ரே வைத்து தான் வளர்க்க வேண்டும் என்பதில்லை.
மிக்க நன்றி..
DeleteDear Mr. Siva, Good work. Video demonstration is ready to understand.
ReplyDeleteThanks Mr.Vasu
DeleteThanks
ReplyDeleteஐயா,
ReplyDeleteதங்களின் blog இன்று தான் பார்த்தேன்.நன்றாக உள்ளது.எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது.என் வீட்டில் மாடியில் தோட்டம் போட்டிருக்கிறேன்.அதில் சில செடிகள் வாடி உள்ளது.அதிலும் குறிப்பாக தக்காளி,cosmos பூ செடி வாடி போகிறது.
தண்ணீர் 2 நாளைக்கு ஒரு முறை தான் ஊற்றுகிறேன்.என்ன செய்ய வேண்டும் என்று தீர்வு கூறுங்கள்.நன்றி
மேடம், செடி வாடி போவதற்கு நிறைய காரணம் இருக்கலாம். வாடி போய் செடி கருகி விடுகிறதா? இல்லை நீர் ஊற்றிய பின் சரியாகி விடுகிறதா? கருகி விடுகிறது என்றால், என்ன மண் கலவை வைத்திருக்கிறீர்கள் என்று கூற முடியுமா? மற்ற செடிகள் ஏதும் பிரச்னை இல்லாமல் வருகிறதா?
Deleteஐயா,
Deleteதாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்.கோகோபீட் உரம்{அதில் மண்,செம்மண்,களிமண் கலரில் மண்} உரக்கடையில் வாங்கினோம்.திருவான்மியூரில் pest and green கடையில் வாங்கினோம்.
25-11-2015 அன்று 5கிலோ கோகோ பீட் 2 ஊற வைத்து உரம் எல்லாம் ஒன்று கலந்து 17 grow bags {grow bag ஒன்றின் விலை 30}செடிகள் அமைத்தோம்.தக்காளி,வெங்காயம்,அவரை,பீன்ஸ்,கத்தரிக்காய்,குடைமிளகாய்,பாலக்கீரை,பச்சைமிளகாய்,முருங்கை,சில பூ செடிகள் அதாவது cosmos,portulaca,dhalia,pansy செடிகள் விதைத்தோம்.
ஒரு வாரத்தில் துளிர் விட்டு வளர்ந்தது.cosmos செடி பூ பூத்து விட்டது.ஆனால் செடி வாடி வாடி தீடீரென்று பொலிவாய் காணப்படுகிறது.
தக்காளியும் அப்படி தான் திடீரென்று நன்றாக காட்சியளிக்கும்.இதில் பூ பூக்கிறது.திடீரென்று எல்லாம் வாடி பூ பூத்த சுவடு இல்லாமல் போயின.20 நாள் கழித்து போட வேண்டிய உரம் மற்றும் மருந்துகள் போட முடியாமல் போய் விட்டன.
அந்த உரமான phosphorus மற்றும் granulated soil HUMINOL 8-01-2016 அன்று போட்டேன்.PLANT PROTECTOR,3 மருந்துகள் 3ml 1 litre தண்ணீரில் கலந்து spray பண்ணினேன்.அதன் பிறகு தக்காளி செடி நன்றாக இருந்தது.திரும்பவும் பழுப்பான 3 அல்லது 4 இலைகள் தோன்ற ஆரம்பிக்க விட்டன.சரி,தண்ணீர் அதிகமானாதால் இப்படி இருக்க கூடும் என்று நினைத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்றினேன்.இப்போதும் அப்படி தான் உள்ளது.தீர்வு கூறுங்கள்.