Thursday, July 5, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – கத்தரிக்காய்


கத்தரியும் தக்காளியும் நம்ம ஆளுங்க சமையல்ல இல்லன்னா சமைக்கவே மாட்டாங்க. அதனால் இந்த இரண்டும் வீட்டுத் தோட்டங்களில் பொதுவாக பார்க்கலாம். காய்கறிகளில் கத்தரியில் தான் நிறைய வகை இருக்கிறது. வெள்ளை, ஊதா, வெள்ளையும் ஊதாவும் கலந்து, பச்சை என்று ஒரு 10 வகை நாமே இங்கே பார்க்கலாம். இதில் ஊர் பக்கம் கிடைக்கும் சின்ன வெள்ளை கத்தரி தான் நல்லது என்கிறார்கள். இங்கே கிடக்கும் நிறைய ஹைப்ரிட் வகைகள் தான்.

இங்கே அக்ரி யுனிவர்சிட்டியில் ஊதா நிறமும் (Hybrid), ஊதாவில் வெள்ளை கலந்த ஒரு வகையும் கிடக்கும். இந்த தடவை வெள்ளை கத்தரிக்காய் தேடி திசையன்விளையில் இருந்து விதை வாங்கி போட்டால் அதுவும் லேசான ஊதா நிறத்தில் காய்த்து கடுப்பேற்றி விட்டது. 



காய்கறிகளில் அதிகமாக சொத்தை விழும் காய்கறி கத்தரி தான். காய்ப்பதில் 25% சொத்தையாகி வீணாக போகும். மருந்து ஏதும் தெளிப்பது இல்லை என்பதால் 75% கிடைப்பதே நமக்கு போதுமானது தான். 

எப்பவுமே அளவுக்கு அதிகமாக செடி வைத்து, கத்தரிக்காய் பறித்து பறித்து போர் அடித்து போய்விடும். போன வருடம் ஊதா Hybrid செடியில் இருந்து மட்டும் மொத்தம் 35 கிலோ பறித்தோம். சில நேரம் ஒரே நாளில் 2 கிலோ வரை பறித்திருக்கிறோம். சொந்த பந்தம் எல்லோருக்கும் எங்க வீட்டுல இருந்து தான் மூணு மாசத்துக்கு கத்தரிக்காய் சப்ளை :-) .

எல்லா காய்கறிகளையும் விதைப்பதில் இருந்து எல்லாவற்றையும் ஒரு நோட்டில் குறிப்பு எடுத்துக் கொள்வேன். இது எனக்கு அந்த செடியை பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவும். அதை வைத்து, எத்தனை செடி வைத்தால் போதுமானது, எவ்வளவு நாள் மகசூல் கிடைக்கும் என்று திட்டம் இடலாம். எல்லாம் ஒரு Planning தான்.  


  
கத்தரி செடி நாற்று எடுத்து நடலாம். கத்தரி செடி கிட்டத்தட்ட ஒரு சிறிய மரம அளவுக்கு வளரும். அதனால் ஒரு செடிக்கு மூன்று அடி இடைவெளி தேவை படுகிறது. ஒரு செடி மூன்று மாதம் வரை காய் கொடுக்கும். ஒரு செடியில் இருந்து மொத்தம் 5 கிலோ வரை கிடைக்கும். நிறைய இடைவெளி விட்டு நடுவதால் சில நேரம் ஊடு பயிராக கீரையும் போடுவதுண்டு. கத்தரி செடி வளரும் போது நாம் கீரையும் பறித்துக் கொள்ளலாம்.



6 comments:

  1. ஆஹா..... அருமை!

    இப்போ கத்தரிக்காய் எங்கூரில் கிலோ 15 டாலர்! குளிர்காலமாம். ஃபிஜியில் இருந்து இறக்குமதி. ஆனா விளையும் இடத்தில் வெய்யில் இருக்கே!

    நம்மூட்டுக் கத்தரி ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு காய்ச்சது. பெரிய காய். பஜ்ஜி போட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. 15 டாலாரா. அடேங்கப்பா. நான் இங்கே இருந்து அனுப்பலாம் போல இருக்கே :-)

      ஒரே ஒரு கத்தரிக்கா. நிறைய பூக்கலையா?

      Delete
  2. காணி நிலம் வேண்டும். அதில் நம் கைப்பட காய்கறி பயிரிட்டு பறித்துண்ண வேண்டும். அழகான படங்கள்.அருமையான பகிர்வு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. kathiri vithaiyai eppadi edupathu....athai konjam sollungalen....

    ReplyDelete
    Replies
    1. கத்தரியை நன்றாக முற்ற விட்டு விதை எடுக்கலாம். நன்றாக பழுத்து மஞ்சள் நிறமாய் மாறி விடும். முதல் முயற்சிக்கு கடையில் கிடைக்கும் விதையையே பயன்படுத்தலாம்

      Delete