நம்ம ஊரில் ரொம்ப எளிதாக வரும் ஒரு மரம்
பப்பாளி. வளர்க்க கொஞ்சம் இடம் இருந்தாலும் போதும். விலை ரொம்ப மலிவாக கிடைப்பதால்
என்னவோ அதிகமாக யாரும் கண்டு கொள்வதில்லை. மைசூர் போகும் போது பவானி சாகர்
பகுதியில் நிறைய பப்பாளி தோட்டங்களை பார்க்க முடிந்தது. இப்போ பழமுதிர்
நிலையங்களில் நல்ல பழங்களை பார்க்க முடிகிறது. அப்படி வாங்கிய பழம் ரொம்ப இனிப்பாக
இருக்கவே அதன் விதையை எடுத்து முளைக்க போட்டேன். அருமையாக முளைத்து வளர
ஆரம்பித்தது.
பப்பாளி மரம் சில சடை சடையாக பூக்கும். ஆனால் காய்க்காது.
அதனால் வந்த நாற்றுக்களில் ஒரு மூன்றை காய்க்கும் வளர்த்து பார்க்கலாம் என்று
விட்டு விட்டோம். இப்போ மூன்றுமே கொத்து கொத்தாக காய்க்க ஆரம்பித்து விட்டது. வைத்த
ஒரு வருடத்திலேயே காய்த்து பழமும் சாப்பிட்டாச்சு. பழம் மிக இனிப்பாக
வந்திருக்கிறது. ஒரு பழம் கிட்டத்தட்ட 2 ½ கிலோ வரை
இருக்கிறது.
பப்பாளி மரத்தில் பொதுவாக வரும் ஒரு
பிரச்சினை மாவு பூச்சி தொல்லை. வெள்ளையாக படர்ந்து பூ, காய் என்று ஓன்று விடாமல்
கூடு கட்டி மரத்தை காலி பண்ணி விடும். ஆனால் கோவையில் அவ்வளவாக இந்த தொல்லை இல்லை.
வந்தால் இஞ்சி பூண்டு கரைசலை தெளித்து கட்டுப்படுத்தலாம் என்று இருக்கிறது. வராத
வரைக்கும் நல்லது J
விக்கியில் இருந்து, பப்பாளியின்
பயன்கள் என்று பார்த்தால், விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. கனிந்த பழத்தில் நிறைய விட்டமின்
சி இருக்கிறது. நிறைய மருத்துவ குணங்களை உள்ளடக்கியது பப்பாளி பழம்.
படங்கள் சில,
உங்கள் வீட்டு பப்பாளி மரம், உயரம் மிகக் குறைவாக உள்ளதே. எங்கள் வீட்டில் மரம், மிக உயரமாக இருக்கிறது. காயும் மிகச்சிறியதாக வருகிறது. இதை எப்படி சரி செய்வது?
ReplyDeleteRegards
Murugan
தங்கள் வருகைக்கு நன்றி. காய் சிறியதாக இருக்கிறதென்றால் மரத்தின் வகை அப்படி இருக்கலாம். பொதுவாக பப்பாளி கொஞ்சம் உரம், சரியான நீர் விட்டால் நன்றாக காய்க்கும் மரம். நன்றாக வெயில் படுகிறதா?
DeleteHai, enga veetu pappali maram, niaya kaai iuku, but palukavey illa, romba kutti marama irukum bodhey kaai vandhuruchu, but 3 months agium innum andha kaai palukala. yen?
ReplyDeleteபப்பாளி பொதுவாக மெதுவாக தான் காய் பெரிதாகி பழுக்கும். கொஞ்சம் காத்திருங்கள். இன்னும் பூத்து காய் பிடிக்கிறது இல்லையா?
DeleteYes, but 4 months ku munna vandha mudhal kaai inum palukala, adhuku apaam kothukotha niraya kaai vandhutu dhan iuku, but edhuvum palukala, yedhum sathu kurai irukuma? illa kaai vandhu paluka 4 months aguma?
Deleteveetil pappali maram valarkalama koodatha? veetin munadiya pinadiya, entha idathiluma? pappali maram veetil irupathaal thaan ungal veetil pirachinai irukirahu . athai veti eriyungal enru pakathu veetu karargalum uravinarkalum kurugirarkal . aakathu engirargal. itharku enna pannalam. mooda nambikkaiya? ariviyal poorvamana unmaiya? vilakkavum. ithe pola agathi marathikum kooravum.
ReplyDeleteஇதற்கு நான் என்ன பதில் சொல்ல நண்பரே. எங்க வீட்டுல நாலு பப்பாளி மரம் இருக்கு. முன்னாடி ஒன்னு, பக்க வாட்டுல ரெண்டு, பின்னாடி ஒன்னு. நாம போடுற சண்டைக்கு பப்பாளி மரம் என்ன பண்ணும :-) . அந்த அறிவாளிங்கள புடிச்சி முடிஞ்சா வண்டலூர் பூங்காவுக்கோ, இல்ல கீழ்பாக்கத்துக்கோ அனுப்புங்க. வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்ல
Delete