Wednesday, August 15, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – தக்காளி

தக்காளி நம்ம ஊரில் ரொம்ப முக்கியமான ஒரு காய்கறி. தக்காளி இல்லன்னா நம்ம ஊர்ல சமையலே இல்லை எனலாம். வைக்கிற குழம்பில் இருந்து. ரசம், கூட்டு, தக்காளி சாதம் என்று சமையலில் எங்கு பார்த்தாலும் தக்காளி மயம் தான். தக்காளி ரொம்ப எளிதாக வளரும் செடி. காய்கறி செடின்னு ரெண்டு செடி வைத்தாலும் அதில் தக்காளி இருக்கும். 

தக்காளியில் இரண்டு வகை கிடைக்கிறது. இதில் ஓன்று, நாட்டு தக்காளி, நிறைய சாறு இருக்கும். இரண்டாவது, பெங்களுரு தக்காளி அவ்வளவாக எளிதாக கனிவதோ, அழுகுவதோ இல்லை. அதனால் அது தான் நிறைய கிடைக்கிறது. 

நான் பொதுவாக இரண்டு வகைகளுமே வளர்ப்பதுண்டு. இங்கே கோவை விவசாய கல்லூரியில் ஒரு ஹைப்ரிட் விதை ஓன்று கிடைக்கும். பெங்களூர் தக்காளி மாதிரி ரொம்ப முரடாக இருப்பதும் இல்லை. நாட்டு தக்காளியும் இல்லை. ரொம்ப நன்றாக வருகிறது. நாட்டு தக்காளிக்கு நன்றாக பழுத்த பழம் ஒன்றை வைத்தே நாற்று கொண்டு வரலாம்.     

தக்காளி முதலில் ஒரு பாத்தியில் நாற்று எடுத்து, ஓரளவு வளர்ந்த பிறகு பிரித்து நடலாம்.  நடும்போது பொதுவாக மாலை வேளையில் எடுத்து நடுவது நல்லது. காலையில் நட்டால், மதியம் வெயிலுக்கு நாற்று வேர் பிடிப்பதற்குள் வாடி விடும். மாலையில் நடும் போது இரவு நிறைய நேரம் இருப்பதால், அடுத்த நாள் காலையில் செடி நன்றாக வந்துவிடும். 

தக்காளி செடி அவ்வளவாக உறுதியான செடி இல்லை. எளிதாக சாய்ந்து விடும். அதனால் நன்றாக வளர்ந்தவுடன் ஒவ்வொரு செடிக்கும் உறுதிக்காக கம்பு ஒன்றை சேர்த்து கட்டி விடுவது நல்லது. இந்த தடவை உயரமாக ஒரு படுக்கை அமைத்து வைத்திருக்கிறேன். செடிகள் அதன் மேல் அப்படியே படர்த்து விடும். காய்களும் நீரில் பட்டு அழுகாது. 


தக்காளி செடிக்கு நிறைய வெயில் தேவை. மழை காலத்தை விட வெயில் காலத்தில் நிறைய காய்க்கும். தக்காளியில் நோய் பிரச்சினை அவ்வளவாக வராது. ரொம்ப அரிதாக சில செடிகள் வளர்ச்சி கம்மியாக, இலைகள் சுருண்டு போவதுண்டு. அதை எடுத்துவிட்டு வேறு செடி வைத்து விடுவேன். என் தோட்டத்தில் இருந்து சில படங்கள்,















18 comments:

  1. Replies
    1. நன்றி சாமி அவர்களே.

      Delete
  2. ம்ம்ம்...பார்ப்பதற்கு அழகாகவும் சுவையாகவும் இருக்கின்றன. நான் பெரியவள் ஆகி இப்படி ஒரு தோட்டத்தை அமைப்பேன். இப்போது எனக்கு 11 வயது தான் ஆகிறது.

    ReplyDelete
    Replies
    1. யாழினி . நீங்க குட்டி பொண்ணா. வருகைக்கு நன்றி. நீ பெரியவள் ஆகி அருமையாக தோட்டம் அமைக்க வாழ்த்துக்கள். வீட்டில் அப்பாவிடம் இப்பவே கேட்டு பார்க்கலாமே? ஏதும் விவரம் தேவை பட்டால் சொல்லு. சரியா.

      Delete
  3. நாற்று வளர்வதிலிருந்து பழம் வரை படங்கள் போட்டுள்ளீர்கள். பார்க்கவே அழகாக இருக்கின்றது.

    ReplyDelete
  4. அருமையான பயனுள்ள தோட்டம் .. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜராஜேஸ்வரி.

      Delete
  5. எங்கள் வீட்டில் தக்காளிச் செடிகள் அவ்வளவாக காய்ப்பதில்லை. நீங்கள் கூறியுள்ளது போல முயன்று பார்க்கிறேன். நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ஹாய் இளங்கோ. தக்காளி பொதுவாக நன்றாக காய்க்கும். வெயில் உள்ள இடத்தில் தானே செடி வைத்திருக்கிறீர்கள்?.

      முயன்று பார்த்து சொல்லுங்கள். தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  6. பார்க்கவே ரொம்ப அழகாருக்கு..

    ReplyDelete
  7. A lush growth and lovely pictures. Growing plants on the ground makes a lot of difference.

    Thanks for sharing sir.

    ReplyDelete
    Replies
    1. Correct Pattu Raj. Growing our own vegetables and fruits brings lot of satisfaction.

      Delete
  8. Hi Siva, sema kalakkal post. I am inspired to try the pandhal now. :)
    In my pots, I am seeing a lot of maravattai's. Is that a good sign?

    ReplyDelete
    Replies
    1. Thanks Janaa. maravattai won't disturb any plant. Don't worry

      Delete