நம்ம ஊர் பெண்களுக்கு
பூ எவ்வளவு பிடிக்கும் என்று தனியாக எழுத வேண்டியதில்லை. தோட்டத்தில் எவ்வளவு தான்
நாம் காய்கறிகளும், பழங்களும் விளைய வைத்து கொடுத்தாலும், ரெண்டு பூ செடி இல்லன்னா
வீட்டில் நம் தோட்டத்திற்கு ஆதரவு
திரட்டுவது கடினம் தான். ரொம்ப குட்டீஸ் கூட ரெண்டு மூணு வயசிலயே பூ வைத்து
விட சொல்லி அடம் செய்வத்தும், வைத்த பூவை தலையில் இருக்கிறதா என்று தொட்டு
பார்த்துக் கொண்டே சுற்றுவதும் பார்பதற்கு அழகு.
ஊரில் இதை பிச்சிப்
பூ என்பார்கள், எங்கே ஜாதி பூ என்கிறார்கள். மல்லி பூ போல, மிகவும் வாசமான ஒரு பூ.
நம்ம ஊரில் ரொம்ப எளிதாக வரும் ஒரு செடி.
ஜாதி பூ நாற்றுக்கள்
நர்சரி கார்டனிலேயே கிடைக்கிறது. அதை விட நன்றாக பூக்கும் செடியில் இருந்து பதியம்
போட்டு நாற்று எடுப்பது ரொம்ப எளிது. நான் வீட்டில் வைத்திருக்கு செடி அப்படி
நாற்று எடுத்தது தான். பதியம் போடுவதற்கு ஒரு சிமென்ட் சாக்கு பை ஓன்று எடுத்து
பாதி அளவுக்கு மண் எடுத்து கொள்ளுங்கள் (செம்மண், மணல்,, மக்கிய செடி குப்பை, கொஞ்சம்
சாணி உரம் கலவை). நன்றாக பூக்கும் ஒரு செடியில் இருந்து, நீளமாக திரட்சியாக உள்ள
ஒரு கிளையை வளைத்து (வெட்ட கூடாது), ஒரு கணு மண்ணில் புதைந்து இருக்குமாறு பையில்
வைத்து, மேலும் ஒரு கால் பாகம் மணலை போட்டு நிரப்பவும்.
அசையாத ஒரு இடத்தில்
இதை வைத்து தினமும் நீருற்றி வரவும். புதைத்து வைத்த கணுவில் இருந்து வேர் விட
ஆரம்பிக்கும். செடியும் மறு பக்கத்தில் தளிர்க்க ஆரம்பிக்கும். செடியில் நன்றாக
தளிர் வந்ததும், செடியை தாய் செடியில் இருந்து வெட்டி, அசையாமல் ஒரு இடத்தில்
வைத்து மேலும் ஒரு மாதம் வளர்க்கவும். நன்றாக வேற விட்டு, செடி வளர்ந்ததும் தரையில்
வைக்கலாம்.
அடுத்து செடிக்கு பந்தல்
அமைப்பது. ஜாதி பூ நிறைய வருடம் இருக்கும் ஒரு செடி. அதனால் பந்தல் அமைக்கும் போதே
உறுதியாக அமைப்பது அவசியம். பந்தல் ஒரு சுவர் ஓரமாக அமைத்தால் செடி
படர்வதர்க்கும், பூ பறிப்பதர்க்கும் வசதியாக இருக்கும். இரண்டு சிமெண்ட் போஸ்ட்,
கொஞ்சம் சவுக்கு கம்பு வைத்து பந்தல் அமைக்கலாம். இரண்டு பக்கம் போஸ்ட், மறு
பக்கம் சுற்றை வைத்தால் பந்தல் உறுதியாக இருக்கும். நான்கு பக்கமும் சவுக்கு கம்பு
வைத்து, குறுக்கே உறுதியான கட்டு கம்பு (துணி காயபோட கட்டும் கம்பி) வைத்து
கட்டலாம். பந்தல் ஒரு 4 அல்லது 4 ½ அடி இருந்தால் போதும். ரொம்ப உயரம் இருந்தால்
பிறகு பூ பறிக்க கடினமாக இருக்கும்.
செடியை பந்தல்
எட்டும் வரை மேலே கொண்டு வர ஒரு சிறிய கம்பு வைத்து செடியோடு கட்டி வைக்கவும். செடி
படர ஆரம்பித்தவுடன் இந்த சப்போட் தேவை படாது. முடிந்த அளவு நிறைய கிளை இல்லாமல்
ஒரு 3 – 4 கிளைகள் மட்டும் பந்தல் வரை
கொண்டு வரவும் (இல்லாவிட்டால் செடி கீழேயே படர ஆரம்பித்து விடும்). படர்த்தவுடன்
சில தளிர்களை ஒடித்து விட்டு நிறைய கிளைகளை உருவாக்கலாம்.
பூச்சி தொல்லை
என்பதெல்லாம் இந்த செடியில் வருவதில்லை. தவறாமல் நீருற்றி, அவ்வப்போது உரமிட்டு
வந்தால் போதும். இப்போது ஜூலையில் இருந்து நன்றாக பூக்க ஆரம்பித்திருக்கிறது. ஒரு செடியில்
இருந்து, தினமும் 1000 – 1500 வரை பூ கிடைக்கிறது. பூத்து ஓய்ந்ததும் நன்கு இடைவெளி
வரும்படி நறுக்கி கிளைகளை (கவாத்து செய்தது) விடவேண்டும். அப்போது தான் மறுபடி
தளிர்த்து மொட்டு வைக்கும்.
ரொம்ப அழகு பிச்சிப் பூ. Very nice Garden
ReplyDelete//ஜாதி (பிச்சி) பூ// வெட்டு குத்து கொலை ரத்தமா இருக்குமுனு பதிவு படிக்க வந்தேன். ஆனால் நீங்கள் பொன் ன்னு இருக்குற இடத்துல பூ வைக்கிற ஜாதி ன்னு தெரிஞ்சுகிட்டேன்
ReplyDelete:-)
Deletevery nice, me too going to follow same in my home ...congrats
ReplyDeleteஅழகுமிகு படங்களுடன் நன்கு விளக்கி இருக்கிறீர்கள் நன்றி
ReplyDeleteநன்றி வியபதி
Deleteபிச்சிப்பூ பற்றிய அருமையான பதிவு.
ReplyDeleteபடங்களுடன் அருமையாக கோர்த்திருக்கிறார்கள்.
வாழ்த்துகள் திரு சிவா.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றிங்க ஐயா. உங்கள் முகநூல் பக்கத்தில் என் வலை தளம் பற்றி பகிர்ந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.
Deletecaliflower super one sent a parsil
ReplyDeletebythangaraj
califlower super sent me one
ReplyDeleteby thangaraj
பிச்சிபூ- உச்சி வகிடெடுத்துப் பிச்சிப்பூ வைத்தகிளி எனும் பாட்டில் கேட்டுள்ளேன், ஜாதிப்பூ எனவும் புத்தகங்களில் படித்துள்ளேன். ஆனால் உங்கள் பதிவு மூலமே இவ்வளவு தெளிந்தேன்.
ReplyDeleteமிக்க நன்றி
அருமையாக உள்ளது. எல்லாவற்றையும் முயற்சிக்கிறீர்கள், பாராட்டுக்கள்.
நன்றி யோகன் அவர்களே.
DeleteHello Siva, Ungal phone number koncham kotukka mudiyuma, naan veettu thottam poduvathil romba aasai.
ReplyDeleteHello Ganesh. Neenga enakku oru mail anupunga.. gsivaraja@gmail.com.. we can talk..
Delete