Saturday, August 1, 2015

புதிய தலைமுறை மற்றும் அக்ரி இன்டெக்ஸ் 2015



புதிய தலைமுறை இதழில் நான்

போன வாரம் புதிய தலைமுறை இதழில் ‘பசுமைப் பக்கங்கள்’ என்ற தலைப்பில் எனது கட்டுரை வந்துள்ளது (அந்த கட்டுரையில் எனது பங்கு மிக குறைவு தான். தருமபுரி வேளாண் உதவி இயக்குனர் திரு.மதுபாலன் அவர்களின் கட்டுரை என்று தான் சொல்லவேண்டும்). எனக்கு இந்த வாய்ப்பு அளித்த புதிய தலைமுறை குழுவுக்கும், சின்னதுரை அவர்களுக்கும் எனது நன்றி.  



அமைந்தால் எல்லாமும் நன்றாக மொத்தமாய் அமையும் போல. போன வாரம் விகடன். இந்த வாரம் புதிய தலைமுறை என்று எனக்கு ஒரு சிறிய அடையாளம் கிடைத்திருப்பது குறித்து சந்தோசம்.நிச்சமாக இந்த இரண்டு கட்டுரைகளும் தோட்டம் சம்மந்தமாக சிலரை அணுக எனக்கு உதவும் என்று நினைக்கிறேன். 


அக்ரி இன்டெக்ஸ் 2015

இந்த வருட அக்ரி இன்டெக்ஸ் நிறைவாக முடிந்தது. ஞாயிறு காலை குடும்பத்தோடு கட்டுச்சோறு கட்டிக்கொண்டு கிளம்பி விட்டோம். போன வருடம் அளவுக்கு அடிதடி எல்லாம் இல்லை. நல்ல கூட்டம் தான். ஆனாலும் ஸ்டால்களை எல்லாம் பொறுமையாக பார்க்க முடிந்தது. ப்ளாக் நண்பர்கள் சிலரை சந்திக்க முடிந்தது. நண்பர் தாமஸ் ரூபனை நேரில் சந்திக்க முடிந்தது. எனக்கான ஒரு பெரிய பை நிறைய அவர் தோட்டத்தில் இருந்து அவரை, பீன்ஸ், மஞ்சள்,எலுமிச்சை என்று ஒரு பெரிய காய்கறி கூடையையே விதைக்காக கொண்டு வந்திருந்தார். ரொம்ப சந்தோசமாய் இருந்தது. 

அடுத்த அக்ரி இன்டெக்ஸ் போது முடிந்தால் நாம் ப்ளாக் நண்பர்கள் எல்லாம் சந்தித்து மொத்தமாய் ஸ்டால் விசிட் செய்யலாம். 

இந்த வருட பர்சேஸ் என்று பார்த்தால் முக்கியமாய் ஒரு Battery Operated Power Sprayer வாங்க ரொம்ப நாள் ஒரு ஆசை இருந்தது. சின்னதாய் Hand Sprayer வைத்து பஞ்சகாவ்யா, வேப்பம்புண்ணாக்கு தெளிப்பதற்குள் போதும் என்றாகி விடுகிறது. மரங்களுக்கு Hand Sprayer வேலைக்காவதில்லை. கொஞ்சம் செலவானாலும் ஒரு Power Sprayer வாங்கலாம் என்று நினைத்திருந்தேன். ஐந்தாறு கடைகளில் நிறைய brand இருந்தது. விலை Rs.2300-ல் இருந்து Rs.4000 வரை வருகிறது. கிட்டதட்ட எல்லாமே சைனா இறக்குமதி பொருட்களை இங்கே அசெம்பிள் செய்து அவர்கள் பிராண்ட் போட்டு விற்கிறார்கள். சிலர் மட்டும் ஆறுமாதம் வாரண்டி என்றார்கள். நிறைய பேர் வாரண்டி எல்லாம் கிடையாது என்று தான் விற்க்கிறார்கள். ஒன்றரை வருடம் பிரச்னை இல்லாமல் பேட்டரி வரும், அதன் பிறகு பேட்டரி மற்ற வேண்டிய வருமாம். அதற்கு Rs.1000 – Rs.1500 ஆகலாம். கொஞ்சம் விலை அதிகம் தான். ஆனாலும் பயன்படும் என்று Rs.2800-ல் ஓன்று வாங்கி விட்டேன். பேட்டரி இல்லாமல் இதே வகையில் Manual Type Rs.700 – Rs.900 க்கு கிடைக்கிறது.

நான் வாங்கிய Sprayer-ல் குறிப்பிட்டு சொல்லும் வசதி என்று சொன்னால் Dual Mode Selection-ஐ சொல்லலாம். ஒரே வேகத்தில் ஸ்ப்ரே செய்ய ஒரு செலக்சன். இன்னொரு Mode-ல் நமக்கு தேவையான அளவுக்கு ஸ்ப்ரேயரில் வேகத்தை வைத்துக் கொள்ளலாம். இது சின்ன செடிகளுக்கு அடிக்கும் போது தேவை படும். நான்கு விதமான Sprayer knob வருகிறது. நம் தேவைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ளலாம். கொடி, மரங்களுக்கு அடிக்கும் போது நாம் Sprayer-ன் நீளத்தை அதிகப் படுத்தி உயரமான செடிகளுக்கும் அடிக்கலாம். பேட்டரி இருப்பதால் எடை ரொம்பவே அதிகமாக இருக்கிறது. வெறும் இடையே பத்து கிலோ இருக்கும் போல. அதை நீரால் நிரப்பிய பிறகு 15 கிலோ வந்து விடுகிறது. முதுகில் மாட்டிக்கொண்டு தெளிக்க கொஞ்சம் கடினமாக இருக்கிறது.  


Sprayer knobs

Sprayer speed selection control
  

இது தவிர DIP Irrigation ஓன்று செட் பண்ணி பார்க்கலாம் என்று ஒரு ஸ்டாலை பார்த்ததும் விசாரித்தேன். Ebay தளத்தில் 25 செடிகளுக்கு, 50 செடிகளுக்கு என்று செட்டாக கிடைக்கிறது. இவர்கள் செடிகளின் எண்ணிக்கை சொல்லாமல் 50 Sq. Meter (Rs.450), 100 Sq. Meter (Rs.900) ஏரியா அளவுக்கு என்று தனி தனி செட்டாக வைத்திருந்தார்கள். நான் சும்மா முயற்சித்து பார்க்கலாம் என்று 50 Sq. Meter ஓன்று வங்கி வந்தேன். வந்து வீட்டில் பார்த்தால் உள்ளே பாதி பொருட்கள் இல்லை. இவ்வளவுக்கும் நான் அறிவாளி மாதிரி எடுக்கும் போது மேலே இருக்கும் டப்பாவ எடுக்காம அடியில் இருந்த டப்பாவ எடுத்தேன். அப்படி இருந்தும் இப்படி ஆகி போச்சே என்று ஒரே யோசனை. இரண்டு நாள் கழித்து அந்த கம்பெனியில் இருந்து அழைத்து வந்தது. தப்பு நடந்து போனதாகவும், அங்கே இருந்த அனைத்து டப்பாவும் அப்படி இருந்ததாகவும், புதிதாக ஒரு செட் அனுப்புவதாகவும் கூறினார்கள். வந்தால் விவரமாக எழுதுகிறேன். 



இன்னொரு கடையில் நர்சரி ட்ரே ரொம்ப விலை மலிவாக கிடைத்தது. ஒரு தட்டு Rs.15-க்கும் மொத்தமாய் நர்சரிகளுக்கு வாங்கினால் Rs.13-க்கும் தருவதாக கூறினார். நான் ஒரு பத்து தட்டுகள் வாங்கிக் கொண்டேன். விதைகளில் கொஞ்சம் பெரிய வெங்காயம் விதைகள், செர்ரி தக்காளி ஒன்றும் வாங்கினேன்.
 
TNAU ஸ்டாலில் இருந்து சின்ன வெங்காயம், செடி அவரை, கீரை விதைகள் வாங்கினேன். விலையை பத்து ரூபாயில் இருந்து இருபது ரூபாய் ஆக்கி விட்டிருந்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு தான் பஞ்சகாவ்யா வாங்க TNAU போய் இருந்த போது அங்கே உள்ள வெண்டிங் மிஷினில் பத்து ரூபாய் என்று தான் வைத்திருந்தார்கள். மண்புழு உரம் ஆறு ரூபாயில் இருந்து பத்து ரூபாய் ஆக்கி இருக்கிறார்கள். விதைகளை பத்தில் இருந்து இருபதாக்கி இருக்கிறாகள். பஞ்சகாவியா என்பதில் இருந்து நூறு ஆக்கி இருக்கிறாகள். எல்லா இடத்திலும் தோட்டம் பொருட்களின் விலையை கடந்த இரண்டு வருடமாகவே கன்னா பின்னாவென்று ஏற்றுகிறார்கள். அதை பற்றி விவரமாய் பிறகு பேசலாம்.  

37 comments:

  1. வணக்கம் நான் வேப்பமுத்து பொடி 5கிலோ கடலைபுண்ணாக்கு 5கிலோ தேங்காய் புண்ணாக்கு 5கிலோ எள்ளு புண்ணாக்கு 5கிலோ வாங்கிவைத்துள்ளேன். இதனை எவ்வாறு செடிகளுக்கு உரமமாகபயன்படடுத்துவது. அளவு மற்றும் காலஅளவு தெரிவிக்கவும். 50 கிலோ மண்புழு உரம்மும் வாங்கிவைத்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் இதுவரை இவைகளை பயன்படுத்தியதில்லை கலை அரசு. இவைகளை உரமாக பயன்படுத்த வேண்டுமென்றால், எல்லாவற்றையும் கலந்து ஒரு செடிக்கு கிளறி ஒரு கை அளவு என்று வைத்து பாருங்கள். நான் மண்புழு உரம் தவிர வேறு ஏதும் உரம் என்று உபயோகப்படுத்தியதில்லை. மண்புழு உரமும் அதே அளவு வைக்கலாம்.

      Delete
    2. மண்புழு உரம் மட்டுமே சிறந்த உரம் என நிறூபிக்க ஒரு வீடீயோ பதிவில் ஈடுபட்டுள்ளேன். முடிவு பெற்றதும் பகிர்ந்து கொள்கிறேன்

      Delete
    3. நல்லது கலை. பதிவு/முடிவு தயாரானதும் சொல்லுங்கள். பதிவு நன்றாக வர வாழ்த்துகள்.

      Delete
  2. நான் வெள்ளி திங்கள் இரண்டு நாட்கள் சென்றேன். விதைகள் குழித்தட்டு வாங்கினேன் செந்தில் அர்கனிக் உரம் வாங்கினேன்.எட்டு கிலோ ரூபாய் 120 க்கு விற்றார்கள். எதை எடுத்தாலும் ஆர்கானிக் என்று சொன்னார்கள். உண்மையா என்று தெரியவில்லை?

    ReplyDelete
    Replies
    1. இப்போது எதை எடுத்தாலும் ஆர்கானிக் என்று சொன்னால் தான் வாங்குகிறார்கள் என்று அதையே எல்லோரும் சொல்கிறார்கள். அது உண்மையா என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. நீங்கள் வாங்கிய ஆர்கானிக் உரம் கிலோ Rs.15 வருகிறது. அது உண்மையிலேயே உரம் என்றால் விலை ஒ.கே தான் :)

      Delete
    2. Codicia வில். விவசாயம் இதழ்களில் பிரபலமாகா விளம்பரம் செய்யப்படும் இயற்கை உரம். Gel. இவற்றை வாங்கி வந்து கீரை விதை விதைத்து பரிசோதனை செய்தேன். இரண்டிலும் முளைப்பு திறனே இல்லை.மண்புழு உரம் இட்டதில் மட்டுமே முளைப்பு திறன் உள்ளது.என்னவென்று சொல்வது.

      Delete
    3. ஆமாம் கலை. ஆர்கானிக் உரம் என்று எக்கச்சக்க கடைகள். நாம் எட்டிப்பாராமல் வந்தோமென்றால் பிழைத்தோம் :)

      Delete
  3. வேப்பகொட்டை தூள் கரைசல் தயார் செய்வது எப்படி. அளவு முறையுடன் பயன்படுத்தும் விதத்தினையும் விளக்கவும்

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக அதை ஒரு மெல்லிய துணியில் சுற்றி ஒரு பக்கெட் நீரில் ஒரு நாள் ஊற வைத்தால் அந்த சாறு இறங்கி விடும். அதை எடுத்து செடிகளுக்கு தெளித்து விடலாம். சரியாக விகிதம் தெரியவில்லை. நான் வேப்பம் புண்ணாக்கு தான் பயன்படுத்துகிறேன். ஒரு பக்கெட் நீரில் ஒரு மக் நிறைய புண்ணாக்கு கலந்து நன்றாக கலக்கி விட்டு கொஞ்சம் நேரம் (ஒரு பத்து நிமிடம் விட்டு வடிகட்டி பயன்படுத்துகிறேன். அதை அப்படி எடுத்து செடிகளுக்கு தெளித்து விடுவேன்.

      Delete
  4. வாழ்த்துக்கள் நண்பரே. இன்னும் மென்மேலும் பல வளர வாழ்த்துகிறேன் நண்பரே
    நீங்க வாங்கிய Sprayer ONLINE ல செக் பன்னினா ரூ 4800 வருது நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. இணையத்தில் விலை கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும். இந்த மாதிரி பொருட்களை நாம் லோக்கல் கடைகளில் வாங்கினால் நல்லது. ஏதும் பிரச்சனை என்றாலும் உடனே பார்க்க முடியும்.

      Delete
  5. 1.தென்னை நார் பிரித்து எடுக்கும் தொழிற்சாலையில் இருந்து நார், பஞ்சுகளை கொண்டு வந்து வைத்து உள்ளேன் . அதையும் மண்புழு உரத்தையும் கலந்து POLY GROWBAGS ல் வைத்து அதில் செடிகளை நடலாம ?
    2.COCOPEAT BLOCK இணையத்தில் வாங்கி அதையும் மண்புழு உரத்தையும் கலந்து POLY GROWBAGS ல் வைத்து அதில் செடிகளை நடலாம ?
    1.என்றால் செலவு கம்மி எல்லாம் என் கையில் உள்ளது .
    2.என்றால் இணையத்தில் order குடுத்து வாங்க வேண்டும்.

    யோசனை சொல்லுங்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தென்னை நார் பயன்படுத்த முடியாது. அதில் இருந்து உதிரும் தூளை பயன்படுத்தலாம். அது உதிரியாக கிடைத்தால் வாங்கி பயன்படுத்துங்கள். எதற்கும் ஒரு முறை கழுவி பயன்படுத்துக்கள்.

      நீங்கள் எந்த ஊர் ஐயப்பன்?

      Delete
    2. தென்னை நார் பயன்படுத்த முடியாது. அதில் இருந்து உதிரும் தூளை பயன்படுத்தலாம். அது உதிரியாக கிடைத்தால் வாங்கி பயன்படுத்துங்கள். எதற்கும் ஒரு முறை கழுவி பயன்படுத்துக்கள்.

      நீங்கள் எந்த ஊர் ஐயப்பன்?

      Delete
    3. ஆயக்காரன்புலம் - 4 கிராமம் .
      வேதாரண்யம் வட்டம் .
      நாகப்பட்டினம் மாவட்டம் ..

      Delete
  6. இளைய தளபதி .புரட்சி தளபதி மாதிரி தோட்டம் சிவா என்று பட்டம் சூட்டிவிட்டார்கள் நீங்கள் அதற்க்கு தகுதியானவர் என்பதில் எந்த சந்தேகம் இல்லை
    எனக்கு ஒரு சந்தேகம் காய்கறி பழக்கழிவில் உரம் தயாரிக்க பிளாஸ்டிக் வாளியில் சேகரித்தேன் ஆனால் சத சதவென்று அதிக புழுக்கள் உற்பத்தியாகிறது.வாளியில் துளை இண்டுள்ளேன் ஆனாலும்பிரச்சனை தீரவில்லை என்ன செய்யலாம் சிவா?

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ் :)

      ரொம்ப சத சத என்று இருந்தால் நீங்கள் நிறைய நீர் சேர்த்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஈரப்பதம் இருக்கும் அளவுக்கு மட்டும் நீர் தெளித்து கிளறி விடவேண்டும். சில புழுக்கள், பூச்சிகள் கண்டிப்பாக இருக்கும். நிறைய இருந்தால் நீரை கொஞ்சமாய் தெளித்து முயற்சித்து பாருங்கள்.

      Delete
  7. நாங்களும் வந்தோம் அக்ரி இண்டெக்ஸ்க்கு... இந்த ஆர்கானிக் பூச்சி மருந்து ஜெல்லி எல்லாம் வாங்கி இருக்கோம் எப்படி இருக்குன்னு பயன்படுத்திட்டு சொல்றோம். நீங்க சொன்ன மாதிரி அடுத்த முறை ப்ளான் பண்ணி எல்லோரும் ஒன்றாகச் செல்லலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆர்கானிக் பூச்சி மருந்து ஜெல்லியா. புதுசா இருக்கே. முடிந்தால் விவரம் கூறுங்கள் ( எப்படி இருக்கும், விலை எவ்வளவு, எதற்கு, எப்படி பயன்படுத்த வேண்டும்). பயன்படுத்தி பலனையும் கூறுங்கள்.

      கண்டிப்பாக அடுத்த அக்ரி இன்டெக்ஸ்க்கு ப்ளான் பண்ணி போகலாம்.

      Delete
  8. Siva,

    can we plant potato from a potato. There are small leaves in one potato( old one which i didnt use for cooking). Can i try cultivating it?

    ReplyDelete
    Replies
    1. Yes. You can give a try with that potato. Please check my below post

      http://thooddam.blogspot.in/2012/05/potato.html

      Delete
  9. பழு பாகல் விதை அல்லது கிழங்கு எங்கு கிடைக்கும் என தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.
    சிவக்குமார்.

    ReplyDelete
    Replies
    1. பழுபாகல் விதை நண்பர் பரமேசிடம் கிடைக்கிறது.

      http://thooddam.blogspot.in/2015/06/blog-post.html

      நானும் வாங்கி பார்த்தேன். ஆனால் ஓன்று கூட முளைக்கவில்லை (அது சம்பந்தமாக ஒரு மடல் அனுப்ப வேண்டும்). பழு பாகல் என்றால் எப்படி இருக்கும் (நான் சும்மா ஆர்டர் செய்தேன் :) )

      Delete
  10. வாழ்த்துக்கள் நண்பரே, மிக்க மகிழ்ச்சி. மிக அருமையாக எழுதி வருகிறீர்கள்.

    ReplyDelete
  11. நண்பரே, ஒரு விஷயத்தை பதிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
    பெரும்பாலானவர்கள் வெள்ளரிப்பழம் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். எங்கள் வீட்டு மாடியில் காய்த்த வெள்ளரியில் பறிக்க தவறிய ஒரு காய் நன்றாக முற்றி பழுத்து வெடித்ததும் பறித்தோம். அத்துடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சாப்பிட்ட போது மிக சுவையாக இருந்தது. முயற்ச்சித்துப் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி நண்பரே .

      வெள்ளரி பழம் நான் சிறுவனாக இருக்கும் போது நிறைய விற்கவே கொண்டு வருவார்கள். வாழை இலையில் சுற்றி வைத்திருப்பார்கள். அவ்வளவு மணமாகவும், மாவாகவும் இருக்கும். அதில் சர்க்கரையை போட்டு சாப்பிடுவோம். இப்போது ரசாயன உரம் போட்டு வரும் பழங்கள் எல்லாம் பேருக்கு தான் இருக்கிறது. மணமும் இருப்பதில்லை. சுவையும் இருப்பதில்லை.

      வீட்டு வெள்ளரி காய்த்தால் பழுக்க விட்டு பார்க்கலாம் :)

      Delete
  12. hi sir, i have 5 cent land near my home with borewell drinking water. i want to do veetu thottam, can u guide me and help me sir,

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்..தங்களை நேரில் சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி:-) மீண்டும் சந்திப்போம் நன்றி ,

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கொடுத்த மஞ்சள் எல்லாம் முளைத்து விட்டது. பீன்ஸ் எல்லாம் இனி தான் விதைக்க வேண்டும். சில விதைகள் கொடியா, செடியா என்று சந்தேகம். உங்களிடம் இந்த வாரம் பேசுகிறேன் :)

      Delete
  14. வணக்கம் சிவா சார் அக்ரி இண்டெக்ஸ் எப்போது என்று தெரியனும்

    ReplyDelete
  15. இந்த இணையதளத்தை பாருங்கள்,

    http://agriintex.codissia.com/

    ReplyDelete
  16. I like yr. blog . I am doing Maadi Thottam.
    and I am not successful . .

    ReplyDelete
    Replies
    1. Thanks Madam. Let me know if you need any help or information regarding terrace gardening. Please mail me (thoddamsiva@yahoo.com)

      Delete